Blog Archive

Wednesday, June 12, 2013

காதலுக்கு வயது உண்டா?

நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!
பலவண்ணங்கள் நிறைந்த பூங்கொத்து தான் காதல்

மேலும்  காதல் பற்றிச்  சொல்ல விஷயங்கள் கிடைத்தன.

அதே  திண்டுக்கலில்  எங்கள் வீட்டுக்குப் பக்கத்துவீட்டில் இருந்த ஜில்லு.

என் பள்ளியில் படிப்பவள். 13 வயது  குட்டிப் பொண்ணு.
அவர்கள் அப்பா  ஆடிட்டர்.. கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜில்லுவுக்கு  மாலினி  அக்கா.
உப்பிலி   தம்பி.

உப்பிலி,என் தம்பிகள் எல்லோரும் புனித மேரி  பள்ளிக்குப் போகிறவர்கள்.
நாங்கள்  மூவரும் புனித   சூசையப்பர் பள்ளிக்குப் போகிறவர்கள்.

எட்டேமுக்கால் பள்ளிமணி அடிப்பதற்குள் சென்றுவிடும் வேகம் எனக்கு.
இந்த ஜில்லு மட்டும்   தங்கி த் தங்கி வருவாள். ''சரியான

குண்டு!சீக்கிரம் வாயேன் 'என்று மாலி கத்துவாள்.
அக்கா இந்த  பூவைப் பாரேன். அந்தத் தட்டாம்பூச்சியைப் பாரேன் என்று சொல்லிவருவாள் தங்கை.

'காண வந்த காட்சி  என்ன வெள்ளை நிலவே' என்ற  பாட்டை விசிலடித்தபடி
எங்களைத் தாண்டிச் சென்றான் ஒரு பையன்.
எனக்கு அந்தப் பாட்டு பிடிக்கும்.
ஹை  நல்லா விசிலடிக்கிறான் இல்ல மாலி?
என்று நான் திரும்பி மாலியைப் பார்த்தால் அவள் முகத்தில்  கோபம்.
என்னப்பா விஷயம்.
ஏன் கோவிச்சுக்கறே. அவன்   அடுத்த தெருவில் இருக்கும்

சுப்பு  தானே. ஏன் கோவம்?
பின்னாடி பாரு என்று பல்லைக் கடித்தாள்.
பின்னால் பார்த்தவள்   அதிர்ந்து போனேன்,.
ஜில்லு மும்முரமாக எதையோ படித்துக் கொண்டிருக்கிறாள்.

ஏதாவது டெஸ்டாக இருக்கும்.
' அசடே    பாதையில் படிக்கும் அளவு அவளுக்கு
படிப்பில் சுவாரஸ்யம் இல்லை. இது வேற.
அம்மாகிட்டச் சொல்லி   வேட்டு வைக்கிறேன் பாரு'' என்று
சொல்லிவிட்டு
ஜில்லு நீ அப்புறமா வா. நாங்கள் போகிறோம்.
என்று ஓட்டம் பிடிக்க  ஆரம்பித்தாள்.

நானும் அவளைத் தொடர்ந்தேன்.ஜில்லு மணி அடித்த பின்தான் வந்தாள்.

பெரிய ஸிஸ்டர் கண்ணிலும் பட்டாள்.
முழங்காலும் போட்டாள்.
பாட்டெல்லாம்  முடிந்து நாங்கள் வகுப்பறைகளுக்குப்
 போகும்போது பெரிய ஸிஸ்டர் அவளுக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
நாங்கள்     ஒன்பதாம் வகுப்பு பக்கம் போக,
அவள் எட்டாம் வகுப்பிற்குத் திரும்பினாள்.
முகத்தில் துளி  வருத்தம் இல்லை.

இரண்டு நாட்கள் மௌனமாகக் கழிந்தன.
சனிக்கிழமை  பாதி நாள் பள்ளி..
மாலினி பள்ளிக்கு வரவில்லை. ஜில்லு என்னுடந்தான் திரும்பி வரவேண்டும் என்று  அவள் அம்மாவின் ஆர்டர்.

கடுகடு என்ற முகத்தோடு என்னுடன் நடந்துவந்தாள்.
என்னதான் ஆச்சு.
சுப்பு  என்ன லெட்டர் கொடுத்தான். உனக்கென்ன கோபம்?
என்று அடுக்கடுக்காக நான் அவளைக்  கேட்டதும்
அவள் உதடுகள்  பிதுங்கி அழும் நிலைக்கு வந்தாள்.

ஏய் அழாதே. ரோடில நாலு பேர் பார்க்கப் போகிறார்கள்.

எனக்குக் கோபமா வரது.
யார் மேல
 . எல்லாம்  இந்த அம்மா மேலதான்.
விளக்கமாச் சொல்லேன்.
சுப்பு எவ்வளோ நல்லவன் தெரியுமா. எனக்கு பாடனி
படமெல்லாம் வரைந்து கொடுத்தான்.
இந்த உப்பிலி மாட்டேன்னுட்டான்.
அப்பதான் சுப்பு வந்தான். உனக்கு உதவி  செய்கிறேன் என்று ரிகார்ட் நோட்டை வாங்கிப் போய் வரைந்து கொடுத்தான்.
சரின்னு இரண்டு மூணு தடவை ரோடில் பார்க்கும் போது
சிரிப்பேன்.
எனக்கு அவனை ரொம்பப் பிடித்திருக்கு.

பெரியவளானதும் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.

உனக்குப் பதிமூணு வயசுதான் ஆகிறது .
அதனால் என்ன மாயாபஜார்   படத்தில் ஜெமினி சாவித்ரி ரெண்டு பேரும் சின்னவர்கள்.தான்!(??????????????/)
அபிமன்யு  வத்சலாவாகக் கல்யாணம் பண்ணிக்கலையா.
பாட்டனி வரைந்து கொடுத்தால் காதல் வருமா?

போ! நீ சரியான  அசடு  என்று சிடுசிடுத்தாள்.
சுப்பு    ஸ்மார்ட்.   எப்படி ட்ரஸ் பண்ணிக்கறான் பாரு.
அன்னைல    வர   ராஜா  மாதிரி இருக்கான்.
அதுக்காக நீ 'ஓ பக்கும் பக்கும்''  பாடப் போறியாக்கும்?

நான்   ஏன் பாடணும். கடிதம் எழுதிக் கொடுக்கப் போகிறேன்.
எனக்கு வந்த அதிர்ச்சியில்  விழாமல் இருந்தேனே!
என்னது லெட்டரா??
ஆமாம். நான் சொன்னாத்தானே அவனும் புரிஞ்சுப்பான்.
நீ இப்ப ப்ராமிஸ் பண்ணு. இதை அம்மா கிட்டச் சொல்ல மாட்டேன்னு.

நோ நோ.  நான் அதெல்லாம் ப்ராமிஸ் பண்ணமாட்டேன். நீ அவசரக் குடுக்கை ஜில்லு.
இப்படி எல்லாம் செய்யாதே . தப்புமா.

ஏன் கத்தறே. நான் என்னவோ நாளைக்கே மலைக்கோட்டையில் அவனைப் பார்க்கப் போகிற மாதிரி   நினைச்சுட்டியா.

ஓ அப்படியெல்லாம் வேற ப்ளான்  இருக்கா.
இப்போதைக்கு  இல்ல. இருக்கலாம். என்றாள் .!


எனக்கு ஒரே படபடப்பாக இருந்தது.
எப்போடா வீடுவரும்னு என் வீட்டுக்குள் போய்விட்டேன்.
அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

அம்மாவுக்கு என் மேல்தான் கோபம் வந்தது.
அத்துனூண்டு பொண்ணுக்குப் பதில் சொல்ல உனக்குத் தெரியலையா.
சரி மேல பேசாதே இனிமே  பெரியவனை உன்னைப் பள்ளியில் விட்டுவிட்டுப் போகச் சொல்கிறேன்.

கண்ட வம்பில மாட்டினால்  தெரியும் சேதி என்று  வார்னிங்  கொடுத்தாள்.

என்னவோ நான் தான் காதல்கடிதம் கொடுக்கப் போவதாகப்  பயம்.
இரவெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை.
ஜில்லு என்ன பண்ணப் போகிறதோ  தெரியவில்லையே........
அடுத்தநாள்    எப்போதும் போல மூவரும்  கிளம்பினோம்.


நீ,அந்தக் கழுதையோட  பேசாதே. தானே  வரட்டும்.
நேத்து ராத்திரி   அவ என்ன பண்ணினாள் தெரியுமா

ஏதோ   ஹோம்வொர்க் செய்யறான்னு நினைத்தால்

நிச்சயதாம்பூலத்தில் வருமே  'மாலை சூடும் மணநாள்'  அதைப் பாடிக்கொண்டு  என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள்.
நான் மெதுவா எட்டிப் பார்த்த்தால் கவிழ்ந்து படுத்துக் கொண்டு மறைக்கிறாள்.
என்னன்னு சொல்லப் போறீயா,அம்மாவைக் கூப்பிடட்டுமானு
மிரட்டினேன்.

மெதுவாக அவள் எழுதி இருந்ததைக்  காண்பித்தாள்.

இதோ பாரு. சரியான பைத்தியம்!!

அன்புள்ள சுப்பு,
எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கு.
உன்னோடு ,பார்க் எல்லாம் போய்ப் பேச ஆசையாக இருக்கு.
நீ சொன்ன மாதிரி  மலைக்கோட்டைல கூடப் பேசலாம்.

ஆனால் எனக்குத் தனியா ஒரு இடம் போய் வந்து பழக்கம் இல்லை.
அதனால நாம்    எல்லோருமா சேர்ந்து   பெரிய இடத்துப் பெண்
பார்க்கப் போகலாமா.

நான் இன்னும் நன்றாகப் படிக்கணுமாம். அப்பா  சொன்னார்.
மெட்ராஸ்ல   மாமாவீட்டில போய் கூடப்  படிக்கலாமாம்.
அங்கே   ஹிந்தி சினிமா கூடப் பார்க்கலாம். நாடகமெல்லாம் பார்க்கலாம்.

இந்த ஊர்ல பழைய படங்கள் தானே வரது.
அதனால் நான் இந்த வருஷம்  அங்கே  போகப் போகிறேன்.
நீயும்   நன்றாகப் படி.
பிறகு பார்க்கலாம்.
இப்படிக்கு
ஜில்லு.
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))0

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பரவாயில்லை... அப்பா பேச்சை மதித்து...

முடிவில் மெட்ராஸ் மாற்றம்...(?) பிறகு பார்க்கலாம்....!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!//

//பலவண்ணங்கள் நிறைந்த பூங்கொத்து தான் காதல்//

படங்கள் நல்ல அழகு. பாராட்டுக்கள்.

துளசி கோபால் said...

அட! ஜில்லு ரொம்பவே தில்லு!!!!

வல்லிசிம்ஹன் said...

ஜில்லு கொஞ்சம் செல்லப் பொண்ணு.
வேண்டாம்னு சொன்னால் அதையே செய்வாள். அதுதான் அவள் அப்பா சென்னைக்கு அனுப்பத் தீர்மானித்தார். அவருக்குப் பெண்ணை நன்றாகத் தெரியும். அவளுக்குச் சினிம டிராமா பார்க்க வேண்டும் அப்பப்போ படிக்கணும். மாமாவே ஒரு பள்ளியில் விஞ்ஞான பிரிவில் மாஸ்டராக இருந்ததால் அங்கெ அனுப்ப முடிவு செய்தார். மார்ச் 31 ஆம் தேதி கிளம்பிப் போய்விட்டாள். நன்றி தனபாலன். சீ யூ லேட்டர் தான் பிறகு பார்க்கலாம்.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி கோபு சார்.தவறாமல் வந்து பாராட்டுகள் சொல்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

சின்னப் பொண்ணு துளசி. தெரியாம
பேசும்படத்தில் வரும் உலகம் தான் மெய்னு நினைக்கிற வயசு.

மாறி இருப்பாள்.:)

மாதேவி said...

அட! தப்பியது மற்ராஸ் சிட்டு.

ராஜி said...

படங்கள் கண்ணையும் கருத்தையும் பறிக்குதும்மா!

அப்பாதுரை said...


தில்லுக்கார ஜில்லு..
அப்புறம் என்னாச்சு?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் மாதேவி. சிக்கலில் மாட்டவில்லை:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராஜிமா.

வல்லிசிம்ஹன் said...

துரை!

ஜில்லு இப்போது கும்பகோணத்துக்கே போயாச்சு.
நல்ல அழகான பாட்டி. இரண்டு பிள்ளைகள் . மருமகள்கள்.
கணவர் சுப்புரத்தினம் நல்ல கல்லூரி ஒன்றில்பாட்டனி பிரிவுக்குத் தலைவர் என்பது தெரிகிறது. போன வருடம் கும்பகோணம் போனபோது உப்பிலி அப்பன் கோவில் வாசலில் என் போன்றமாமியாக அவளைப் பார்த்தேன். பேசவில்லை. அவளாக இல்லாவிட்டால்:)?செய்தி கொடுத்தது பள்ளித்தோழி,.

வெங்கட் நாகராஜ் said...

ஜில்லு.... நல்ல தைரியம் தான். அதுவும் அந்தக் காலத்திலேயே இப்படி யோசித்திருக்கிறாரே....

அப்பாவின் பேச்சைக் கேட்டு மேல் படிப்புப் படிக்கச் சென்றதும் நன்று.

கடிதம் - ரசித்தேன்.

கோமதி அரசு said...

காதலுக்கு வயது கிடையாது தான்.
அருமையான காதல் கதை சொல்லிவிட்டீர்கள்.
சிறு வயதில் வருவது பருவ கவர்ச்சிதானே ! அதை காதல் என்று ஏமாந்து விடுகிறார்கள்.
ஜில்லு நல்லவேளை மெட்ராஸ் சென்று மறந்து விட்டார்.