Blog Archive

Tuesday, August 20, 2013

ஆவணி அவிட்டம் ஸ்பெஷல்

 
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 ஸாஸ்திர சம்பந்தமாக  இன்று உபாகர்மா  செய்தவர்களுக்கு மனம் நிறைந்த
வாழ்த்துகள்.

எங்கள் வீட்டில் அப்பம் வடை ,இட்லி   இவைகளோடு
ஒரு கோதுமை  மாவு க்ஷீரா செய்வதும் வழக்கம்.

க்ஷீரா என்பது பெரிய விஷயமில்லை.
கோதுமை மாவை புளியம்பூவாக வறுத்து,
சர்க்கரையைக் கரைத்து மெல்லிய பாகு வைத்து இந்த வறுத்த மாவை அதில் சேர்க்கவேண்டியதுதான்.
மேற்கொண்டு ஏலப் பொடி,குங்குமப்பூ,முந்திரி,பாதாம், பச்சக் கற்பூரம் எல்லாம் சேர்த்து வாசனைக்கு  நெய்.
இந்தத் தடவை பலவித    தொந்தரவுகள் கல்யாணங்களுக்கு நடுவில் கோதுமை மாவு மட்டும் வீட்டுப் போச்சு.

மைதாமாவை ஒதுக்கி நாட்களாச்சு. ரவையில் செய்தால் கேசரி ஆகிவிடும்.
என்னய்யான்னு பார்த்தல் மகன் வாங்கி வந்த பாதாம்,வால்நட் எல்லாம் கண்ணில் பட்டன.
இதையெல்லாம் அரைத்தாலும்  ஒரு பைண்டிங்  ஏஜண்ட்  வேணுமே.
கண்ணில் பட்டது தகடு தகடாக அவல்.!
அதையும் கழுவி இந்த அரைத்த கலவையில்  கலந்து
அடுப்பில் ஏற்றியாச்சு.

அதன் தலையிலியே இரண்டு கப் சர்க்கரையைப் போட்டது, கொஞ்ச வெந்நீர்விட்டு நாலு கிளறு கிளறிவிட்டால் கமகம் அல்வா ரெடி
பிறகு மேற்சொன்ன அலங்காரங்கள் செய்ததும் நரசிம்மரின் செந்தூரவர்ணம் கிடைத்துவிட்டது.

பயப்படாமல் சாப்பிட்டுவிட்டு நல்லா இருக்குமான்னு ஷஷியே செர்டிஃபிகேட் கொடுத்துட்டாள்.

நீங்களுமே கூட எடுத்துக்கலாம்.













Posted by Picasa

22 comments:

sury siva said...

அங்க வந்து
ஆத்துக்காரருக்கு அபிவாதயே சொல்றேன். பூணூல் போட்டுண்டாச்சு.

COMING STRAIGHT THERE
அந்த கோதுமை பாயசம் வைத்து இருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்.


சுப்பு தாத்தா.

ராமலக்ஷ்மி said...

அல்வாவின் நிறமே இழுக்கிறது. சுவை.. மணம்.. நிறம்!!! அருமை:)!

pudugaithendral said...

super

Geetha Sambasivam said...

jooperu! badal alva coloure nalla iruke!

திண்டுக்கல் தனபாலன் said...

எடுத்து சாப்பிட்டேன்... நல்ல சுவை... ஹிஹி... வாழ்த்துக்கள் அம்மா...

காரஞ்சன் சிந்தனைகள் said...

உபாகர்மா முடிந்ததும் நெட்டில் அல்வாவைப் பார்த்தேன்! அருமையான பகிர்விற்கு நன்றி!

சாந்தி மாரியப்பன் said...

அல்வா நல்லாத்தானே இருக்குது. ருசியும் ஜூப்பர்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சுப்பு சார்.
ஏதோ மழை வருது இடி வரதுனு சொல்கிற மாதிரி வரேன் வரேன்னு சொல்கிறீர்களே தவிர இந்தப் பக்கம் காண்பதே இல்லை.. பதிவர் மாநாட்டில் வேறு பிஸியாக இருப்பீர்கள்:)
அது கோதுமை பாயசம் இல்லை. பாதாம் அல்வா!!

வல்லிசிம்ஹன் said...

மகன் பிறந்த நாளும் சேரவே இனிப்பு செய்துவிட்டேன் ராமலக்ஷ்மி. பார்க்கலாம் .சாப்பிட எல்லோரையும் கூப்பிடவேண்டியதுதான்:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தென்றல்.

வல்லிசிம்ஹன் said...

இனிப்புகள் எல்லாம் இப்படித்தான் நாவைப் பிடித்து இழுக்கும். கீதா விளைவுகள் நமக்குத்தான் தெரியுமே:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் சென்னை வரும்போது வீட்டுக்கு வரவும் செய்து தருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

உபாகர்மா நல்லபடியாக நிறைவேறியது மகிழ்ச்சி சேஷாத்ரி ஜி.
அதிகமாகச் செய்துவிடுகிறேன். அப்புறம் பகிர்ந்து கொள்ளவேண்டி இருக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

அதுக்குள்ள சாப்பிட்டாச்சா சாரல்.@@@ நன்றிமா.

கோமதி அரசு said...

உங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
அல்வா பார்கவே அழகாய் இருக்கிறது சுவையும் நன்றாக இருக்கிறது.

கோமதி அரசு said...

ஆவணி அவிட்டம் எனக்கும் சிறப்பான நாள் தான். என் கணவருக்கு அன்று தான் பிறந்தநாள். நானும் அவர்களுக்காக கோதுமை அல்வா எடுத்துக் கொண்டேன்.
நன்றி அக்கா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, தங்கள் வாழ்த்துகள் அவனுக்குக் கிடைத்த ஆசீர்வாதங்கள். உங்கள் கணவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை அனுப்புகிறேன்.
இறையருளால் உடல்,உள்ள நலத்தோடு நன்றாக இருக்கவேண்டும் அம்மா.
வாழ்க வளமுடன்.

sury siva said...

//பதிவர் மாநாட்டில் வேறு பிஸியாக இருப்பீர்கள்:)//

Me ?

a good joke indeed.

subbu thatha.

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி:). தங்கள் மகனுக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்திடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.

மாதேவி said...

வாவ்! அல்வா அருமை.

பிந்திய வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

அட! இவ்ளோ சுலபமா? தோ.... கிளம்பி வந்துக்கிட்டே இருக்கேன். பாதாமை வெந்நீரில் போடுங்கோ!