இன்று காலை கேட்ட செய்தி உலக மகா குருவின்
காருண்யமும் தீர்க்க தரிசனமும் பற்றி மீண்டும்
அறிய அதிர்ஷ்டம் வாய்த்தது.
தினம் தினம் கேட்கும் நற்செய்திதான்.
சில மகிமைகள் மனதை விட்டு அகலுவதில்லை. நம்பிக்கையும் விசுவாசமும் பலப்படுகின்றன.
ஒரே ஒரு செய்தியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
திரு கணேஷ் சர்மா மனம் நிறைந்த பக்தியுடன் சொல்லும்போது
மனம் நெகிழ்கிறது.
கன்னட மாநிலத்தில் மஹா ஸ்வாமிகளின் சஞ்சாரத்தின்போது
நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி.
மஹா ஸ்வாமி நதி ஒன்றில் தீர்த்தமாடி எழுந்திருக்கும் போது தன்னுடன் நீராடிய இருவரை அவர்களின் மேல் அங்கவஸ்திரத்தை படித்துறையில் கழட்டிப் போடும்படி சொன்னார்.
குருவின் வார்த்தைக்கு மறுப்பேது.
உடனே அவ்வாறே செய்தார்கள்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கன்னடத்தில் பேசி அழைத்து,
எங்களுக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் ஒரு அம்மா இருக்கிறார். அவரிடம் இந்தத் துணிகளை க் கொடுத்துவிடு என்று சொல்லி அந்த இடத்தை விட்டு விரைந்து சென்றுவிட்டார்.
அந்த விளையாட்டுப் பிள்ளையும் ஸ்வாமிகள் சொன்ன அம்மாவைத் தேடிச் சென்று நதியின் தண்ணீரில் கழுத்தளவு மூழ்கி இருக்கும் அவஸ்தையில் கண்டு அவரிடம் கொடுத்துவிட்டு வந்து விட்டான்.
உண்மை என்றால் அந்த அம்மணி நதியின் வேகத்தில் தான் சுற்றியிருந்த ப்புடவையை இழந்து கரைக்கு வரமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
அவருக்குக் கொஞ்சம் தொலைவில் மஹா பெரியவருடைய குழுவினர்
வேறு நதியில் குளித்துக் கொண்டிருந்ததால் ,அந்த அம்மாவால் வெளியே
வெளியே வரமுடியவில்லை.
இதை நம் ஸ்வாமி உணர்ந்ததுதான் அதிசயம்
அன்றொரு நாள் துரௌபதியின் மானம் காத்த கண்ணனாக
தன்னிடம் அடைக்கலம் கேட்காமுடியாமல் அவஸ்தைப் பட்டுக்
கொண்டிருந்த ஒரு ஜீவனின் மானத்தை ரட்சித்தார் .
என்ன ஒரு கருணை. என்ன ஒரு சர்வஞானம். ஜய ஜய சங்கரா.
ஹரஹர சங்கரா.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
21 comments:
நெகிழ வைக்கும் செயல். பெரியாவளின் பெருமையைப் பேசும் சம்பவங்கள் யாவுமே நெகிழ வைப்பவை.
என்ன ஒரு கருணை. என்ன ஒரு சர்வஞானம். ஜய ஜய சங்கரா.
ஹரஹர சங்கரா.
"கலியுக வரதன் கண்ணன் காட்சி கொடுப்பது காஞ்சியிலே"
சத்தியமான வரிகள்..!
அருமை அம்மா...
ஜய ஜய சங்கரா... ஹரஹர சங்கரா...
அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி வல்லிம்ம
சிறப்பான பகிர்வு. பெரியவாளின் கருணைக்கு ஈடு இணையேது....
அடடடா................ பாவம் அந்தம்மா. நல்லவேளையா இவர் உதவினார்.க்ரேட்!!!
அன்றொரு நாள் துரௌபதியின் மானம் காத்த கண்ணனாக
தன்னிடம் அடைக்கலம் கேட்காமுடியாமல் அவஸ்தைப் பட்டுக்
கொண்டிருந்த ஒரு ஜீவனின் மானத்தை ரட்சித்தார் .//
நெகிழ வைத்த காட்சி. தேவை அறிந்து அளித்த கருணை வியக்க வைக்கிறது.
அருமையான பகிர்வுக்கு நன்றி.
தலைப்பு மிக அருமை.
சமயத்தில் செய்த பேருதவி.....
பகிர்வுக்கு நன்றி.
நம்பினோர் கைவிடப்படார்...
உண்மைதான் ஸ்ரீராம்.ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களுக்காகவேத் தியானம் செய்து ஸ்ரீ காமாக்ஷியின் மறு அவதாரமாகத் தன்னை நாடி வருபவரிடம் கருணை காட்டிய வள்ளல்.
அன்பு இராஜ ராஜேஸ்வரி,அவர் சொன்ன அளவு நெகிழ்ச்சியாக என்னால் எழுத முடியவில்லை. மஹா பெரியவர்களின் பெருமையை நம்மால் சொல்லி முடியுமா.
வரணும் தனபாலன்.வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
ஆமாம் தென்றல், எத்தனை நிகழ்ச்சிகள்.ஒவ்வொரு தடவையும் நினைத்துத் துதித்தவர்களை ஸ்வாமிகள் கைவிட்டார் என்ற செய்தியே கிடையாது.
வரணும் ஆதி.
நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் போதும்.அருள் தானே தேடி வரும்.
ஆமாம் துளசி இப்பொழுதெல்லாம் ஆற்றில் குளிக்கிறவர்களோ
ஆறுகளோ அருகிப் போன நிலையில் அன்று நிகழ்ந்த சம்பவம்
இன்னும் அதிசயம்தான்.
அன்பு கோமதி. இந்தக் கருணைக்கு அளவே இல்லை. ஒவ்வொரு நாளும் அரைமணி நேரம் தேனமுதாக இந்தப் பெரியவர் நிகழ்ச்சிகளை வர்ணிக்கும் போது அந்தக் காலத்துக்கே போய்விடுகிறேன்.
அனைவரையும் காக்கும் தெய்வம் நம்மிடையே நடமாடி இருக்கிறது. இன்னும் அருள் புரிந்த வண்ணம்.
ஆமாம் வெங்கட் பின்னால் என்ன நடக்கிறது என்று எப்படித்தான் உணர்ந்தாரோ.அபலைப் பெண்ணின் மானம் காத்த கலியுகக் கடவுள்.
உண்மையே மகேந்திரன் . நம்பிக்கை இல்லாமல் எது நடக்கும். நன்றி மா.
அனைத்தும் அறிந்த மகாபெரியவாள்தான். கருணையே கருணை.
இதை ஏற்கெனவே படிச்சேன். அருமையான நிகழ்வு. அந்த அம்மாவுக்குக் கைகொடுத்த கண்ணனாகப் பெரியவரின் காலத்துக்கேற்ற உதவி அமைந்து விட்டது. அவர் கைகளால் துணிகளைப் பெற்றுக் கொள்ளவும் அவர் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்.
ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
Post a Comment