நம் நாட்டுத் தொலைபேசியின் சேவையைப் பாராட்டியே
ஆக வேண்டும்..வெள்ளி இரவு ஒரு தொலைபேசி இணைப்பு நின்றது.
ஒண்ணாம் நம்பரை அழுத்தவும். இரண்டாம் நம்பரை அழுத்தவேண்டும் என்ற கட்டளைகளைப் பூர்த்தி செய்து புகார் எண்ணூம் வாங்கியாச்சு.
என்ன அதிசயம் யம் அடுத்தநாள் வந்துவிட்டார் லைன்ஸ்மேன்.
எங்கமா தப்பு என்று என்னைக் கேட்டார்.தொலபேசிக்கு எங்கு நோய் வரும் என்று அவ்வளவாகத் தெரியததால்.வெளியே போய், அங்கே இருக்கும் கனெக்ஷனைக் காண்பித்தேன். நல்லாதானே இருக்கு. ம்ம்ம்.. என்று மோவாக்கட்டையைச் சொறிந்து கொண்டே அந்த இடத்தைச் சுற்றி வந்தார்.
அம்மா.நான் இதோ போய் உடனெ வரேன் என்று வாசல் வழியே மறைந்தார்.
நாங்களும் கோவிலுக்குப் போகாமல் காத்திருந்தோம்.
இன்னோரு கம்ப்ளெயிண்ட் கொடுக்கலாம் என்று அடுத்த ஃபோனை எடுத்தால் டயல் டோனே இல்லை.
ஆஹா,ஆவீன்றுவிட்ட்து. மழைபெய்கிறதோ என்று இணையத்துக்கு வந்து பார்த்தேன்.ஆ!
உயிருடன் இருந்தது.அவசரமாக அனுப்பவேண்டிய மெயில்களை அனுப்பி விட்டுக் காப்பி குடிக்கப் போனேன். பிடித்த சினிமா ஒன்று போய்க் கொண்டிருந்த்து தொலைக்காட்சியில். சரி அதைப்பார்க்கலாம்
என்று உட்கார்ந்துவிட்டேன். நிமிர்ந்தபோது மணி நாலு.
சரி புதுபதிவுகள், தட்ஸ்தமிஷ்,தினமலர்,என்று பார்த்துக் கொண்டு
வரும்போதே மோடத்தின் விளக்குகள் அணைய ஆரம்பித்தன.!
அடுத்தது மனையாள் பிரசவிக்க என்று வரும் என்று நினைவுக்கு வருகிறது.
மாமியார் சொன்ன வார்த்தைகள்:)
அவ்வளவுதான் வெளி உலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கைபேசியில் ராஜ்ஜியம் செய்யலாம் என்று ஆரம்பித்தேன்
எல்லோரும் என்னை விட வயதானவர்கள்.
கைபேசியின் கரகரப்பு பிடிபடவில்லை.
பிறகுதான் தெரிந்தது மயிலையில் மட்டும் 100 இணைப்பு பழுதாம்.
பழைய லைன்ஸ் மேன் வந்து ஒரு நிமிடத்தில் சரிசெய்துவிடுவார்.
அவருக்கு எங்கள் தூண்(டெலிஃபோன் பில்லர்) அவரது கைவிட்டுப் போய்விட்டதாம். பாவம். நல்ல மனிதர்.
நாளை தெரியும்.
இவர் இன்னும் வரவில்லை.
****************************************************
இன்று
வந்தார் பார்த்தார். முழுவதும் கேபிள் மாற்ற வேண்டும் என்று
சொல்லி 1500 ரூபாய் வாங்கிப் போயிருக்கார்.
இணையம் வந்துவிட்டது. ஆனால் தொலைபேசி சத்தம் இல்லை.
இந்த மாத தண்டம் இந்த செலவு.:(
அடையாரில் மட்டும் தான் டெலிஃபோன் கேபிள் கிடைக்குமாம். போயிருக்கிறார்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
11 comments:
நல்லது.அம்மா... நன்றி....
நாம் எதற்குப் பணம் தர வேண்டும்? அதுவும் 1500 ரூபாய்? இணையமும் தொலைபேசியும் கடவுள் மாதிரி... அல்லது சூப்பர் ஸ்டார் மாதிரி... எப்போ வரும், எப்போ போகும்னு யாருக்கும் தெரியாது!
என்ன சினிமானு தெரியாம தூக்கம் வராது போலிருக்கே :)
அலைபேசி, தொலைபேசி, இணையம் இல்லாமல் இருக்க முடிவது இல்லை. மிக அவசியதேவைகள் ஆகிவிட்டன.
மெக்கெனா'ஸ் கோல்ட்:)
மறுபடியும் போய்விட்டது.இப்ப வந்திருக்கு.இணையத்தை சொல்கிறேன்.:)துரை.
இந்த மாசத்துக்கான தண்டம் ஆச்சு. செப்டம்பருக்குன்னு ஒன்னு வராமல் இருக்கணும்.
ஆவீன்றதா..... சீம்பால் எடுத்து காச்சி வையுங்க. தா.... வர்றேன்.
பிஎஸ்என்எல் கேபிள் மாத்த அவங்க தானே கேபிள் கொடுத்தனுப்பணும்?? உங்க கிட்டே ஏன் எதுக்கு, எப்படி, எங்கே பணம் வாங்கினாங்க? இது என்ன அட்டூழியமா இருக்கு??? ஒரு வரைமுறை கிடையாதா? பிஎஸ்என்எல் கஸ்டமர் செர்வீஸில் நேரடியாகக் கம்ப்ளைன்ட் கொடுங்க. ஆடோ புக்கிங் வேண்டாம். நம்பர் ஒன்பதோ என்னமோ போட்டால் எக்சிக்யூடிவுக்கு நேரே கால் போகும்.
அதென்னவோ தொலைபேசி எக்ஸ்சேஞ்சில் கேபிளே இல்லையாம். வாங்கச் சொல்லிவிட்டார்கள்.
கேபிளைப் போட்டுவிட்டு அந்த அள் போயாச்சு. எப்பவருவாரோ. அதுவரைக்கும் நோ ஃபோன்!!
வரணும் கோமதி.
உண்மைதான். பழகிக் கொண்டுவிட்டோம். ஒரு தொலைபேசியோடு இருந்தநாட்கள் தேவலை.:)
வாழ்க வளமுடன்.
ஓ எடுத்து ஃப்ரீசர்ல போட்டு வைக்கிறேன் பா.துளசி:)இது என்னைச் சிரமப்படுத்தின தண்டம்!
பிஎஸெனெல் இந்த மயிலை எக்ஸேஞ்சே மாறிவிட்டது.பழைய ஆட்கள் யாரும் இல்லை.இவர் புதிதாக வந்தவர்.இசைகேடா மாத்திக் கொண்டுவிட்டோமேன்னு கவலையாக இருக்கிறது கீதா.:(
Post a Comment