Blog Archive

Friday, June 21, 2013

இயற்கை அன்னை சீறிவிட்டாள்.

அமைதியான   மந்தாகினி
சமோலி  கிராமம்
பொங்கின  மந்தாகினி
Add caption
நன்றி  ராணுவ நண்பா!
இடம் சமோலி.நதியைக் கடக்கமுயலும் யாத்ரிகர்கள்
கேதார்நாத்  கோவில் .
இப்போது
இறைவா   காப்பாற்று.



 கடந்த   வாரத்திலிருந்து கேட்டு வரும்  இந்த அழிவு  செய்திகள்உக்குக் கணக்கில்லை.
  முன் கூட்டியே வந்து விட்ட  பருவமழை.
மலையின் உச்சியிலிருந்து உருகி   மந்தாகினிநதியில்
விழுந்து பெரிய வெள்ளம் பெருக.


அது கீழ்நோக்கிப் பாயச் சென்ற வழியெல்லாம்  இருந்த சகலமும் கட்டிடங்கள் ,வண்டிகள்,விடுதிகள், மக்கள் எல்லாம் நதியில் சங்கமம்.

நதி பாகீரதி நதியில் கலந்து,யமுனையில் வெள்ளமாகி டெல்லி வரை மட்டம்

உயர்ந்து கொண்டே சென்றிருக்கிறது.இரண்டு நாட்களாகத் தான் வடிய ஆரம்பித்திருக்கிறது.

இன்னும் ஒரு வருடத்துக்கு யாருமே   யாத்திரை
போகமுடியாத அளவு சூழ்நிலை   சிதறிக் கிடக்கிறது.
தொலைக்காட்சியில் கண்ணீர் வெள்ளம்,தண்ணீர் வெள்ளம்.
யார் எங்கே போனார்கள்.இருக்கிறார்களா   இல்லையா.

ஆயிரக்கணக்கில்    உயிர் இழந்திருப்பார்கள் என்று மெதுமெதுவாகச் செய்தி வருகிறது.
ராணுவ ஹெலிகாப்டர்கள்  மூலம் உதவி அடைந்த சிலர்
தப்பிப் பிழைத்து வந்திருக்கிறார்கள்.

இன்னும் தண்ணீரும் உணவும் கிடைக்காமல் குளிரிலும் அவஸ்தைப் பட்டுக் கொண்டு  வயது முதிர்ந்தவர்கள் ,நோயாளிகள்,குழந்தைகள் என்று அனேக
மக்கள் தவித்துக் கொண்டு    இருக்கிறார்கள்.


இதற்கெல்லாம் காரணம் வானிகை அறிக்கையை மக்கள் சரியாகக் கேட்டுக் கொண்டு அதற்கேற்றபடி  உஷார்ப் படுத்திக் கொள்ளவில்லையாம்.
இது அரசுதரப்பு நீதி.
ஏற்கனவே   பயணம் மேற்கொண்டு  மலை உச்சி வரை சென்றுவிட்டவர்களுக்கும் செய்தி போய்ச் சேர்ந்திருக்குமா,நடுவழியில் மேலேயும் போகமுடியாமல் கீழேயும் வரமுடியாமல்  எந்த வானிலைச்    செய்தியைக் கேட்டிருப்பார்களோ.

எல்லாவற்றிர்க்கும் முதல் காரணம்,

புது இருப்பிடங்கள்,விடுதிகள்,சிறிய கடைகள்,வாசஸ்தலங்கள்
இவகள் கட்டுவதற்காக70 வருடங்களாக
மரங்களையும்  வெட்டி,
நதிகளின் குறுக்கே மின் திட்டங்களுக்காகக் கட்டப்பட்ட அணைகளும், நதிகளை அவைகளின் போக்கில்    விடாமல்  அவற்றைத் தடுத்து வேறுவழி பாயவைத்ததும்   தான் என்கிறார்கள்.
இவ்வளவு பெரிய    அழிவுகள் சுனாமியைத் தான் நினைவு படித்தின.
 இந்த நிகழு மற்ற மலைகளையாவது காக்குமா.

இனியாவது நிலத்திலும் நதியிலும்  தவறான  எண்ணங்களோடு
கைவைப்பவர்களின் கட்டிப்போட சட்டம் வருமா.
சந்தேகம்தான்.
பணம்தானே வேண்டும் எல்லோருக்கும்.
இறக்கப் போவது அவர்கள் இல்லையே.

அங்கே   இன்னும் தவிக்கும் மக்கள் நலம் பெற்று வீடு திரும்பவேண்டும்.
நாம்  இறைவனைப் பிரார்த்திப்போம்.

  இயற்கை ச் சக்திதானே இறைவனின்   சக்தி அந்த அன்னையே அனைவரையும் காப்பாற்ற வேண்டும்..காப்பாற்றுவாள்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

30 comments:

ராமலக்ஷ்மி said...

/க70 வருடங்களாக
மரங்களையும் வெட்டி,
நதிகளின் குறுக்கே மின் திட்டங்களுக்காகக் கட்டப்பட்ட அணைகளும், /

ஆம். பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நினைத்ததை செய்தபடி இருப்பதன் பலன் எத்தனை கொடுரமாயிருக்கிறது என்பதை இனியேனும் உணர வேண்டும்:(!

இன்னும் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்கள் பத்திரமாக மீளப் பிரார்த்திப்போம்.

துளசி கோபால் said...

செய்தி அறிந்து மிகவும் மனசுக்
கஷ்டமாப் போச்சுப்பா.

எங்கூர் டிவியில் கூட காமிச்சாங்க....அடுக்கு மாடிக் கட்டிடம் எல்லாம் அப்படியே சரிஞ்சு.....

ஐயோ என்ன கொடுமை:(

திண்டுக்கல் தனபாலன் said...

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் நலம் பெறவும் வேண்டும்....

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் துயரம் தான்.

இறைவா காப்பாற்று !

pudugaithendral said...

டீவியில் இந்த செய்தி பாக்கும்போது ரொம்ப சங்கடமா இருந்தது.

எல்லோரும் நல்ல படியா வீடு திரும்பவும் ஆரோக்கியத்துடன் இருக்கவும் பிரார்த்தனைகள்

மாதேவி said...

செய்திகளில் பார்த்து நடுக்கம்தான் வந்தது.

நீங்கள் கூறியதுபோல இயற்கையை சரியாகப் பேணிகாக்க தவறுவதால் வந்த விளைவுகள்தான்.

இயற்கையின் சீற்றம் அடங்கட்டும் மக்கள் நலமடைய வேண்டுவோம்.

ஸ்ரீராம். said...

கட்டிடங்கள் உருளுவதைப் பார்க்க பயங்கரமாக இருக்கிறது. இயற்கையை அழிக்கக் கூடாது என இனியும் மனிதன் உணரப் போவதில்லை. இது ஒருபுறம், வடமாநிலங்களில் வெள்ளம், தென் மாநிலங்களில் வறட்சி, தண்ணீருக்குச் சண்டை.... இறைவனின் விசித்திர நீதி. நதிகள் இணைப்புப் பயன் தருமா, அதற்கு இந்த சுயநல அரசாங்கங்கள் ஏதாவது முயற்சி எடுக்குமா? தெரியாது!

ஹுஸைனம்மா said...

செய்திகளில் கண்டு வருத்தமாக இருந்தது. ஆறுகளுக்கும் பெண்களின் பெயர் வைத்திருப்பதாலேயே அவற்ற்றிற்கும் பேராபத்து விளைவிக்கிறோமோ என்றொரு வேதனை.

சென்ற வருடமே விஞ்ஞானிகள் எச்சரித்ததாகவும் அது அலட்சியப்படுத்தப்பட்டதாலேயே இந்த விபரீதம் என்றும் சொல்கீறார்கள். இயற்கையைப் பாதுகாப்போம்.

இராஜராஜேஸ்வரி said...

இவ்வளவு பெரிய அழிவுகள் சுனாமியைத் தான் நினைவு படுத்துகின்றன,,,,
இந்த நிகழ்ச்சியாவது மற்ற மலைகளையாவது காக்கும் சிந்தனைகளை ஏற்படுத்தட்டும்..!

கோமதி அரசு said...

இயற்கை அன்னை சீற்றம் மிகவும் வேதனை அளிப்பதாய் உள்ளது.
நான் சமீபத்தில் கேதார்நாத , பத்ரிநாத எல்லாம் போய் பயணக்கட்டுரை எழுதினேன். தொலைக்காட்சியில் அந்த இடங்களை எல்லாம் வெள்ளம் சூழ்ந்து காணாமல் போய் விட்டதைப் பார்த்து மனது கனத்து போகிறது. கேதார்நாத் கோவிலுக்குள் இருந்த 300 பேர் மட்டும் தப்பித்தார்கள். மற்றவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்கள் என்று கேட்கும் போது மனது மிகவும் வேதனைப் படுகிறது.
மூன்று வருடங்கள் பிடிக்குமாம் அவற்றை சரி செய்ய . வெள்ளம் வடிந்து சேறாக இருக்கிறதாம் கோவில். சுற்றுசுவர், சுற்றி உள்ள மடம் எல்லாம் காணாமல் போய்விட்டது. கோவிலுக்கு போகும் பாதை சீர் செய்ய வேண்டும். மக்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வீடு இழந்து, குடும்பம் , குழந்தைகளை பிரிந்து என்று வெதனையாக இருக்கிறது.
எல்லோரும் நலமாய் இருக்க பிராத்திப்போம். உணவு இல்லாமல் குழந்தை இறந்து விட்டது என்று கதறும் பெற்றோர், நிவாரணநிதி ஒழுங்காய் கிடைக்குமா என்று என்று கேட்கும் மக்கள் . எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

ராஜி said...

படங்களை பார்த்தும், செய்திகளை கேட்டும் மனம் கனத்தது.., யாரை குற்றாம் சொல்வதுன்னுதான் தெரியலை

sury siva said...


சிவ பஞ்சாக்ஷரி என்னும் ஸ்லோகத்தில்,

ந ம சி வா ய என்னும் ஐந்து எழுத்துக்களில் ஒவ்வொரு ஸ்டான்சாவும் துவங்கும்.
அதில் இரண்டாவது ஸ்டான்ஸா நீங்கள் குறிப்பிட்ட மந்தாகினி நதியின் தீரத்தில் துவங்குகிறது.

Mandakini salila chandana charchithaya,
Nandeeswara pramadha nadha maheswaraya,
Mandra pushpa bahu pushpa supoojithaya,
Tasmai 'Ma'karaya namashivaya.

மந்தாகினி நதி நதி தீரத்தில் சந்தன லேபத்துடன் நந்தீஸ்வன் முன்னிலையில் நாதபிரும்மமாக‌
அமர்ந்திருக்கும் மஹேச்வரனை புகழும் இந்த பாடல்.

மகாரமான மஹேஸ்வரன் நமசிவாயத்தை நமஸ்கரிக்கின்றேன் என்று சொல்வதாம்.

அந்த மஹேஸ்வரனுக்கு ரௌத்ரம் வந்துவிட்டால் யார் வழியில் நிற்க இயலும். ?

நமசிவாய..

சுப்பு தாத்தா.
நியூ ஜெர்சி.

அப்பாதுரை said...

வருந்துகிறேன்.

ஹூஸைனம்மாவின் கமென்ட் ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.பிரார்த்தனை ஒன்றே நாம் செய்யக் கூடியது.
கண்ணே இருண்டு போகிறது இத்தனை துயரங்களைக் கண்டு,.
மின் திட்டங்கள் வேண்டியதுதான்.
அதற்காக நதியின் போக்கைத் தடுத்துத் திருப்பிக்கூட விடுவார்களா. முன்னேற்றம் என்ற பெயரில் அளிக்கப்படும் தீமைகள்.கடவுள் பெயரால் இழைக்கப்படும் துன்பங்கள்.
நம் பிட்-இன் போட்டிச் சட்டென்று நினைவுக்கு வந்தது.நல்லதொரு படிப்பினைக்கு எத்தனை உயிர்கள் பலி!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி,

வெளியூர்களில் இருக்கும் இந்தியர்கள் கூடப் புரிந்து கொண்டார்களா தெரியவில்லை.
மகளைப் பார்க்கவந்தவர் சொன்னார். இந்தியன் பாபுலேஷனுக்கு டூர் போவதில்
ஆசை அதிகமாகிவிட்டது.
அறிவு பூர்வமாகத் தன் சொன்னார். மக்கள் ஆசைப்படுவதில் என்னதப்பு. அவர்களை உற்சாகப் படுத்தும் சுற்றுலாத்துறை,அதற்கான பாதுகாப்பு கொடுக்கமறந்ததே தப்பு.

வல்லிசிம்ஹன் said...

தினப் பிரார்த்தனைகளில் அந்த இடத்தில் இருந்து தவிப்பவர்கள் ஆறுதல் அடையவேண்டும் என்பதும் ஒன்று.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோபு சார்.இறைவந்தான் ஏதவது செய்யவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல்.
இது ஒரு உதாரணம்தான். இன்னும் எத்தனை பக்தி ஸ்தலங்களும், சுற்றுலாத்தலங்களும் பாதுகாக்கப் படாமல் இருக்கிறதோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,பலம் கையில் கொண்டவர்கள் காக்கவேண்டிய மக்கள்.
ஒரு கவனக் குறைவால்,விழிப்புணர்விலாததால்
இன்னும் என்னென்னவோ காரணங்கள்.

வல்லிசிம்ஹன் said...

இதேதான்நானும் நினைத்தேன். ஸ்ரீராம்.
எப்பொழுதும் இதே கதைதான்.
எங்கே இவர்களுக்கு கட்சி காக்கவும்,ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்து வருத்தமுகம் காட்டியதும் மறக்கமுடிகிறது.
உண்மையாக உழைப்பவர்கள் அங்கிருக்கும் ராணுவம்தான்.
எவ்வளவு ஆயிரம் நபர்கள் பிழைக்கிறார்களோ அவர்கள் வாழ்வு ஆண்டவன் அளித்த பிச்சை.

வல்லிசிம்ஹன் said...

நதிகளுக்குப் பெண்களின் பெயர் வைத்தது அவர்கள் தரும் வளர்ச்சியும்,பாதுகாப்பும்,அன்னையின் அன்பையும் வைத்துதான்.
அதே காரணத்துக்காகவே அவள் அழிக்கப் பட்டிருக்கிறாள்.
யார் பதில் சொல்லப் போகிறார்கள் ஹுசைனம்மா.அவள் பெறாத பிள்ளைகளாக ராணுவம் இப்போது செயல் படுகிறார்கள். இறைவன் காக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி இப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கோவிலுக்குள் 300,440 நபரகள் இருக்கிறார்களாம்.
ஈஸ்வரனுக்கான பூஜைகள் குப்தகாசியில் செய்யப் படுகிறதாம். கோவிலைச் சுற்றி மனித உடல் குவியல்.காணக் கொடூரமாக இருக்கிறது.
கங்கையில் மிதந்து வந்த சடலங்களை வழி நெடுக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கடவுளே என்றிருக்கிறது.சம்ஹாரமூர்த்தியின் சினம்.சாந்தமடையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

திருப்பதிக்குப் போகும்போதெல்லாம் நினைப்பேன். ஏன் மலையைத் தரை மட்டம் ஆக்குகிறார்கள் என்று,.
அங்கே நீர்வளம் இல்லை. இமயமலைபோல பெரியநதிகள் வறண்டுபோயாகிவிட்டது.இ
இராஜராஜேஸ்வரி நம் பிரார்த்தனைகள்
இறைவனை எட்டட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி,
குற்றம் சொல்ல நிறைய வ்ஷயங்கள் இருக்கின்றன. செய்திகளின் தலைப்பே மேன் மேட் டிஸாஸ்டர்.
மலையின் உச்சியில் ஹைடெல் பவர் ப்ராஜெக்ட் ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது முதல் இல்லை இது போல பல்ப்பல.
மலைமாதா தாங்கமுடியாமல் தான் இந்தத் துன்பம் நிகழ்ந்திருக்கிறது.போற்றிப் பாதுகாக்கவேண்டிய புனித இடங்களை இப்படிப் பாழ்செய்தால் வேறேன்ன நிகழும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே சுப்பு சார். சாந்தமூர்த்தியான மஹாதேவன் சம்ஹார மூர்த்தியாக மாறக் காரண்மாக இருந்தவர்கள் யாரொ.
அவர்களைத் தண்டிக்கவேண்டும்.
ஒரு குடப்பாலை விஷமாக்கிய குற்றவாளியைக் கண்டுபிடிக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை. இனி துர்கா சாமூண்டீஸ்வரி வருவாள் என்று எதிர்பார்க்கலாம்.

சாந்தி மாரியப்பன் said...

ஒவ்வொரு நாளும் கேள்விப்படும், பார்க்கும் செய்திகள் அனைத்தும் மனதைக் கஷ்டப்படுத்துகின்றன. மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தாரின் சேவை நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியது. அவர்கள் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாவே ஆகியிருக்கும்.

Ranjani Narayanan said...

புகைப்படங்கள், செய்திகள் மிகவும் துயரத்தைக் கொடுக்கின்றன. இன்னும் எத்தனை பேர் எங்கெல்லாம் தவித்துக் கொண்டிருக்கிறார்களோ, எல்லோரும் பத்திரமாக வீடு வந்து சேர வேண்டும்.
எல்லோருமாகப் பிரார்த்திப்போம்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,
இராணுவத்தார் அசராமல் பாடுபடுவதால் தான் இத்தனை ஆயிரம் நபர்களாவது மீட்கப் பட்டு இருக்கிறார்கள்.
அந்த வீரர்களைப் பெற்றவர்களுக்கும் நம் வணக்கம் உரித்தாக வேண்டும்/

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,
சிறிது நேரமே பார்க்க முடிகிறது. தொலைக் காட்சிகளும் காண்பித்த காட்சிகளையே மீள் ப்ளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இதோ மழை அங்கே ஆரம்பித்துவிட்டது. அங்கெ தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குச் சீக்கிரம் உதவி கிடைத்து வீடு திரும்பவேண்டும்.