Blog Archive

Saturday, January 05, 2013

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

அருள்மிகு பாண்டவதூதன்
தோற்றமாய் நின்ற சுடர்
போற்றியாம் வந்தோம்
ஆற்றாது வந்து உன் அடி பணிவோம்
மாற்றாதே பால் சொரியும் வள்ளல்கள்

 பெரியாழ்வர் பெற்று  எடுத்த பெண்பிள்ளை   ஸ்ரீ கோதையின் திருவடிகளில் சரணம்.

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுராய்!
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலேழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்!
****************************************************

ஆய்ப்பாடிப் பசுக்களும் ஆச்சார்ய வள்ளல்களும் இங்கே பேசப்படுகின்றனர்//
இது நான் கேட்ட பிரவசனம்.

ஆய்ப்பாடி பசுக்கள் வள்ளல்கள்
பால் கற்றக்க எடுத்துவந்து பாத்திரங்கள் நிரம்பிப்
பொங்கி வழிந்தாலும் இன்னும் பாலை
வேற்றுமை இல்லாமல் கொடுத்துக்  கொண்டே இருக்குமாம்.
நம் பெருமாளை ஆஸ்ரயிக்கும்  ஆச்சார்ய ,ஆழ்வார்களும் தங்களின் ஆத்மார்த்தமான ,   திருமால் சம்பந்தத்தைப் பற்றிக் கேட்பவர்களிடம் எல்லாம்
சொல்லிச் சொல்லி மகிழ்வார்களாம்.
தாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறவேண்டும் என்று,பகவான் என்ற பொக்கிஷத்திலிருந்து அமுதம் போன்ற  ரத்தின உபதேசங்களை  வழங்கிக் கொண்டே இருப்பார்களாம்.
நந்தகோபனோ வள்ளல் பெரும்பசுக்களுக்கும் சொந்தக்காரன். கண்ணனையும் பெற்றவன்.
அந்தக் கண்ணனோ என்றும் பொலியும் சுடராக ஒளிகொடுக்கும்
வள்ளலாக நிற்பவன்.
நற்சிந்தனைக்கு மாற்றாகப் பேசுபவர்களை   வெல்பவன்.

அவ்வாறு அவனிடம் தோற்றவர்கள் அவன் வாசலில் ,அவன் கருணை பெறுவதற்காக வந்து இறைஞ்சி நிற்பவர்கள்..
கோதை தன்னையும் தன் பரிவாரத்தையும் அவர்களோடு ஒப்பிடுகிறாள்.
அவர்கள் உன்னைப் போற்றுவது போல நாங்களும் எங்கள் அகந்தையை ஒழித்து உன்னை நாடி  உன் அருளைப் பெறவேண்டி  இங்குவந்து நிற்கிறோம்.
எங்கள் தலைவா கண்ணா!  எங்களுக்கு அருள்வாய் என்று பணிகிறாள். .

தாயே கோதா  ஸ்ரீ, உன் பணிவும் தயவும் எங்களுக்கும் வேண்டும் அம்மா..






 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

13 comments:

ஸ்ரீராம். said...


அந்தந்த வரிகளுக்குப் பொருத்தமாகப் படங்கள் தேடி இணைத்து என்று பதிவை அழகாக அலங்காரம் செய்கிறீர்கள்.

"நானிலம் நாரணன் விளையாட்டு... நாயகி பெயரில் திருப்பாட்டு... "

துளசி கோபால் said...

இந்த பாண்டவ தூதனைத்தான் தரிசிக்க இதுவரை வாய்ப்பே கிடைக்கலைல்.

இன்று உங்கள் தயவில் தரிசித்தேன். நன்றிகள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Super amma. Thank u

ராமலக்ஷ்மி said...

அழகான விளக்கம். பகிர்ந்த படங்களுக்காகவும் எங்கள் நன்றி.

கோமதி அரசு said...

பாண்டவ தூதன் படம் வெகு அழகு.
நாளும் பாடல்களுக்கு அர்த்தமும், அருமையான படங்களும் என்று அசத்தும் அக்காவிற்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்.அர்த்தங்கள் என்று பார்க்கப் போனால் ஆழம் காணவேண்டும். அவ்வளவு ஞானம் போதாது.இத்தனை வருடங்களாக்க் கேட்டு வந்ததை எழுதும்போது சிறிதே நினைவுக்கு வருகிறது.அதை நிரப்பப் படங்களைப் போடுகிறேன். நன்றி மா.:

வல்லிசிம்ஹன் said...

துளசி படத்தில் இருக்கும் தூதன் சிறியவராகத் தெரிகிறார். நேரில் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பை அடக்க முடியாதுகால் பெரியா விரல் நகமே ஒரு அங்குலமோ மேலுமோ இருக்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

ஹல்லோ புவன்.நலமா. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அலுக்காமல் வருகை தருவதற்கும் நன்றி ராமலக்ஷ்மி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி .பாவைப் பாடல்களை எழுத நினைத்ததே ஒரு வரம் என்று தோன்றுகிறது.நாமெல்லாம் பாண்டவதூதனைப் போய்ப் பார்க்கலாம்!

Ranjani Narayanan said...

அன்பு வல்லி!
தினமும் பாவை பாடல்களுக்கு நீங்கள் கொடுக்கும் எளிய விளக்கமும், எழில் மிகுந்த புகைப்படங்களும் மனதை கவருகின்றன.

நீங்கள் மூன்றாவதாகப் போட்டிருக்கும் புகைப்படம், ஸ்ரீரங்கம் பரவாசுதேவன் சந்நிதியில் எடுத்தது, இல்லையா?
மார்கழி முப்பது நாட்களும் திருப்பாவை பாடல்களுக்கு வெகு சிறப்பாக வடிவமைப்பார் அந்த சந்நிதி பட்டாச்சார் ஸ்வாமி.

நமக்கு விளக்கம் சொல்லி சேவிக்கவும் செய்வார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி எல்லாமே கூகிள் துணையில் எடுத்ததுமா.

கண்ணாடி அறைசேவை என்று போட்டு இருந்தது. பரவாசுதேவன் சந்நிதி லேசாக நினைவிருக்கிறது.
நடுவில் பெருமாளும் தேவியரும் சுற்றி நித்யசூரிகளும் ரிஷிகளுமாக பெரிய சந்நிதியாகப் பார்த்த நினைவு. பத்துவருடங்களாச்சு நான் ஸ்ரீரங்கம் போய்:(

ஸ்ரீராம். said...

மேலே உச்சியில் உள்ள படம் மிக அழகு.