Blog Archive

Tuesday, January 28, 2014

நெஸ்கஃபே மாலை 1966 மார்ச்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  • பழைய நெஸ்கஃபே   டப்பாவில்  வரும்  ........................ 
  •    திருமணமான புதிது. புதுக்கோட்டையில் ஒரு  அழகான  மாடி வீடு.     
  •  ஓடு வேய்ந்த  வீடானதால்அவ்வப்போது எலிக்குட்டிகள் திடீரென்று வராந்தாவில் விழும். உள்கட்டிடம்   நல்லபடியாக இருக்கும் ஒரே ஒரு  கூடம். 

  • அதில் மூன்று பக்கமும் புத்தக அலமாரி. இரண்டு பக்கங்களிலும் பால்கனிகள்.              அதற்கு  அப்புறம் நீண்ட  வெட்ட வெளி மொட்டை மாடி.  சிங்கம் வேலை முடிந்து வருகிறவரைக்கும் துணைக்கு  ஒரு வயதான  அம்மா. என்னிடம் கொள்ளைப் பிரியம். 

  • அவளது பேரனை அனுப்பி எனக்குக் கடலை மிட்டாய்,நிலக்கடலை ,மாங்காய்  என்று வாங்கிவரச் சொல்லுவாள்.  அப்போது  பெரியவன்  வயிற்றில் 40 நாட்கள்  கரு .


  •  ஒரு நாள் சாயந்திரம்    ஐந்தரை மணி வாக்கில்   கீழே ஜீப் க்ரீச்சிட்டு நிற்கும்  சத்தம் கேட்டது.  ஆவலோடு ஓடியவளைப் பின்னால் இருந்து கிழவி எச்சரித்தபடி இருந்தார். 

  • கீழ வந்தவர் மாடிக்கு வர மாட்டாரா,என்ன  அவசரம் சின்னப் பொண்ணே என்றபடி  முணுமுணுத்தார்.                                                           

  • காதில் வாங்காமல் சென்றவள் காதில்  இரு பூட்ஸ் களின் சத்தத் திற்குப் பதில் பல  காலடிகளின் சத்தம் கேட்கவே  நின்றுவிட்டேன். 
  • கதவைத் தட்டி அழைக்கும் சத்தம் கேட்டது. 
  • மெல்லக் கதவைத் திறந்தால் சிங்கம் தன் குழுவோடு வந்திருந்தது.
  •  வாங்கன்னு கூடச் சொல்லவில்லை. பின்னால் நகர்ந்து கூடம் ஓரம் நின்றபடி அவர்களைப் பார்த்து ஒரு சின்னச் சிரிப்பு மட்டும்   உதிர்த்தேன்.  
  •   என் ஃப்ரண்ட்ஸ் மா. நீ போடும் காஃபி சாப்பிட வந்திருக்கிறார்கள்.                                காஃபியா}}}}~~~~}}}}} அது காலையில் தானே தீர்ந்தது. எனக்குக் குழம்பியது.   

  • இவரோ படு உற்சாகமாய்  ,இது போலக் காஃபி நீங்கள் சாப்பிட்டே இருக்க மாட்டீர்கள்  தண்ணியெல்லாம் சேர்த்துப்  போடும் வழக்கம் கிடையாது ஸ்ட்ராங்க்   பாலில் நெஸ்கஃபே  கலந்துதான் நாங்கள் சாப்பிடுவோம். 

  •  என்னம்மா அப்படியே      நின்னுட்டே.  பால்  திருமயம்  கொண்டு வந்து கொடுத்தான் இல்லையா. நீங்க உட்காருங்கப்பா என்றபடி    என்னைச் சமையலறைக்கு அழைத்துச் சென்றார். 

  •  இப்போது எங்கள் குடித்தனம் பற்றிச்  சொல்லணும்.  ஒரு        ஜனதா ஸ்டவ்வும்   மின் அடுப்பு ஒன்றும் தான் சமையல் செய்ய.....    
  • அன்று இரவுக்கான உ.கிழங்கு வறுத்தாச்சு. ரசம் என்கிற பெயரில்  ஒரு புளித்தண்ணீர். நம்ம சமையல் லட்சணம்  அப்படி.          இருக்கும்போது
  •  இவர் ஒரு பட்டாளத்தைக் கூட்டி வந்தால் என்ன செய்வது. மெள்ள   அவரிடம்   நெஸ்கஃபே  தீர்ந்து போன விஷயத்தைச் சொன்னேன்.. 
  •  டப்பா  இருக்கா  என்றார். ம்ம்ம் இருக்கு. அதைப் பார்க்கலாம் என்று   எட்டிப் பார்த்தார். டப்பாவின் அடியில்  ஒரு  ஸ்பூன்  பொடி  இருந்தது.  .... ஓ ஜீஸஸ்  என்றவர்  சரி  திருமயத்தைக் கூப்பிடு  என்றார்.  எதுக்கு   இது நான்.....
  •   காஃபி வாங்கிண்டு வரத்தான். கூஜாவை எடு.  எடுத்தாச்சு.

  •  ஜன்னல் வழியாச் சத்தமில்லாமல் கூப்பிடு......*(  என்னவோ  கேட்டால் ஓடிவர
  • அவன் காத்திருக்கிற மாதிரி**(                 நானும் கூப்பிட்டேன். அவனும் வந்தான் .. இவர் பால்கனிக்கு ஒட்டீனாற்போல இருக்கும்      கயிற்றைக்கட்டி இறக்கி

  •  6  காஃபி  ஐய்யர்  கஃபே யில் வாங்கிவா. டபிள்   ஸ்ட்ராங்னு சொல்லு.   

  • என்றதும் அவன் ஓடினான். இவர் சத்தமாக  என்ன பால் கொதிச்சுடுத்தா     என்ற வண்ணம் நண்பர்களை நோக்கிப் போனார். ஏய்  என்னப்பா சமையலறையிலயே நின்னுட்ட.  எங்களைக் கவனிப்பா. நாங்களும் வீட்டுக்குப்  போகணும் இல்ல என்று கிண்டலடிக்க,  ஏய்  சும்மா இருங்கப்பா. மிஸஸுக்குக் கொஞ்சம்  ஜுரமடிக்கற மாதிரி இருந்தது. 

  • அதனால் பையனை  மாத்திரை வரச் சொல்லி விட்டு வந்தேன்   என்ற படி அவர்களுடன் அரட்டையைத் துவங்கினார்.       நான்  திருமயத்தை  எதிர்பார்த்து  ஜன்னலோரமே நின்று கொண்டிருந்தேன். அவனும் வந்தான்    இருந்த பாலையும் நெஸ்கஃபேயையும் கலந்து        இந்தக் காப்பியையும் அதில் கொட்டி   புது  ட்ரேயில்  டம்ப்ளர்களில் ஊற்றிக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு    படுக்கும் அறைக்குள் சென்றுவிட்டேன்.

  •  நிஜமாகவே ஜுரம்  வந்துவிட்டது  பயத்தில்}}}                                                                               இவரோட தோழர்களும் அதைக் குடித்துவிட்டுக்  கொஞ்சம் ஐய்யர் கடைக் காப்பி போல இருக்கு. ஆனா நன்றாக இருக்குப் ப்பா  என்ற படி மீண்டும் பேச ஆரம்பித்தனர். 

  • கட்டிலில் படுத்தவள் அப்படியே போர்வையைப் போர்த்திக் கொண்டு  தூங்கப் போய் விட்டேன்.மிஸசைக் கூப்பிடுப்பா. நாங்க  கிளம்பறோம்னு அவர்கள் சொல்லும் போது மணி எட்டரை....................................... இவர் வந்து எட்டிப் பார்த்து அருகில் வந்ததும் உண்மையாகவே உடம்பு சுடுவதைப் பார்த்துப் பயந்து விட்டார். என்னம்மா  செய்யறது. கம்பெனி டாக்டரைக் கூப்பிடலாமா  என்று கேட்க,  நான் மறுக்க  ஒரு வழியாக அவர்கள் கிளம்ப  நெடு நாளைக்கு  இதைச்   சொல்லிச் சிரித்திருக்கிறோம்.

Friday, January 24, 2014

ஓற்றைக் கொம்பன் ....... இடுக்கி singam part 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
யாரைத்தாக்கலாம்?
 ஆரம்பித்தது.அந்தப் பனி மழையிலும் இவருக்கு வேர்க்க ஆரம்பித்ததாம்.

இவருக்கும் யா னைக்கும் சதுரங்க ஆட்டம் போல் முன்னேறுவதும் பின் வாங்குவதுமாக அரைமணிப் போராட்டம். அந்தயானையோ  அப்பத்தான் எதோ சண்டையில் அடிவாங்கிவந்த ரோஷத்தில் இருக்கிறது.சரி  ரிவர்சிலியே  போய் விடலாம் என்று நினைத்ததும் அதைப் புரிந்த மாதிரி யானை வெகு வேகமாக வண்டியை நோக்கி ஓடிவந்ததாம். வேறு வழியில்லாமல்  சரசர வென்று  பின்னோக்கியே வண்டியைச்   செலுத்தி வேகம் எடுத்தாராம்.எப்படி அந்த மலைவளைவுகளில் வண்டி ஓட்டினார் என்பது இன்னும் அவரது தோழர்களுக்கெல்லாம் அதிசயம். பாதிவழியில் தன் சகாக்களையும் அழைத்துக் கொண்டு  பேஸ் காம்புக்கு வந்துவிட்டாராம்.. 

திருமணம் முடிந்து  திருப்பதி போகும் வழியில் எனக்குச்  சொன்ன ஒரு த்ரில்லர். அப்போது திருப்பதி மலை வளைவுகளும் அடர்த்தியான  காடுகளக் கொண்டதாக இருக்குமா,எனக்கு  பயம்    பற்றிக்கொண்டது. ஏம்மா இங்கயும் யானை இருக்குமா  ன்னு அவரைக் கேட்டதும்,யானை இருக்காது சிறுத்தை,புலி இதெல்லாம் இருக்கிறதாக்    கேள்வி.  அங்க புதர்ல பாரேன்,மஞ்சளாக் கண்கள் தெரிகிறது. வண்டியை நிறுத்தட்டுமா.என்னன்னு போய்ப் பார்க்கலாம்  என்றார். அன்றுதான் முதல் சண்டை.]}}}.வயது 22 .இடம் திருவனந்தபுரம் .வருடம் 1962
வேலை  புகழ்பெற்ற கம்பனியில்   வொர்க்ஸ் மேனஜர் .
 அனுப்பப்பட்ட இடம் இடுக்கி அணைக்கட்டு வேலை நடைபெறும் இடத்துள் உள்ள    மண் லாரிகளை  சரிபார்க்க வேண்டும்..

தினம்  காலையில் எழுந்து பிடிக்காத சாய்  குடித்துவிட்டு ஜீப்பில் நான்கு உதவியாளர்கள்    ஏற்றிக் கொண்டு மலை ஏறவேண்டும். காட்டு வழி .யானைகள் நடமாட்டம் அதிகம். மழைக்காலம். கேரளாவில்  .
வேற
 சீசன் உண்டா!!
கிட்டத்தட்ட முப்பது நாள் வேலை .
அலுப்புத் தெரியாத வயது.
சாதிக்க வேணும்கற பிடிவாதம்.
அப்படி ஒரு நாள் வேலை முடிந்து திரும்ப இரவு   12  மணி ஆகிவிட்டது.
சாரே .... ஒத்தைக் கொம்பான் ஒன்னும் உலாவற தாக்  கேள் வி .
உஷாராயிட்ட்டு வண்டி செலுத்தனும்,  வந்த   பணி க்காரர் ஒருவரின் குரலில்  நடுக்கம்  .... இருட்டு வழியில் ஜீப்பின் ஹெட்லைட்கள்  ஒளி   போதவில்லை.
சார் சார் வளைவில கரும்பாறை பார்த்து ஓட்டுங்க சார்.!!!!!

 அது பாறையில்லை பெரிய யானை என்று சிங்கத்துக்குப் புரிந்தது. இவர்களின் ஜீப்  ஒலி கேட்டதும் அது போட்ட பிளீரலில்  அரண்டு போன மற்றவர்கள்  வண்டியை விட்டு இறங்கி  ஓடிவிட்டார்களாம்.சிங்கம் மட்டும் அசயாமல் வண்டியிலியே இருக்க அந்த ஒற்றைக் கொம்பு யானை இருந்த இடத்திலியெ காலை உதை த்து  சத்தம் போட்டபடி முன்னேற 

Monday, January 20, 2014

ஆற்றின் கரையோரம் ஒரு கதை

ஒரு  டப்பாவையும் வெளியே  போடாதேம்மா. அதுக்கும் ஒரு பயன் இருக்கும் 
mukkombu dam  Trichy
அப்பா  எத்தனை செடிகளைக் காப்பாற்றி இருக்கிறார்.பார்த்தியா..எனக்கே  இரண்டாம்  சான்ஸ் கொடுத்தவராச்சே !!!!

சிங்கத்தின் வீரப பிரதாபங்கள்னு ஒரு புத்தகம் போடலாம்.

ஆடிப் பெருக்கு சமயம்  1974 என்று நினைக்கிறேன சிங்கத்தின் சினேகிதர்களும் அவர்கள் குடும்பத்தார் என்று நாலைந்து வண்டிகளில் முக்கொம்பு அணைக்கு  வந்து சேர்ந்தோம்.  வெள்ளமான  வெள்ளம்..சுழித்தோடும் தண்ணிரைப் பார்க்கவே பயமாக இருந்தது எனக்கு. இவரோ    என்னப்பா அக்கரைக்கும் இக்கரைக்கும்  ஸ்விம்   போய் விட்டு வரலாமா  என்றதும் யாரும் தயாராகவில்லை.ஒரு பெரிய தரைவிரிப்பைப் போட்டு  சீட்டு விளையாட ஆரம்பிக்கவும்,குழந்தைகளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இவரும் நானும் எங்கள் மூன்று குழந்தைகளும் மேல் படியில் உட்கார்ந்தவாறு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தோம்.  சின்னவன் ஒரு படி கீழே இறங்கினான். சட்டென்று அவனைப் பிடித்துத் தன் மடியில் இருத்திக் கொண்டார்.  குட்டி இதெல்லாம் செய்யக் கூடாது. பத்திரமா இருக்கணும் என்கிற எச்சரிக்கையோடு மீண்டும் தண்ணீரைப் பார்த்தபடி இருந்தபோது தான் அந்த விபரீதம் நடந்தது.                           
  சட்டென்று  எழுந்த  சின்னவன்    ஒன் டூ த்ரீ என்று கூவியபடித் தண்ணீரில் பாய்ந்துவிட்டான்.      இப்பொழுது  நினைக்கவும் உடல் நடுங்குகிறது,. ஒரு செகண்டு கூட இருக்காது. அடுத்த நொடி சிங்கமும் தண்ணீரில். கண்முன்னே  குழந்தை ஆ ற்றின் அடிக்குப் போவது தெரிந்தது. வாழ்விட்டு அலறக் கூட முடியாமல் எழுந்து   நின்றுவிட்டேன்  மற்ற இருவரையும் பிடித்தபடி......அடுத்த நொடியில் சிங்கம் குழந்தையைக் கையில் ஏந்தியபடி வெளியே வந்து   நின்றார். அதற்குள் மற்றவர்கள் ஓடிவந்து    குட்டியின்  நலம்விசாரித்தபடி துண்டுகள் கொடுத்து அவன் சட்டை நிஜார் எல்லாம் கழற்றித் துடைத்துவிட்டு   ஆஸ்வாசப் படுத்தினார்கள். கல்லுளிமங்கன்  மாதிரி நிற்கிறான். ஏண்டா   குதிச்சேன்னு  கேட்டால் தண்ணிக்குள்ள இன்னோரு பாப்பாம்மா என்கிறான்..                               நீ மயக்கம் போட்டுடாதே உன்னைத் தூக்க இன்னோரு தரம் தண்ணீரி  ல்        பாய முடியாது.  சியர் அப் மா. அதான்    சௌக்கியமா இருக்கானே     என்றார் சிரித்தபடி.

 பதினெட்டடி ஆழம்  சுழலிட்டு ஓடும் அந்த ஆற்றையே வெறித்துப் பார்த்த எனக்கு வீட்டுப் போகலாமே  என்று தோன்றியது.  மன்னார்புரம்   வந்து சேருவதற்குள்    சின்னவன் உடல் கொதிக்க ஆரம்பித்தது. மூன்றுவாரங்கள்    காய்ச்சல்.  தொடர்ந்தது.அதிர்ச்சியினால் வந்த  ஜுரம். மடியில்   வைத்தபடி நான் உட்கார்ந்திருந்தேன்.    எப்படியொ கடவுளும் சிங்கம்  ரூபத்தில் தன் பிள்ளையைக்  காப்பாற்றிக் கொடுத்தார்.  நாந்தான் அவருக்குக் கடைசியில் உதவ முடியாமல் போனது. இறைவன் சித்தம்..

Wednesday, January 15, 2014

தை மாத பௌர்ணமி பூரண நிலா.

Add caption
Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் நிலாவைப் பார்க்கவே  முடியாமல்  சில்லென்று மழை.  சரி இந்த மாதம் இவ்வளவுதான் என்று ஒரு முடிவு. கண்ணோ இரண்டு மணிக்கு மேல் மூடிக் கொள்ள மறுக்கிறது.எயுந்தவுடன் நிலா பார்க்க ஆவல். குல்லா, கம்பளி கையுறை எல்லாம் போட்டுக் கொண்டு    கதவைத் திறந்து வெளி முற்றத்துக்கு வந்தால் வெளிறிப் போன   நிலா மேகங்களிலிருந்து மெல்ல வந்து கொண்டிருந்தது.ஷட்டர் திறக்காத காமிரா. அதைவைத்துப் படங்களும் எடுத்துவிட்டேன். போன ஜன்மத்தில் ஜோசியம் பார்க்கும் ஆளாக இருந்திருப்பேனோ]]]
ஸ்ரீரங்கனும் கிருஷ்ணனும்

Monday, January 13, 2014

தைத் தாய் நீ தித்தித்தாய்

தைப்பொங்கல்

 பொங்கல் உண்டு களித்த அனைவருக்கும்   என்னைப் போலச் சர்க்கரை சேர்த்த எதையும் சாப்பிட முடியாதவர்களுக்கும் வாழ்த்துகள்:)

திருப்பாவை பாடல்களைப் பாடிய திருப்பாவை அரங்கனோடு ஐக்கியம் ஆனாள்.

நேற்றும்  ஒவ்வொரு   தொலைக்காட்சியாகத் தேடினேன்.
கிடைக்கவில்லை திருமணவைபவம்.
  அக்காவைப் பார்க்கவேண்டி(சிங்கத்தின் அக்கா)  முதல்நாளே போய் விட்டதால்    நிகழ்ச்சிகளைப் பார்க்கவில்லை.

அவளே சொல்கிறாள். சோம்பல்  உடலில் வியாபிக்க
தொலைக்காட்சியில் என்னைத் தேடுகிறாய்.
முயன்றுவந்து   எங்களைக் காண உனக்கு  ஆவல்
ஏற்படவில்லை.
கூட்டமென்று தள்ளுகிறாய்.
தள்ளவில்லை உடம்பு என்று சலிக்கிறாய்.
அனைத்தும்   ஒரு காட்சிதிரையில் வந்துவிழுந்துவிடும்போது
இறைவனும் தோன்றிவிடுவான் என்று  நினத்தாய்.

முயற்சியெடு மகளே  அடைய வேண்டும்
என்று அடியெடுத்துவை. அடுத்தவருடமாவது
வந்துசேருவாய்  என்று விட்டாள்.

நண்பர்கள் யாராவது பார்த்திருந்தால்   அவர்களை வணங்கிக் கொள்கிறேன்.




 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

Sunday, January 12, 2014

வடிவங்கள்

பேத்தியின்  கைவண்ணம் 
காகிதப் பூச்சி 
வட்டத்துக்குள்  கண்ணன் 
Add caption
ரூபிக்ஸ்  க்யூப் 
இதற்கு என்ன பெயர் ?
இதய வடிவம்  
மாலைவெயில் மரங்களைத் தொடுகிறது 
வடிவங்கள் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இலைகள் எப்போது வரும் 

Friday, January 10, 2014

நினைவுகளின் நறுமணம்

அடுத்தவீட்டுக் குழந்தை ஆசையாகப் பொ ட்டு வைத்துக் கொண்டது.
Add caption
குளிரில் முயல்கள் 
இரட்டை ஜோதி 
ஹீரோவும் ஹிரோயினும் 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Buttercup colour flowers


ஏதேதோ  நினைவுகள் . இப்படிச் செய்திருக்கலாமோ. அப்படிச் செய்திருக்கலாமோ
ஏன்  திருமணவாழ்வைச் சாதரணமாக எடுத்துக் கொள்கிறோம் '??

நான் என்னை மட்டுமே சொல்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை அவர் அசைக்க முடியாத தூண்.
இருமல் வந்தால் கோவித்துக் கொள்வே ன் .
அவரும் வைத்தியரைப் பார்த்து மருந்து வாங்கி வருவார்.
யேன் எனக்கு வயசாகிடுத்துனு ஒத்துக்க மாட்டேன் என்கிறாய்
73 வயசெல்லாம் ஒரு வயசா. எல்லோரும் சதாபிஷேகம் செய்துகொண்டாச்சு.
இன்னும் மூணு வருஷத்துல நம்ம திருமணாமாகி 50 வருஷம் ஆகப் போகிறது.

ஆஹ்ன்!!!!!!! அதைச் சொல்லு. பசங்களை எப்படி இங்க தங்க வைக்கிறது
அதுதான்
உனக்கு முக்கியம்.
கதாநாயகனை நீ  மறந்து வருஷங்களாச்சு.

அடப்பாவமே. இப்போ தினம்  தினம் எங்க பார்த்தாலும் உங்க நினைவுதான்.
ஆதாரசுருதி என்று எப்பவோ படித்த கதை நினைவு வருகிறது.
சுருதி நன்றாக இருந்ததால் என்னால் பாட முடிந்தது.
அதை உங்களிடம் சொல்லத்தான் மறந்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள்.

'

Thursday, January 02, 2014

மார்கழிக்கும் சிங்கத்துக்கும் ஒரு பாடல் -- அன்புடன், ரேவதி.நரசிம்ஹன்


Thursday, January 07, 2010

   


மார்கழி இருபத்துமூன்றாம் நாள்,மாரிமலை ...











இன்று மார்கழி இருபத்துமூன்றாம் நாள் .
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ
விழித்து
வேரி மயிர் போங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ ,பூவைப்பூ வண்ணா !உன்
கோவில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் .
--
ஆண்டாள் முந்தைய பாசுரத்தில் சங்கம் இருக்கும் அரசர்களைப் போல ,நாங்கள் வந்திருக்கிறோம் கண்ணா என்று சொல்கிறாள்.
அவன் அதைக் கேட்டு செங்கண் சிறுச் சிறிதே விழித்துப் பார்த்து எழுந்திருக்கிறான்.
அவன் பார்க்கும் பார்வையின் வீட்சண்யம் கோதைக்கு மலைக்குகையில் உறங்கும் சிங்கத்தை நினைவு படுத்துகிறது .
மாரிக்காலத்தில் உறங்கப் போன சிங்கம்,எழுகிறது.
அதன் சிவந்த ,கோமளமான கருணைக் கண்கள் விழிக்கின்றன.
அதன்
கால்களை நீட்டி முதுகை வளைத்து பிடரியில் உள்ள ரோமங்கள் எல்லாம் நிமிர்ந்து, மெய்சிலிர்க்கும் முழக்கம் அதனுடைய தொண்டையிலிருந்து புறப்படுகிறது.
அது அஹோபில சிங்கமா,ராகவசிம்ஹமா ,இல்லை யாதவசிம்ஹமா.??
எல்லாம் ஒன்றுதானே . ஒரே ஒரு சிங்கம் பலவித வடிவம்.,கொண்டு நடக்க ஆரம்பிக்கிறது. அது என்ன நடை!!
தரையில் அதிராமல் கால் வைக்கும் சிங்கம்.
கொடியவரை அடையாளம் கொண்டு அவர் மேல் பாயும் சிங்கம். பிரஹலாதனைக் காத்த சிங்கம்.
ராமனாகக் காட்டில் உலாவிய சிங்கம். இப்போது யசோதையின் இளஞ்சிங்கம்.
அந்த
சிங்கத்தை அழைக்கிறாள்.எங்களை வந்து உன் செந்தாமரைக் கண்ணால் பார். சிம்மாசனத்துக்கு அதன் பெருமையைக் கொடுத்தவனே எங்கள் முறையீட்டைக் கேள் .
உன் அருளைப் பரிசாகக் கொடு என்று வேண்டுகிறாள்.
ஆடிப்பூரத்துப் பாவையின் திருவருள் வேண்டி அவள் பாதங்களில் சரண் புகுவோம் .
எழுத்துப்பிழை, பொருட்பிழை இருக்கும் பட்சத்தில் மன்னித்தருள வேண்டும். எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்