மீனாக்ஷி, தண்டாயுதபாணி,பழனி முருகன் |
தெய்வத்தைத் தரிசிக்கும் பூக்கள் |
Add caption |
வழிபாடு முடிந்த பிறகு அருள் அன்னை |
நவநவமாய் நாட்கள் நடந்தேறின.
பரபரப்பு எதிர்பார்ப்பு
இனிய உறவுகளின் சந்திப்பு.
விதவித உடைகளின் சரசரப்பு.
சிலரின் உத்சாகம்.
சிலரின் சலிப்பு.
அதைவிட இனிய நட்புகளின் சந்தோஷம். குட்டிப் பாப்பாக்களின்
வருகையும் அவர்களின் மழலையும்
அம்மாக்களின் மிரட்டலும் ,பொம்மைகளைத் தொடும் ஆர்வமும்
சர்க்கரை போட்டாதான் சுண்டல் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்த வாண்டுவும் எல்லாமே அன்னையின் அருள்.
உடல் சலித்துக் கொண்டாலும்,மனம் சலிக்கவே இல்லை.
இன்றைய நன்னாளில் அதிக உயிர் சேதம் விளைக்காமல் விலகிய புயலுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம். நல்ல படியாக அதிகாரிக்களுக்கும் பாராட்டுகள்.
படிக்க ஆரம்பிக்கப் போகும் குழந்தைகளுக்கும்,படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும்,
பதிவுலக நட்புகளுக்கும் இறைவனின் அருள் பரிபூர்ணமாக நிறைந்து இருக்க அன்னை அருள் செய்யட்டும். நல்ல நினைவுகளையே பதிவு செய்வோம்.
நல்லவைகளே நடக்கட்டும்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
21 comments:
சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!
ஆயுத பூஜைக்காக சிறப்பு பதிவு. நேரம் இருந்தால் பார்க்கவும்.
http://www.nambalki.com/2013/10/blog-post_13.html
என் தமிழ்மணம் +1 வோட்டும் போட்டுளேன்; நல்ல இடுகை.
நன்றி!
நல்வரவு நம்பள்கி.
வோட் பதிவு செய்ததற்கும் நன்றி. கட்டாயம் உங்கள் பதிவை வந்து பார்க்கிறேன்.
// நல்ல நினைவுகளையே பதிவு செய்வோம்... //
சிறப்பு வரிகள் அம்மா...
இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்... நன்றி...
நல்ல நினைவுகளையே பதிவு செய்வோம்.
நல்லவைகளே நடக்கட்டும்.
சரஸ்வதி பூஜை
ஆயுத பூஜை வாழ்த்துகள்.
நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள் வல்லிம்மா.
/சர்க்கரை போட்டாதான் சுண்டல் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்த வாண்டு/
Cute:)!
விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
உடல் சலித்துக் கொண்டாலும்,மனம் சலிக்கவே இல்லை.
இன்றைய நன்னாளில் அதிக உயிர் சேதம் விளைக்காமல் விலகிய புயலுக்கு நன்றி சொல்லிக் கொள்ளலாம். நல்ல படியாக அதிகாரிக்களுக்கும் பாராட்டுகள்.//
உடல் துன்பம் தெரியாமல் மனம் பார்த்துக் கொண்டது அல்லவா நவராத்திரியில்.
நானும் நவராத்திரி சிந்தனைகளை பதிவு செய்து இருக்கிறேன் அக்கா.
எனக்கும் பச்சைபயிறு, காராமணி சுண்டலுக்கு சர்க்கரை சேர்த்து சாப்பிடப் பிடிக்கும்.
அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.
//மனம் சலிக்கவே இல்லை.
அதான் மகத்துவம்.
வாழ்த்துகள்.....
இனிய விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா...
//உடல் சலித்துக் கொண்டாலும்,மனம் சலிக்கவே இல்லை.//
சத்தியமான உண்மை!
உண்மையில் இந்த மனசுதான் வண்டியை ஓடவைக்கிறது:-)
இனிய தசரா வாழ்த்து(க்)கள்.
நன்றி தனபாலன் .உங்கள் எழுத்துகள் மேலும் உற்சாகம் பெற வாழ்த்துகள்
அன்பு இராஜராஜேஸ்வரி,
நல்ல பதிவுகளைப் படிக்காமல் விடக் கூடாது என்றும் திட்டம் செய்யணும். நன்றி மா.
குழந்தைகளுக்காகக் கொலு வைக்க ஆரம்பித்து நாமும் குழந்தைகளாகும் நாட்கள் இவை ராமலக்ஷ்மி.
இந்த வருடம் ஒப்பேற்றியாச்சு. சக்தியைச் சேமித்து அடுத்த வருடம் பார்க்கணும் அன்னையின் அருளால்.
வாங்க மாதேவி.
மிக மிக நன்றி மா.
ஆமாம் கோமதி. மனசின் உத்சாகம்
கைகால் வலியைப் பொறுத்துக் கொள்ள
சக்தியும் கொடுத்தது.
இன்னும் சிறக்கச் செய்திருக்கலாம்.
உங்கள் கொலுவைப் பார்த்தபிறகு வந்த சிந்தனை இது.
வாழ்க வளமுடன் அம்மா.
நமக்கு மனிதர்களோடு ஒத்து வாழ வேண்டிய மனநிலமை வாய்க்கிறது துரை.
உறவுகளைப் பேண நல்ல நேரம் இது,.
நன்றி மா வெங்கட்.
உங்கள் வாழ்விலும் எல்லா நலனும் கிடைக்க நல் வாழ்த்துகள் மகேந்திரன்.
உண்மைதான் துளசி. மனம் வலிமையாக இருந்தால்தான்
எந்தவிதமான சங்கடத்தையும் சமாளிக்க முடியும் என்பதற்கு நம்மிடையே எத்தனையோ பேர்.
வாழ்த்துகள் மா.
மனதின் அன்பு உடலின் அலுப்பை வென்று விடுகிறது. நவசுவாரஸ்ய நாட்கள்.
Post a Comment