Blog Archive

Monday, September 23, 2013

ஊஞ்சல் அம்மாக்களும் ஓடும் பிள்ளைகளும்

வாங்க நினைத்த  ஊஞ்சல்:)
என்வாழ்வு உன்னோடுதான்
யார் யார் யார்  இவர் யாரோ
பேச்சுக்குப் பேச்சு வேலைக்கு வேலை!!
பேரனோட  செஸ் விளையாட்டு
அம்மா  பிஸிடா  சாரி
பிசி பிசி பிசி     ஃபேஸ் புக்
வெல்லுவதே  எங்கள் நோக்கம்
படிப்பு,வேலை,நடுநடுவே  ஷாப்பிங்!!!!!!!!!!!!
கடவுளின்  சுறு சுறுப்பு ஆக்கம்
சுறு சுறுப்பின் பிம்பம்   செடிகளிடம் கருணை

 ஊஞ்சல் அம்மாக்கள் என்று குறிப்பிடுவது என்னைப் போன்ற அம்மாக்களை.
சுறு சுறு பிஸி  பிஸி  மற்ற அம்மாக்கள் அப்பாக்களை:)

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

25 comments:

ராஜி said...

ஊஞ்சல் அம்மாக்கு வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் அம்மா...

துளசி கோபால் said...

ஊஞ்சலம்மாவுக்கு இன்னொரு (அசல்) ஊஞ்சலம்மாவின் இனிய வாழ்த்து(க்)கள்.

Geetha Sambasivam said...

என்ன ஊஞ்சலம்மா?? புரியலை! :(

ஸ்ரீராம். said...

தோட்டமோ, ப்ரிய பிராணிகள் வளர்ப்போ... மனம் வேறு ஒன்றில் ஈடுபட்டால் கவலை குறையும்தான். இந்தக் கருத்தில் திண்ணையில் இப்போதுதான் ஹேமா (HVL) கதை ஒன்று படித்து விட்டு வந்தேன். :)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராஜி!!எங்கள் மாமியார் அடிக்கடி உபயோகப் படுத்தும் வார்த்தை''நான் என்ன ஊஞ்சலா ஆடிண்டு இருந்தேன் ரெண்டு கையிலும் வேலை''
அதை இன்று மீண்டும் இன்னொருவர் மூலம் கேட்க நேர்ந்தது:)
அதற்கும் நீங்கள் வாழ்த்துகள் சொன்னதே மிகவும் சந்தோஷம் . நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன் ,எனக்கு மிகவும் பிடித்த பாடலைத் தாங்கள் தங்கச்சி கோமதியின் பதிவில் இட்டது மிக்க மகிழ்ச்சி. நன்றி மா,.

வல்லிசிம்ஹன் said...

அட ஆமாம்.நிஜ ஊஞ்சல் கதை இன்னும் சுவாரஸ்யமா இருக்குமே.
துளசி என்னவெல்லாமோ டிஜிடலில் மீள்பதிப்பா வருது. உங்க பதிவுகளும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.;)

வல்லிசிம்ஹன் said...

கீதா அது பெரிய கதை.
பழைய வீட்டில் ஒரு ஆறடி ஊஞ்சல் இருந்தது.
அது நித்ய கல்யாண ஹால் என்ற கூடத்தில் இருக்கும். எனக்கும் என் நாத்தனார் பசங்களுக்கும் அந்த ஊஞ்சல் சொர்க்கபுரி. சதா ஆடிக் கொண்டே இருப்போம்,.
வேலை இல்லாத போதுதான்.

மாமியாரின் மாமியாருக்கு தலைவலி வந்துவிடும்.
கோபத்தில் மாமியாருக்குக் கொஞ்சம் திட்டு விழும்.
அவர் வந்து எங்களைத் தோட்டத்துக்கு விரட்டுவார்.

வண்டி நிறைய உளுந்து வந்து இறங்கியிருந்தது.
அதை உரலில் போட்டு இரண்டாக ஆக்கவேண்டும். வெள்ளை உளுந்து கறுப்பு உளுந்து என்று தனியாகப் பிரித்துவைத்து பெரிய டப்பாக்களில் அடைக்கவேண்டும்.
இத்தனை வேலைகளுக்கு நடுவில் நானும் ஊஞ்சலில் ஆடியது பெரியம்மாவுக்குப் பிடிக்கவில்லை.

நிறைய ஊஞ்சல் கதைகளை நானும் என் ஓரகத்தியும் இன்று பேசிக் கொண்டோம்.

இப்போது ஊஞ்சலும் இல்லை உளுந்தும் இல்லை. பதிவு மட்டும் வந்துவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.எங்க பசங்க கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு நான் ஏதாவது எழுதுவதுதான் காரணம்.
இல்லாவிட்டால் கடிதம் போட்டே அறுத்து விடுவேன்,. அன்புத் தொல்லை.:)

கோமதி அரசு said...

அக்கா, நீங்கள் பகிர்ந்து கொண்ட படங்கள் எல்லாம் மிக அழகு. எல்லோரும் பிஸி, பிஸிதான். நின்று நிதனமாய் ஊஞ்சல் ஆட நேரமில்லை.

காலை நேரத்தில் ஏதாவது அம்மாவை கேட்டு படுத்தினால்
என் அம்மா சொல்லும் வார்த்தை ஆமாம் ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருக்கிறேன் பார்!

இப்போது ஊஞ்சல் வாங்கி போட்டாலும் ஆட நேரமில்லை ஒவ்வொருவருக்கும்.

கதம்ப உணர்வுகள் said...

எனக்கு எனக்கு???

ஊஞ்சல் அம்மா.....

மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....

ஒவ்வொரு படத்துக்கும் தந்த பஞ்ச் டயலாக் தான் எக்ஸ்ட்ரீம் பஞ்ச் வல்லிம்மா...

ரசித்து வாசித்தேன்..

அதிலும் ரெண்டு குழந்தைகளை கைகளில் வைத்துக்கொண்டு சாரிடா செல்லம் அம்மா பிசி :)

ஒவ்வொரு படத்துக்கும் ஏற்ற பொருத்தமான டயலாக் வல்லிம்மா.. எப்புடி இப்பிடி :)

கதம்ப உணர்வுகள் said...

//இப்போது ஊஞ்சலும் இல்லை உளுந்தும் இல்லை. பதிவு மட்டும் வந்துவிட்டது:)//

படிக்கும்போது எனக்கும் தோன்றிய வரிகள் வல்லிம்மா இது...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதிமா.
அதை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.
நமக்கும் ஊஞ்சல் ஆடினால் தலையும் ஆடுமோ என்கிறபயம்:)
இருந்தும் பேரனை மடியில் வைத்துக் கொண்டு பெண்வீட்டில் பின் தோட்டத்தில் ஆடியிருக்கிறேன்.என் பெண் ஆடி நான் பார்த்ததே இல்லை:(

மாதேவி said...

இனிய ஊஞ்சல் நினைவுகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மஞ்சு,வீட்டில் ஊஞ்சல் இருக்காப்பா.அழகான சுசீலாப் பாடலைப் பாடிக்கொண்டே உயரமும் தாழவரவும் ஒரு பத்து ஆட்டம்.
ஆஹா.அது ஓய்ந்து ஒரு தி.ஜானகிராமன் புத்தகம், படிக்கும்போது வரும் தூக்கம்.விழித்தால் உலகம் புதிதாக இருக்கும். ஒரு ஹார்ம்லெஸ் ஜோர்.

Ranjani Narayanan said...

உங்கள் ஊஞ்சல் பதிவு எனக்கு எங்கள் பாட்டியகத்தில் இருந்த ஊஞ்சலை நினைவுபடுத்திவிட்டது. இப்போதும் மாமா அப்படியே வைத்திருக்கிறார். போகும்போது நிச்சயம் ஆடிவிட்டு வருவேன்.
நானும் இப்போ கிட்டத்தட்ட ஊஞ்சலம்மா தான்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞனை, இந்த வீடு கட்டியபோதும் வாசலில் திண்ணையில் 3' க்கு ரோஸ்வுட் ஊஞ்சல் இருந்தது.
அது சாலையைநோக்கி இருந்ததால் போக்குவரத்தில் தூசி படிந்து மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து வீணாகிவிட்டது.உங்கள் நன்றாக இருக்கணும். ஸ்ரீரங்கம் போனால் நானும் அங்கெ போய் வருகிறேன்.நன்றிமா.

ராமலக்ஷ்மி said...

படங்களும் அதற்கான வாசகங்களும் அருமை. இரசித்தேன். முதல் பட ஊஞ்சல் அழகு! ஆடும் ஆசை வருகிறது:)!

கதம்ப உணர்வுகள் said...

//அன்பு மஞ்சு,வீட்டில் ஊஞ்சல் இருக்காப்பா.அழகான சுசீலாப் பாடலைப் பாடிக்கொண்டே உயரமும் தாழவரவும் ஒரு பத்து ஆட்டம்.
ஆஹா.அது ஓய்ந்து ஒரு தி.ஜானகிராமன் புத்தகம், படிக்கும்போது வரும் தூக்கம்.விழித்தால் உலகம் புதிதாக இருக்கும். ஒரு ஹார்ம்லெஸ் ஜோர்.
8:02 PM//

கேட்கவே ஆசையா இருக்கே... என்னை தூக்கிக்கோங்க வல்லிம்மான்னு கேட்கனும் போல இருக்கு எனக்கு....

உங்கப்பொண்ணு ஊஞ்சல் ஆடி பார்த்ததே இல்லன்னு கவலையா நீங்க சொன்னதையும் பார்த்தேன்...

ஊஞ்சல்ல ஆடுவது எனக்கு ரொம்ப இஷ்டமான விஷயம் வல்லிம்மா.. நீங்க சொன்னது போல பாட்டு கேட்டுக்கொண்டே... ஆடிக்கொண்டே.. புத்தகம் படித்துக்கொண்டே.. ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அத்புதஹ:

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. முதல் பட ஊஞ்சல் அசத்தல்..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ரசிக்கும் படியான பதிவு..நானும் ஊஞ்சலம்மாதான் என்று அறிந்தேன் :)

அப்பாதுரை said...

பெரிய கதை நல்லா இருக்கு.. கடைசியில உளுந்தை யார் உடைச்சது?

வல்லிசிம்ஹன் said...

வரணும் க்ரேஸ். உங்கள் அப்பாயி பதிவு படித்தேன்.
நாமெல்லாம் ஓடின நாட்கள் உட்கார்ந்த நட்கள் ,ஓய்வெடுக்கும் நாட்கள்,நினைக்கும் நாட்கள் வைத்துக்கொள்ளுகிறோம் இல்லையா.அது போல ஊஞ்சல் நாட்களும்:0)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் துரை.
வேற யாரு உடைப்பார்கள். நானும் எங்க மாமியாரும் முனியம்மாவும்தான்:) அந்த யந்திரத்தின் அடிப் பாகம் தோட்டத்தில் இருக்கு. உரலைத்தான் காணோம். உலக்கை இருக்கு:)