Blog Archive

Wednesday, May 01, 2013

891,உடல் உழைப்பு,உள்ள உழைப்பு,முயற்சிகளுக்கு வாழ்த்துகள்

Add caption


 முதல் வணக்கம் ஏரு பூட்டும் விவசாயிக்கும்,
உடைநெய்துதரும் நெசவாளிக்கும் வணக்கங்களும்  உழைப்பாளர் தின வாழ்த்துகளும்.


வயலில் தண்ணீரும் இல்லாமல்
மின்சாரமும் இல்லாமல்  நெற்கதிரை
விளைக்க முயலும்
ஏழைக்கும்  இன்று உழைப்பாளர் தினம்


மின்வெட்டினால் தவித்து  லேத் மெஷின் ஓட்டமுடியாத
உழைப்பாளிகளுக்கும்,
தறிகளை ஓட்ட முடியாத  நெசவாளர்களுக்கும்
 இன்று உழைப்பாளிகள் தினம்.

எண்ணெய்விலை அரிசிவிலை,சமையல் வாயு விலை
ஏறினாலும்
தினம் சமைத்துக் குடும்பத்தைக் கவனிக்கும்
இல்லத்தரசிகளுக்கும் இன்று
உழைப்பாளிகள்   தினம்.

இவையெல்லாம் தெரிந்திருந்தும்
உழைக்கும் கைகளே
உருவாக்கும் கைகளே
என்றூ   பாடிக் கொண்டாடும்
உற்சாகச் செய்திகள்   பரிமாறிக்கொள்ளும்
எல்லாத்தலைவர்களுக்கும் உழைப்பாளிகள் தினம்.


அனைவருக்கும் வாழ்த்துகள்.





 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

17 comments:

தமிழ்ச்செல்வி ஜி.ஜே said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மா தமிழ்ச் செல்வி.

துளசி கோபால் said...

எ.கலப்பை கொண்டு உழும் பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை இங்கே சொல்லிக்கறேன் வல்லி..

வல்லிசிம்ஹன் said...

அட அதுதான் பா விட்டுப் போனது.
நன்றிமா. பதிவுலக எழுத்துழுவாளர்க்கும் நல் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்... (என்றும்)

மோகன்ஜி said...

உங்களுக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் மேடம்

ஸ்ரீராம். said...

ஆண்டவன் உலகத்தின் முதலாளி... அவனுக்கு நாமெல்லாம் தொழிலாளி...!

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் உங்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள் ...என்றும்.

வல்லிசிம்ஹன் said...

நிறைய நாட்களாச்சு உங்களைப் பார்த்து மோகன் ஜி. மிக நன்றி. எண்ணங்களை வடிவாக்கி எழுத்தில்
உருக்கொடுக்கும் நாமும் உழைப்பாளிகளே.நன்றி.மனம் நிறைந்த வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஸ்ரீராம். இரவு நேரத்துக்கு உகந்த பாடல்.மனதை இதமாக வருடும் இசை.
உங்களுக்கும் தொழிலாளர்தினவாழ்த்துகள்.

மகேந்திரன் said...

இனிய வணக்கம் அம்மா....
உண்மையை சொல்லியிருகீங்க அம்மா....
பாருங்க.
ஆண்டு முழுதும் உழைப்பாளர்களா அப்படி என்றால் யார் என்று
கேள்விகள் பல புனைந்து...
கண்களை பிடரியில் கொண்டதுபோல இருந்த
தலைவர்கள் எல்லோரும்
இன்று உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் உரைக்கிறார்கள்...
என்ன சொல்ல...
=====
எது எப்படியோ...
வியர்க்கும் வியர்வை நிலத்தில் சிந்தி
அயராது பாடுபடும் அத்தனை உழைப்பளர்களுக்கும்
வாழ்த்துக்கள்....
ஓங்கட்டும் உழைப்பாளர் கரங்கள்....

வல்லிசிம்ஹன் said...

நன்றி மகேந்திரன்.
''மே' தினம் கொண்டாட்டத்தை ஒட்டி இந்தத் தொலைக்காட்சியில்''
இந்த வரிகளே காதில் விழுந்து என்னை அலுப்படைய வைத்தன.
கொண்டாடும் செலவை வருந்துபவர்களுக்குக் கொடுத்து அதில் அவர்கள் விளம்பரம் கூடத் தேடிக் கொள்ளலாம்.
மே தினம் எப்படி உருவானதோ அது போல நிலைமைக்குக் குரல் கொடுக்கக் கூட அவர்களுக்குத் (உண்மையாக உழைப்பவர்களுக்கு)தெம்பில்லை. மீண்டும் நன்றிமா.

வெங்கட் நாகராஜ் said...

உழைப்பாளிகள்....

மேதின நல்வாழ்த்துகள் வல்லிம்மா....

கோமதி அரசு said...

எ.கலப்பை கொண்டு உழும் பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகளை இங்கே சொல்லிக்கறேன் வல்லி.//

நல்லா இருக்கே துளசி சொல்வது அப்படியும் வாழ்த்து சொல்வோம் அக்கா எல்லோருக்கும்.

அருமையாக உழைப்பாளர் தின வாழ்த்து சொல்லி இருக்கிறீர்கள்.

ராமலக்ஷ்மி said...

உழைக்கும் மக்கள் வாழ்வு உயர வாழ்த்துவோம்.

மாதேவி said...

உழைப்பாளிகளுக்கு வாழ்த்துகள்.

Anonymous said...

மூன்று நாள் லேட்டாத்தான் வர முடிந்தது. உழைப்பாளர் தின வாழ்த்துரைக்கு நன்றி