Blog Archive

Saturday, March 16, 2013

ஆர்க்கிட்ஸ் தோழியின் தோட்டத்திருந்து

Add caption
Add caption
Add caption
Add caption
Add caption
Add caption


நெடு நாளையத் தோழிக்கு  ஐம்பதாவது திருமண நாள் நடந்தேறியது.
அந்த தினத்தில் நாங்கள்
துபாயில் இருந்தோம்.

விழா அமோகமாக நடந்ததாக க்  கடிதம் அனுப்பி இருந்தாள்.

ஊரிலிருந்து வந்தபிறகு இன்றுதான் நேரம் கிடைத்தது.
பூங்கொத்தும்,  வாழ்த்து மடலும்,அவளுக்கு    மிகப் பிடித்த வளையலகளும்  வாங்கிக் கொண்டு சென்றோம் நானும் சிங்கமும். .

அவர்கள் வீட்டில்   செடி கொடிகள்   நிறைய உண்டு. தோழியின் கணவர்  ஆர்க்கிட் பூக்களை வளர்ப்பவர்.
இதற்காகவே  தாய்லாண்ட் ,சிங்கப்பூர் என்று சென்று வாங்கி

ஒரு   25 வருடங்களாகப்  பண்ணையாக வைத்து நடத்திவருகிறார்..
வீட்டைச் சுற்றிலும் நிழல் தரும் மரங்கள்.
ஆர்க்கிட் வளரவேண்டிய       உஷ்ண நிலையைக் கொண்டுவர ஏற்பாடுகள்..

அவைகளுக்காகத் தண்ணீர் ஏற்பாடு  தனி.

எப்படி இத்தனை சாத்தியமானது என்று கேட்டோம்.

செய்யும்  வேலையிலிருந்து      ஓய்வு பெற்றதும் முழு நேரம் இந்தக் குழந்தைகளைக்   கவனிப்பதையேத்    தொழிலாகக் கொண்டுவிட்டேன்.
வீட்டின் மேல்தளம் ,சுவர்கள்  அனைத்திலும்    படிகள் கட்டி எங்கும் இந்தச் செடிகள் நிறைந்திருக்கின்றன.
இந்த ஆர்க்கிடை வளர்ப்பது மிகச் சிரமம்  என்பது   தெரிந்த சமாசாரம்..


எத்தனை பொறுமையும் உழைப்பும் இந்த வளர்ப்பில் அவர் செலுத்தி இருக்க வேண்டும்.!!!

ஆச்சரியமாக இருந்தது.

மிகப் பெரிய வேலையில் இருந்துவிட்டு
ஓய்வெடுப்பது  பெரிய   மாற்றம்.
அந்த மாற்றத்தை  இந்தச்  செடிகளின் பராமரிப்புத்

தன்வாழ்க்கையில் பெருத்த நிம்மதியைக் கொடுப்பதாகச் சொன்னார்.
எங்களுக்கும் பரிசாக நல்ல வளர்ந்த ஆர்க்கிட் பூக்கள் நிறைந்த செடியைக் கொடுத்தார்..

மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பினோம்.







 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

23 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும் பதிவும் அழகாக உள்ளன.
பாராட்டுக்கள்.

மற்றொரு பதிவர் தன் வலைத்தளத்தில் அனுமன் ஆர்கிட்ஸ் பற்றி எழுதியுள்ளார்கள்.

அதில் ஒவ்வொரு ஆர்கிட் மலர்களும் அனுமனாக [குரங்கு வடிவத்தில்] காட்சியளிக்கிறது ஆச்சர்யமாக உள்ளது.

இணைப்பு இதோ

http://jaghamani.blogspot.com/2013/03/blog-post_7381.html

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு கோபு சார். நன்றி.

இரண்டு பேர் ஒரே நாளில் ஆர்க்கிட் பற்றிப் படம் போட்டிருக்கிறோம். ஆனால் இராஜராஜேஸ்வரி அனுமனையே கொண்டுவந்துவிட்டார். என்ன அழகு இந்தப் படங்கள். அபூர்வம் .அதிசயம். மீண்டும் சென்று பார்க்கிறேன். லின்க் அனுப்பியதற்கு மிகவும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ஒவ்வொண்ணும் ரொம்பவே அழகா கலர்கலரா இருக்கு.

ராமலக்ஷ்மி said...

மனம் கவர்ந்தன வண்ண வண்ண ஆர்கிட் மலர்கள். முதலும் மூன்றும் இந்த வண்ணங்களில் இப்போதுதான் பார்க்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி வல்லிம்மா. பராமரித்து வரும் தம்பதியருக்குப் பாராட்டுகளும், ஐம்பதாவது மணநாள் வாழ்த்துகளும்!!

Ranjani Narayanan said...

உங்கள் ஆர்க்கிட் பதிவைப் பார்த்ததும் எனக்கும் திருமதி இராஜராஜேஸ்வரியின் பதிவுதான் நினைவுக்கு வந்தது.

உங்கள் தோழிக்கும், அவரது துணைவருக்கும் எங்கள் சாரிபிலும் 50 வது திருமண நாள் வாழ்த்துகளைக் கூறுங்கள்.

Geetha Sambasivam said...

அருமையான ஆர்க்கிட் தோட்டம். உங்கள் தோழியின் கணவரின் பொழுதுபோக்கைக் குறித்துப் படித்ததும், "பரணறையில் நன்னாரி வாசம்" கதையின் கதாநாயகர் நினைவில் வந்தார். இப்படியான ஒரு பொழுதுபோக்கு இல்லாமல் தானே அவர் மனம் தனிமையில் மூழ்கித் தவித்தது.

இது நல்ல யோசனைதான்; வயதாக ஆக, பேச்சுக் குறைந்து, இம்மாதிரியான ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டால் தனிமை உணரமாட்டார்கள். பெண்களும் தங்கள் மகன், மருமகள், பேரன், பேத்திகள், மகள், மருமகன், பேரன், பேத்திகள் என முழுக்கவனத்தையும் அங்கே திருப்பாமல் கணவர் மேலேயும் கண் வைச்சுக்கணும். இல்லையா?

அந்த வகையில் உங்கள் தோழியின் கணவர் சமாளித்துக் கொண்டு விட்டார். ஐம்பதாவது திருமணநாள் வாழ்த்துகள். பல்லாண்டு வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சாரல்.தோட்டத்தில் குறைவான நேரமே செலவிட்டோம்.
இல்லாவிட்டால் இன்னும் நிறைய படங்கள் எடுத்திருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

திருமதி ராஜியின் பதிவு அவுட்ஸ்டாண்டிங் ரஞ்சனி.

ரொம்ப ஸ்பெஷல்.இந்த மலர்களும் மனோரம்யமாக இருந்தன.
ஐம்பது வகையில் வைத்திருக்கிறார்.
எல்லாவற்றையும் படம் எடுக்க முடியவில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஒரே மாதிரியான மலர்களை வைக்காமல் ஷோ பீஸ் வகைகளை மட்டும் வீட்டு முன்னால் கொலு மாதிரி வைத்திருக்கிறார்.ஒவ்வொன்றும் ஒரு மதம் வரை வாடாமலிருக்குமாம் ராமலக்ஷ்மி.பெயரைக் கேட்டுக் கொள்ளாமல் வந்துவிட்டேன்;(

வல்லிசிம்ஹன் said...

அவர் இதை முழு நேரமாக எடுத்துக் கொண்டதும் தோழியும் கூடச் சேர்ந்து கொண்டாள்.அவருக்கு 75 அவளுக்கு 70.
இருவரின் உற்சாகத்துக்கு இந்த மலர்களே காரணம்.கீதா.
அவரது தந்தையார் தாவர இயல்பேராசிரியரக இருந்து மறைந்தவர்.

அவரது வழிகாட்டுதலுடன் ஆரம்பிததது இந்தப் பெரிய தோட்டம்..

உடலும் மனதும் திடமாக இருக்க இந்த ஒற்றுமை போதும் இல்லையாமா.

sury siva said...

// பெண்களும் தங்கள் மகன், மருமகள், பேரன், பேத்திகள், மகள், மருமகன், பேரன், பேத்திகள் என முழுக்கவனத்தையும் அங்கே திருப்பாமல் கணவர் மேலேயும் கண் வைச்சுக்கணும்//

அப்படி ஒரு போடு போடுங்கோ.

சுப்பு தாத்தா.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் இந்தத் தமபதிகளின் வாழ்க்கை அடிநாதம்.
ஒரே மகன் அமெரிக்காவில் இருக்கிறார் . வருடத்துக்கு ஒரு முறை ஒரு மாதம் அங்கே போய்விட்டுவருவார்கள்.
மற்றபடி மிகப் பொருத்தமான அன்பான ஜோடி.!!

துளசி கோபால் said...

தோழிக்கு கோல்டன் வெட்டிங் அனிவர்ஸரி வாழ்த்துகளைச் சொல்லிருங்கப்பா.

படங்கள் அத்தனையும் அழகு!

கோமதி அரசு said...

உங்கள் தோழி அவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள்.
அவர்கள் வீட்டுத்தோட்டம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தோட்ட மலர்கள் , செடிகளை பரிசளிப்பது மேலும் மனதுக்கு உற்சாகம் தரும். உங்கள் தோழிக்கும் அவர் கணவருக்கும் பாராட்டு.

பூ விழி said...

மனம் கவரும் பூக்களின் படங்கள் அருமை

RAMA RAVI (RAMVI) said...

ஆர்கிட்ஸ் படங்கள் மிக அழகு.

தோழிக்கும் அவர் கணவருக்கும் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

சொல்கிறேன் துளசி.

இப்பதான் செகண்ட் ஹனிமூனா ஜெருசலம்,இஸ்ரேல் எல்லாம் போய் வந்து இருக்கிறார்கள்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி. இருபது வருஷமாத்தான் இங்கே இருக்காங்க.
வெளிநாடுகளில் வேலை.

மனமொத்த தம்பதியர் நன்றாக இருக்கணும். வருகைக்கு நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரமா.செடிகளும் அவர்களும் வளத்தோடு இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

பேரிலியே பூவை வைத்திருக்கிறீர்களே மலர் பாலன்.

மிக நன்றி.

மாதேவி said...

தோழி அவர்களுக்கு வாழ்த்துகள்.

அழகிய ஆர்க்கிட் தோட்டம்.

இராஜராஜேஸ்வரி said...

எங்களுக்கும் பரிசாக நல்ல வளர்ந்த ஆர்க்கிட் பூக்கள் நிறைந்த செடியைக் கொடுத்தார்..

மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திரும்பினோம்//


தங்கள் தோழிக்கு தங்கமான திருமணநாள் வாழ்த்துக்கள்.

ஆர்க்கிட மலர்கள் மனதை மலரச்செய்தன ..

எமது பதிவுக்கு கருத்துரை வழங்கியதற்கு மனம் நிறைந்த
இனிய நன்றிகள்..மகிழ்ச்சி ..

வெங்கட் நாகராஜ் said...

வாவ்.... அற்புதமான மலர்கள். வளர்ப்பதற்கு மிக பொறுமை வேண்டும். அதுவும் சென்னையில் வளர்க்கிறார் என்றால் நிச்சயம் பாராட்ட வேண்டும்!

வாழ்த்துகள் - உங்கள் தோழிக்கும் பகிர்ந்த உங்களுக்கும்.....