Blog Archive

Sunday, November 24, 2013

இட மாற்றங்கள்,நிலை மாற்றங்கள்


அனைவருக்கும் நன்றி.
 என் எஜமானர் சிங்கத்துக்கும் நன்றி.


நல்ல வாழ்வு கொடுத்தார். எப்போதும் உறுதுணை அவரே.
நான் எத்ற்குமே அஞ்சாமல்  துணிவோடு செயல் பட்டேன் என்றால் அதற்குப் பின்னால்   அவரது  அனுமதியும் ஆதரவும் இருக்கும்.


என்னைவிட அவருக்கு மிகவும்     பிடித்தவர்  ஒருவர் ஸ்ரீமந் நாராயணன் என்று நான் புரிந்து கொள்ளவில்லை.
சிங்கம்  சொன்ன வண்ணம் செய்த  அருமையான ஆத்மா ஆகிவிட்டார்,.

'படுக்கக் கூடாதுய்யா. நிக்கணும். அப்படியே மறைஞ்சுடணும்'' என்பது அவர்கள் நண்பர்களிடம் அவர் சொல்வது. செய்தும் காட்டிவிட்டார். நின்றார் விழுந்தார். இறைவனடி சேர்ந்தார்.


ஒரு வார்த்தை எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.

ஒரு வாய்  தீர்த்தம் கொடுக்கவே நேரம் இருந்தது.
அதற்காகவே நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
தெரிந்த தெரியாதவர்கள் அந்த இரவு நேரத்தில்  வந்து
உதவினார்கள் அவர்களுக்கு என்றேன்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.

அவர் பெற்றசெல்வங்களும் உரிய நேரத்தில் வந்துவிட்டார்கள்.
நிர்மலமான  முகத்தில்  மாறாத புன்னகையுடன் அருமையான த்ரயோதசி  திதியில்   அக்னியுடன் கலந்தார்.
என்னிதயத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு வந்துவிட்டார்.

எதிர்காலம்...  குழந்தைகளுடன்  கழியும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
இறைவன்  உரிய நேரத்தில் எனக்கு உரிய பொறுமையையும் தைரியத்தையும் தந்து விடுவார் என்பதில் ஐயமில்லை.
வணக்கம்.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

61 comments:

Unknown said...

kanneer thirai maraikkirathu vaarthagigal varavillai

Geetha Sambasivam said...

மீண்டு வந்ததுக்கு வாழ்த்துகள் ரேவதி. காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும். குழந்தைகள் தங்கமானவர்கள். உங்களைக் கண்ணின் கருமணி போல் பார்த்துக்கொள்வார்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கேள்விப்பட்டதும் மிகவும் வருத்தப்பட்டேன்.;(

துணையை இழந்தவருக்கு யாராலும் எந்த ஆறுதலையும் கொடுத்துவிட முடியவே முடியாது.

இறைவன் உரிய நேரத்தில் உங்களுக்கு உரிய பொறுமையையும் தைரியத்தையும் தந்து விடுவார்.

மனதை தைர்யப்படுத்திக் கொள்ளுங்கள்.

Uma said...

Dear valliamma
Please accept my heartfelt sympathies for your loss. My thoughts are with you and your family during this difficult time.

"May the blessings of love be upon you, May its peace abide with you, May its essence illuminate your heart, Now and forever more.... "
with caring thoughts,
Uma

Uma said...

Dear valliamma
Please accept my heartfelt sympathies for your loss. My thoughts are with you and your family during this difficult time.

"May the blessings of love be upon you, May its peace abide with you, May its essence illuminate your heart, Now and forever more.... "
with caring thoughts,
Uma

ராமலக்ஷ்மி said...

எங்கள் பிரார்த்தனைகளும் எங்கள் அன்பும் என்றும் உங்களோடு வல்லிம்மா.

கோமதி அரசு said...


அன்பு அக்கா, நீங்கள் சொல்வது போல் இறைவன் மனதைரியத்தையும், மன ஆறுதலையும் தருவார்.
இட மாற்றம் தற்போது அவசியமான ஒன்று.

sury siva said...

சிங்கம்
சித்திரமாக தங்கள்
சிந்தனையில் என்றுமே
ஒளி பெற்று உலவி வரும்.

தாயாரின் அருளால்
தங்கள் செல்வங்கள் எல்லாம்
தங்களைத்
தாங்கி நிற்கும்.

இது சத்யம்.

சுப்பு தாத்தா.

கௌதமன் said...

ரேவதி மேடம்.
ஈடு செய்ய முடியாத இழப்புதான். மிகவும் வேதனை அடைந்தேன். நீங்கள் மீண்டும் பதிவெழுத வந்திருப்பது கண்டு மிகவும் சந்தோஷம். அடிக்கடி எழுதுங்கள். ஆண்டவன் உங்களுக்கு ஆன்ம பலம் அருளவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

சீனு said...

மன தைரியத்தை இழக்கமால் மீண்டு வர ஆன்ம பலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்

சீனு said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

வணக்கம்

இறைவன் அருளால் நல்லது நடக்கட்டும்..வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

எதிர்காலம்... குழந்தைகளுடன் கழியும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
இறைவன் உரிய நேரத்தில் எனக்கு உரிய பொறுமையையும் தைரியத்தையும் தந்து விடுவார் என்பதில் ஐயமில்லை.//

உயிரில் கலந்த வரிகள்..

இலவசக்கொத்தனார் said...

அம்மா, துளசி அவர்கள் பதிவிலும், கீதாம்மா பதிவிலும் துயரச் செய்தியைக் கண்டு மிகவும் துக்கம் அடைந்தேன். உங்கள் பதிவினைப் பார்த்த பின் தாங்களே தங்களை மெதுவாகத் தேற்றிக் கொள்வதைப் புரிந்து கொண்டேன். நடந்தது நடந்து விட்டது. பேரக்குழந்தைகளுடன் இருந்து அவர்கள் சந்தோஷமே உங்களை தேற்றிவிடும். எல்லா கஷ்டங்களுக்கும் நேரம் மட்டுமே மருந்து.

துளசி கோபால் said...

நல்ல மனதிடத்தை அருளும்படி நம் பெருமாளை வேண்டிக் கொள்கின்றேன்.

சொன்ன வண்ணம் செய்த சிங்கம்!

அஞ்சலிகள்.

Jayashree said...

Wish you all the best Mrs Simhan.
Your beloved will always be with you and guide you for ever.
As Rumi says-
"it looks like the end
it seems like a sunset
but in reality it is a dawn
when the grave locks you up
that is when your soul is freed"
It is hard for us human though-Time is an excellent healer. May God Bless
j

Jayashree said...
This comment has been removed by a blog administrator.
ஸ்ரீராம். said...

அம்மா.. மிகவும் வருத்தப் பட வைத்த நிகழ்வு. அடுத்தது என்ன போன்ற குழப்பங்கள் கொஞ்ச நாளில் சரியாகும். வார்த்தைகளை எழுதி எழுதி அடிக்கிறேன். இறைவன் திரு சிங்கம் அவர்கள் ஆன்மாவுக்கு அமைதியையும், உங்களுக்கு இந்த இழப்பைத் தாங்கும் மன தைரியத்தையும் வழங்கப் பிரார்த்திக்கிறேன்.

சாந்தி மாரியப்பன் said...

என்ன சொல்றதுன்னே தெரியலை வல்லிம்மா.. 'ஐயோ..'ன்னு மனசு அரற்றிக்கிட்டே இருக்கு. ஆண்டவன் உங்களுக்கு தைரியத்தைக் கொடுக்கட்டும்ன்னு வேண்டிக்கறேன்.

சிங்கம் உங்கள் நினைவில் மட்டுமல்ல எங்கள் நினைவிலும் நீங்காது வாழ்வார் என்பதிலும் ஐயமில்லை.

Ravichandran M said...

எம் பெருமான் துணையிருப்பார். மனதினை செம்மைப்படுத்திக் கொள்ளுங்கள் அம்மா!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் மனம் அமைதி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன் அம்மா....

தருமி said...

share your grief. time is the greatest healer.

வெங்கட் நாகராஜ் said...

மீண்டு[ம்] எழுத வந்தமை நன்று....

ஆண்டவன் உங்களுக்கு திடத்தினைக் கொடுக்க எனது பிரார்த்தனைகளும்..

உங்கள் சிங்கம் எங்கள் மனதிலும் நீங்காது இடம் பெறுவது உறுதி!

Ranjani Narayanan said...

குழந்தைகளின் பாதுகாப்பில், உங்கள் அருமை சிங்கத்தின் நினைவுகளில் உங்களுக்கு எதிர்காலம், இனி அமைதியான காலமாக அமையட்டும், வல்லி.
உங்கள் பதிவுகள் மூலம் எங்கள் இதயத்திலும் அமர்ந்துவிட்ட சிங்கத்திற்கு எனது அஞ்சலிகள்.

Angel said...

வல்லிம்மா .இறைவன் உங்களுக்கு எல்லா மன திடத்தை தந்து வழி நடத்துவார் .எங்கள் அனைவரது
பிரார்த்தனைகளும் அதுவே .



Angelin.

தி.தமிழ் இளங்கோ said...

எதிர்பாராத சோகம். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இறைவன் உங்களுக்கு பொறுமையையும் தைரியத்தையும் கொடுக்கட்டும்.

ADHI VENKAT said...

வல்லிம்மா தாங்கள் மீண்டு வந்தது ஆறுதலை அளிக்கிறது. மன தைரியத்தை அந்த கடவுள் தங்களுக்கு தரட்டும்...இடம் மாற்றம் ஒரு மாற்றத்தை தரும்...

சிங்கம் சார் எங்கள் நினைவிலும் நிச்சயமாக இருப்பார்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு இந்திரா ஆதரவான வார்த்தைகளுக்கு மிக நன்றி. இனி எப்படி இருக்குப் போகிறேன் என்று மனம் கதறுகிறது. உறுதி வேண்டும். பகவான் கொடுப்பார்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா. உப்பும் தண்ணீரும் சோறும் உள்ளே போனால் காலம் என்ன இழுத்துச்சென்று விடும்.பொறுமையாக இருக்கு இறைவன் அருளட்டும். குழந்தைகள் தங்கங்கள்.

அவர்களுக்குத் தொந்தரவில்லாமல் என்வாழ்வு போகணும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபு சார். இறைவனை நாம் மறக்கக் கூடாது என்று தானெ இந்தச் சோதனைகள் வருகின்றன.
கொஞ்சம் பெரிய தண்டனை.அனுபவத்துத் தான கழிக்கணும்.அன்புக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

Dear Uma,
Thank you ma.
patience ,courage and trust in God shd lead me through.Hope I have them in me.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே ராமலக்ஷ்மி .
நான் மறக்கவில்லை. இனி என்ன என்று அடுத்த அடியை எடுத்துவைக்கவெண்டும். துணை இல்லாத வாழ்க்கைக்குகும் பழகிக் கொள்ளவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதிமா. வீட்டைவிட்டுப் பிரிவது மிகுந்த துன்பத்தைத் தான் தருகிறது.
இங்கே தனியாக இருப்பது உசிதம் இல்லை.
இறைவனே கதி.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சொல்லும் சத்ய வார்த்தைகள் எங்களைக் காக்கட்டும் சுப்பு அண்ணா.
அவற்றை மனதில் முடிபோட்டுக் கொண்டு கிளம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கௌதமன்,
இரவு போய் பகலும் வரும். நல்ல இதயங்களை இணையம் எனக்குக் கொடுத்திருக்கிறது.
இப்பொழுது எழுதாவிட்டாலும் பிறகு எழுதுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மன தைரியம் வரும் சீனு மா.கொஞ்சம் காலம் பிடிக்கும். புதிய பலத்தை இறைவன் அருளட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரூபன் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி,
இறைவனை நெருங்க எனக்கு அவரே வழி வகுத்துவிட்டார்.உடல்தான் தளர்ந்துவிட்டது.
மீண்டுவிடலாம் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கொத்ஸ்.
அதிர்ச்சி இன்னும் விட்டுப் போகவில்லை. மெது மெதுவே மீளலாம். அதுதானே வாழ்க்கை.
நன்றி மா.

மாதேவி said...

மிகுந்த வேதனைதான். இறைவன் மனஆறுதலை தரட்டும்.

அன்புச்செல்வங்களின் அன்பில் ஆறுதல் கிடைக்கும்.

நலமாக இருக்க வேண்டுகின்றேன்.

ஸாதிகா said...

வல்லிம்மா.இந்த தைரியம் எப்போதும் உங்களுடன் இருக்கவேண்டும்அவசியம் இட மாற்றம் வேண்டும்.இடமாற்றம் உங்கள் மனபாரங்களை கண்டிப்பாக குறைக்கும்.தொடர்ந்து வழக்கம் போல்ம் உங்கள் ஆக்கங்களை படையுங்கள்

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி காலம் மாறட்டும்.
கலக்கம் கொஞ்சமாவது குறைய இறைவனை நாடுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி . எனக்குதான் திடமில்லை. அவருக்கு இருந்திருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயஷ்ரீ.கடைசி நேரத்தில் என்னால் அவருக்கு உதவ முடியாமல் போனதே வருத்தம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் அவரை தக்கவைத்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.இறைவனிடம் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

முயற்சிக்கிறேன் கிருஷ்ணா

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் நன்றிமா. காலம் வலிமையானது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி நன்றி மா.
அன்பு ரஞ்சனி,
அன்பு வெங்கட்,
அன்பு செரப் க்ராஃப்ட்ஸ்
அனைவருக்கும் மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸாதிகா தங்கள் தொலைபேசி அழைப்புக்கும் நன்றி அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தமிழ் இளங்கோ ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சலின் நன்றிமா.
குழப்பத்தில யாருக்கு நன்றி சொன்னேன் என்று கூடத் தெரியவில்லை.

ஹுஸைனம்மா said...

மாற்றங்கள் மட்டும்தானே மாற்றம் இல்லாதவை.

வழக்கம்போல இணையவழி தொடர்பில் இருங்கள் வல்லிமா.

Agila said...

:(
Sorry to hear the news.

mask said...

Akka, I'm lost of words.. what to tell.I know you can very well read my mind and thoughts - mentally you are so close to me.
Will try to call you, soon.
Best Wishes and Good Luck,
Anbulla, Kalakutty

மதுரையம்பதி said...

வல்லியம்மா - மீண்டுகொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பெருமாள் எல்லா நேரத்திலும் உங்களுடனிருந்து வழிநடத்துவார்.

வருண் said...

***என்னிதயத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு வந்துவிட்டார்.**

மிகைப் படுத்தாத உண்மை, வல்லியம்மா!

காமாட்சி said...

மிகவும் மனதைத் தேற்றிக்கொண்டு வலைப்பூழின் அபிமானிகளுக்காக எழுதிய பதிவிது. காலம் ஆகஆக மனது சற்று தேறும். எழுதுவதில் சற்று மன ஆறுதல் ஏற்படும். குழந்தைகள் தான்
மன ஆறுதலைத் தருபவர்கள்.
உங்களுக்கு மன அமைதியைத் தர கடவுளை வேண்டுகிறேன். அன்புடன்
சொல்லுகிறேன்.

Deiva said...

Deepest condolences to you and your family

Asiya Omar said...


//ஒரு வார்த்தை எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.
ஒரு வாய் தீர்த்தம் கொடுக்கவே நேரம் இருந்தது.
அதற்காகவே நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.//
வல்லிமா, உங்கள் துயர் ஆற்ற முடியாதது தான், என்றாலும் மனதை திடமாக வைத்துக் கொள்ளுங்கள்.

BD said...

அன்பு வல்லியம்மா,
கேட்க மனம் கணக்கும் செய்தி. அதையும் நளினமாக எழுதி உள்ளீர்கள். தங்கள் பண்பட்ட உள்ளத்தை இஃது காட்டுகிறது.
உடல் அழியினும் அழியாது காதல். மறு பிறப்பிலும் தொடரும். இது பலரும் தத்தம் வாழ்விலும் காணும் உண்மையே. சூக்ஷ்ம நிலையில் தங்களோடு என்றும் சிங்கம் இருப்பார்!
இனி உங்களுடன் எனது மௌனமே பேசட்டும். சொல்லாத வார்த்தைகள் பொருள் பொதிந்தவை.
எனக்கும் தங்கள் பிள்ளை வயது தான் இருக்கும்.

அன்புடன்,
குட்டிப் பையன் (!) புவனேஷ் !