Blog Archive

Thursday, June 13, 2013

விடுமுறைக் காலங்கள்

உனக்கும்  வெகேஷனா
Add caption

 என்   விடுமுறைக்காலங்கள்  வரும் எனக்கணக்கிட்டு  வாழ்ந்த காலம்
போய்,
பேரன் பேத்திகளுக்கெல்லாம்    விடுமுறை ஆரம்பித்துவிட்டது.


நீர்நிலைகளைத்   தேடி  வரும் பறவைகளாக

வரப்போகிறார்கள்.
கடவுளின் வரம்  4  வாரங்களுக்குக் கிடைக்கப் போகிறது.

அப்பாவோட  இருக்கும்போது பதிவெழுத வாய்ப்பு இருக்கும். அம்மாவும் பிள்ளைகளுமா வரும்போது  கணினி பக்கம் வந்தால் என்னைவிட
மோசமான பாட்டி  இருக்கமுடியாது:)

பார்க்கலாம். என்னஎன்ன அனுபவங்கள் காத்திருக்கின்றன என்று!!




எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

20 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனுபவங்கள் இனிக்கட்டும்... வாழ்த்துக்கள் அம்மா...

இராஜராஜேஸ்வரி said...

பார்க்கலாம். என்னஎன்ன அனுபவங்கள் காத்திருக்கின்றன என்று!!

ராமலக்ஷ்மி said...

அதுவும் சரியே. இனிய நினைவுகளை பத்திரப்படுத்தி பிறகு பகிர்ந்திடுங்கள்:)!
வாழ்த்துகள்!

துளசி கோபால் said...

அனுபவம்தான் வாழ்க்கை & வாழ்க்கை பூராவும் அனுபவங்களே!

எஞ்சாய்!!!!!!

ராஜி said...

அனுபவங்களை பதிவா போடுங்க

ஸ்ரீராம். said...

'சந்தைப் பேட்டை' போல கலகலப்பாக இருக்கும்! உறவுகள் என்றும் வாழ்க. ஹேப்பி வால்தான் பாக்கி டேஸ்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வரப்போகிறார்கள். கடவுளின் வரம் 4 வாரங்களுக்குக் கிடைக்கப் போகிறது.
//

எனக்கும் தான். 24.06.13 தொடங்கி 15.08.13 வரை ஏழு அல்லது எட்டு வாரங்கள் வரம் கிடைக்க உள்ளது.

//பார்க்கலாம். என்னஎன்ன அனுபவங்கள் காத்திருக்கின்றன என்று!!// ;)))))

நான் எழுதும் தொடரைத் தொடர்ந்து வெளியிட பிராப்தம் இருக்குமா என எனக்கே சந்தேகமாக உள்ளது.

கணினி கிடைப்பதோ, நேரம் கிடைப்பதோ ஒன்றும் சொல்ல முடியாது. நடுவில் அவர்களுடன் சில பயணங்கள் செல்ல வேண்டியும் இருக்கும். பார்ப்போம். சவாலே சமாளி தான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வருடத்துக்கு ஒரு தரம் வரும் வரம்.
மகிழ்ச்சியுடன் வந்து மகிழ்ச்சியாக
அவங்க ஊருக்குப் போகணும்.

வெங்கட் நாகராஜ் said...

வாவ்.... நான்கு வாரங்கள்.... இனிதாய் அமையட்டும்....

முடியும்போது அனுப்வங்களை எழுதுங்களேன் வல்லிம்மா....

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி.சரியாகச் சொன்னீர்கள். பதிவு செய்தால் ஒழிய மறக்க சந்தர்ப்பம் உண்டு.பத்திரப்படுத்துகிறேன்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். ஒவ்வொரு நாளும் பாடம் போதிக்க அனுபவங்கள் காத்திருக்கின்றன துளசி.தான்க்ஸ் பா.

வல்லிசிம்ஹன் said...

போடலாம் ராஜி. பசங்க அந்தத் தாத்தா வீட்டில இருக்கும் போது போடலாம்.:)

வல்லிசிம்ஹன் said...

இரண்டு வால் வந்தாச்சு ஸ்ரீராம்.
ஒண்ணு அரசாங்கம் எப்படி நடத்தணும்னு பேசுகிறது. இன்னோண்ணு நாந்தான் ஸ்பைடர்மேன்.
னு சொல்லி என்னைக் கட்டிப் போடுகிறது.அப்பப்போ வந்து கட்டிக் கொள்ளும்.நீ எங்களோடு வந்துடு பாட்டினு சொல்லும்.:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபுசார்.
ஆஹா எட்டு வாரமா.வருவதற்கு முன்னால் எழுதிடுங்கள். அப்புறமா முடியாது. உங்கள் பொழுதுகள் சர்க்கரை தடவினபந்தலாக அமையணும்.

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பா எழுத முயற்சிக்கிறேன்.
நேரம் கிடைக்கட்டும். நன்றி வெங்கட். உங்களுக்கு விடுமுறை உண்டா. குழந்தை காத்திருப்பாளே.

Ranjani Narayanan said...

பேரன் பேத்திகள் என்றைக்குமே தாத்தா பாட்டிகளின் செல்லம்!

அவர்களுடன் உங்கள் பொழுது இனிமையாகக் கழியட்டும்.இருக்கவே இருக்கிறது பதிவுலகம்!


சாந்தி மாரியப்பன் said...

இனிய பொழுதுகள் வாய்க்கட்டும் வல்லிம்மா..

நினைவுகளை எங்களுடன் சேர்ந்து அசை போடுங்க :-))

மாதேவி said...

வாரங்கள் இனித்திடும். மகிழ்ந்திருங்கள்.

கோமதி அரசு said...

ஆஹா! குழந்தைகள, பேரக்குழந்தைகள் வருகிறார்களா?
எல்லோரும் வந்தால் வசந்தம் வந்தது போல் தான்.
உங்களுக்கு நல்ல அனுபவங்கள் தான். எங்களுக்கு பிறகு கிடைக்கும் இனிக்கும் பதிவாய்.