Blog Archive

Thursday, March 14, 2013

வீரத்தமிழன்....கட்டுரை 'பழைய விகடன்'

 



 தமிழ்ப் புலவர் ஒருவர் மன்னனைப் பாட   வந்தவர் .
பாடி முடித்து , உணவு உபசாரங்களை ஏற்று


சற்றே கண்ணயர் அ  ஒரு இடம் தேடுகிறார்..
அப்பொழுது கண்ணில் படுகிறது
ஒரு பூப்போல மஞ்சம்.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். யாரும் இல்லை.
ஓஹோ  இது ஓய்வெடுக்க மன்னன் செய்த ஏற்பாடு என்று நினைத்த வண்ணம் அதில் சாய்கிறார்.

இளந்தென்றலும்,பஞ்சு மெத்தையும் சேர்ந்து தாலாட்ட புலவர் எளிதில் உறக்கவசப்படுகிறார்.
சிறிது நேரத்தில் காவலாளிகள் அங்கேவருகிறார்கள்.
புலவரைப் பார்த்து அதிசயமும்
அதிர்ச்சியும் அடைகிறார்கள்.

அது அரசனுடைய முரசுக் கட்டில் .
அரசன் அமரும் ஆசனத்துக் கேற்ற மரியாதை இதற்கும் உண்டு.
  அரசானின் வெற்றிகளை அறிவிக்கும் முரசு வீற்றிருக்கும் கட்டில்/
அதில் போய் ஒரு ஏழ்மைப் புலவன் உறங்குவதா.
உள்ளம் படபடக்கச் செய்தியைச்  சொல்ல அரசனிடம் விரைகிறார்கள்..

மன்னன்  அவர்கள் எதிர்பார்த்தபடியே சினம் கொள்கிறான்.
விரைந்து  முரசிருக்கும் மண்டபத்துக்கு வருகிறான்.
அங்கெ கண்ட காட்சி  அவனை அமைதியடையச் செய்கிறது.

காவலர்களை அங்கிருந்து   செல்லும்படி உத்தரவிடுகிறது.
நீராடச் சென்ற வெற்றி முரசும்  திரும்புகிறது. மரியாதைக் குரிய இடத்தில்
அதை   பத்திரமாக வைக்கிறார்கள்.

அரசன் கையில் சாம்ரத்தை ஏந்தி புலவருக்கு வீசுகிறான்.

புலவரும் திடீரென்று விழித்துக் கொள்கிறார்.
பக்கத்தில் அரசன்.
அடடா இதென்ன அபசாரம்.  மன்னா என்ன  செய்கிறீர்கள்?
தமிழுக்கு மரியாதை செய்கிறேன் என்று பொறுமையாகப் பதிலளிக்கிறான்

சேரமன்னன்,சேரமான்.
சிறந்த வீரத் தமிழ் மன்னர்களில் ஒருவன்.
அப்போதெல்லாம் கேரளம் இப்போது அழைக்கப் படுமிடங்களில்
தமிழ் பேசும் சேர மன்னர்களே ஆண்டுவந்தார்கள்..

இந்தச் சேரனுக்குத் தகடூர் எறிந்த பெரும்சேரல் இரும்பொறை  என்ற சிறப்புப் பட்டமும் உண்டு,.

ஆமாம்  அதே தகடூர் அதியமான், நெல்லிக்கனியை ஔவையாரிடம் இருந்து பெற்ற பாக்கியவான்.அதியமான் நெடுமான் அஞ்சி..

அவனை வென்ற வீரன் இந்தச் சேரமன்னன்.

அவன் வீரமும் தமிழுக்கு அடிபணிந்தது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
உங்கள் எண்ணம் என்னவோ. ஆனால் இதுபோன்ற கட்டுரைகளால் பலன் அடைந்தவர்கள் பல பேர் இருப்பார்கள்.

வள்ளல் அதியமானை  இந்த அரசன் ஏன் போருக்கு அழைத்துவென்றான். ?
அதுதான் அரச லட்சணமோ.
சரித்திரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பெருஞ்சேரலிரும்பொறையும்    அதியமானும்   தோழர்களாக இருந்திருந்தால்
நமக்குக் காவிரிப் பிரச்சினை வந்திருக்காதோ!!!!










எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நேரம் கிடைப்பின் வாசிக்கவும்...

http://puram400.blogspot.in/2011/03/230.html

RAMA RAVI (RAMVI) said...

அருமை. சிறுவயதில் கேட்ட கதை இப்பொழுது திரும்பி நினைவு படுத்தியது தங்களது பதிவு.

தமிழுக்கு மரியாதை செய்யும் அரசர்கள் அற்புதம்.

ஸ்ரீராம். said...

புலவர் பெயர் மோசி கீரனார். அது நினைவு இருக்கிறது. போருக்கு அழைத்ததுக்கு நாடாசைதான் காரணமாக இருக்க முடியும். தன நண்பன் அதியமான் போரில் தோற்ற பிறகு அதியமானின் பெண்களை அழைத்துக் கொண்டு அவ்வையார் அவர்களை நல்ல இடத்தில் சேர்க்க முயற்சி எடுத்தார் என்று படித்திருக்கிறேன் அல்லது திரைப் படத்தில் பார்த்திருக்கிறேன்!

இராஜராஜேஸ்வரி said...

வீரமும் தமிழுக்கு அடிபணிந்தது -அருமையான பகிர்வுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவன் வீரமும் தமிழுக்கு அடிபணிந்தது என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
உங்கள் எண்ணம் என்னவோ. ஆனால் இதுபோன்ற கட்டுரைகளால் பலன் அடைந்தவர்கள் பல பேர் இருப்பார்கள்.//

எப்போதோ பள்ளி நாட்களில் படித்த கதை. மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றிகள்.

கோமதி அரசு said...

புலவர் மோசிகீரனார் நாடகம் பள்ளி காலத்தில் நடத்திய நினைவு இருக்கிறது.

ஸ்ரீராம் சொல்வது போல் காட்சி பாரியின் மகள்கள் (அங்கவை, சங்கவை ) பெண்களை அழைத்து போவதை ஒளயார் படத்தில் காட்டுவார்கள். அதியமான் பெண்கள் அல்ல.

அதியமானை சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை போரில் வென்றதற்கு என்ன காரணம் இருக்கும் ! சரித்தரத்தை கொஞ்சம் படித்துப்பார்க்க ஆவலாய் இருக்கிறது.

Geetha Sambasivam said...

இந்தக் கதையைப் பள்ளியில் நாடகமாக நடிச்சதெல்லாம் நினைவுக்கு வந்தது. தமிழின் மேல் மிகுந்த பற்று உண்டாக இப்படியான சரித்திர நிகழ்வுகளைக் குறித்துப் படித்ததும் ஒரு காரணம் ஆகும். இப்போதெல்லாம் தமிழ்ப் புத்தகங்களிலே இம்மாதிரியான பாடங்கள் வருகின்றனவா? சந்தேகமே!

அதியமானும் சேரனும் நண்பர்களாய் இருந்திருந்தால் காவிரி எப்படி தமிழ் நாட்டிற்கு வந்திருக்கும்? சான்ஸே இல்லை. கிடைக்கும் கொஞ்ச நஞ்சத் தண்ணீரையும் கேரளா எடுத்துண்டு போயிருக்கும். :(

ஆனால் இந்தக் காவிரிப் பிரச்னை என்பது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தே ஆரம்பித்துவிட்டது. இப்போப் புதுசா ஒண்ணும் ஆரம்பிக்கலை. :(

வல்லிசிம்ஹன் said...

படித்தேன் தனபாலன். மிக நன்றி.
இந்தக் கட்டுரையின் எளிய வடிவம் நாடகமாக நடத்தப் படுவது வழக்கம்.

பிரமிப்பு மிகுந்தநாட்கள் தமிழ்ப்பற்று மிகுந்த நாட்கள்.இந்தக் கட்டுரையைப் படித்தவுடன் அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ரமா. இந்தக் கதையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், அவ்வையார் அழைத்துச் சென்றது பாரியின் புதல்விகளை.
அற்றைத்திங்கள் பாட்டு கூடவருமே அந்த வரலாறு.
அவர்கள் ஆசைப்பட்ட காதலனையே மணம் முடித்துவைப்பார் அவ்வையார். என்ன ஒரு படம் அது!!

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் இராஜராஜேஸ்வரி.
தமிழுக்குக் கிடைத்த அங்கீகாரம்.
அருமையான வரலாறு.
அரசன் தன் அதிகாரத்தை மறந்துப் புலவருக்குச் சேவை செய்தான்.

வல்லிசிம்ஹன் said...

நாம் படித்த தமிழ்,சிறப்பாகவும் இருந்தது. நம்முள் தமிழ்ப்பற்றுவரவும் காரணமாகவும் இருந்தது கோபு சார்.
எத்தனை கதைகள்!!ஆட்டனத்தி,ஆதிமந்தி கதை,தோழனுக்காக வடக்கிருந்து உயிர் பிரிந்த பிசிராந்தையார்.
மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

மோசிகீரனாரிடம் கருணை. அதியமானிடம் பகை. ஏன் இவர்கள் வேறுபட்டார்கள்.ஒற்றுமையாக இருந்திருக்கலாமே.
மண்ணாசை,பெண்ணாசை இவைதான் பல அரசின் அழிவுகளுக்கு காரணம் கோமதி.
தனபாலன் கொடுத்த லின்கில் பல விஷயங்கள் புரிய வந்தன.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
அதியமான் தர்மபுரியின் மன்னன். அங்கே காவிரி தமிழ்நாட்டிற்குள் வருகிறது இல்லையா கீதா.
சரியாகச் சுட்டிக் காட்டியதற்கு நன்றிமா.