எங்க வீட்டு மஹாலக்ஷ்மி |
மங்களகரமாகப் பண்டிகை பூர்த்தியானது.
இனி வரிசையாக ஆவணி அவிட்டம், ஸ்ரீஜயந்தி ,பிள்ளையார் சதுர்த்தி என்று தொடரும்.
பெண்ணிடம் ஸ்கைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது,
பேரனும் வந்தான்.
யூ நோ வாட் பாட்டி?
என்ன செல்லம்.
ஐ ஸா யுவர் டிஃபீட்டட் ஃபாதர்.
??????????????????????????????????????
பெண்ணிடம் என்ன சொல்றான் உன் பையன் என்றால் அவள் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.
சின்னப் பேரனுக்கு அவள் சொல்லிக் கொடுத்திருப்பது. இறந்துவிட்டார்(டெட்)
என்ற வார்த்தையைப் பயன்படுத்தாம.
அவருக்கு வயதாகி விட்டது.
ஹி காட் டிபீட்டட் பை ஏஜ்.
ஸோ இது மாதிரி ரொம்ப வயசானவர்களுக்கு இந்த மாதிரி ஆகலாம். என்று சொல்லி இருக்கிறாள். வீட்டில் மாட்டியிருக்கும் பெரியவர்கள் படம் எல்லாம் அவன் பார்த்துக் கேட்டக் கேள்விக்கு அவள் சொன்ன பதில்.
என் மாமாவுக்கு உடல் நலம் குன்றி சரியாக் வீட்டில் மெதுமெதுவாகக் குணம் அடைந்து வருகிறார்.
அவளுடன் மாமா தேவலை என்றதும்,
இந்த வாண்டு கூட வந்துவிட்டது. ''ஹூ பாட்டி?''
மை அன்கிள்''
ஹி இஸ் நாட் டிஃபீட்டட்?
நோ . பகவான் காப்பாத்திட்டார்.
திச் இஸ் நாட் ரைட். வென் யுவர் மாமாஸ் ஆர் நாட் டிஃபீட்டட்
வொய் டிட் my mom's maamaa got defeated. it is not fair:(
அதில்லப்பா. சிலசமயம் இது போல ஆகும் . நோ மோர் க்வெஸ்டியன்ஸ்னு
நான் அடக்கிவிட்டேன். இது எந்தப் பக்கமெல்லாம் போகும்னு எனக்கும் தெரியும்:)
இதெல்லாம் முடிந்து நேற்று சதர்ன்ஸ்பைஸ் கடைக்குப் போயிருக்கிறார்கள் அம்மாவும் பிள்ளையும்.
அங்கே தெரிந்த இளஞரும் வந்திருக்கிறார்.
கிருஷ்ணா என்னை ஞாபகம் இருக்கா என்று சிரித்தபடி கேட்டு இருக்கிறார்.
ஆஹ்ன் ஊன்ஹ் என்று யோசித்துவிட்டு ஐ நோ யூ. யூ ஆர் மை பாட்டிஸ்அப்பா. என்று பளீர் பதில் . அவர் திணறி விட்டார்.
வாட் வாட் என்று அவர் கேட்க
இவன் மீண்டும் சொல்ல
அவர் முகமெல்லாம் சிவந்து விட்டதாம். ஏன் .........உன் அப்பான்னு கூடச் சொல்லலை. உங்க அம்மாவோட அப்பான்னு சொல்கிறானே
என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டாராம்..
என் பெண்ணுக்கோதீராத சிரிப்பு ஒரு பக்கம். அவஸ்தை ஒருபக்கம். அவன் ஏதோ நினைவில் சொல்கிறான். மன்னித்துவிடுங்கள் என்று பாதிப் பொருட்களை அப்படியே வாங்காமல் விட்டுவிட்டு வீட்டூக்குச் செல்ல
வண்டியில் ஏறினாளாம்.
பாதிவழியில் இவள் அவனைக் கேட்பதற்கு முன் அவன் பதில் சொல்கிறானாம்.
He looks exactly like paatti's appa. maybe paatti's appa got successful HERE!!!
இப்பொழுது சிரிப்பாக இருந்தாலும்
பிறகு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கச் சொல்லி இருக்கிறேன் .
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
12 comments:
குழந்தைகள் என்றைக்கும் குழந்தைகளே! எங்க அப்புவும் அவ அம்மா கிட்டே வம்படி அடிக்கிறாள். நீ ஏன் பாட்டி மாதிரி க்ரிஸ்ப்பா முறுக்கெல்லாம் பண்ணக் கத்துக்கலைனு எல்லாம் கேட்கிறாளாம். :))))
இப்போ கராத்தே கத்துக்கிறதா!! வீட்டிலே எல்லா சாமானும் துவம்சம் தான்! :))))
குழந்தை தானே...!
ஆஹா... ஒரு முறை “தோற்றுப் போனால்” என்ன? மறு முறை ”ஜெயித்துவிடலாம்”!! நல்ல கணக்கு!!
//நான் அடக்கிவிட்டேன். இது எந்தப் பக்கமெல்லாம் போகும்னு எனக்கும் தெரியும்//
ஆமாம், இந்த மாதிரி விஷயங்களில் சமாளிச்சு முடியாது!! என் அனுபவம் இங்கே: இரண்டாம் குழந்தைப் பருவம்
ஹைய்யோ!!!!!!
டிஃபீட்டட் ஆகாதவரை இருந்துக்கலாம்:-))))
குழந்தைகள் உலகம் தனி உலகம் தான்.
ஆமாம் கீதா.
குழந்தைகளுக்கு நாம் கற்றே கொடுக்கவேண்டாம் . தானாகக் கற்பனை செய்து எத்தனையோ விஷயங்களைக் கேட்கின்றன.
தயாராக பதில்கள் வைத்திருந்தால் பிழைத்தோம்:)
அப்பு கராத்தே கத்துக்கறதா சரிதான். எல்லார் உடம்பும் பத்திரம்:)
ஆமாம் தனபாலன். குழந்தைதான். நமக்குத்தான் அவன் கேள்விகளைக் கையாளத் தெரியவில்லை.
அவரும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.!!
நன்றி ஹுசைனம்மா. தங்கள் தந்தையின் பதில் என்னைக் கலங்கவைத்தது. ஆனால் குழந்தைகளுக்கு மிகவும் பதமான பதில்.இறைவன் அவர்களை நல்லபடியாக வைத்திருக்கவேண்டும், வைத்திருப்பார்.
ஆமாப்பா. கடைசிவரை நல்லா இருக்கும் வரத்தை சாமி கொடுத்தால் போதும்.
துளசி. கொடுப்பார்.
ஆமாம் கோமதி. யோசனை தனிதான்.
கேள்விகள் வேற வேற வழியில் நம்மை மடக்கும்:)
நன்றிமா.
எம்மால்தான் பதில்சொல்ல முடிவதில்லை.
Post a Comment