அழகா மீண்டும் வா.காத்திருக்கிறோம் |
அத்தை சித்தப்பா மகன்கள் மகள் |
அவர்களின் பேத்திகள் |
கூடியிருந்து குளிர்ந்தது சிலகாலம்.
பிணங்கிப் பிரிந்தது சிலகாலம்.
எப்படி இருந்தாலும் எல்லோரும் ஒருவரை ஒருவர்
கடிதம் போட்டோ தொலைபேசியோ மகிழ்வது சித்ரா
பௌர்ணமியான இன்று.
பாட்டி வகுத்த வகையாக வாழ்த்துகள் சொல்லிக் கொள்வோம்.
எதிர்சேவைக்கு மதுரைக்குப் போகிறேன் என்பாள் ஒருத்தி.
நான் ஜயா தொலைக்காட்சியில்
அலுங்காமல் நலுங்காமல் பார்த்தேன் என்பாள் ஒருத்தி.
வைகையா மக்களா!! |
வைகையில் இறங்குகிறார் |
பூக் குடை |
என் மேல் ஆடி வருகிறான் அழகன் |
வைகையில் தண்ணீரும் மக்களும் |
பக்தர்களைப் பார்க்க விரைகிறார் |
வந்தாரே மன்னர் |
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
24 comments:
இப்ப அழகர் வருவதோடு தண்ணீரும் வருவதும் செய்தியாகிறது!
அருமை திவ்ய தரிஸனம். இப்போது தான் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு பார்த்து மகிழ்ந்தோம்.
ஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா! :)))))
இன்னிக்கி வெளியே போக வேண்டி இருந்ததால் அழகர் ஆத்திலே இறங்கறதைப் பார்க்க முடியலை. :( சாயந்திரம் செய்திகளில் பார்க்க வேண்டியது தான்.
வீட்டில் சென்று உள்ளார்கள்... என்னால் இந்த முறை செல்ல முடியவில்லை... படங்கள் அருமை அம்மா...
மதுரை சித்திரைத் திருவிழா நினைவுகள் மறக்க முடியாதவை! மதுரை பந்தயத் திடல் குடியிருப்பிலும் கே புதூரிலும் இருந்த நாட்கள்! "நீரில்லா வைகையில் ஆடி இறங்கும் அழகா.. உம மனம் என்ன கல்லா? இன்னும் எத்தனை நாள் காவிரியிலும் வைகையிலும் மணலை மட்டுமே நாங்கள் பார்ப்பது? இரு கரை தொட்டு நுரை ததும்ப ஓடும் நீரைப் பார்ப்பது எந்த நாள்?"
தரிசனம் செஞ்சு வெச்சதுக்கு நன்றி வல்லிம்மா..
உண்மைதான் பாண்டியன். வைகையில் தண்ணீர் பார்ப்பதே அதிசயம். அதுவும்
எதிர்சேவையின் போது பரிதாபமாக இருக்கும். வளமான நாட்கள் வைகையில் நீர் இருந்த காலத்தில் நேரேயே பார்த்திருக்கிறேன்.
இன்று வந்தது போல உண்மையாகவே
தண்ணீர் பாயும் நாளும் வரலாம்.
நானும் நினைத்தேன் கோபு சார். யாராவது மின்வெட்டு சமயத்தில் பார்க்காமல் இருந்திருப்பார்களோ என்று தோன்றியது. அதனல்ல் படங்கள் எடுத்துப் ப்பதிவு செய்தேன்.மதுரைக்குப் போகாத வருத்தமும் போய்விட்டது.:)
பாட்டியுடன் போய்ப் பார்த்த நினைவு இருக்கிறது. அப்போது இவ்வளவு கூட்டத்தில் மாட்டிக் கொள்ள மாட்டோம் கீதா.
ஏதோ சொலவடை போல இருக்கிறதே:)
தனபாலன், எத்தனை உற்சாகமாக இருக்கும் இந்தத் திருநாள்.
இருந்தாலும் குடும்பத்தினராவது போயிருக்கிறார்களே.
நன்றி மா.
உண்மைதான் ஸ்ரீராம். மக்கள் மனம் வறண்டது போலவே நதியும் வறண்டு கிடைக்கிறது.
வைகையில் வெள்ளம் வந்தபோது பார்த்திருக்கிறேன்.யாரும் நம்பக் கூட மாட்டார்கள்.
புதூரில் தான் சித்தப்பாவீடுகூடக் கட்டினார்.அது 60களில்.இப்போது அந்த இடமெல்லாம் மாறி இருக்கும்.
நீர்வரும் என்று நம்பலாம்.
சொலவடை இல்லை ரேவதி, மதுரைப் பக்கத்து வழக்குச் சொல். யாரையானும் உனக்கு எதுவும் தெரியாதுனு சொன்னால், ஆமா, நான் என்னத்தைக் கண்டேன்? ஆத்தைக் கண்டேனா? அழகரைச் சேவிச்சேனா என்பார்கள். ஏனெனில் மதுரை நகரிலும், சுற்றுவட்டாரத்திலும் அழகரைக் காணாத கண்கள் இருக்காது. அதனால் அப்படிச் சொல்வார்கள். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தமாஷுக்கு இங்கேயும் போட்டேன். :)))))
மதுரையில் மாமா இருக்கிறார். இந்த சமயத்தில் சென்றதில்லை...
தங்களது பதிவு மூலம் கண்டுகளித்தேன். நன்றிம்மா.
வல்லி அக்கா, உங்களுக்கு முதலில் நன்றி. அழகரை தரிசிக்க வைத்தமைக்கு.
தம்பி, தங்கைகள் மதுரை சித்திரை விழாவிற்கு அழைத்தார்கள் போகவில்லை, வீட்டிலும் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை, சில கோவில்களுக்கு காலையில் சென்றுவிட்டதால் பார்க்க முடியவில்லை.
வைகையில் தண்ணீர்ப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல மழை பெய்து நாடு நல்லா இருக்க அழகர் அருள்புரியட்டும்.
ஒவ்வொரு வருடமும் என் துணைவர் அழகர் ஆத்திலே இறங்கரதைப் பார்க்கணும்னு சொல்லுவார். இதுவரை போனதில்லை. தொலைக்காட்சியில் பார்ப்பதுடன் சரி.
ஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா! ( நான் சொல்லலாம், இரண்டையும் செய்ததில்லை!)ரொம்ப பிடிச்சு போச்சு!
அழகர் என்று கூப்பிடப் போகிறார்?
நீங்கள் போட்டிருக்கும் படங்கள் அற்புதம்! நன்றி வல்லி!
நானும் ஆத்தைக் கண்டேனா? அழகரை ஸேவிச்சேனா? கூட்டம்தான்:(
இதுவரை பார்த்ததே இல்லைப்பா:(
பதிவுகளில் பார்ப்பதுதான்! சென்னை வாசத்தில் ஒருமுறை டிவியில் பார்த்தேன்
இனி யூ ட்யூப் தான் கதி:-)
அன்பு சாரல்
மிக மிக நன்றிமா. நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன்.
கீதா மதுரை சொடுக்குத் தெரிகிறது. பாட்டி பேசும்போது இப்படித்தான் வார்த்தைகள் வரும்:)
அன்பு ஆதி, நேத்திக்கு அங்கயும் கஜேந்த்ர மோக்ஷமாம் கீதா எழுதி இருந்தார்கள்.
இப்ப எல்லாம் பகவானை மனசில் நினைத்துச் சந்தோஷப்படவேண்டியதுதான் போலிருக்கு.
மாமா அங்கே இருக்காரா. எப்பவாவது போகலாம் ஆதி.
நீங்கள் கோவிலுக்குப் போனபுண்ணியத்தில் நானும் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன் கோமதிமா.எங்கள் ப்ளாக் பார்த்தீர்களா. எனக்கு அழுகையே வந்துவிட்டது. என்ன ஒரு தூய்மையான பக்தி!!என்ன இருந்தாலும் நம் ஊர் போல வராது.அடுத்தவருடம் போய்வாருங்கள்.அழகரும் மீனாட்சியும் கூப்பிடட்டும்.
அன்பு ரஞ்சனி,
முதலிலேயே டிக்கட் வாங்கி வச்சுப் போகணும்னு நினைத்திருந்தோம்.அதிசயமாக!
அதற்குள் இந்த விஷயம் (உறவினர் உடல் நிலை)
அதிர்ச்சியாக வந்துவிட்டது. பிறகு மனம் கேட்கவில்லை. இவரது சிWஏஏகிதர் அங்கே இருக்கிறார்.
உங்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் பா. படங்களை இன்னும் அழகாக எடுத்திருக்கலாம்.ஃபோகஸ் செய்வது கடினமாக இருந்தது.
நன்றி மா.
உண்மைதான் போகாத இடங்களை யூ டியூபில் தான் பார்க்கணும்.
உடல் நலம் நல்லா இருக்கும்போது எல்லா இடங்களையும் பார்ப்பது சிரமமே இல்லைப்பா. கூட்டத்தில் போவது கஷ்டம்தான்.
அழகர் வைகையில் இறங்கும் தர்சனம் கண்டுகொண்டோம்.
Post a Comment