சுத்தம் என்பது
எமக்கு வருடத்துக்கொரு முறைதான்.
அசுத்தம் என்பதை
மறக்க விட மாட்டார் சிலர்தான்
பொட்டிகள் உள்ளே
நுழையும்
அன்புகள் அரவணைக்கும்போதே
வந்த கண்கள் மேலே
நோக்கும்.
ஆசையுடன் காத்திருந்த
பல்லியோ அந்நேரம் பார்த்து முகமன் சொல்லும்.
அரளுவான் பேரன்.
‘’தர் இஸ் அ giant
லிசர்ட் சம்வேர் ஹியர் மா’’
லெட்ஸ் லீவ்.
அனுபவப்பட்ட மூத்தவனோ
அது குட்டிப் பல்லிதான் ப்ரதர்
நைட்தான் வெளில
வரும்’
மாடியில் நம் அறையில்
பல்லி இருக்கிறதா என்று பார்த்துவருகிறேன்
என்று புறப்படுவான்.
அவன்வரும்போதே
பெரிய கறுப்பு பீரோ பின்னிருந்து
அண்ணா பல்லி விளிக்கும்.:)
ஓ ரியலி,!
!பாட்டி ஐ தாட் யூ
ஹேவ் டன் அவே வித் ஆல் தெ பல்லீஸ்.
ஹௌ ஆர் வி டு ஸ்லீப்
இன் திஸ் ரூம்?
அடுத்தநாள் தாத்தாவும்
பேரன்களும் பல்லிவேட்டையாடப் போவார்கள்.
மாயமாய் மறைந்திருக்கும்
பல்லிகள்L
கஞ்சி வரதா
நான் என் செய்வேன்
நீ இந்தப் பல்லிகளையும்
தங்கப் பல்லிகளாக மாற்றி இன்னும் இரு வாரங்களுக்கு வைத்துக் கொள்.
உனக்குக் கோடி
கோடி கும்பிடு.
இப்படிக்கு,
பல்லி கரப்பான்களுக்குப்
பயப்படாத பாட்டிJ
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
37 comments:
அது மிஞ்சியிருக்குற குட்ட்ட்டி டைனோசார்னு சொன்னா பசங்களுக்கு பல்லி மேலே திடீர் கருணை!
கடவுளே, இங்கே பல்லிகள் கூடவே ஓடி வருதுங்க. மிதிக்காமல் இருக்கணுமேனு பயம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும்
கரப்புக்கு பயம் இல்லையா? அப்போ நீங்க வீராங்கனை தான். ஒரு காலத்தில் கரப்பைப் பார்த்தாலே குலை நடுக்கம். அப்புறமா ராஜஸ்தான், குஜராத், செகந்திராபாத் போன்ற இடங்களில் நடத்திய தனிக்குடித்தனத்தில் அதுங்க துணையோட இருந்து பழகினதிலே இப்போ ஒரு சின்னக் கரப்பைப் பார்த்தாலும் டிஷூன், டிஷூன், ச்ய்ங்ங்ங்ங்ன்ங்ங்ங்ங்ங்ங்ங் னு மருந்தை அடிச்சுடுவேன். :)))))
அது ஜீன்ஸ் துரை. அம்மா பல்லி இருக்கிற ரூமுக்குள்ளயே போக மாட்டாள். பிள்ளைகளும் அதே:)
இப்ப அவளுக்கு மெச்சூரிட்டி வந்தாலும் என்னை வறுத்துவிடுவாள். இவ்வளவு ஜீவகாருண்யம் ஆகாதுன்னு:)
பல்லி கரப்பான்களுக்குப் பயப்படாத பாட்டிJ
சூப்பர் பாட்டிதான் ..!
பல்லி ஓடி வருதா!! கீதா, சுப்புக்குட்டியை வளர்த்த நீங்கள் பல்லியைப் பார்த்து பயப்படலாமா:)
நான் கரப்பானுக்கு செருப்படிதான் கொடுப்பேன். அருவருப்புதான் முதல்.:)(சாகாத ஒரு ஜீவன் அது.,
முதல் முதல் என்கவுண்டர் பல்லியுடன் ஆனபோது மகள் சொன்னது, ' There is a dragon on the wall'
நியூஸியில் பல்லி கிடையாது கேட்டோ!!!
//கடவுளே, இங்கே பல்லிகள் கூடவே ஓடி வருதுங்க.
வெடிச்சிரிப்பு.
பல்லியை பார்த்தால் என் பேரன் தாத்தா அடிஅடி என்பது தான். என் கணவர் கம்பை வைத்து பல்லியின் பக்கத்தில் தட்டுவார்கள் அது படத்திற்கு பின் போய் ஒளிந்து கொள்ளும், அதனால் பல்லி வெளியே வந்தால் போதும் கம்பு எடு அடி என்பது தான்.
அவன் இருக்கும் வரை தாத்தாவுக்கும் , பேரனுக்கும் இந்த விளையாட்டு தொடர்ந்தது.
பாட்டியின் வீரம் பேரப்பிள்ளைகளிடமும் வளரட்டும் :-))
ஹா...ஹா... ஹா...!
பல்லி வராமலிருக்க எதோ ஒன்றைச் சுவரில் ஒட்டி வைப்பார்களே.... பல்லி விழும் பலன் கணவன் மனைவி உரையாடல் ஜோக் ஞாபகத்துக்கு வருகிறது!
வீட்டில் எல்லோருக்கும் பயம் தான்... நீங்கள் சூப்பர் அம்மா அல்லவா...? வாழ்த்துக்கள்...
பல்லி கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலேயுமே பிரசன்னம்.
அதை நமது வழக்கப்படி யாரும் அடிக்ககூடாது. நாலு வர்ணங்களிலே அது பிராமணன் என்று ஒரு காலத்தில் எங்க பாட்டி சொல்லுவாள். அதைச் சொன்னா இப்ப என்னை அடித்து விடுவார்கள்.
உயிருடன் இருக்கும் பல்லி ஒரு வித annoying or irritating கிரியேசர்
ஆனால் அதனால் எந்த வித ஆபத்தும் இல்லை. அதே சமயம்
செத்த பல்லி டெட்லி பாய்சனஸ்.
பல்லி வாலை இழந்தாலும் அடிபட்டு துறந்து விட்டாலும் மறு படியும் பாம்பு தோல் போல மறுபடியும் வாலுக்கு புனர் ஜன்மம் கிடைத்து விடவும். ( இதைப பார்த்துவிட்டுத்தான் ஆதி சங்கரர் புனரபி ஜனனம், புனரபி மரணம் என்று எழுதினாரோ !!!)
பல்லிகள் சமையற்கட்டில் இருந்தால், அடுப்பில் எதை வைத்து இருந்தாலும் மூடி வைப்பது நல்லது. பக்கத்தில் இருந்து ஏதேனும் தவறிப்போய் பாத்திரத்திற்குள் விழுந்து விட்டால் அதையும்
எதோ பீன்ஸ் தான் சாம்பாரில் இருக்கிறது என்று நினைத்து அதையும்
முழுங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. (This is what happened to my friend during the train journey when he ate his uppuma breakfast . I shall continue the story, not a story, when I return to Chennai. of course , not here, in my blog wwww.Sury-healthiswealth.blogspot.com
பல்லி சின்னச் சின்ன பூச்சிகளை நமது கண்ணுக்கு புலப்படாத ஜந்துக்களை சாப்பிடுகிறது என்பதால் அதை தொடர்ந்து வைத்திருக்கிறோம் என்று சில வீடுகளில் சொல்லுகிறார்கள். எனக்கு இது கதையெல்லாம் அபத்தம் என்று தோன்றுகிறது.
முக்கியமாக, ஒன்று சொல்லவேண்டும். சைனா வியட்நாம் போன்ற நாடுகளில் பல்லி, கரப்பான் பூச்சி எவற்றையெல்லாம் ப்ரை
பண்ணி சாப்பிடுவார்களாம். ஒரு தரம் தின்று விட்டால், எப்படா
அடுத்த தரம் சாப்பிடுவோம் என்று நாக்கு கேட்குமாம்.
கடைசியாக, கடவுள் படைப்பிலே ( அப்பாதுரை சிரிக்க ஆரம்பிக்கிறார், கேட்கிறது.) கரப்பான் பூச்சி ஒன்று தான் முழு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாம்.
சுப்பு தாத்தா.
from (near) Boston.
மயிலிறகு ஶ்ரீராம்! கொத்தாக மயிலிறகைச் சுவற்றில் மாட்டி வைத்தால் பல்லிகளே இருக்காது என்பார்கள். ஆனாலும் பல்லிகள் வரத்தான் செய்கின்றன. :))))))
நீங்க வீராங்கனை!
பொதுவாகவே தில்லி பல்லிகள் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும்! - இங்கே இருக்கும் மக்களைப் போல.... முதல் முதல் பார்த்தபோது கொஞ்சம் வயம் வந்தது என்னவளுக்கு! ஒரு பல்லியின் வால் தனித்துப் போய் துடிக்க, அது தன்னால் தானோ என அவள் நாள் முழுதும் அதை நினைத்து கஷ்டப்பட்ட கதையெல்லாம் உண்டு! :))))
பல்லி பிடிக்காதவருக்கும் பல்லி மிட்டாய் பிடிக்கும்.
பல்லி பல்லி பல்லி என்று கூடையுடன் கூவியவரைப் பார்த்த என் நண்பன் நேன்ஸ், "என்னடா கொல்டி பசங்க எல்லாத்தையும் தின்றாங்க.. இவன் பல்லி வித்துட்டுப் போறான்?" - ஹைதரா நினைவுத் துணுக்கு.
துரை அந்த சீனை இமாஜின் செய்தேன்:)
ரேஸ் ஆஃப் பல்லீஸ்னு ஒரு பதிவு போடலாமா:)
அன்பு கோமதி. பேரனுக்கு இன்னும் வயசாகலைப்பா.அதனாலதான் கம்பு விளையாட்டுக்கு ஒத்துக்கறான்:)
கேட்க நல்லா இருக்கு.
கொஞ்சம் வளர்ந்தாட்டு என்ன செய்யறான்னு பர்ப்போம்.:)
வாழ்கவளமுடன்.
ஓஓ அவங்க வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. ப்ரௌன் கலர் அவர்களுக்கு அலர்ஜி சாரல்.
இதுக்கு மேல கையில கொசு மட்டையோடு அலையும் வீரன் என் பெரிய பேரன்:)
ஸ்ரீராம் அது மயிலிறகு. அதையும் மீறிக்கொண்டு பல்லிகள் சுத்திவரும்.
கீதா எழுதி இருக்காங்க பாருங்க,
பல்லி என் தலைல தோளில் எல்லாம் விழுந்திருக்கும்.
அது நம்மைத் திருப்பி முறைப்பதைப் பார்த்திருக்கிறீகளா. க்ரீப்பியா இருக்கும்:)
பல்லின்னால் எல்லாருக்க்ம்பயம்தான் தனபாலன்:)என்னையும் சேர்த்துதான்.
அப்பாடி எவ்வளவு விவரம் சுப்பு சார்.
பல்லியோட சரிதமே வந்துவிட்டது.
சமையலறையில் எப்படியும் உலாப் போக வந்துவிடுகிறது.
ஐய்யொ அந்த அருவெறுப்பை என்னனு சொல்வது:(
அந்தப் பல்லிபிடிப்பவரைத்தான் கூப்பிடணும்.முன்ன அளவு இல்லைன்னாலும் அப்பப்போ தலை நீட்டுகிறது. ஜாக்கிரதையாகத்தான் இருக்கவேண்டும் சுப்பு சார்.
அட ராமா. டெல்லி எருமை கேள்விப்பட்டு இருக்கேன். வெங்கட்.
டெல்லிபல்லியுமா. பாவம் ஆதி.
ரொம்பச் சங்கடம்பா. எப்போ எங்க தரிசனம் கொடுக்கும்னு தெரியாது:(
பல்லி பல்லின்னால் வாங்க வாங்கன்னு அர்த்தமா துரை!!
உங்க சிநெக்கிதரின் ரியாகஷன் சூப்பர்:)
பல்லிமிட்டாயா. ஓ இந்த அரிசிமிட்டாய்னு சொல்வாங்களே அதுதானே.
இல்லைப்பா அது பல்லி மூங்ஃபல்லி!!
கடலை, நிலக்கடலையாக்கும்:-))))
ஓஹோ அவங்க வித்தது மூங்ஃபல்லியா:)
வேர்க்கடலை வறுத்ததா?மூங்னா பயத்தம்பருப்பு இல்லையோ துளசி!!
மூங் தால்னா பாசிப்பருப்பு, முங்ஃபலினா வேர்க்கடலை வல்லி. :)))))நீளமான காய்கள் எல்லாமுமே ஃபலி தான். அவரைக்காய் சேம் கிஃபலி, கொத்தவரை க்வார் கி ஃபலி இப்படி வரும். :))))))
இங்கே பல்லிகள் ஏராளம்..:)) சென்ற வாரம் தான் தோழி வீட்டுக்கு சென்ற போது பார்த்து பார்த்து என் தோளில் குதித்தது....:))
தில்லிக் கதைகள் என்னவரே சொல்லி விட்டாரே....அப்பப்பா வால் துடித்தது இன்னும் கண்ணில் இருக்கு... ஸ்டூல் போட்டு ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்த போது பெரிய பல்லியை பார்த்து விட்டு நான் குதித்து விட்டேன். அது என்னை பார்த்ததும் வாலை விட்டு விட்டது...:)) நாள் முழுவதும் அழுதிருக்கிறேன். என்னால் தானோ என்று...:))
முருங்கைக்காய்க்கு கூட சஜ்னா ஃபலி என்பார்கள்..:)
ஆமா இல்ல, முருங்கைக்காயை மறந்துட்டேன். ராஜஸ்தானிலே அதை அறிமுகம் செய்ததே நாங்க தான்! :)))
இந்த ரெண்டுமே உவ்வேதான் எனக்கு இப்பவும்!! கொடுமை என்னன்னா, இங்க அபுதாபியிலும் இந்த ரெண்டும் இருக்குதுகள் - நல்லவேளை தோட்டத்தில் மட்டுமே. கதவைத் தீறந்து வைப்பதேயில்லை, வீட்டுக்குள் வந்துடுமோ என்று.
சுவரில் மயிலிறகு, முட்டை ஓடு, கடையில் கிடைக்கும் ஸ்ட்ரிப் என்று என்னன்னெனவோ, யாராரோ சொன்னதெல்லாம் கேட்டு மாட்டி பாத்தாச்சு (ஊரில்). அது ‘யார்கிட்ட?’ன்னு கேட்டு அதுமேலேய ஏறிப்போகுது.. கஷ்டம்!! ஊருக்குப் போகணும்னா இதெல்லாம்தான் கண்ணுக்குள் வந்து பயப்படுத்துது முதலில்...
வேர்கடலை. ஆனா எல்லா வறுத்த பருப்பு கடலை வகைக்கும் பல்லி தான்.
அதே மாதிரி ஹைதராவில் எல்லாத்துக்கும் பானி தான். மழை பெஞ்சாலும் பானி. தாகமெடுத்தாலும் பானி. நண்பன் நேன்ஸ் அதற்கும் புலம்புவான்.
ஹைதராக்காரர்கள் சொற்சிக்கனம் பிடிப்பவர்கள்.
அன்பு கீதா எத்தனை ஃபலி:)
ஆதி சஜ்னா ஃபலி வேற சொல்லிவிட்டார்.
துரை பல்லியிலிருந்து பானிக்குப் போய்விட்டார்.
ஆகக் கூடி ஹைதரபாத் சுவாரஸ்யமான இடமாச்சு:)
அன்பு ஆதி எனக்கு முன்னால எல்லாம் பல்லி எங்க வேண்டுமானாலும் தென்படும். கதவின் இடுக்கில் மாட்டிக் கொள்ளும்.:)
இப்போதைக்கு என் கண்ணில் படுவதில்லை. இந்தக் குழந்தைகள் தான் பயப்ப்டுகிறது. பாவம்.
அன்பு ஹுசைனம்மா,
கதவைத் திறக்காதீர்கள்.
மிகவும் அபாயகரமானது பல்லி.
அதுவும் நொன்பு நாட்கள் ஆரம்பித்துவிடன. இன்னும் ஜாக்கிரதையாக இருக்கணும்.
இனிய நோன்பு நாட்கள் வாழ்த்துகள்மா.
இங்கு இருப்பது சின்ன பல்லி என்பதால் பயப்பிடமாட்டோம்.
வரணும் மாதேவி. பல்லியைவிட அதனால் ஏற்படும்
அபாயங்கள் பற்றியே பயம்.
அதை ஏன் கேட்கறீங்க? நேத்திச் சப்பாத்திக்குக் கூட்டுப் பண்ணும்போது மேடையில் ஒரு பல்லியோட உலாத்தல். பயம்மா இருந்தது. ஏற்கெனவே ஒரு கண் பீட்டிங் ரிட்ரீட்டிலே. இன்னொரு கண்ணால் கூட்டையும், பல்லியையும் சேர்த்து எப்படிக் கவனிப்பது? கூட்டைப் பண்ணி முடிச்சுட்டு மூடி வைக்கிறவரைக்கும் அந்தண்டை இந்தண்டை நகரலை. பயம் தான். பெருக்கும்போது கூடவே வருது. அது முன்னாடி நடக்குமா, இல்லை நாம நடக்கலாமானு குழப்பம்! :))))
Post a Comment