ராம நேயனுக்கு நமஸ்காரங்கள். உங்களைச் சொல்ல்வில்லை ஐயா. |
உலகம் முழுவதும் வித விதமான மனிதர்கள்.
சிலருடன் மனம் உருகும் .
சிலரிடம் தள்ளி இருக்கும்.
பாராமல் மனங்கள் இணையும் இணையம்.
பார்த்துப் பழகி மனத்தை அணுகி
நட்பாகும் இதயங்கள்.
பார்த்துப் பழகி உறவாகி
மனதை அறிந்த துணை
துணையோடு வரும் உறவுகள்.
சில ஒத்துப் போகும் சில விலகி நிற்கும்.
பெரியோரின் அறிவுரைப் படிக் குற்றம் பார்க்காத சுற்றமாக
இருக்கவே நம் முயற்சி.
நீ என்ன பழங்கால நீல வண்ணக் கண்ணா வாடா அண்ணியா.:)
அப்படி இருந்தால் இறந்த பிறகு கௌரவிக்கப் படுவாய்.
நீ என்ன தருகிறாயோ அது உனக்கு மீண்டும் வரும்.
ஊசலாடுவதில் சிலசமயம் பழங்கள்
சிலசமயம் முள் நிறைந்த கொப்புகள்
இரு புறத்திலும் சமமென நினை.
வந்துசேரும் நிம்மதி.
அகங்காரத்தில்.................................................
வீழாமல் வாழ்க்கையைத் தொடருவாய்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
30 comments:
சில ஒத்துப் போகும் சில விலகி நிற்கும்.
பெரியோரின் அறிவுரைப் படிக் குற்றம் பார்க்காத சுற்றமாக
இருக்கவே நம் முயற்சி.//
உண்மை அக்கா நீங்கள் சொல்வது.சில ஒத்துப் போகும், சில விலகி நிற்கும். எல்லோருக்கும் நல்லவர்களைய் இருப்பது கஷ்டம் முயற்சி தான் செய்யலாம், பெரியோர்கள் சொன்னது போல்.
நீ என்ன பழங்கால நீல வண்ணக் கண்ணா வாடா அண்ணியா.:)//
அது என்ன தெரியவில்லையே !
அந்த அண்ணி எப்படி இருப்பார்கள்?
அதையும் சொல்லி இருக்கலாமே!
முயற்சி இல்லையேல் உறவல்லவா முறியும். நமக்கு அது ஒவ்வாத ஒன்றாகும்.
பிரிந்திருந்தாலும் மனமாவது அன்புடன் நினைக்கவேண்டும். எல்லாமே எதிர்மறையாகப் போவதில் என்ன லாபம் கோமதிமா.
நீல வண்ணக் கண்ணா வாடா பாட்டு ஐம்பதுகளில் ரொம்ப பிரபலம். பத்மினி அண்ணியாக நடித்திருப்பார். மங்கையர் திலகம் என்று அந்தப் படத்தின் பெயர்.
கணவனின் தம்பியைச் சிறுவயதிலிருந்தே வளர்த்து வருவாள்.அவன் குடும்பத்துக்காகத் தன் வாழ்வையே
தியாகம் செய்யும் பாத்திரம். மைத்துனரின் குழந்தைக்குப் பாடும் பாட்டு அது. அவ்வளவு இனிமையாக இருக்கும். முடிந்தால் அனுப்புகிறேன்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் ஏமாற்றமின்றி ஏற்றமாக வாழலாம்!
/// பாராமல் மனங்கள் இணையும் இணையம்... ///
இது ஒன்றே போதும் அம்மா...
ஏனிந்த சோகம் தோழி.........
ஸ்வர வரிசை போட்டு இடம் நிரவல் செஞ்சுக்குங்க......
ஏனிந்த சோகம் தோழி.....
'தனி' வாசிக்க நான் வர்றேன்!
நல்ல கருத்து.
உங்களுக்குப் பாடலும் திரைக்கதையும் அனுப்பி விட்டேன் கோமதி. மங்கையர் திலகம் என்று 1955இல் ஒரு படம் வந்தது.. அழகான சோகமான படம்.:(
ஆமாம் ஸ்ரீராம். எல்லாம் தெரிந்தும் எதிர்பார்ப்ப்பதூ வழக்கமாகிவிட்டது!!
மெள்ள மெள்ள மாறலாம். இன்னும் நிறையக் காலம் இருக்கிறது:)))))))))))0000
உண்ண்மையேஎ தனபாலன். உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களைபவர்கள் இர்ருப்பது இணையத்திலும் இதயத்திலும் பா.
நன்றி வெங்கட்.
பாராமல் மனங்கள் இணையும் இணையம்.
;))))) உண்மையைக்கூறிடும் உற்சாகம் தரும் வரிகள்.
பாராட்டுக்கள்.
சோகம் இல்லைப்பா துள்சிமா.
கோபம்.!!!
நீங்க வாசிக்க வாரீகளா.!!!
கைவலிக்குமே.
சும்மா ஒரு நேரம் ஒரு பதிவு. எழுதிவிட்டால் மனசு காலி,கலக்கம் தீர்ந்தது:)
// ஊசலாடுவதில் சிலசமயம் பழங்கள்
சிலசமயம் முள் நிறைந்த கொப்புகள்//
லைஃப் இஸ் நதிங் பட் ஒன் ஆஃப் ஆஃப் கான்ட்ரடிக்ஷன்ஸ்.
நீந்த முயன்றவன் அக்கரை சேர்கிறான். முடியாதென நினைத்தவன் முடிந்தே போகிறான்.
இஹ சம்ஸாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே.
சுப்பு தாத்தா.
அதான் இணைக்கிறது நம்மை இல்லையா கோபு சார்.
அதுவும் எத்தகைய உன்னதம் இந்த நட்புகளில்.
ஆயிரம் கொட்டிக் கொடுத்தாலும் இந்த அன்பு கிடைக்குமா.
நன்றி மா.
வரணும் சுப்பு அண்ணா.
''பாஹி முராரே'' இதுதான் ஜபம்.அவன் கிருபையில் மனம் தெளிவாக இருந்தால் போதும். வீண் வியாதிகள் தள்ளிப் போகும்.
மிகவும் நன்றி இந்த நல்ல வார்த்தைகளுக்கு.
அன்பு அண்ணியின் பாடலை கேட்டேன் மகிழ்ச்சி. எனக்காக பாடல் பகிர்ந்தது மகிழ்ச்சி நன்றி. கதை மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது. பாடல் மிகவும் பிடிக்கும் குழந்தைகளுக்கு பாடுவேன் காட்சி பார்த்தது இல்லை.
அந்தக் காலத்தில் தியாகம் , என்றால் ஓரே தியாகம், விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தனமை எல்லாம் சேர்ந்த கலவையாக படங்கள் எடுத்து இருக்கிறார்கள். சிறு வயதில் அதைப் பார்த்து நாம் வருத்தப்பட்டு அழுது இருக்கிறோம் உண்மை.
இப்போது மனது கொஞ்சம் மனம் பக்குவப்பட்டு விட்டது. எதிர்ப்பார்ப்புகள் குறைந்து வருகிறது.
அடுத்தவர்களூடைய குணநலன்களை அப்படியே (அவர்கள் அப்படித்தான்) என்று ஏற்றுக் கொண்டு விட்டோம்.
மனதில் வருத்தங்கள் இருந்தால் விட்டுத்தள்ளுங்கள் சிரிப்பு பாடல்கள் கேளுங்கள். பலசிரிப்புகளைப் பற்றி கலைவாணர் பாடல் அருமையாக இருக்கும். பார்வைகள் கவிதா பகிர்ந்து இருக்கிறார்கள்.
''''அகங்காரத்தில்.................................................
வீழாமல் வாழ்க்கையைத் தொடருவாய்.'''
அருமையான முடிவு மற்றும்
மனதில் உறுதி பட
நிலைநாட்டிக்கொள்ள வேண்டிய முடிவு அம்மா...
என்ன ஆச்சு? உடம்பு சரியா இருக்கு இல்லையா? எதுவானாலும் ஒதுக்குங்க. மனசைத் தெளிவாக வைச்சுக்கோங்க. எல்லாருக்கும் எப்போது நல்லவங்களாய் இருப்பது ரொம்பக் கஷ்டம். நல்லதே நடக்கட்டும்.
நீலவண்ணக்கண்ணா வாடா, பாட்டு தெரியும். கதை தெரியாது. ஓகே, +இல் பார்த்தேன். அங்கேபோய்க் கேட்டுக்கறேன். :)))) நன்றி.
அத்தனையும் உண்மை. அழகான வார்த்தைகளில் வாழ்வியலை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் வல்லிம்மா.
எதிர்பார்ப்பு வைத்துக் கொண்டால் ஏமாற்றம் தான் மிஞ்சும் என என்னவர் எப்போதுமே சொல்வதுண்டு...
விட்டுத் தள்ளுங்கள் அம்மா கவலைகளை...
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க
அருமையான கருத்துக்கள்.
கட்டாயம் கீதா.
ஒதுக்கியாச்சு,.ஏன் இப்படி உன்னையே கஷ்டப் படுத்திருக்கிறேன்னு
இவரிடம் வார்த்தை வாங்கிய பிறகு விட்டுவுட்டேன்:)
பாட்டு வந்த படம் மங்கையர்திலகம்.
வரணும் ராமலக்ஷ்மி.
பதப்படுத்த கடவுள் அனுப்பும் அனுபவங்கள்.அப்படியே இனிமையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
கொஞ்சம் கடினம்தான். பழகிவிடும்;)
உண்மையே,கல்லால் அடித்தாலும் ,
சொல்லால் அடித்தாலும்
வருத்தமில்லாமல் தொடரவேண்டும்.
வருகைக்கும் நல்ல கருத்துக்கும் மிக நன்றி மகேந்த்திரன்.
அன்பு ஆதி,
விட்டுவிட்டேன்.
சொல்பவர் நாம் வருந்தவேணும் என்பதற்காகவே சொல்லப் அட்ட வார்த்தைகளை,மீண்டும் நினைப்பதால்
அவர்களுக்கு நாம் இன்னும் சந்தோஷத்தைக் கொடுக்கிறோம்!!மறப்பதும் மன்னிப்பதும் தான் நடைமுறைக்கு சாத்தியம். நன்றிமா.
நன்றி ரமா.
சேலம் சென்றிருந்தபோது சாரதா கல்லூரியைப் பார்த்தபடி கடந்தேன்.
உங்கள் நினைவோடு.:)
அத்தனையும் உண்மை.
Post a Comment