என் பெரு மதிப்புக்குரிய நல்ல மனிதர்.
திடீரென தன் செயலிழந்து மூர்ச்சை ஆனது இரண்டு நாட்களுக்கு முந்திய இரவில்.
அவர் மனைவிக்கும் 80 வயது.
நல்லவேளையாக அவர்களுக்கு ஆதரவாக
இருப்பவர்கள் பக்கத்திலியே இருக்கும் மருத்துவர்கள். பெரியவர் உடல் நலம் சீரில்லை என்று தெரிந்ததும்
உடனே வந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.
சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட உதவி பெரியவரின் நிலையைச் சீராக வைத்திருக்கிறது,.
நேற்று காலையிலிருந்து அங்கேதான் இருந்தோம்.
கண்திறந்து எங்களை அடையாளம் கண்டுகொண்டார்.
இறைவனுக்கு நன்றி..
இன்று அவர்கள் பெற்ற செல்வங்கள் வெளிநாடுகளிலிருந்து
வந்துவிடுவார்கள்.
வயது முதிர்ந்த நிலையில் இந்த பாதிப்பு வந்திருப்பதால்
முன்னேற்றம் சிறிது மெதுவாக தான் இருக்கும்.
எப்படியும் எந்த நிலையிலும்
அவர் நலம் இறைவனால் காக்கப் படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
வாழ்க வளமுடன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
13 comments:
//வயது முதிர்ந்த நிலையில் இந்த பாதிப்பு வந்திருப்பதால் முன்னேற்றம் சிறிது மெதுவாக தான் இருக்கும்.
எப்படியும் எந்த நிலையிலும்
அவர் நலம் இறைவனால் காக்கப் படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.//
மகிழ்ச்சி. அவர் உடல்நிலை நல்லபடியாகி வீடு திரும்பட்டும்.
விரைவில் அவர் பூரண நலம் அடையட்டும்..... எனது பிரார்த்தனைகளும்.
உங்களது பெரு மதிப்பிற்குரிய பெரியவர் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப பெருமாளைப் ப்ரார்த்திக்கிறேன்
நான் இரண்டு நாளாக உங்களது இல்ல தொலை பேசி எண்களில் அழை க்குபோழுது தொலை பேசி மணி அடித்துக்கொண்டே இருந்தது நான் நினைத்தேன் ஒருவேளை நீங்கள் அயலூர் ஏதேனும் சென்று இருக்கிறீர்களோ என்று. இப்பொழுது தான் தெரிகிறது
காலத்தே செய்த உதவி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப்பெரிது
சுப்பு ரத்தினம்
விரைவில் குணமடைய வேண்டுகிறேன்....
பெரியவர் நல்ல நலம் பெற பிரார்த்தனைகள் வல்லிம்மா..
பெரியவர் விரைவில் நலம் பெற எங்கள் பிரார்த்தனைகளும் வல்லிம்மா.
அவர் சீக்கிரம் நலம்பெற எங்கள் பிரார்த்தனைகள்.
உறவினர் விரைவில் நலம்பெறப் பிரார்த்தனைகள்.
காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
அன்பு கோபு சார், சுப்பு சார், அன்பு வெங்கட்,
அன்பு ஸ்ரீராம்,
அன்பு கீதாம்மா,
அன்பு தனபாலன்,
அன்பு சாரல், அன்பு ராமலக்ஷ்மி எல்லொர்ருடைய பிரார்த்த்தனைகளுக்கும் நன்றி.
அப்பழுக்கில்லாத மனிதர் என் நாத்தனாரின் கணவர்.
ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. சதா ஜோக்கும் சிரிப்புமாக எங்கள் சந்திப்புகள் நடக்கும்.
கடவுள் அவர் பக்கம் இருக்கணும்.
வீடு திரும்பும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
உங்கள் நாத்தனார் அவர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது என்று அறிந்து மகிழ்ச்சி.
நலம் பெற்று மறுபடியும் முன்பு போல் உற்சாகமாக வலம்வர வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்.
அன்பு கோமதி,நினைவுக்கும் மறதிக்கும் நடுவில் வந்து போகிறது அவரது உடல் நிலை. இறைவன் காக்க வேண்டும்.நன்றி அம்மா.
மிக விரைவில் நலம் பெற எனது பிரார்த்தனைகளும்.
அவர் விரைவில் நலம் பெற எங்கள் பிரார்த்தனைகளும்...
Post a Comment