Blog Archive

Friday, September 06, 2013

சீனிம்மா... மறுமுறை வலம் வருகிறார்.














புரசவாக்கத்து வீடு, மூன்று அறைகளும் வீட்டுக்கு வெளியே இருக்கும் வெளிவசதிகளும் கொண்டது.

கோலம் போடும் இடத்தைத் தாண்டியதும் ஒரு பத்துக்குப் பத்து வரவேற்பரை அறை. ஒரே ஒரு நாற்காலியும் பெஞ்சும் உண்டு:)

கம்பித்தடுப்பும் அதற்கு மூங்கில் தட்டியினாலான மறைப்பும்(கர்ட்டன்)உண்டு.
இதைத் தாண்டியதும் நான் சொன்ன கூடம். அதில் ஒரு காத்ரேஜ் பீரோ, அரிசி மூட்டை வைக்கும்  பெஞ்ச்.

அத்ற்கு முட்டுக் கொடுக்க இரண்டு செங்கல்கள்
அந்தப்பக்கம் சுவரில் ஒரு  ஜன்னல்.
இந்தப்பக்கம் சுவரில் முப்பத்திரண்டு கடவுள் படங்கள்.:)
மூலையில் நல்ல மரத்தால் செய்த அலமாரி
ஒன்று.
மேல்தட்டில் அலங்கார பொருட்கள்.
இரண்டாவது தட்டில் தாத்தாவின் பிரபந்தம்,பாட்டியின் சிவகாமீயின் சபதம்
மாமாக்களின் எகனாமிக்ஸ் புத்தகங்கள் ,,
அந்தக் காலத்து விஞ்ஞான புத்தகங்கள்
கீழ் தட்டில் இவர்கள் பரிசாக வாங்கிய கோப்பைகள்,தட்டுகள் என்று வரிசையாக இருக்கும்.
அதற்கு
அடுத்த அறை கொஞ்சமே பெரீய புழக்கடையைப் பார்த்த சமையல் அறை.
அதீல் அடுப்பு மேடையின் கீழெ
கற்சட்டிகள் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும்.
அதைத்தவிர பாட்டியின் தம்பி, ஹைதராபாத் மிலிட்டரி மாமா வாங்கி வரும்
பீங்கான் ஊறுகாய் ஜாடிகள். என் உயரத்துக்கு இருக்கும் .
காய்கறிகள் கழுவி வைக்கப் பட்டிருக்கும்.

தையல் இலைக்கட்டுகளும் இருக்கும்.
எதிர்த்த சுவரில் பருப்பு வகையறாக்களை வைக்கும் காரைக்குடி டப்பாக்கள்
வைக்க ஒரு மரத்தட்டு சுவற்றில் அடித்து வைத்திருப்பார்கள்.
அதன் அருகிலேயே காப்பிக் கொட்டை அரைக்கும் மெஷினும் இருக்கும்..

அந்தப்பலகையில் மாட்டியிருக்கும் கொக்கிகளில் நல்லெண்ணை,தேங்காயெண்ணை,
நெய்,ஓகே ஆயில் எனப்படும் பட்சணம் செய்யும் எண்ணெய்
எவர்சில்வர் தூக்குகளில் தொங்கும்.
சமையலறைக்கு மட்டும் ஓடு வேய்ந்திருக்கும்.
அவ்வப்போது சீனிம்மாவை மட்டும் கடிக்கும் தேள்களும் அங்கிருந்து விழுவதுண்டு.
நான் ஒன்று கூட பார்த்ததில்லை.

தேள் கொட்டினால்,சீனிம்மா,தன் வேலையெல்லாம் முடித்துக் கொண்டுதான்,
டாக்டரைப் பார்க்கப் போவார்.
இல்லாவிட்டால் வீட்டுக்கே வந்து ஊசி போடும் (ஒரு பாதி) டாக்டரை (அரை வைத்தியர்=கம்பவுண்டர்)வரவழைப்பார்

இதே வீட்டில் அம்மாவைப் பெண் பார்க்க அப்பா குடும்பம் வந்திருக்கிறது.
மாமாக்கள் திருமணங்கள், பிறகு என்னைப் பெண்பார்ப்பது எல்லாம் நடந்தன.
வாசல் சிமெண்ட் தரையில் கட்டில்கள் போட்டு ஆண்களும்,
வீட்டின் உள்ளே பெண்களும்,முதல் அறையில் குழந்தைகளும் படுப்போம்.

சரி பாத்திரங்கள் அலம்பற சீனுக்குப் போவோமா::)
அப்போது மணி ஆறு ஆகியிருக்கும். ஒவ்வொருவராக மாமாக்கள்,தம்பிகள்,அம்மா எல்லோரும் எழுந்து கூடத்தில் அவரவர் படுக்கைகளில் உட்கார்ந்து ,பேசிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். அது நாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஊர் நடப்பு,யாருக்குக் கல்யாணம்,என்ன படம்,சிவாஜி மாதிரி உண்டா இப்படி போகும்.
நானும் சீனிம்மா குளிக்கப் போகும்போது இங்கே வந்துவிடுவேஏன். அம்மாவுடன் ஒட்டியபடி அவர்கள் பேச்சைக் கேட்பதில்,அந்தக் குரல்களின் அன்பு மொழியில் ஒருவிதப் பாதுகாப்பு இருக்கும்.

சீனிம்மா தான் மட்டும் சில்லென்ற பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு,மற்றவர்களுக்கு பெரிய வென்னீர்த்தவலையில் தண்ணீரை நிரப்பிவிட்டு
அடுப்பு மூட்ட அம்மாவைக் கூப்பிடுவார்.
''போறும் பாப்பா, அதுகள் இன்னும் வெளியே கிளம்பணும். பேச்சு நிறுத்திக் கொள்ளுங்கள்''
என்று குரல் கதவுக்குப் பின்னாலிருந்து வரும்.

அத்தனையூண்டு மூன்றே அறை கொண்ட வீட்டில் அத்தனை பேர் எப்படி இருந்தோம்!!

உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரண்மாக இருக்க முடியும்.
மீண்டும் சீனிம்மா ஒரு பெரிய பாத்திரத்தோடு வாசலில் பால் வாங்கக் கிளம்புவார்.

மாடு ஒன்று கட்டியிருக்கும். தோலால் தைத்த கன்று ஒன்றும் நிறுத்தி இருக்கும்.நானும்
அந்தக் கோபாலுக் கோனாரிடம் கேட்பேன். '' இந்தக் கன்னுக்குட்டி கத்தாதா '' என்று அவரும் சலிக்காமல் சொல்லுவார். அது புல் மேயப் போயிருக்கு. போகும்போது இந்த உடம்புக்குள்ள வந்துவிடும் என்று.

ஆறு வயதில் எனக்கேன் இந்தச் சின்ன விஷயம் கூட எட்டவில்லை என்று,
இப்பொது யோசிக்கிறேன்.

இப்போது என்றால் காலமே வேறு. பெரிய பேரன்,150 வருடங்கள் வாழ மருந்து கூடிய சீக்கிரம் வந்துவிடுமாம். முடிந்தால் அவனே கண்டு பிடீக்கப்போகிறானாம்

''நோ படி ஹேஸ் டு டை பாட்டி'':)

இப்போது இந்தக் கதை எழுத என்ன காரணம்???
இருக்கு.அது அடுத்த பகுதியில் வரும்:))))
.

26 comments:

துளசி கோபால் said...

கோபால் கோனாரா? !!!!!!!


முந்தியெல்லாம் வீட்டுலே தேவையில்லாத பொருட்கள்ன்னு ஒன்னும் அதிகம் இருக்காதுப்பா. வீட்டைக் கழுவி விடும் பழக்கம் ஒன்னு இருந்துச்சே. அது நினைவிருக்கா?

இப்ப இது நடக்கும் காரியமா?

பெட் ரூமெல்லாம் பகலில் ஹால் ஆக மாறிடும். சாப்பாட்டு நேரம் இதுதான் டைனிங் ஹால். இப்படி எல்லாத்துக்கும் ஆயிரம் உபயோகம்.

இப்ப இடம்பெருசே தவிர மனசு ரொம்பச் சின்னதாப் போயிருச்சேப்பா(-:

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்பா. கோவாலு:)

மறக்க முடியுமா. அமாவாசை,ஆடி,வெள்ளி இப்படிவீட்டை கழுவவே நாள் வரும்மே..சென்னையிலியே இப்ப.
நடக்கறதூ இல்ல.

ஒரு பாய்,ஒரு தலகாணி, ஓரு போர்வை. காலைல எழுந்தட்டும் பரணுக்கு ஏறிடும்:)
நல்லாத்தான் இருந்தது.
வீட்டுக்கு வரவங்களும் மாறிட்டாங்க.!!!நாமும் மாறிட்டோம்.

Anonymous said...

எங்க பாட்டி வீட்டுக்கு போனா மண் சட்டியில ரசம் வச்சு குடுப்பாங்க. நல்லா இருக்கும். கோபால் கோனார் மாதிரி எங்க வீட்டுக்கு பால் ஊத்தறவர் பேரு கண்ணன். பால்காரக்கண்ணன் அப்படீன்னே பேரு

இலவசக்கொத்தனார் said...

இப்போ இது ஏன்? பித்தளையில் செஞ்ச தேங்காய் பத்தி நான் எங்கயோ படிச்சேன். நீங்களும் படிச்சுட்டு கொசுவர்த்தி சுத்தப் போறீங்க! அதானே!!

ஆயில்யன் said...

/உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரண்மாக இருக்க முடியும்.//


உண்மை!

கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கிறேன்! எத்தனை எத்தனை விசயங்களில் ஆலோசனைகள் கேக்க முடியும். அறிவுரைகள் சொல்லமுடியும்!

ம்ம்!!!

ராமலக்ஷ்மி said...

//மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரண்மாக இருக்க முடியும்.//

உண்மைதான், சீனிம்மாவும் சேர்த்து.

//ஆறு வயதில் எனக்கேன் இந்தச் சின்ன விஷயம் கூட எட்டவில்லை என்று,இப்பொது யோசிக்கிறேன்.

இப்போது என்றால் காலமே வேறு.//

ரொம்பச் சரி. என் தங்கை பெண் இரண்டரை வயதிலேயே எத்தனை ஷார்ப் என்கிறீங்க... எத்தனையோ வய்து வரை நம்க்கு பல விஷயங்கள் எட்டாமத்தான் இருந்திருக்குன்னு தோணும்:)))!

தேங்காய் நல்ல ஷைன் அடிக்குது:)! உள்ளே ஹாலோவா செய்திருந்தாலும் கூட [நிஜ தேங்காய் மாதிரி]நெளிய சான்ஸே இல்லாத படியான கனமான தேங்காய்களும் உண்டு. இப்படியும் உண்டு.

திவாண்ணா said...

முதல்ல படத்த பாத்துட்டு இது என்னடான்னு முழிச்சேன். அப்புறம் படிச்சப்பிறகு பித்தளை தேங்காய்ன்னு தெரிஞ்சது. இது வரை பாத்தது இல்லை.

ம்ம்ம் அப்புறம் கண் பிரச்சினையா? கை கண்ட வழி இருக்கு. சென்னை வந்தபிறகு மெயிலுங்க. சொல்றேன்.
தி.வாசுதேவன்

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சின்ன அம்மிணி.

உங்க தலைமுறை வரை பாட்டி வீட்டுக்குப் போவது ஒரு பெரிய அனுபவமா இருந்திருக்கு.
இனிமேல் எப்படியோ.

வேலைக்குப் போகிற பாட்டி.

பாட்டி தாத்தாவுடன்(வளர்ர்ந்த) பேரன் பேத்திகளை இனிமேல் பொதிகையில் தான் பார்க்கணுமோ!!

வல்லிசிம்ஹன் said...

பித்தளைத் தேங்காயை என் பதிவில தான் பார்த்திருக்க முடியும் கொத்ஸ்.
:)

கொசுவர்த்தி சுத்தலைன்னா நாளைக்கு என் பேரன் பேத்திகள் படிக்கிறது எப்படி:)

எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்!!

வல்லிசிம்ஹன் said...

வாங்கம்மா ஆயில்யன்.

என்னுடைய 52 வயது வரைப் பாட்டியின் அன்பை அனுபவித்தவள் நான்.
அவளுக்கு என் மேல் குறையே கண்டு பிடிக்கத் தெரியாது:0)
அப்பப்போ தட்டறது அம்மாவாகத் தான் இருக்கும்!!!
என் பசங்களைக் கேட்டால் தங்களோட பாட்டி தான் உயர்த்தி என்பார்கள்.

எளிமையாகவே இருந்து போனவர்கள் இவர்கள். என்னையெல்லாம் அவர்கள் வரிசையில் சேர்க்க முடியாது:(

வல்லிசிம்ஹன் said...

ராம்லக்ஷ்மி வரணும்பா.

மக்கு -----இலக்கணம் சொல்ல்லுன்னா என்னைச் சொல்லலாம்.
இன்னும் அடைமொழி சொல்லவேண்டும் என்றால் பிடிவாதம், நளினமே கிடையாது இப்படிப் போகும் லிஸ்ட்.

பாவம் எங்க அம்மா அப்பா:))
இந்தக் காலக் குழந்தைகளைப் பற்றிக் கேக்கவே வேண்டாம்.பிறந்ததிலிருந்து அவர்களுக்கு ஞானக்கண் திறந்துவிடுகிறது:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் வாசுதேவன்.

பித்தளைலியே பொருட்கள் சீதனமாகக் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. பணம் இருப்பவர்கள் வெள்ளியிலும் கொடுப்பார்கள்.


கண் கொஞ்சம் சிரமம்தான். கண்ணாடி மாற்றணும்.

Geetha Sambasivam said...

//உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரண்மாக இருக்க முடியும்.//

உண்மையான வார்த்தைகள் வல்லி, இப்போ இடம் பெரிசா இருந்தாலும் மனசு இல்லை!

எனக்கும் உங்க கதையைப் படிச்சதும், எங்க தாத்தா (அம்மாவின் அப்பா தான்) வீட்டு அனுபவங்கள் நெஞ்சில் அலை மோதியது. எங்க பாட்டியை நாங்க "தாத்தாம்மா" என்று கூப்பிடுவோம். அதுக்குக்காரணமே தாத்தா தன் மனைவியைப் பெயர்சொல்லிக் கூப்பிடாமல் "அம்மா" என்றே அழைத்து வந்தது. தாத்தாவுக்கும் அவங்களே அம்மா என்று நாங்க நினைச்சுக் கொண்டதாய் எல்லாரும் சொல்லிச் சிரிப்பாங்க. எல்லாம் பொற்காலங்கள்! :((((((((

Geetha Sambasivam said...

பித்தளைத் தேங்காய் எங்க வீட்டிலேயும் இருக்கு ஆனால் இத்தனை பெரிசு இல்லை. சின்னது மிஞ்சினால் 2 அல்லது 3 அங்குலமே இருக்கும். கொலுவில் கலசத்தில் வைக்கிறோம். குடுமிக்குப் பதிலா மூடி அந்த இடத்தில் குடுமி மாதிரி செய்யப் பட்டிருக்கும், அதைத் திறந்து உள்ளே அம்மா தண்ணீர் ஊற்றுவாள். இப்போ திறக்கறதே இல்லை, திறக்க வருமானும் தெரியலை! ஆனால் ஒவ்வொரு வருஷமும் கொலுவில் வைச்சுடுவேன்! ம்ம்ம்ம் பெருமூச்சுத் தான் வருது!

வல்லிசிம்ஹன் said...

வரணும்மா கீதா, நிறைய பொருட்களோட அருமை அது இருக்கிற போது தெரியறதில்லை.
இதே மாதிரி பழைய கொலு பொம்மைகளும் பாட்டி வீட்டில் வர்ணம் கலையாமல் இருந்தன. புது வீடு கட்டி வரும்போது,தூக்கிப் போட்டதில் அவைகளும் உண்டூ.

இந்த தேங்காய் கூட எல்லாக் குழந்தைகளின் கைகளிலும் விளையாடிவிட்டுத்தான் கொஞ்சம் நசுங்கி விட்டது.
அப்புறம் இங்க இருக்கிற ஷெல்ஃபில் பத்திரமா இருக்கு:)
நாங்களும் சீனிம்மாவை அப்படிக் கூப்பிடக் காரணம்,எனக்கு நினைவுதெரிந்த நாட்களில் அவளை ஒரு பாட்டியாகப் பார்த்ததில்லை. நரைக்காத தலை. அது ஒன்றுதான் காரண்மாக இருக்க முடியும்.மாமா பேரு ஸ்ரீனிவாசன்.அதனாலா சீனியோட அம்மா சீனிம்மா ஆகிவிட்டார்.

உங்க தாத்தா வெகு அருமையான மனிதராக இருக்கணும்.மனைவியை அம்மான்னு கூப்பிடணும்னா,என்ன ஒரு அழகு!!!

துளசி கோபால் said...

என்னிடம் ஒரு சின்ன வெள்ளித்தேங்காய் குடுமியுடன் இருக்கு.

அதுக்கேத்தமாதிரி அளவில் ஒரு கலசமும், மாவிலையும்கூட இருக்கு.

நம்மூர் சுக்ரா ஜுவல்லரியில் இந்தமாதிரி மினியேச்சர் ஏராளமாக் கிடைக்குதுப்பா.

Geetha Sambasivam said...

//உங்க தாத்தா வெகு அருமையான மனிதராக இருக்கணும்.மனைவியை அம்மான்னு கூப்பிடணும்னா,என்ன ஒரு அழகு!!!//

உண்மைதான் வல்லி, அருமையான மனிதரே தான், என்னையுமே அம்மா என்றே கூப்பிடுவார், ஆனால் வித்தியாசம் தெரியணுமேன்னு என் பெயரைச் சேர்த்துக் கொண்டு "சீதாம்மா" என்று கூப்பிடுவார். என்னோட ஒரிஜினல் பெயரான சீதாலட்சுமியை அவரும், என்னோட அப்பாவின் அப்பாவும் மட்டுமே கூப்பிட்டு வந்தார்கள். :))))))))))))) பொதுவாகவே மதுரைப் பக்கத்திலே பெண் குழந்தைகளை அம்மா என்றே கூப்பிடும் வழக்கம் உண்டோனு தோணுது. பெரும்பாலும் சின்ன வயசில் இருந்தே பல பெரியவங்களும் என்னை அம்மா என்று கூப்பிட்டே பழக்கம் ஆகி விட்டது! :))))))))))))

வல்லிசிம்ஹன் said...

ஓஹோ கீதா!!!
அப்பவே அம்மான்னா,
இப்ப பாட்டியா:)
அதான் அம்பி அடிக்கடி பாட்டிங்கறார்.
மரியாதைக்கு மதுரையைத் தான் சொல்லணும்.

இப்பவும் வலையுலகத் தலைவி பட்டமும் சேர்ந்து கொண்டுவிட்டது :)

இராஜராஜேஸ்வரி said...

உடமைகள் கொஞ்சம். மனம் பெரிய விசாலமானது.அது ஒன்றுதான் காரண்மாக இருக்க முடியும்.

என்ன அருமையான வாழ்க்கை ..!

இராஜராஜேஸ்வரி said...

காமதேனு ,கற்பகவிருடம் , கரும்பு , துளசிச்செடி எல்லாம் வெள்ளியில் வாங்கி வைத்திருக்கிறேன்..

தேங்காய் பித்தளையில் மங்கலப் பொருளாக் மனம் கவருகிறது..!

அடுத்தமுறை தேடி வெள்ளியில் வாங்கிவிடுகிறேன்..

கலசத்தோடு மாவிலையோடு நகைக்கடையில் பார்த்த ஞாபகம் வருகிறது..!!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி,எல்லாமங்கலப் பொருட்களுக்கும் வாய் இருந்தால் பரம்பரைப் பெருமை பேசும். கண்டிப்பாக வாங்கிவிடுங்கள் வெள்ளித்தேங்காயை.:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இராஜராஜேஸ்வரி,
மனத்தைப் பொறுத்தே விருந்தும். முகம் மலர்ந்திட்ட உப்பில்லாக் கூழும் உயர்ந்த நல் அமிர்தமாகும் அல்லவா.

ராமலக்ஷ்மி said...

மீண்டுமொருமுறை இரசித்து வாசித்தேன். வீட்டைப் பற்றிய விவரணைகள் அருமை. நல்ல நினைவாற்றலும் தங்களூக்கு:)!

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.
பழைய நினைவுகள் மறப்பதில்லை.:)

ஸ்ரீராம். said...

வீட்டுக்குள் நானே வளைய வந்தது போல வர்ணித்திருக்கிறீர்கள். பித்தளைத் தேங்காய் நான் பார்த்ததில்லை. திடீரெனப் பார்த்தால் ஏகப்பட்ட பதிவுகள் படிக்கக் காத்திருக்கின்றன! என்ன ஆச்சு?

மாதேவி said...

பித்தளை தேங்காய் இப்பொழுதுதான் பார்க்கின்றேன்.
உங்களில் பலரும் பரம்பரை பொருட்களை பேணிக்காத்து வருகின்றீர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றது.