Blog Archive

Saturday, June 15, 2013

ஸ்ரீ கிருஷ்ணனுக்கு செல்வி ருக்மணி எழுதிய தூதுக் கடிதம் 922 ஆம் பதிவு

Add caption
ருக்மிணி     கல்யாணம்
Add caption

 எவராலும் வெல்லமுடியாத  உலகத்தின் மிக அழகான   வீரனான
  கிருஷ்ணா   உன் பெருமைகளைக்  செவி வழியாகக் கேட்டு
,
 என் கண்கள் உன்  கம்பீர உருவத்தைக் காணவே காத்திருக்கின்றன.
உன் நற்

 குணங்களும் மனதிலும் நெஞ்சிலும் நிறைந்ததால் உன்னையே
என் கணவனாக வரித்தேன்
************************************
2,ஹே  முகுந்தா,

சிங்கங்களின் தலைவனே, உன்னுடைய புகழ், பரம்பரை, உன் ஆனந்தமய குணம், உலகம் முழுவதும் பரந்திருக்கும் மக்களின் ஆனந்தத்திருக்கும் காரணமானவன்,
அன்பு மயமானவன், எந்த வகையிலும் யாருக்கும் நிகரில்லாதவன்
வீரம்,இயற்கையாக அமைந்த தயாளகுணம்,  கண்களைநிறைக்கும் அழகு
இவைகளைக் கேட்டறிந்த எந்தப் பெண்தான் உன்னைத் தனக்கேற்ற மணாளனாக  வரிக்க மாட்டாள்?
************************************

3, அதனால் தான் ஹே  தாமரைக் கண்ணனே  உன்னையே கணவனென

வரித்தேன்.
அதனால் மாதவனே  சிங்கத்துக்குரிய  உன் உடமையான என்னை     சேதி நாட்டு இளவரசனான்   நரிக் குணம் கொண்ட சிசுபாலன்   பறித்துப் போகாமல்
நீதான் என்னைக் காக்கவேண்டும். இங்கு வந்து என் கரம் பற்றி அழைத்துச் செல்லவேண்டும் .
**********************************************
4,ஆதலால் புருஷோத்தமா,


நான் இதுவரைக் கடைப்பிடித்துவந்த விரதங்கள், ஏழை,களுக்குச் செய்த உதவிகள்,


சாதுக்களை    வணங்கிவந்ததும் அவர்களைப் போற்றியதும்,
,


மக்களுக்குச் செய்த சமூகத் தொண்டுகள்,
கிராமதேவதைகள்,
உலகைப் படைத்த இறைவன்  இவர்களுக்கு   உரிய பக்தியைச் செலுத்தியது உண்மை
என்றால்
  நீ வந்து என் கரம்   பற்ற வேண்டும்.
**********************************************
ஒருவராலும் வெற்றி கொள்ளமுடியாத    கோவிந்தா,

நான் வேண்டுவது இதுதான்.
திருமணத்துக்கு ஒரு நாள் முன்னாலயே
ரகசியமாக   விதர்ப தேசத்துக்கு வந்து  அத்தனை அரசர்களையும் போரிட்டுவென்று

என்னை மணம் புரியவேண்டும்.
*****************************************
எப்படி   பெண்கள், குழந்தைகள் இவர்களையெல்லாம் துன்புறுத்தாமல்
போர் புரிவது என்று நீ யோசித்தால் நான் ஒரு வழி சொல்கிறேன்.

. எங்கள் திருமண முறைப்படி  ஒரு மகா பெரிய சந்தையும் திருவிழாவும் நடக்கும்.

பாரம்பரியத்தை  ஒட்டி   மணமகள் ஸ்ரீ கௌரியைப்(கிரிஜா தேவி) பூஜிக்க  கோவிலுக்கு வரவேண்டும்..
**********************************
கிருஷ்ணா உன்னைச் சரணடைகிறேன்.
இந்த ஜன்மத்தில்   உன் பாததூளியை  ஸ்பரிசிக்கும் பேறு  கிடைக்கவில்லையெனில்,நான் மடிவேன். மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துத் தவம்   புரிந்து  உன்னை அடைவது நிச்சயம்.

அதற்கு அவசியம் இருக்காது . நீ வந்து என்னைக் காப்பாய்.

************************************************************

அப்புறம் நடந்ததுதான் நமக்குத் தெரியும்.
காதலியின் கடிதம் கண்டு   கண்ணனே கண்ணிர் விட்டானாம்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

29 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும் விளக்கங்களும் பதிவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ருக்மணி காதல் கடிதம் அருமை அம்மா...

வாழ்த்துக்கள்...

ஸ்ரீராம். said...

உயிரை எழுத்துகளாக்கி, காதலை வார்த்தைகளாக்கி ருக்கு கிச்சாவுக்கு எழுதிய கடிதம். அருமை.

sury siva said...

https://www.youtube.com/watch?v=_cTG1hbuJeE

இந்தக் காலத்து ருக்குவும் கிச்சனும்
உருகி எழுதும் காதல் கடிதம்
இதோ !!

அது சரி. !! அந்தப்போட்டிக்கு நீங்கள் ப்ராக்டீஸ் செய்கிறீர்களா என்ன?

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

Geetha Sambasivam said...

அருமையான பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய கடிதம். அந்த ருக்மிணி கல்யாணப் படம் அழகோ அழகு! சுட்டுக்கறேன். :))))))

Ranjani Narayanan said...

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமி இந்த இடத்தை சொல்வதைக் கேட்க ஆயிரம் செவிகள் போதாது.
மனம் பதைபதைக்க கோவிலுக்குச் செல்லுகிறாள் ருக்மிணி. 'வருவானா? வருவானா?' உடலும் உள்ளமும் விம்முகிற சமயத்தில் சங்கொலி கேட்கிறது.அதைவிட இனிமையான சங்கீதம் வேறு உண்டா?
அம்மாடி வந்துவிட்டான்!

அந்தக் காலத்திலேயே விரும்பியவனுக்கு மடல் எழுதியவள் ஆயிற்றே ருக்மிணி!

அருமையான 922 வது பதிப்பிற்கு வாழ்த்துகள்!

ADHI VENKAT said...

ருக்மணியின் காதல் கடிதம் அழகோ அழகு.

922வது பதிவுக்கு வாழ்த்துகள் அம்மா.

அப்பாதுரை said...

beautiful!
போரில் அழிவேற்படாமல் எப்படி வெற்றி பெறுவது என்று சொல்லி வேறே கொடுத்திருக்கிறாரே கடிதத்தில்!

படங்கள் பிரமாதம்.

பதிவைப் படிக்கும் பொழுது கீதா அவர்களின் கண்ணனுக்காக நினைவுக்கு வந்தது.

(ருக்கு கிச்சாவுக்கா - ஸ்ரீராம், ஏங்க இப்படி?)

அப்பாதுரை said...

படங்கள் ஏதாவது புத்தகத்திலிருந்து எடுத்தீர்களா? என்ன புத்தகம் சொல்லுங்களேன்?

Kavinaya said...

அச்சோ... எப்படி அம்மா! நானும் இதேதான் (இதே என்றால் இதே இல்லை, ஆனால் ருக்மிணியின் கடிதம் பற்றி) கண்ணன் பாட்டில் நேற்று இட்டேன்!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபு சார்.மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன். நான் அவளுடைய உணர்ச்சிகளைச் சரியாக மொழிபெயர்க்கவில்லை. இதெல்லாம் பாடி ஆடிக் கேட்டுப் புரிந்துகொள்ளவேண்டும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம்,உங்க பாடு ஜாலி. எல்லாக் கடிதங்களையும் படித்தால் போதும். உண்மையாகக் காதலித்தவர்களின் கடித நன்றாக இருக்கும்.எனக்கு ஓரிரண்டு பேரைத் தெரியும் அவர்கள் நடுவர்களாகிவிட்டர்கள்:)
கிச்சா ருக்குப் பிரேமைக்கு அளவேது.!!!

வல்லிசிம்ஹன் said...

பயிற்சி எடுக்கலை சுப்பு சார்.
காதல் கடிதம் எழுதுவது கரும்பைக் கடித்து ருசிப்பதாக இருக்கணும்.
அந்த வேகம் இப்போது இல்லை.

யூ டியூப் லின்க் பார்க்கிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

கூகிள் படம்தானெப்பா கீதா.
நன்றாக சுடலாம்/
இதை பாலகிருஷ்ண சாஸ்திரிகள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அவர் கிருஷ்ணா கிருஷ்ணான்னு சொல்லும்போது அப்படியே அந்தக் காலத்துப் போய்விடலாமா என்று தோணும்.தெய்வங்கள் திருமணம் அழகாகவே இருக்கும்.இன்னும் படங்கள் நிறைய இருந்தன.

வல்லிசிம்ஹன் said...

ரஞ்சனி நீங்கள் எழுதி இருக்கும் விதமே அழகு.
படங்களிலும் பார்த்திருக்கிறேன்.நமக்கே படபடப்பாக இருக்கும்.எங்கள் மாமியார்
,குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது.''ருக்மணி ,கௌரி தேவி கண்ணனைக் காணலியேனு உருகும் போது அசுர வேகத்தில குதிரைகள் வர சத்தம் கேட்டுதா!!
உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
ருக்மிணி பூஜத்தட்டோட கோவில் வாசலுக்கு வந்தாளா

உம்ம்ம்ம்ம்!!!
அங்கே கண்ணன் ஜகஜ்ஜோதியா நிக்கறான்.
ஓஓஓஓஓஓ!
வா ருக்மிணி போகலாம்னு வலக்கரத்தை நீட்டினானாம்.

அவ்ளோதான். கண்ணனைப் பார்த்தபடியே அவனோட கையைப் பிடித்துக் கொண்டுத் தேரில ஏறிட்டாளாம்.!
ஓஓ!
அப்டியே தேர் ஓடியே போயிடுத்தாம்.:)கல்யாண்மும் ஆகிட்டதாம்.
நன்றி ரஞ்சனி.

வல்லிசிம்ஹன் said...

எனக்கே கணக்கு வைத்துக் கொள்ளத்தான் அந்த நம்பர்.:)
என் மறதிதான் உலகப் பிரசித்தமாகிவிட்டது ஆதி. எப்படி இருக்கிறீர்கள் மா.வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

துரை, ஸ்ரீராம் செல்லமாக அவர்களைக் கூப்பிடுகிறார்.

நெருக்கம் அதிகம் .
படங்கள் உள்ள புத்தகங்கள் பழைய புத்தகங்களோடு வீட்டைவிட்டுப் போய்விட்டன.
இந்தப் படங்கள் கூகிள் கொடுத்தது.
ஆமாம் கண்ணன்னு சொன்னதும் கீதா நினைவு வருவது சகஜம்தானே!!!

வல்லிசிம்ஹன் said...

ஆஹா. நிஜமாவா.படிக்கணுமே.நன்றி மீனா.
ஒரே மாதிரி நினைத்திருக்கிறோம்!!!

அப்பாதுரை said...

//காதல் கடிதம் எழுதுவது கரும்பைக் கடித்து ருசிப்பதாக இருக்கணும்

அற்புதம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ''இது ஒரு வகை.
கண்டபோது பேச்சு. காணாதபோது கடிதம்.நானும் சிங்கமும் தபால் இலாகாவுக்கு நிறைய பணம் ஈட்டித் தந்திருக்கிறோம்:)

சாந்தி மாரியப்பன் said...

அருமை வல்லிம்மா..

இதை விடச் சிறந்த கடிதம் இருக்க முடியுமோ??

வல்லிசிம்ஹன் said...

கணவனாக வரித்த காதலனிடம் வேறு எப்படி எழுதுவது!!!!!எனக்கு, மொழிபெயர்க்கும்போது சரியாகச் செய்யவில்லையோ
என்று சங்கடம் வந்தது.
ஆனால் அவளோ மஹா பக்தையும்
கிருஷ்ணானிடம் சரண் அடைந்தவள்.
அவ்வளவு காதல் நிலமை நமக்கு வாய்ப்பது அரிதில்லையம்மா சாரல்.

இராஜராஜேஸ்வரி said...

அழகான கடிதத்திற்குக்கைமேல்
பலன் ..!

அப்பாதுரை said...

ருக்மிணி கல்யாணத்துல புரோகிதர் யாரு? பிரம்மனா?

வல்லிசிம்ஹன் said...

துரை,பிரம்மனான்னு எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்த வரையில் கண்ணன் ருக்மிணியை சாஸ்திரப் பிரகாரம் அந்தணர்களை வைத்துக் கொண்டு
திருமணம் செய்துகொண்டான்னு தெரியும்:)
பிரம்ம படத்தை எடுத்துவிட்டு வேற படம் போட்டுவிட்டேன்.
கீதா சரியாகச் சொல்லுவார்.

மாதேவி said...

ருக்மணியின் காதல் கடிதம் அருமை.தெய்வீக காதல்.
படங்களும் அழகு.

கோமதி அரசு said...

ருக்மணியின் காதல் கடிதம் அருமை.
படங்கள் அழகு.

கோமதி அரசு said...
This comment has been removed by a blog administrator.