எங்களுக்கெல்லாம் வழிகாட்டி:) |
சொல்லித்தருகிறார் கடிதம் எழுத |
தோழி எழுத வந்த காதல் கடிதம்
+++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறையில் கடிதம் எழுத முடியாது. நினைத்தாலே அப்பாவின் முகம் வந்து பயமுறுத்தும்.
முதலில் கனகாவைச் சம்மதிக்கவைக்கணும்.கணவன்
பெயர் சொல்லவே சிவக்கிறவள் கடிதம்
எழுதவா முன் வருவாள்.?
வி ஆர் செவன் குழு நினைத்தால் சாதிக்கமுடியாதா என்ன.
அப்போது வந்தது டிசம்பர் விடுமுறைகள்.
டிசம்பர் 12ஆம் தேதி மூடிவிடுவார்கள். பிறகு
21 நாட்கள் அ வி க தான்.
நிச்சயம் படிக்க வேண்டும் .நடுவில் கண்காட்சி போகலாம். சினிமா
இரண்டும் உண்டு.சினிமாவுக்கும் அப்பா அம்மா உண்டு.
கண்காட்சிக்கும் உண்டு.
அப்போது செண்ட்ரல் என்று தியேட்டர் பஜாரில் இருக்கும்.
அங்கே கைராசி என்ற படம் ஓடிக் கொண்டிருந்தது.
எனக்கோ ஒரே தவிப்பு அந்தப் படத்தைப் பார்க்க.
அப்பாவிடம் அனுமதி எதிர்பார்க்க முடியாது.
இதற்கு நடுவில் எங்கள் மெட்ராஸ் அத்தை வீட்டுக்கு வந்திருந்தார்.
என்னுடன் கோவிலுக்கு வந்தார். அழகான தாவணி பாவாடை வாங்கிக் கொடுத்தார்.
நான் எதிர்பார்க்காதது அவர் கேட்ட அடுத்த கேள்வி.
'உன் எதிர்காலத் திட்டங்கள் என்னனு யோசித்தியா.
கல்யாணமா கல்லூரியா:)
இன்னும் ஒரு வருஷம் ஸ்கூல் இருக்கே அத்தை. திண்டுக்கல்லில் கல்லூரி இல்லை. அப்பா என்னசொல்கிறாரோ அதைச் செய்யலாம் என்று நல்ல பெண்ணாகப் பதில் சொன்னேன்.
அத்தை சிரித்துவிட்டார்.
நீ பயப்படாதே அப்பாவிடம் கேட்க மாட்டேன். நீ நன்றாகப் படிக்கணும்.
அப்புறம் தான் திருமணம்.
அதுதான் சாக்கு என்று அத்தையைக் கேட்டேன். அத்தை, எங்க வகுப்பில
ஒரு கல்யாணமான பொண்ணு இருக்கு.
அதுக்குத் தன் கணவனுக்குக் கடிதம் எழுத ஆசை.
இங்க கைராசினு ஒரு படம் நடக்கிறது.அதுல கூட கடிதம் எழுதுகிற மாதிரி பாட்டு வரது.
அதுக்கு அவளை அழைத்துக் கொண்டுபோகலாம்னு ஆசையாக இருக்கு. நீங்கதான் ஹெல்ப் செய்யணும்னு சொன்னதும்
அத்தை விழித்தார்.
நீங்களே போகவேண்டியதுதானே என்றார்.
அப்பா விடமாட்டார். நீங்க வந்தால் விடுவார் என்றதும் சரின்னு
சொல்லிவிட்டார்.
ஐய்யொ அன்று நான் பட்ட சந்தோஷம்!!!
அத்தையைவிட்டுவிட்டு, எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த
உஷா வீட்டுக்குப் போனேன்
அவர்கள் வீட்டில் தொலைபேசி இருந்தது. இன்னோரு பெண் பவானி என்பவள் வீட்டிலும் இருந்தது.
பவானி வீட்டுக்குப் பக்கத்துவீட்டுக்கு கனகா வந்திருந்தாள் விடுமுறைக்கு.
பறந்தது பவானிக்கு ஃபோன்.
அவள் பயந்து கொண்டே பேசினாள்.
சினிமா என்றதும் உற்சாகத்துக்குத் தாவினாள். யாரெல்லாம் பா?
நீ முதலில் கனகாவைக் கூப்பிடு.அவளுடன் பேசணும்.அவளையும் அழைத்துப் போகணும்'என்றோம்.
அவளோட அத்தான் வந்திருக்கிறாரே.எப்படி அவளைக் கூப்பிடுவது?
அச்சோ. இப்ப என்ன செய்வது.
அவர் சாயந்திரம் போய்விடுவார்.அப்புறம் வேணா அவளை அழைத்து வருகிறேன்.என்றாள்.
திண்டுக்கல் சிறிய ஊர்தான். கோட்டை மாரியம்மன் கோவிலருகில் பவானிவீடு.அடுத்த நாள் சந்திப்பதாக ஏற்பாடு.
கனகாவும் வந்தாள்.என்ன கடிதம் எழுதறியா.இல்லை கைராசிபடம் பார்த்தபிறகு எழுதறியா என்று கேட்டால். தலையோட கால் நடுக்கம்
காண்பிக்கிறாள்.
அத்தைக்குத் தெரிந்தால் வம்பாகிடும்.
ஏன் இன்னும் நீங்கள் பழக ஆரம்பிக்கலையா. டூயட் பாடி வெளில போயி ஒண்ணும் இல்லையா?
இல்லை அதெல்லாம் அவர் படித்து முடித்த பிறகு அடுத்த சித்திரையில் தான்.!
எங்கள் ஏழில் ஐந்து பேருக்கு இந்த அர்த்தம் புரியாத மண்டூகங்கள். ஞே'னு முழித்தோம்.
இல்ல.....இழுத்தாள்.கையில் இருந்த பையில் இருந்து ஒரு எண்பது பக்க நோட்டுப் புத்தகம்.
என்னது இது?
பாட்டுப் புத்தகங்களிலிருந்து எடுத்த வரிகள்.
?????????????????????????????????????????????????/
படிக்க ஆரம்பித்தோம்.எல்லாம் அதுவரை வந்த படங்களிலிருந்து எடுத்த பாடல்கள்
அத்தான் என் அத்தான்''இருந்து ஆரம்பித்து
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்
யாருக்கு மாப்பிள்ளையாரோ அவர் வந்து வந்து போய்விடுவாரோ(!)
புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போகிறவரே
தேரேறி வருவாரென்று திருவீதி வலம் வந்தாள்
தேர் கண்டாள் தேரே கண்டாள் சிலை அதிலே இலையே ராஜா
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ
தேக்குமரம் உடலைத் தந்தது
சின்னயானை நடையைத் தந்தது
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணம் போலே உள்ளம் பந்தாடுதே.
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தான்(!)
இப்படிப் போனது நீண்ட பாட்டுப் பட்டியல்
கடைசில அன்புள்ள அத்தான் வணக்கம்.
திருமணம் ஆன பின்னும் ஏன் குழப்பம்.
என்று முடித்திருந்தாளே பார்க்கலாம்.!!
எனக்கு மூச்சே வரவில்லை.
இவளுக்குக் கற்பனை நிறையவே இருக்கு.
கைராசியாவது கால்ராசியாவது
ஆமாம் இதை என்ன பண்ணப் போகிறே என்று கேட்டோம்.
அடுத்த தடவை அவர் வரும்போது நிறைய பூக்கள் வரைந்து
வண்ண அட்டை போட்டு யாருக்கும் தெரியாமல் அவரிடம் கொடுத்துவிடுவேன் என்றாள்.
எங்களுக்கு வேலையே வைக்கவில்லை.
அதானே அவள் காதல் கணவனுக்கு அவளே
தூது போய்க் கொண்டாள்.
நாங்கள் என்ன எழுதி இருப்போம்.
முன்னபின்ன காதலித்து இருந்தால் தெரியும்:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
28 comments:
//"அன்புள்ள அத்தான்..... வணக்கம்!"//
;)))))
மிக மிக அருமை
நானும் அந்தப்படக் காலத்தைச் சேர்ந்தவன்
என்பதால் ஒன்ரி ரசிக்க முடிந்தது
மனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
நன்றி கோபு சார்.
அந்த நாள் நல்ல நாள்:)
நன்றி ரமணி சார்.சுற்றிவரச் சினிமாப் பாடல்கள். அதைத் தவிர ரேடியோ சிலோன்.எங்களுக்கு அந்தாக்ஷரி எல்லாம் அப்போது தெரியாது. தெரிந்திருந்தால் பின்னி இருப்போம்.:)
இவ்வளவுதானா என்றும் தோன்றியது. அட என்றும் தோன்றியது. சுவாரஸ்யம்தான். அந்தக் காலத்தில் அப்படி பயந்து பயந்துதான் படம் பார்க்க முடிந்தது. வெளியில் செல்ல முடிந்தது. இப்போது?
T F
கொடுத்துள்ள ஒவ்வொரு பாடலும் இனிமையான பாடல்கள்... என்னால் பாடல் இருக்க முடியவில்லை...
ரசித்தேன்... வாழ்த்துக்கள் அம்மா...
ஆஹா இதுக்குத்தான் நான் காதல் கடிதம் எழுதலை. எபிசோடே சப்புனு போயிடுத்து பார்த்தீர்களா.:)
கனகா கைகாரி. பள்ளியை முடித்து மதுரைக்கே குடித்தனம் போனாள். அங்கே கடிதம் எழுதினாளோ என்னவோ!!!
எங்க போனாலும் எஸ்கார்ட் இல்லாமல் போகமுடியாது.வாசலில் வரும் பஸ்ஸில் ஏற , என் தம்பி வந்து நிற்பான்:)அக்காக்குக் காவலாக!
சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்:)!
அப்போ தோழிக்கு எழுதிக் கொடுக்க நீனைத்ததை இப்போது எழுதி விடலாமே, வல்லி!
போட்டியின் முடிவுத் தேதி ஜூலை 20. அதற்குள் உங்களுக்கு நிச்சயம் கற்பனை ஊறும். எழுதி அனுப்புங்கள், ப்ளீஸ்!
//நாங்கள் என்ன எழுதி இருப்போம்.
முன்னபின்ன காதலித்து இருந்தால் தெரியும்:)//
1. ஆயிரம் அழகர்கள் அணிவகுத்து வந்தாலும்
அத்தை மகனுக்கு ஈடாமோ சொல்...
அவனுமே வாய் திறந்து தன் காதலைச் சொல்லிவிடின்
நித்திரை வந்திடுமோ !! நின் இமைகளும் துயில் மறந்திடுமோ !
2 காலமெல்லாமினி காதல் தானே !!
கடிதமெதற்கு ??
3 வானமெல்லாம் இனி பானகம் தானே!!
வானவில் ஒன்று என்கண் முன் எதற்கு ?
4 கண்கள் போதுமே ..காதல் மழை பொழிய..
எண்களும் எழுத்துக்களும் இனியும் தேவையா ?
சுப்பு தாத்தா.
//கடைசில அன்புள்ள அத்தான் வணக்கம்.
திருமணம் ஆன பின்னும் ஏன் குழப்பம்.
என்று முடித்திருந்தாளே பார்க்கலாம்.!!//
ச்வீட்! :) காதல் இருந்தா மற்றதெல்லாம் தானா வந்துரும் போலருக்கு :)
ஏழாவது பின்னூட்டம் உங்களுக்குத்தான் ஸ்ரீராம். பேர் போட மறந்துவிட்டது.!!!
ஆமாம் தனபாலன்.ஒரு பாடல் கூட மறக்க முடியாது.நீங்கள் சென்னைக்கு வரும்போது குடும்பத்தோடு வந்து பாடிக்காட்டணும்.ரசித்ததற்கு நன்றி மா.
நன்றி ராமலக்ஷ்மி.
அந்த வயதில் ஒவ்வொரு நொடியும் ஸ்வாரஸ்யம் தான்.
இதை என் அம்மாவிடம் சொல்லித் திட்டும் வங்கிக் கொண்டேன்:)
அன்பு ரஞ்சனி.
கற்பனைக்குப் பஞ்சமில்லை.
ஈரோடு பேன் பார்த்து படிய வாரிப் பின்னினால் பின்னல் அழகாக இருக்கும்.அவசரக் கோலம் வேண்டாம் என்றுதான்கனகாவின் கதையை எழுதினேன். காதலர்களைக் காதலிக்காத உலகம் ஏது!மேலும் நாளை அமெரிக்க விருந்தினர்கள் வருகிறார்கள். வேலை நெட்டுகிறது. ஜூலை 20க்குள் முடிந்தால் எழுதிவிடுகிறேன்.கரும்பு தின்னக் கூலியா.:)
நன்றி மா.
'இவ்வளவுதானா' என்று சொன்னது நீங்கள் எழுதித் தர நினைத்ததைக் காணோமே, தோழி எழுதியதுதானா என்ற அர்த்தத்தில்... ஆனால் அதுவும் சுவையாகவே இருக்கிறது என்பதைத்தான் அடுத்தவரியில் சொல்லியிருந்தேன். :)))
ஆஹா பிடித்தாரே பாயிண்டை சுப்பு சார்.
நியூயார்க் நாயகன்!!
கண்ணோடு கண் நோக்கின் வாய்ச் சொற்கள் ஏதும் பயனில'' தானே
எங்கள் விஷயம். பார்த்தோம் .சரின்னு சொல்லியாச்சு. அவரும் நானும் எழுதிக் கொண்ட கடிதங்கள் பிரசுரிக்க முடியுமா!! இல்லை.
கடலைப் பார்த்து ஓடும் நதிகள் இனி அமைதியாகத்தான் இருக்கும்.
அற்புதமான கவிதைக்கு மிகவும் நன்றி. இது ஒரு பொக்கிஷம்
அன்பு மீனா.
அந்தப் பதினைந்து வயதில் மனதில் ஏற்படும் கற்பனைகள் எல்லாம் புத்தகங்களையும் சினிமாக்களின் காதல் காட்சிகளையும் பாடல்களையும்
சார்ந்தே இருக்கும்.
பிறகு உண்மை நிலை புரியும்போது உண்மைக்காதல் மலரும். எங்களது முயற்சி ஏட்டுச் சுரைக்காய்;)
நன்றிமா.
அன்பு ஸ்ரீராம்,
ஓஹோ!!:))
நான் காதல்கடிதம் எழுத இனி டைம் மெஷினில் ஏறித்தான் போகணும்.
நான் எப்பவும் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளமாட்டேன். இது வெறும் எழுத்துதானேம்மா.
கனகத்தின் கற்பனை டீனேஜ் ஃபாண்டஸி.அந்தக் காலமே அவ்வளவுதான். ஸோ நோ வொரீஸ்!!
ரசிக்கவைத்த கடிதம் !!
இதுவே இனிய கவிதை. நீங்களெல்லாம் உங்க தோழியை கடிதமெழுத வைக்கப் படற பாடும், அவர் பதினாறாடி பாஞ்ச விதமும் க்யூட். உங்கள் அத்தை வியக்க வைத்தார். படிக்கணும், அப்புறம் கல்யாணம் - எத்தனை பேருக்கு சொல்லவந்திருக்கும் அந்த நாளில்!
வரணும் துரை.
அந்த அத்தை தன் ஆசையைப் பாட்டியிடமும் சொல்லிவிட்டார்.:)
பாட்டி நான் வெளியே போயிருப்பதாக நினைத்துக் கொண்டு
நாராயணா,இந்த நெடுநெடுனு உசந்து போச்சு. இப்பவே பத்தானி பையனுக்கு கல்யாணம் பேசிடலாம். ராஜ மாதிரி இருக்கான். அவள் நகை சொத்து எல்லாம் ஆத்தைவிட்டுப் போகாது என்று வேறு சொல்லிவிட்டார்.
அப்பா திடமாக இருந்தார். அவள் மனசைக் கலைக்காதேமா.அவள் படிக்கட்டும்னு தீர்மானமாகச் சொல்லிவிட்டார். அடுத்தவருஷம் அந்த அத்தை இல்லை. பாட்டியும் இல்லை. சின்ன அத்தானும் ஐந்து வருடங்கள் முன் காலமாகிவிட்டார்.
பாவம் அத்தை பையன் கல்யாணத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை.
எங்களுக்கு கண்முன்னால் ஒரு காதல் டெவலப் ஆகிறபோது என்ன ஆகிறது என்று பார்க்கும் கியூரியாசிட்டி இருக்கத்தானே செய்யும்:)அதுதான் இளமையின் முனைப்பு.
நமக்கு சிங்கம் காத்திருக்கும்போது வேறு இடம் செல்லுமா மனசு:)
நன்றி மா.
வரணும் ராஜராஜேஸ்வரி.ரசித்ததற்கு மிகவும் நன்றி.
நமக்கு சிங்கம் காத்திருக்கும்போது வேறு இடம் செல்லுமா மனசு:)
நன்றி மா.//
நல்ல டச்சிங்கான வார்த்தைகள் உங்கள் கல்யாண அனுபவங்கள் எல்லாம் கண் முன்னாடி வந்துட்டுப் போகுது. அதைவிடச் சிறந்த காதலும், கடிதமும் உண்டா? அதையே எழுதிடுங்க காதல் கடிதம் போட்டிக்கு. அருமையா இருக்கும். :))))))
அச்சோ கீதா எத்தனை அழகா உங்கள் அன்பைக் காட்டிவிட்டீங்க.
எழுதலாம். எல்லாருக்கும் போரடிக்கும்பா. புதுசா எழுதணும்.அதற்கு புது உற்சாகம் வேணும்.அது வரும்போது எழுதலாம்.:)
நீங்க ஒண்ணு நினைக்க, உங்க தோழி கனகமணி வேற மாதிரி இருக்காங்களே....
சினிமா பாடல்களிலேயே காதல்....
ரசித்தேன் வல்லிம்மா...
ஆஹா! அருமை சினிமா பாடல்களின் தொகுப்பு.
Post a Comment