அனைவருக்கும் நன்றி.
என் எஜமானர் சிங்கத்துக்கும் நன்றி.
நல்ல வாழ்வு கொடுத்தார். எப்போதும் உறுதுணை அவரே.
நான் எத்ற்குமே அஞ்சாமல் துணிவோடு செயல் பட்டேன் என்றால் அதற்குப் பின்னால் அவரது அனுமதியும் ஆதரவும் இருக்கும்.
என்னைவிட அவருக்கு மிகவும் பிடித்தவர் ஒருவர் ஸ்ரீமந் நாராயணன் என்று நான் புரிந்து கொள்ளவில்லை.
சிங்கம் சொன்ன வண்ணம் செய்த அருமையான ஆத்மா ஆகிவிட்டார்,.
'படுக்கக் கூடாதுய்யா. நிக்கணும். அப்படியே மறைஞ்சுடணும்'' என்பது அவர்கள் நண்பர்களிடம் அவர் சொல்வது. செய்தும் காட்டிவிட்டார். நின்றார் விழுந்தார். இறைவனடி சேர்ந்தார்.
ஒரு வார்த்தை எச்சரிக்கை விடுத்திருக்கலாம்.
ஒரு வாய் தீர்த்தம் கொடுக்கவே நேரம் இருந்தது.
அதற்காகவே நான் இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.
தெரிந்த தெரியாதவர்கள் அந்த இரவு நேரத்தில் வந்து
உதவினார்கள் அவர்களுக்கு என்றேன்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.
அவர் பெற்றசெல்வங்களும் உரிய நேரத்தில் வந்துவிட்டார்கள்.
நிர்மலமான முகத்தில் மாறாத புன்னகையுடன் அருமையான த்ரயோதசி திதியில் அக்னியுடன் கலந்தார்.
என்னிதயத்தில் நிரந்தரமாக இருப்பதற்கு வந்துவிட்டார்.
எதிர்காலம்... குழந்தைகளுடன் கழியும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
இறைவன் உரிய நேரத்தில் எனக்கு உரிய பொறுமையையும் தைரியத்தையும் தந்து விடுவார் என்பதில் ஐயமில்லை.
வணக்கம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்