Blog Archive

Saturday, May 11, 2013

அன்னையர் தின வாழ்த்துகள்

துர்கா மா
என் அம்மாவும் தோழியும்(வலது பக்கம் இருப்பது என் அம்மா)
இன்னோரு நல்ல அம்மா.
ஏன் முக்கியமாகத் துளசியைச் சொல்கிறேன்?
 அவர் உடையில் இருக்கும் யானையைப் போலவே மனமும் பெரியது.
உலகத்தில் வாழும் அத்தனை ஜீவன்களும் நலம் பெற வேண்டும் என்று நினைக்கும்
மனுஷி
அன்னை யசோதா.
என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த அம்மா  பத்மாவதி தாயார்
அன்னை பார்வதி
அன்னை பாலா
Add caption

 அன்பு ஒன்றே   அம்மாக்களின் வழி.

தாயிம் தந்தையுமாய் நம்மைக் காக்கும் அனைவருக்கும்
வணக்கங்கள்.

பெறாத   அம்மா  என் மாமியார் எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

32 comments:

S.Muruganandam said...

உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்கும் அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

sury siva said...


மாதா ச பார்வதி தேவி
பிதா தேவோ மஹேஷ்வரஹ‌
பாந்தவா: சிவபக்தாஸ்ச‌
ஸ்வதேசோ புவனத்ர்யம்.

அம்மை என் உமையே
அப்பனும் என் ஈசன் மஹேச்வரனே
உறவினரெல்லருமே ஈசன் இசைபாடும் அடியார்கூட்டமே
அவர்தம் வாழும்
மூவுலகும் என் நாடே.

அன்னை யே உன் அன்பின் பரிதியைக் காண
எனக்குக் கண்களில்லை. இன்று
என் கண்முன்னே நிறைந்திருக்கும்
அம்மை அபிராமி உமையே
நின் பாதகமலங்களே என் தாயிருக்கும்
நிலமென நினைந்து நினைந்து
உருகுவேன் உயிருள்ளவரை.

சுப்பு தாத்தா.

ஸ்ரீராம். said...

அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி முருகானந்தம் சுப்ரமணியன்.
உங்கள் அன்னைக்கும் எங்கள் வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுப்பு சார், நீங்களே ஒரு அன்னையாகக் காட்சி அளிக்கிறீர்கள். அன்பு இருக்கும் இடமெல்லாம் அன்னை இருக்கும் இடம் தானே. அருமையான ஸ்லோகமும் உங்கள் உருக்கமான உள்ளத்திலிருந்த வந்த வார்த்தைகளும் அமிர்தம்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.

வீட்டில் உங்கள் மனைவிக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.

துளசி கோபால் said...

எட்டிப்பார்த்தேன்..அடிச்சது ஷாக்!!!!!


அனைவரும் அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.

Geetha Sambasivam said...

இப்போதைய அன்னையர் அனைவருக்கும், இனி அன்னையர் ஆகப் போகிற அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்

கோமதி அரசு said...

அன்பு இருக்கும் இடம் எல்லாம் அன்னையர் வாழும் இடம் தான்.
அருமையாக சொன்னீர்கள்.
அம்மா என்றால் அன்பு தானே!
எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

அன்னையர் படங்கள் அழகான பகிர்வு.

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்!

வல்லிசிம்ஹன் said...

ஹா ஷாக் அடிச்சதா:)

அன்னையர் தின வாழ்த்துகள்மா.
இறைவன் எல்லா நலன்களையும் அளிக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

சரியாகச் சொன்னீர்கள் கீதா.இன்றைய மங்கையர் நாளைய மனைவியர். இன்றைய மனைவியர் நாளை அன்னையர்..
அன்பு எல்லா இடங்களிலும் பகிரப் படும்போதுதான் எத்தனை மகிழ்ச்சி.

அன்னையர் தின வாழ்த்துகள். மா.
உங்கள் மகளுக்கும் மருமகளுக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி .
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் அன்னையர்தின வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

/// பெறாத அம்மா என் மாமியார் ///

இதை விட சிறப்பு ஏது...?

வாழ்த்துக்கள் அம்மா...

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கோமதி.அன்பின் வழி நடக்கும் இல்லறம் தரும் குழந்தைகள்
அன்பு வழி நடக்க நிறைய சந்தர்ப்பங்களேற்படுகின்றன. அவர்கள் மணம் புரியும்போதும் அன்பே பிரதானமாக இருந்து அவர்களைக் காக்கின்றன. உலக அன்னையைர் இறைவன் அனைவருக்கும் நல் வாழ்வு அருள வேண்டும் வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
நன்றிமா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்து அத்தனை அன்னையருக்கும் என் மனம் நிறைந்த அன்னையர்தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன்.
என் திருமணத்தின் போது ஒரு கூட்டுக் குடும்பத்தில் தான் புகுந்தேன்.
அத்தனை பெரியவர்களுடனும் அநுசரித்துப் போக என் மாமியார்தான் சொல்லிக் கொடுத்தார்.

எனக்குப் பாதுகாப்பு அவர்தான்:)
நன்றி மா.

மாதேவி said...

அழகிய படங்கள்.
அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துகள்.

Ranjani Narayanan said...

உங்கள் அம்மாவைப் போலவே நீங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
எல்லா அம்மாக்களையும் போட்டு பதிவு உலக அம்மாவையும் திருமதி துளசி - (அதென்ன அப்படி ஒரு பரிவு எல்லோர் பேரிலும்!) யையும் போட்டது தான் ஹை -லைட்!
அன்னையர் தின வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

வாழ்வின் அர்த்தம் புரியத் தொடங்கியதே என் அம்மாவால் தான்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...


அன்பு ஒன்றே அம்மாக்களின் வழி.

அன்னையர் தின இனிய நல்வாழ்த்துகள்.

படங்கள் எல்லாம் அருமை. ;)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.
இன்றுதான் அன்னையர்தினமாம்.
நாம் பெற்ற செல்வங்கள் மகிழ நாம்
மகிழ்வோம்.அதே போல எல்லா அன்னையரும் மகிழ வாழ்த்துகள் சொல்லலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,

துளசி ஸ்பெஷல் பெண். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்பது வடலூரார் வாக்கு.
இவர்களும் எந்த ஒரு நபரோ,பெண்ணோ,பூனையோ,நாயோ,யானையோ எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு உடனே உதவி செய்வார்.
அவருக்கு பிடித்தது உதவி செய்வது.
ஒரு அன்னையின் குணம்.
அதனாலயே அவர் படத்தைபோட்டேன்.கூட இருந்து நிறைய சமயங்களில் பார்த்திருக்கிறேன் மா.
உங்களுக்கு,பெண்ணுக்கும் ,மருமகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஒரு பொறுமையன அம்மாவால்தான் தான் பெற்ற குழந்தைகளுக்குத் தைரியத்தையும் நம்பிக்கையும் ஊட்ட முடியும்.
உங்கள் அன்னையை நினைத்து மகிழ்கிறேன் துரை. அவரிடம் ஆசி கேட்டு வாங்கிக் கொடுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபு சார் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து
பெண்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

அப்பாதுரை said...

அன்னை பாலா  யார்?  எந்த சாமி? புதுசா இருக்கே?

வல்லிசிம்ஹன் said...

http://en.wikipedia.org/wiki/Tripura_Sundari
துரை, பத்துவித சக்திகளில்
பாலா சின்னக் குழந்தை ஒன்பது வயது என்றும் சொல்வார்கள். பதினாறு வயது என்றும் சொல்வார்களும் உண்டு.
ஸ்ரீவித்யா உபாசகர்கள் விவரமாக அறிவார்கள்.
ஸ்ரீலலிதாவின் மகள் என்றும் சொல்லப் படுகிறது.எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். மா.

Geetha Sambasivam said...

//http://maduraiyampathi.blogspot.in/2009/02/blog-post.html//

அப்பாதுரை, மேலுள்ள மெளலியின் இந்தப்பதிவிலே பாலாதிரிபுரசுந்தரி குறித்த தகவல்கள் கிட்டும்.

//http://sivamgss.blogspot.in/2010/10/blog-post_20.html//

பண்டாசுர வதத்திலே பாலா போர் செய்த முறைகள் குறித்த விளக்கம் சிறிய அளவில் இங்கே கிட்டும்.

அப்பாதுரை said...

இந்த சாமி விஷயத்துல கீதாம்மாவுக்கு தெரியாத விஷயமே நஹி போலிருக்கு. சுட்டிக்கு ரொம்ப தேங்க்ஸ்.

sury siva said...


//எட்டிப்பார்த்தேன்..அடிச்சது ஷாக்!!!!!//

Madam Thulasi gopal இங்கே இன்ன்ன்ன்ன்ன்னும் எட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டிப்பார்க்க்க்க்க்க்க்க்கலையே !!


சுப்பு தாத்தா.

www.vazhvuneri.blogspot.in

Geetha Sambasivam said...

//இந்த சாமி விஷயத்துல கீதாம்மாவுக்கு தெரியாத விஷயமே நஹி போலிருக்கு. சுட்டிக்கு ரொம்ப தேங்க்ஸ்.//

ஹிஹிஹி, அப்பாதுரை, தாங்கீஸ், தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!:))))