Add caption |
Add caption |
Add caption |
Add caption |
Add caption |
பொங்கிவரும் பெருநிலவு |
வெளியே உறவினர் வீட்டுக்குப் போய் வரும் போது மாலை ஆகிவிட்டது.
திடிரென்று மேலே பார்க்கிறேன்!மேகமில்லாத நீலவானில் சதுர்த்தி நிலா வந்து நிற்கிறாள்.
அப்பாடி இது போலப் பார்த்து எத்தனை நாளாச்சுமா.
ஓஹோ தேடி தேடி அலைபவளுக்கு ஒரு தடவையாவது ஒழுங்காகக் காட்சி அளிக்கலாம்னு கருணை வந்துவிட்டதோ அம்மாவுக்கு!!!
இருப்பதோ ஓடும் வண்டியில்.
அந்த மஞ்சளழகியைப் பார்ப்பது எவ்வளவு இதம்!
கொஞ்சமாக வெள்ளைத் துகிலை எடுத்துப் போர்த்திக் கொள்ளத் தொடங்கினாள்.
முடிந்தவரை கையை ஆடாமல் பார்த்துக் கொண்டு
படம் பிடித்தேன்.
இன்று பூரண நிலா.பார்க்கலாம் என்ன வேடிக்கை நடக்கிறது என்று.:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
19 comments:
மிகவும் அருமை... நேற்று நாங்களும் ரசித்தேன்... இன்றும் முழுதாக ரசிக்க காத்திருக்கிறோம்... வாழ்த்துக்கள் அம்மா...
வணக்கம்
நிலாவை பார்வையிட நாங்களும் காத்திருக்கிறோம். நிலாப் படம் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றும் முழுதாகத் தெரியுமா? அழகை இன்று ரசிக்க முயற்சிக்கிறேன். அரிய தகவலுக்கு நன்றி
இரண்டாவது படத்திலிருந்து ஏரியா கண்டுபிடிக்க செய்த முயற்சி பலனளிக்கவில்லை! :))
நானும் காத்து நிற்கின்றேன்.
நன்றி தனபாலன்.இப்போது அடிக்கும் வெய்யிலைப் பார்த்தால் மாலை மழை வராமல் இருக்கவேண்டுமே என்று
தோன்றுகிறது.மழை வரணும் வந்தால் நாளைக்குக் கூட எடுத்துக் கொள்ளலாம்.நீங்களும் நிலாவைப் ப்பின்தொடர ஆரம்பித்துவிட்டீர்களா.:)
நன்றி ரூபன்.நில்லாமல் ஓடிவர நிலாவைக் கேட்டுக் கொள்ளலாம்!
மேகமில்லாத நீலவானில் சதுர்த்தி நிலா வந்து நிற்கிறாள்.
ஆனந்தமளிக்கும் நிலவுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
நன்றி வியபதி.
இரண்டாவது படத்தில் தெரிவது மேற்கு மாம்பலம் ஸ்ரீராம்:)
என்னை மாதிரி காமிராக் கையர்களுக்கு
இன்னும் கொஞ்சம் பயிற்சி தேவை.
நான் எழுதும் நேரம் நிலா உங்க ஊரில் வந்திருக்கணுமே துளசி. குளிர் இல்லாவிட்டால் வெளியில் சென்று படம் எடுக்கலாம்.
மஞ்சள் நிலா வெள்ளியாவதும் அழகு. மீண்டும் மஞ்சளாகி மறைவ்தும் அழகு. காத்திருக்கிறோம் இன்றைய நிலாவைக் காண:).
இன்றைக்கு hunters moon எனப்படும் முழுநிலா பார்க்கப் பிரமாதமாக இருக்கும்.
டெக்சஸில் முழுநிலவு கூட ஒரு சைஸ் பெரிதாக இருக்கும் என்று ஒரு வழக்கு உண்டு.. சில வருடங்களுக்கு முன் டல்லஸில் உயரப்பறந்து கொண்டிருந்த ப்ளேன் ஜன்னலிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரமிப்பு அடங்கவேயில்லை.
வரணும் இராஜராஜேஸ்வரி.இன்று பவுர்ணமி.கொஞ்சமே எடுக்க முடிந்தது அதையும் இணைத்துவிட்டேன்.
:)நன்றி.மா.
அன்பு ராமலக்ஷ்மி,
மெரினாவுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். பிரமுகர் வருகையால் சாலைகளெல்லாம் நெரிசல். கடலாசை நிராசையானது. பரவாயில்லை. வந்த நிலாவைக் காத்திருந்து பிடித்துவிட்டேன்:)
ஆமாம் துரை. டெக்ஸாஸ் காரங்களுக்கு எல்லாமெ பெரிய அளவில் கிடைக்கும் நிலமும் பெரிசு.
நிலவும் பெரிசு:)
ஹார்வெஸ்ட் மூன் எப்போ வரும்?மறந்துவிட்டது. காமிரா இல்லாத காலத்தில் நிறைய உங்கள் ஊர் நிலாவை அனுபவித்திருக்கிறேன்:)
பிடித்த நிலா பிடித்தது:)! நன்றி.
@அப்பாதுரை , /இன்றைக்கு hunters moon எனப்படும் முழுநிலா பார்க்கப் பிரமாதமாக இருக்கும். /
அடடா, முன்னமே தெரிந்திருந்தால் எடுத்திருப்பேனே. விவரங்களை இணையத்திலிருந்து அறிந்து கொண்டேன். அடுத்த அக்டோபர் முடிந்தால் பிடிக்கிறேன்:)/
வரணும் வரணும் ராமலக்ஷ்மி.
நிலா வெளியே வர நேரம் பிடித்ததால் மஞ்சள் நிலாவை விட்டுவிட்டேன்.நன்றி மா.
அழகு நிலாதேரேறிவந்தது :))
அருமை.
Post a Comment