Blog Archive
Monday, June 24, 2013
Saturday, June 22, 2013
பௌர்ணமிக்கு இளையநிலா
Add caption |
Add caption |
Add caption |
Add caption |
நாளை இந்தவேளை பார்த்து ஓடி வாநிலா |
காலையிலிருந்து தெறித்த உஷ்ணம்,
ஆவி கலந்த மேகங்களை மேலே அனுப்பி
நிலவை மூடப் பார்த்தது.
நிலவுக்கோ பூமியைப் பார்க்கும் ஆவல்.
கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே வந்தே விட்டது.
நாளை பூரண நிலவாகவரவேண்டுமே.அதற்கு ஒரு முன்னோட்டம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Friday, June 21, 2013
இயற்கை அன்னை சீறிவிட்டாள்.
அமைதியான மந்தாகினி |
சமோலி கிராமம் |
பொங்கின மந்தாகினி |
Add caption |
நன்றி ராணுவ நண்பா! |
இடம் சமோலி.நதியைக் கடக்கமுயலும் யாத்ரிகர்கள் |
கேதார்நாத் கோவில் . |
இப்போது |
கடந்த வாரத்திலிருந்து கேட்டு வரும் இந்த அழிவு செய்திகள்உக்குக் கணக்கில்லை.
முன் கூட்டியே வந்து விட்ட பருவமழை.
மலையின் உச்சியிலிருந்து உருகி மந்தாகினிநதியில்
விழுந்து பெரிய வெள்ளம் பெருக.
அது கீழ்நோக்கிப் பாயச் சென்ற வழியெல்லாம் இருந்த சகலமும் கட்டிடங்கள் ,வண்டிகள்,விடுதிகள், மக்கள் எல்லாம் நதியில் சங்கமம்.
நதி பாகீரதி நதியில் கலந்து,யமுனையில் வெள்ளமாகி டெல்லி வரை மட்டம்
உயர்ந்து கொண்டே சென்றிருக்கிறது.இரண்டு நாட்களாகத் தான் வடிய ஆரம்பித்திருக்கிறது.
இன்னும் ஒரு வருடத்துக்கு யாருமே யாத்திரை
போகமுடியாத அளவு சூழ்நிலை சிதறிக் கிடக்கிறது.
தொலைக்காட்சியில் கண்ணீர் வெள்ளம்,தண்ணீர் வெள்ளம்.
யார் எங்கே போனார்கள்.இருக்கிறார்களா இல்லையா.
ஆயிரக்கணக்கில் உயிர் இழந்திருப்பார்கள் என்று மெதுமெதுவாகச் செய்தி வருகிறது.
ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உதவி அடைந்த சிலர்
தப்பிப் பிழைத்து வந்திருக்கிறார்கள்.
இன்னும் தண்ணீரும் உணவும் கிடைக்காமல் குளிரிலும் அவஸ்தைப் பட்டுக் கொண்டு வயது முதிர்ந்தவர்கள் ,நோயாளிகள்,குழந்தைகள் என்று அனேக
மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் வானிகை அறிக்கையை மக்கள் சரியாகக் கேட்டுக் கொண்டு அதற்கேற்றபடி உஷார்ப் படுத்திக் கொள்ளவில்லையாம்.
இது அரசுதரப்பு நீதி.
ஏற்கனவே பயணம் மேற்கொண்டு மலை உச்சி வரை சென்றுவிட்டவர்களுக்கும் செய்தி போய்ச் சேர்ந்திருக்குமா,நடுவழியில் மேலேயும் போகமுடியாமல் கீழேயும் வரமுடியாமல் எந்த வானிலைச் செய்தியைக் கேட்டிருப்பார்களோ.
எல்லாவற்றிர்க்கும் முதல் காரணம்,
புது இருப்பிடங்கள்,விடுதிகள்,சிறிய கடைகள்,வாசஸ்தலங்கள்
இவகள் கட்டுவதற்காக70 வருடங்களாக
மரங்களையும் வெட்டி,
நதிகளின் குறுக்கே மின் திட்டங்களுக்காகக் கட்டப்பட்ட அணைகளும், நதிகளை அவைகளின் போக்கில் விடாமல் அவற்றைத் தடுத்து வேறுவழி பாயவைத்ததும் தான் என்கிறார்கள்.
இவ்வளவு பெரிய அழிவுகள் சுனாமியைத் தான் நினைவு படித்தின.
இந்த நிகழு மற்ற மலைகளையாவது காக்குமா.
இனியாவது நிலத்திலும் நதியிலும் தவறான எண்ணங்களோடு
கைவைப்பவர்களின் கட்டிப்போட சட்டம் வருமா.
சந்தேகம்தான்.
பணம்தானே வேண்டும் எல்லோருக்கும்.
இறக்கப் போவது அவர்கள் இல்லையே.
அங்கே இன்னும் தவிக்கும் மக்கள் நலம் பெற்று வீடு திரும்பவேண்டும்.
நாம் இறைவனைப் பிரார்த்திப்போம்.
இயற்கை ச் சக்திதானே இறைவனின் சக்தி அந்த அன்னையே அனைவரையும் காப்பாற்ற வேண்டும்..காப்பாற்றுவாள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Saturday, June 15, 2013
ஸ்ரீ கிருஷ்ணனுக்கு செல்வி ருக்மணி எழுதிய தூதுக் கடிதம் 922 ஆம் பதிவு
Add caption |
ருக்மிணி கல்யாணம் |
Add caption |
எவராலும் வெல்லமுடியாத உலகத்தின் மிக அழகான வீரனான
கிருஷ்ணா உன் பெருமைகளைக் செவி வழியாகக் கேட்டு
,
என் கண்கள் உன் கம்பீர உருவத்தைக் காணவே காத்திருக்கின்றன.
உன் நற்
குணங்களும் மனதிலும் நெஞ்சிலும் நிறைந்ததால் உன்னையே
என் கணவனாக வரித்தேன்
************************************
2,ஹே முகுந்தா,
சிங்கங்களின் தலைவனே, உன்னுடைய புகழ், பரம்பரை, உன் ஆனந்தமய குணம், உலகம் முழுவதும் பரந்திருக்கும் மக்களின் ஆனந்தத்திருக்கும் காரணமானவன்,
அன்பு மயமானவன், எந்த வகையிலும் யாருக்கும் நிகரில்லாதவன்
வீரம்,இயற்கையாக அமைந்த தயாளகுணம், கண்களைநிறைக்கும் அழகு
இவைகளைக் கேட்டறிந்த எந்தப் பெண்தான் உன்னைத் தனக்கேற்ற மணாளனாக வரிக்க மாட்டாள்?
************************************
3, அதனால் தான் ஹே தாமரைக் கண்ணனே உன்னையே கணவனென
வரித்தேன்.
அதனால் மாதவனே சிங்கத்துக்குரிய உன் உடமையான என்னை சேதி நாட்டு இளவரசனான் நரிக் குணம் கொண்ட சிசுபாலன் பறித்துப் போகாமல்
நீதான் என்னைக் காக்கவேண்டும். இங்கு வந்து என் கரம் பற்றி அழைத்துச் செல்லவேண்டும் .
**********************************************
4,ஆதலால் புருஷோத்தமா,
நான் இதுவரைக் கடைப்பிடித்துவந்த விரதங்கள், ஏழை,களுக்குச் செய்த உதவிகள்,
சாதுக்களை வணங்கிவந்ததும் அவர்களைப் போற்றியதும்,
,
மக்களுக்குச் செய்த சமூகத் தொண்டுகள்,
கிராமதேவதைகள்,
உலகைப் படைத்த இறைவன் இவர்களுக்கு உரிய பக்தியைச் செலுத்தியது உண்மை
என்றால்
நீ வந்து என் கரம் பற்ற வேண்டும்.
**********************************************
ஒருவராலும் வெற்றி கொள்ளமுடியாத கோவிந்தா,
நான் வேண்டுவது இதுதான்.
திருமணத்துக்கு ஒரு நாள் முன்னாலயே
ரகசியமாக விதர்ப தேசத்துக்கு வந்து அத்தனை அரசர்களையும் போரிட்டுவென்று
என்னை மணம் புரியவேண்டும்.
*****************************************
எப்படி பெண்கள், குழந்தைகள் இவர்களையெல்லாம் துன்புறுத்தாமல்
போர் புரிவது என்று நீ யோசித்தால் நான் ஒரு வழி சொல்கிறேன்.
. எங்கள் திருமண முறைப்படி ஒரு மகா பெரிய சந்தையும் திருவிழாவும் நடக்கும்.
பாரம்பரியத்தை ஒட்டி மணமகள் ஸ்ரீ கௌரியைப்(கிரிஜா தேவி) பூஜிக்க கோவிலுக்கு வரவேண்டும்..
**********************************
கிருஷ்ணா உன்னைச் சரணடைகிறேன்.
இந்த ஜன்மத்தில் உன் பாததூளியை ஸ்பரிசிக்கும் பேறு கிடைக்கவில்லையெனில்,நான் மடிவேன். மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்துத் தவம் புரிந்து உன்னை அடைவது நிச்சயம்.
அதற்கு அவசியம் இருக்காது . நீ வந்து என்னைக் காப்பாய்.
************************************************************
அப்புறம் நடந்ததுதான் நமக்குத் தெரியும்.
காதலியின் கடிதம் கண்டு கண்ணனே கண்ணிர் விட்டானாம்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Thursday, June 13, 2013
விடுமுறைக் காலங்கள்
உனக்கும் வெகேஷனா |
Add caption |
என் விடுமுறைக்காலங்கள் வரும் எனக்கணக்கிட்டு வாழ்ந்த காலம்
போய்,
பேரன் பேத்திகளுக்கெல்லாம் விடுமுறை ஆரம்பித்துவிட்டது.
நீர்நிலைகளைத் தேடி வரும் பறவைகளாக
வரப்போகிறார்கள்.
கடவுளின் வரம் 4 வாரங்களுக்குக் கிடைக்கப் போகிறது.
அப்பாவோட இருக்கும்போது பதிவெழுத வாய்ப்பு இருக்கும். அம்மாவும் பிள்ளைகளுமா வரும்போது கணினி பக்கம் வந்தால் என்னைவிட
மோசமான பாட்டி இருக்கமுடியாது:)
பார்க்கலாம். என்னஎன்ன அனுபவங்கள் காத்திருக்கின்றன என்று!!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Wednesday, June 12, 2013
காதலுக்கு வயது உண்டா?
நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க! |
பலவண்ணங்கள் நிறைந்த பூங்கொத்து தான் காதல் |
மேலும் காதல் பற்றிச் சொல்ல விஷயங்கள் கிடைத்தன.
அதே திண்டுக்கலில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்துவீட்டில் இருந்த ஜில்லு.
என் பள்ளியில் படிப்பவள். 13 வயது குட்டிப் பொண்ணு.
அவர்கள் அப்பா ஆடிட்டர்.. கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜில்லுவுக்கு மாலினி அக்கா.
உப்பிலி தம்பி.
உப்பிலி,என் தம்பிகள் எல்லோரும் புனித மேரி பள்ளிக்குப் போகிறவர்கள்.
நாங்கள் மூவரும் புனித சூசையப்பர் பள்ளிக்குப் போகிறவர்கள்.
எட்டேமுக்கால் பள்ளிமணி அடிப்பதற்குள் சென்றுவிடும் வேகம் எனக்கு.
இந்த ஜில்லு மட்டும் தங்கி த் தங்கி வருவாள். ''சரியான
குண்டு!சீக்கிரம் வாயேன் 'என்று மாலி கத்துவாள்.
அக்கா இந்த பூவைப் பாரேன். அந்தத் தட்டாம்பூச்சியைப் பாரேன் என்று சொல்லிவருவாள் தங்கை.
'காண வந்த காட்சி என்ன வெள்ளை நிலவே' என்ற பாட்டை விசிலடித்தபடி
எங்களைத் தாண்டிச் சென்றான் ஒரு பையன்.
எனக்கு அந்தப் பாட்டு பிடிக்கும்.
ஹை நல்லா விசிலடிக்கிறான் இல்ல மாலி?
என்று நான் திரும்பி மாலியைப் பார்த்தால் அவள் முகத்தில் கோபம்.
என்னப்பா விஷயம்.
ஏன் கோவிச்சுக்கறே. அவன் அடுத்த தெருவில் இருக்கும்
சுப்பு தானே. ஏன் கோவம்?
பின்னாடி பாரு என்று பல்லைக் கடித்தாள்.
பின்னால் பார்த்தவள் அதிர்ந்து போனேன்,.
ஜில்லு மும்முரமாக எதையோ படித்துக் கொண்டிருக்கிறாள்.
ஏதாவது டெஸ்டாக இருக்கும்.
' அசடே பாதையில் படிக்கும் அளவு அவளுக்கு
படிப்பில் சுவாரஸ்யம் இல்லை. இது வேற.
அம்மாகிட்டச் சொல்லி வேட்டு வைக்கிறேன் பாரு'' என்று
சொல்லிவிட்டு
ஜில்லு நீ அப்புறமா வா. நாங்கள் போகிறோம்.
என்று ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தாள்.
நானும் அவளைத் தொடர்ந்தேன்.ஜில்லு மணி அடித்த பின்தான் வந்தாள்.
பெரிய ஸிஸ்டர் கண்ணிலும் பட்டாள்.
முழங்காலும் போட்டாள்.
பாட்டெல்லாம் முடிந்து நாங்கள் வகுப்பறைகளுக்குப்
போகும்போது பெரிய ஸிஸ்டர் அவளுக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
நாங்கள் ஒன்பதாம் வகுப்பு பக்கம் போக,
அவள் எட்டாம் வகுப்பிற்குத் திரும்பினாள்.
முகத்தில் துளி வருத்தம் இல்லை.
இரண்டு நாட்கள் மௌனமாகக் கழிந்தன.
சனிக்கிழமை பாதி நாள் பள்ளி..
மாலினி பள்ளிக்கு வரவில்லை. ஜில்லு என்னுடந்தான் திரும்பி வரவேண்டும் என்று அவள் அம்மாவின் ஆர்டர்.
கடுகடு என்ற முகத்தோடு என்னுடன் நடந்துவந்தாள்.
என்னதான் ஆச்சு.
சுப்பு என்ன லெட்டர் கொடுத்தான். உனக்கென்ன கோபம்?
என்று அடுக்கடுக்காக நான் அவளைக் கேட்டதும்
அவள் உதடுகள் பிதுங்கி அழும் நிலைக்கு வந்தாள்.
ஏய் அழாதே. ரோடில நாலு பேர் பார்க்கப் போகிறார்கள்.
எனக்குக் கோபமா வரது.
யார் மேல
. எல்லாம் இந்த அம்மா மேலதான்.
விளக்கமாச் சொல்லேன்.
சுப்பு எவ்வளோ நல்லவன் தெரியுமா. எனக்கு பாடனி
படமெல்லாம் வரைந்து கொடுத்தான்.
இந்த உப்பிலி மாட்டேன்னுட்டான்.
அப்பதான் சுப்பு வந்தான். உனக்கு உதவி செய்கிறேன் என்று ரிகார்ட் நோட்டை வாங்கிப் போய் வரைந்து கொடுத்தான்.
சரின்னு இரண்டு மூணு தடவை ரோடில் பார்க்கும் போது
சிரிப்பேன்.
எனக்கு அவனை ரொம்பப் பிடித்திருக்கு.
பெரியவளானதும் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.
உனக்குப் பதிமூணு வயசுதான் ஆகிறது .
அதனால் என்ன மாயாபஜார் படத்தில் ஜெமினி சாவித்ரி ரெண்டு பேரும் சின்னவர்கள்.தான்!(??????????????/)
அபிமன்யு வத்சலாவாகக் கல்யாணம் பண்ணிக்கலையா.
பாட்டனி வரைந்து கொடுத்தால் காதல் வருமா?
போ! நீ சரியான அசடு என்று சிடுசிடுத்தாள்.
சுப்பு ஸ்மார்ட். எப்படி ட்ரஸ் பண்ணிக்கறான் பாரு.
அன்னைல வர ராஜா மாதிரி இருக்கான்.
அதுக்காக நீ 'ஓ பக்கும் பக்கும்'' பாடப் போறியாக்கும்?
நான் ஏன் பாடணும். கடிதம் எழுதிக் கொடுக்கப் போகிறேன்.
எனக்கு வந்த அதிர்ச்சியில் விழாமல் இருந்தேனே!
என்னது லெட்டரா??
ஆமாம். நான் சொன்னாத்தானே அவனும் புரிஞ்சுப்பான்.
நீ இப்ப ப்ராமிஸ் பண்ணு. இதை அம்மா கிட்டச் சொல்ல மாட்டேன்னு.
நோ நோ. நான் அதெல்லாம் ப்ராமிஸ் பண்ணமாட்டேன். நீ அவசரக் குடுக்கை ஜில்லு.
இப்படி எல்லாம் செய்யாதே . தப்புமா.
ஏன் கத்தறே. நான் என்னவோ நாளைக்கே மலைக்கோட்டையில் அவனைப் பார்க்கப் போகிற மாதிரி நினைச்சுட்டியா.
ஓ அப்படியெல்லாம் வேற ப்ளான் இருக்கா.
இப்போதைக்கு இல்ல. இருக்கலாம். என்றாள் .!
எனக்கு ஒரே படபடப்பாக இருந்தது.
எப்போடா வீடுவரும்னு என் வீட்டுக்குள் போய்விட்டேன்.
அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.
அம்மாவுக்கு என் மேல்தான் கோபம் வந்தது.
அத்துனூண்டு பொண்ணுக்குப் பதில் சொல்ல உனக்குத் தெரியலையா.
சரி மேல பேசாதே இனிமே பெரியவனை உன்னைப் பள்ளியில் விட்டுவிட்டுப் போகச் சொல்கிறேன்.
கண்ட வம்பில மாட்டினால் தெரியும் சேதி என்று வார்னிங் கொடுத்தாள்.
என்னவோ நான் தான் காதல்கடிதம் கொடுக்கப் போவதாகப் பயம்.
இரவெல்லாம் எனக்குத் தூக்கம் இல்லை.
ஜில்லு என்ன பண்ணப் போகிறதோ தெரியவில்லையே........
அடுத்தநாள் எப்போதும் போல மூவரும் கிளம்பினோம்.
நீ,அந்தக் கழுதையோட பேசாதே. தானே வரட்டும்.
நேத்து ராத்திரி அவ என்ன பண்ணினாள் தெரியுமா
ஏதோ ஹோம்வொர்க் செய்யறான்னு நினைத்தால்
நிச்சயதாம்பூலத்தில் வருமே 'மாலை சூடும் மணநாள்' அதைப் பாடிக்கொண்டு என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள்.
நான் மெதுவா எட்டிப் பார்த்த்தால் கவிழ்ந்து படுத்துக் கொண்டு மறைக்கிறாள்.
என்னன்னு சொல்லப் போறீயா,அம்மாவைக் கூப்பிடட்டுமானு
மிரட்டினேன்.
மெதுவாக அவள் எழுதி இருந்ததைக் காண்பித்தாள்.
இதோ பாரு. சரியான பைத்தியம்!!
அன்புள்ள சுப்பு,
எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கு.
உன்னோடு ,பார்க் எல்லாம் போய்ப் பேச ஆசையாக இருக்கு.
நீ சொன்ன மாதிரி மலைக்கோட்டைல கூடப் பேசலாம்.
ஆனால் எனக்குத் தனியா ஒரு இடம் போய் வந்து பழக்கம் இல்லை.
அதனால நாம் எல்லோருமா சேர்ந்து பெரிய இடத்துப் பெண்
பார்க்கப் போகலாமா.
நான் இன்னும் நன்றாகப் படிக்கணுமாம். அப்பா சொன்னார்.
மெட்ராஸ்ல மாமாவீட்டில போய் கூடப் படிக்கலாமாம்.
அங்கே ஹிந்தி சினிமா கூடப் பார்க்கலாம். நாடகமெல்லாம் பார்க்கலாம்.
இந்த ஊர்ல பழைய படங்கள் தானே வரது.
அதனால் நான் இந்த வருஷம் அங்கே போகப் போகிறேன்.
நீயும் நன்றாகப் படி.
பிறகு பார்க்கலாம்.
இப்படிக்கு
ஜில்லு.
:))))))))))))))))))))))))))))))))))))))))))))))))0
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Monday, June 10, 2013
அன்புள்ள அத்தான்..... வணக்கம்!
எங்களுக்கெல்லாம் வழிகாட்டி:) |
சொல்லித்தருகிறார் கடிதம் எழுத |
தோழி எழுத வந்த காதல் கடிதம்
+++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறையில் கடிதம் எழுத முடியாது. நினைத்தாலே அப்பாவின் முகம் வந்து பயமுறுத்தும்.
முதலில் கனகாவைச் சம்மதிக்கவைக்கணும்.கணவன்
பெயர் சொல்லவே சிவக்கிறவள் கடிதம்
எழுதவா முன் வருவாள்.?
வி ஆர் செவன் குழு நினைத்தால் சாதிக்கமுடியாதா என்ன.
அப்போது வந்தது டிசம்பர் விடுமுறைகள்.
டிசம்பர் 12ஆம் தேதி மூடிவிடுவார்கள். பிறகு
21 நாட்கள் அ வி க தான்.
நிச்சயம் படிக்க வேண்டும் .நடுவில் கண்காட்சி போகலாம். சினிமா
இரண்டும் உண்டு.சினிமாவுக்கும் அப்பா அம்மா உண்டு.
கண்காட்சிக்கும் உண்டு.
அப்போது செண்ட்ரல் என்று தியேட்டர் பஜாரில் இருக்கும்.
அங்கே கைராசி என்ற படம் ஓடிக் கொண்டிருந்தது.
எனக்கோ ஒரே தவிப்பு அந்தப் படத்தைப் பார்க்க.
அப்பாவிடம் அனுமதி எதிர்பார்க்க முடியாது.
இதற்கு நடுவில் எங்கள் மெட்ராஸ் அத்தை வீட்டுக்கு வந்திருந்தார்.
என்னுடன் கோவிலுக்கு வந்தார். அழகான தாவணி பாவாடை வாங்கிக் கொடுத்தார்.
நான் எதிர்பார்க்காதது அவர் கேட்ட அடுத்த கேள்வி.
'உன் எதிர்காலத் திட்டங்கள் என்னனு யோசித்தியா.
கல்யாணமா கல்லூரியா:)
இன்னும் ஒரு வருஷம் ஸ்கூல் இருக்கே அத்தை. திண்டுக்கல்லில் கல்லூரி இல்லை. அப்பா என்னசொல்கிறாரோ அதைச் செய்யலாம் என்று நல்ல பெண்ணாகப் பதில் சொன்னேன்.
அத்தை சிரித்துவிட்டார்.
நீ பயப்படாதே அப்பாவிடம் கேட்க மாட்டேன். நீ நன்றாகப் படிக்கணும்.
அப்புறம் தான் திருமணம்.
அதுதான் சாக்கு என்று அத்தையைக் கேட்டேன். அத்தை, எங்க வகுப்பில
ஒரு கல்யாணமான பொண்ணு இருக்கு.
அதுக்குத் தன் கணவனுக்குக் கடிதம் எழுத ஆசை.
இங்க கைராசினு ஒரு படம் நடக்கிறது.அதுல கூட கடிதம் எழுதுகிற மாதிரி பாட்டு வரது.
அதுக்கு அவளை அழைத்துக் கொண்டுபோகலாம்னு ஆசையாக இருக்கு. நீங்கதான் ஹெல்ப் செய்யணும்னு சொன்னதும்
அத்தை விழித்தார்.
நீங்களே போகவேண்டியதுதானே என்றார்.
அப்பா விடமாட்டார். நீங்க வந்தால் விடுவார் என்றதும் சரின்னு
சொல்லிவிட்டார்.
ஐய்யொ அன்று நான் பட்ட சந்தோஷம்!!!
அத்தையைவிட்டுவிட்டு, எங்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருந்த
உஷா வீட்டுக்குப் போனேன்
அவர்கள் வீட்டில் தொலைபேசி இருந்தது. இன்னோரு பெண் பவானி என்பவள் வீட்டிலும் இருந்தது.
பவானி வீட்டுக்குப் பக்கத்துவீட்டுக்கு கனகா வந்திருந்தாள் விடுமுறைக்கு.
பறந்தது பவானிக்கு ஃபோன்.
அவள் பயந்து கொண்டே பேசினாள்.
சினிமா என்றதும் உற்சாகத்துக்குத் தாவினாள். யாரெல்லாம் பா?
நீ முதலில் கனகாவைக் கூப்பிடு.அவளுடன் பேசணும்.அவளையும் அழைத்துப் போகணும்'என்றோம்.
அவளோட அத்தான் வந்திருக்கிறாரே.எப்படி அவளைக் கூப்பிடுவது?
அச்சோ. இப்ப என்ன செய்வது.
அவர் சாயந்திரம் போய்விடுவார்.அப்புறம் வேணா அவளை அழைத்து வருகிறேன்.என்றாள்.
திண்டுக்கல் சிறிய ஊர்தான். கோட்டை மாரியம்மன் கோவிலருகில் பவானிவீடு.அடுத்த நாள் சந்திப்பதாக ஏற்பாடு.
கனகாவும் வந்தாள்.என்ன கடிதம் எழுதறியா.இல்லை கைராசிபடம் பார்த்தபிறகு எழுதறியா என்று கேட்டால். தலையோட கால் நடுக்கம்
காண்பிக்கிறாள்.
அத்தைக்குத் தெரிந்தால் வம்பாகிடும்.
ஏன் இன்னும் நீங்கள் பழக ஆரம்பிக்கலையா. டூயட் பாடி வெளில போயி ஒண்ணும் இல்லையா?
இல்லை அதெல்லாம் அவர் படித்து முடித்த பிறகு அடுத்த சித்திரையில் தான்.!
எங்கள் ஏழில் ஐந்து பேருக்கு இந்த அர்த்தம் புரியாத மண்டூகங்கள். ஞே'னு முழித்தோம்.
இல்ல.....இழுத்தாள்.கையில் இருந்த பையில் இருந்து ஒரு எண்பது பக்க நோட்டுப் புத்தகம்.
என்னது இது?
பாட்டுப் புத்தகங்களிலிருந்து எடுத்த வரிகள்.
?????????????????????????????????????????????????/
படிக்க ஆரம்பித்தோம்.எல்லாம் அதுவரை வந்த படங்களிலிருந்து எடுத்த பாடல்கள்
அத்தான் என் அத்தான்''இருந்து ஆரம்பித்து
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்
யாருக்கு மாப்பிள்ளையாரோ அவர் வந்து வந்து போய்விடுவாரோ(!)
புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போகிறவரே
தேரேறி வருவாரென்று திருவீதி வலம் வந்தாள்
தேர் கண்டாள் தேரே கண்டாள் சிலை அதிலே இலையே ராஜா
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ
தேக்குமரம் உடலைத் தந்தது
சின்னயானை நடையைத் தந்தது
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணம் போலே உள்ளம் பந்தாடுதே.
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தான்(!)
இப்படிப் போனது நீண்ட பாட்டுப் பட்டியல்
கடைசில அன்புள்ள அத்தான் வணக்கம்.
திருமணம் ஆன பின்னும் ஏன் குழப்பம்.
என்று முடித்திருந்தாளே பார்க்கலாம்.!!
எனக்கு மூச்சே வரவில்லை.
இவளுக்குக் கற்பனை நிறையவே இருக்கு.
கைராசியாவது கால்ராசியாவது
ஆமாம் இதை என்ன பண்ணப் போகிறே என்று கேட்டோம்.
அடுத்த தடவை அவர் வரும்போது நிறைய பூக்கள் வரைந்து
வண்ண அட்டை போட்டு யாருக்கும் தெரியாமல் அவரிடம் கொடுத்துவிடுவேன் என்றாள்.
எங்களுக்கு வேலையே வைக்கவில்லை.
அதானே அவள் காதல் கணவனுக்கு அவளே
தூது போய்க் கொண்டாள்.
நாங்கள் என்ன எழுதி இருப்போம்.
முன்னபின்ன காதலித்து இருந்தால் தெரியும்:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
காதல் கடிதம் எப்படி எழுதலாம்..1
பதின்மவயதுகளில் ஏற்படும் மாற்றம்...... உலகமே அழகாக இருப்பது போலவும்
நாமே இன்னும் வனப்பு கூடியது போலவும்
தோழிகள் சொல்லும் பேச்சுகளெல்லாம் இன்பம் தருவதாகவும்
பெற்றோர் சொல்லும் புத்திமதிகள் மட்டும் கொஞ்சம் கசப்பதாகவும் தோன்றும் காலம்.
எதற்காக அலங்காரம்? எனக்குப் பிடிக்கிறது. நான் நன்றாகத் தோற்றம் அளிக்கவேண்டும்.
சிறகில்லாத பட்டாம்பூச்சியாகப் பாதையில் பள்ளி நோக்கிப் பறக்கவேண்டும்.
கூடவரும் தோழிகளிடம் சன்னமொழியில் அன்றைய செய்திகளைப்
பரிமாறிக் கொண்டு போகும் காலம்.
அந்தவருடம் பத்தாம்வகுப்பில் திருமணமான பெண் பள்ளியில் சேர்ந்தாள்.
தினம் பள்ளிக்குப் புடவையில் தான் வருவாள். பள்ளி வந்ததும்
சீருடை அணிந்து கொள்ள அனுமதிக்கப் படுவாள்.
பக்கத்துக் கிராமம் பட்டிவீரன்பட்டியோ இல்லை தாடிக்கொம்போ,(தனபாலனைக் கேட்டால் தெரியும்) அங்கிருந்து அவர்கள் வீட்டு வில்வண்டியில் அவளுடைய அம்மாவோடு வருவாள்.
அம்மா வண்டியில் சாப்பாடு கொண்டுவந்திருப்பார்.
மதிய சாப்பாடு வண்டிக்குள் தான்.
நாங்கள் ஒரே அதிசயமாகப் பார்ப்போம். அவள் பெயர் அழகாக இருக்கும் கனகமணி.
படிப்பில் சுட்டி. எங்களுடன் அவள் நெருங்க கொஞ்ச நாட்கள் ஆகின.
மாப்பிள்ளை பெயர் என்ன என்று கேட்டால் சொல்ல மாட்டாள். அவரு மதுரையில் படிக்கிறார் என்ற விஷயம் மட்டும் பெருமை முகம் முழுவதும்
தெரிய பூரிப்புடன் சொல்வாள்.
இவளுக்குப் பதினாறு(ஒருவருடம் பள்ளிக்குச் செல்லவில்லையாம்)
அவருக்கு இருபத்திரண்டாம்.
விடுமுறையின் போது வந்து பார்த்துவிட்டு அன்று சாயந்திரமே கிளம்பிவிடுவாராம்.
அவர் படிப்பு கெடக்கூடாது என்பதற்காக அவரது தந்தை செய்த ஏற்பாடு.
எங்களுக்கெல்லாம் கத படிப்பது போல ஒரு உற்சாகம். அவர் எப்படி இருப்பார் .
கறுப்பா சிவப்பா. உயரமா குள்ளமா .நல்லா பேசுவாரா. சினிமா பார்ப்பாரா. ஜெயகாந்தன் கதை படிப்பாரா.
ஒரே குறுகுறுப்பு. எங்களுக்கு:) அவரைப் பற்றிக் கேட்டாலெ அழகாகச் சிரிப்பாள். உங்களுக்கெல்லாம் எதுக்கு இந்த சேதி.
எங்க புருஷனைப் பத்திப் பேசமாட்டோம் என்று சொல்லிவிடுவாள்.
எங்களுக்கு அவளை சீண்டுவதில் மகா உற்சாகம்.
ஏம்ப்பா லெட்டர் போடுவாரா?
''ஆங்க் எப்பவாவது வரமுடியவில்லைன்னால் ஒரு வரில இந்த டெஸ்டுக்குப் படிக்கணும். வாத்தி ரொம்ப மிரட்டறாரு வரமுடியாதுன்னு வரும் என்று சொல்லும்போதே சோகம் கவியும் அவள் முகத்தில்.
நீ அவருக்கு எழுதுவியான்னு கேட்டால் மிரளுவாள்.
ஆத்தி. அதெல்லாம் செய்யக் கூடாதுன்னு அத்தை(மாமியார்) சொல்லி இருக்காங்க..
ஏய்கனகா! இந்த ஆத்தி எல்லாம் விட்டுடு.
அப்படி இல்லப்பானு சொல்லப் பழகிக்கோ என்று சொல்லிக் கொஞ்சம் கொஞ்சமாக அவளை மாற்றினோம். இரட்டை ஜடை போட வைத்தோம்.
ஜார்ஜெட் தாவணியும் வளையல்களும் லேஸ் வைத்த பாவாடைகளும் கட்டவைத்தோம்.
அவள் அம்மா கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் பழக ஆரம்பித்தார்.
ஏழுகஜப் புடவையும் கோடாலிமுடிச்சுக் கொண்டையும் நெற்றியில் நீண்ட கறுப்பு பச்சையும் குத்தி இருப்பார். காதில் தண்டட்டி போட்டிருப்பார்.
கண்ணுகளான்னு தன் எங்களை அழைப்பார்.
வண்டியை விட்டு வெளியே வரப் பழகிக் கொண்டார்.
எங்களில் முக்கால்வாசிப்பேர் சைவம் என்பதால்
அருமையாக இட்லி செய்து ஏதோ சட்டினியும் வைப்பார்.
எங்கள் சாப்பாடெல்லாம் கலந்த சாதமும் ஏதாவது ஊறுகாயும் இருக்கும்.
அந்த இரண்டு இட்லிக்கே நாங்கள் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.
நாங்கள் ஏழு தோழிகள். தங்கலக்ஷ்மி, சூசைமேரி,மெஹருன்னிசா,சீதா,சாந்தி,உஷாகிருஷ்ணன்,நான்.!!!
பாவம் அந்த அம்மா. எவ்வளவு பாசம்.!
அடுத்த பதிவில் கடிதம்:0)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Friday, June 07, 2013
மறதி நல்லதா...கெட்டதா.
மறதி. நினைவில்லாமை(பெரிய ஆமை)
இதில் பரிசு பெறும் ரேஞ்சிற்கு பல நபர்களை எனக்குத் தெரியும்.
என்னையும் சேர்த்துச் சொல்கிறேன்.:)
வியாதியின் அறிகுறிகள்.
தலையில் மூக்குக் கண்ணாடியை வைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றுவது.
வீட்டின் பின்கதவைச் சாத்திவிட்டுத் தாழ்ப்பாள் போட மறந்து, போட்டுவிட்டதாகச் சாதிப்பது.
பத்துவயதில் பார்த்தவர்களைப் பசுமையாக நினைவில் வைத்திருப்பது.
பத்துவருடங்களுக்கு முன் பார்த்தவர்களை மறப்பது.
தெருவிலோ,சூப்பர் மார்க்கெட்டிலோ திடிரென்று யாரையாவது பார்த்துப் புன்னகை பூப்பது.
அவர்கள் தங்கள் வண்டியை அவசரமாகத் தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். என்னுள் சோகம்தான் மிஞ்சும்.
மறதி நல்லதுதான். சோகங்களை மறக்கலாம். (ரொம்ப சிரமம்)
நல்லதை நினைக்கலாம்.
என்னுடன் ஒரே ஒரு வருடம் எதிராஜில் படித்த
பத்மா எனும் பெண்மணியைக் கோவிலில்
சந்தித்தேன்.
அங்கு அன்னக் கட்டளைக்குப் பணம் செலுத்தும் இடத்தில் இருந்தார்.
நான் அவர் பின்னால் நிற்கும்போது. ''உன்னை எனக்குத் தெரியுமே' என்றார்.
வெகு நாட்களுக்குப் பிறகு என்னை 'ஒருமையில் அழைத்தவரைப் பார்த்து
விழித்தேன். நீதானே லாஜிக் பேட்சில் இருந்தே.
ஆமாம்.
ஜயந்தி,துர்கா,காவேரி,ராஜேஸ்வரி,ஜானகி ஞாபகம் இருக்கா.
ஓ!நன்றாக ஞாபகம் இருக்கு.'
அப்புறம் என்னை எப்படி மறந்தாய்.
நாந்தான் கே.பத்மா.
ஓ!
நீ?
நான் ரேவதி.
பத்தியா.
காலேஜ் டே ரிஹர்சல் ல 'ஆஜா ராஜ்குமார்' பாடினியே!
உன்னை ஒன்று கேட்பேன் வேற பாடின. நினைவு இருக்கா.
அதெலாம் மறக்கலை.
அப்ப என்னை மட்டும் எப்படி மறந்த.
நான் உன்னை மறக்கலை பாரு.
ஐயோ ஸாரிமா.. லைட்டா நினைவுக்கு வருது. நீ பச்சை பூபோட்ட ப்ளௌசும்,பச்சை தாவணியும் போட்டு இருந்த இல்ல?
அட!மூக்கில் விரலை வைத்தாள்.
நான் என்ன போட்டு இருந்தேன் சொல்லு பார்ப்போம். இது நான்:)
நீ ப்ளூ கடாவ் புடவை,டார்க் நீல மாலை கழுத்துல போட்டு இருந்த.
கறுப்பு மையால் நீட்ட திலகம் வச்சிருந்த.
அசந்துவிட்டேன்.
அந்த இடத்திலேயே அணைத்துக் கொண்டோம்.
நீ மாறிவிட்டாய் பத்மா.
இல்லை ரேவா,நீ மாறவில்லை,நானும் மாறவில்லை.
48 வருடங்கள் உன்னிடம் நிறைய மாறுதல். எதையோ யோசித்துக் கொண்டே இருந்தாய். நான் இரண்டு தடவை உன்னைக் கூப்பிட்டுத் தோளைத் தொட்டதில்தான் திரும்பினாய்.
வயசாச்சு:)
நானும் அதே 65 தான். என்னைப் பார்த்தால் எப்படி இருக்கு.
நன்றாக இருக்கு.
நான் இப்பதான் ஒரு டூடோரியல் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றேன்.
ஓ!
நீ என்ன செய்கிறாய்.ஆங்கில லிட்ரேச்சர் படிக்கணும். தமிழ்க் கவிதை எழுதணும்னு சொல்லிக் கொண்டிருந்தயே.
நம் பேராசிரியை இந்திரா கூட உன்னைத் தமிழ்
பட்டப் படிப்புப் படிக்கச் சொன்னாங்களே''
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவளுடைய உற்சாகத்தைப் பார்த்து எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.
நான் கேட்க மறந்தது அவள் குடும்பத்தைப் பற்றி!!
அதற்குள்
நம் வண்டி உறும ஆரம்பித்தது. கேட்டது.
வைத்தியரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தோம். அவசரமாகத்
தொலைபேசி எண்களை எழுதிக் கொண்டு பிரிந்தோம்.
அன்று முழுவதும் மனம் உற்சாகமாகப் பழைய நாட்களை அசைபோட்டது.
அவள் கேட்ட கேள்வியும் சுற்றி வந்தது. நீ ஃபேஸ்புக்ல இருக்கியா:)
எனக்கு மறதி இருந்தால் என்ன. மற்றவர்களுக்கு நினைவு இருக்கு.!!!!!!!!
ஒரே ஒரு சட்டம். அவர்களுக்கும் என்னைப் பற்றிய நல்ல நினைவுகளே இருக்கணும்:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Wednesday, June 05, 2013
சுற்றுச் சூழல் தினம் உலகம் முழுவதும்
பசுமை காண உழைப்போம். |
எங்கும் பசுமை |
முதலில் உன் வீட்டுச் சுத்தத்தைப் பார்.
பிறகு வீட்டைச் சுற்றி இருக்கும் குப்பைகளை விலக்கு.
குப்பைத்தொட்டியைத் தேடிச் சென்று குப்பையைப் போடலாம்.
குழந்தை பிறந்ததிலிருந்து அதற்குச் சுத்ததைப் போதிக்கவேண்டும்.
சாக்கலேட் சுற்றிய காகிதம்,
உணவு சுற்றிய பொட்டலங்கள்,
தண்ணீர் பாட்டில்கள், பெண்களின் இதர வகை கழிவுப் பொருட்கள்,குழந்தைகளின் டயப்பர்கள்
இன்னும் எத்தனையோ மிச்சமான சோறு கூடக் கிடந்தது எங்கள் வீட்டுக் கருகில் இருந்த குப்பைத்தொட்டி. இது ஒன்றும் அதிசயமில்லை. எல்லா இடத்திலும் இருப்பதுதான்.
குப்பைகளை அள்ளிச் செல்லும் லாரிக்காரரை நமது நண்பராக ஆக்கிக் கொள்ளவேண்டும்..
கூட வரும் கலைச் செல்வியை நமக்கு உதவியாளராக ஏற்றுக் கொள்ளவேண்டும்.
வீடு என்றால் கழிவுகளூம் சேர்த்துதான். அது செடிகளை வெட்டிப்
போட்டலும், வீட்டில் பழைய செங்கல்கள், சிமெண்ட் தொட்டி உடைத்த துண்டுகள் இவை சிறிய அளவாக
இருந்தாலும் மழை வந்தால் கொசுக்கள் கூடும் கொண்டாட்ட
இடமாகிவிடும்.
கலைச் செல்வியை ஒரு தடவை உதவி கேட்டால் போதும்
இன்னும் இரண்டு பேரை அழைத்துவந்து அத்தனை குப்பைகளையும்
அகற்றிவிடுவார்.
அவர் ஏற்கனவே அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டவர்தானே. அவருக்கு
கைப்பணம் வேறு கொடுக்கவேண்டுமா என்று கேட்டால்
பதில் கிடையாது. பணம் கொடுத்தும் உதவி செய்யாதவர்கள்தான்
நிறைய.
ஆறுமாதமாக எங்கள் வீட்டு வாசலில் குமிந்துகொண்டே இருக்கிறது
எதிர்வீட்டில் இடித்துக் கட்டப்படும் கட்டிட இடிபாடுகள்.
மேலும் வருத்தம் தரக் கூடியது நிழலாக இருந்த ஒரு மரம். வெட்டப் பட்டது.
நாம் முன்னேறிவிட்டோம். கட்டிட மரங்கள் வந்துவிட்டன.
அந்தமரம் ஆக்சிஜன் கொடுத்தது. இந்த மரங்கள் நம் பணத்தை வாங்கிக் கொண்டு இன்னும் குப்பைகளைக் கொடுக்கப் போகிறது.
இதற்கும் மேல் எங்கள் வீட்டு முன் இருக்கும் மீட்டர் பெட்டி. காம்பவுண்டுக்கு வெளியே இருக்கிறது. 30 ஆண்டுகளாக அது சிறுநீர் கழிக்கும் இடமாகத்தான் இருக்கிறது.
கேட்டால் நீங்க ஒரு கழிப்பறைகட்டிக் கொடுங்களேன் என்று சொல்கிறார்கள்:(
இது உங்க இடம் இல்லையே அரசாங்க இடம். அதனால நீங்க வாயை மூடிக்கொள்ளலாம் என்று படித்த ஒருவர் சொல்லிட்டுப் போனார்.
சுற்றுப் புறச் சூழல் நாளை வீட்டுக்குள் தான் கொண்டாடணுமோ.
எதிர்மறைப் பதிவு இல்லை.
ஆதங்கம்தான்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Subscribe to:
Posts (Atom)