Blog Archive

Tuesday, January 01, 2013

பாசுரம் அம்பரமே தண்ணீரே 17 ஆம் நாள்


செம்பொற்கழலடிச் செல்வா பலதேவா உம்பியும் நீயும்
எம்பெருமான்  நந்தகோபாலா
Add caption
ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்
ஸ்ரீஆண்டாள்  திருவடிகளே சரணம்

 அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும்,
எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய்,
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே,
எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய்,
அம்பர மூடறுத் தோங்கி யுலகளந்த,
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்,
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா,
உம்பியும் நீயு முறங்கேலோ ரெம்பாவாய். 17
******************************************

கோவிலொழுகைத் தந்த  அண்ணன்  இராமானுஜர் சொன்ன முறைப்படி
தங்கை    ஆண்டாளும்
முதலில்  தனது கணவனாகப் போகிற கண்ணனின் தந்தையைத் தன் மாமனார்
நந்தகோபாலனையும் யசோதையையும் வணங்கி  திருப்பள்ளி எழுச்சி பாடுகிறாள்.

அனைவருக்கும் உணவும் தண்ணீரும், உடையும் வாரி வாரி  வழங்கும்

அண்ணலே நந்தகோபரே  எழுந்திருங்கள்.
இடையர் குலப் பெண்களுக்கெல்லாம் தலைவியே
அவர்கள் துன்பம் இன்பம் எல்லாவற்றிலும் பங்கெடுத்து
இன்பம் அளிப்பவளே  பெருமாட்டி யசோதாய்  எழுந்திருந்து அருளுவாய்!

ஓங்கி உலகளந்த போது உம்பர்  உலகுக்கும்  உன் பாதத்தை தரிசனம் செய்து வைத்தாய்  கண்ணா, பெருமானே  நீயும் எழுந்திராய்.
பொன் நிறம் படைத்த  கழல்கள்  படைத்த  பலராமா, உன் தம்பியையும் எழுப்பி நீயும் எழுந்து அருளவேண்டும் என்று  வேண்டுகிறாள்.
வெகு எளிதான பாசுரமாகத் தான் தெரிகிறது. இதில் உள்ள
உள்ளர்த்தங்கள் எனக்கு முன் பதிந்தவர்கள்  எழுதி இருக்கிறார்கள்.


எனக்கு முன்னோராய்  விளங்கும் மாதவிப் பந்தலார்  ரவி கண்ணபிரான், என்றென்றும் அன்புடன் பாலா இவர்கள் நயம் பட 
எழுதி இருக்கிறார்கள் .இந்தப் புத்தாண்டில் அவர்களுக்கும்
என் வாழ்த்துகளையும் வணக்கங்களையும்  சொல்லிக் கொள்ளுகிறேன்.

அனைவரையும் இறைவன் தன் அன்புப்பிடியில் வைத்து
அருளவேண்டும்.
கோதை நாச்சியார் காட்டிய பாதையில் நாமும் நடப்போம்.

ஆண்டாள் வாழ அரங்க நகர் வாழ , அரவணைத்தணைபள்ளியான் வாழ
நாமும் வாழ்வோம்.









 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

17 comments:

ராமலக்ஷ்மி said...

/ அனைவரையும் இறைவன் தன் அன்புப்பிடியில் வைத்துஅருளவேண்டும்.கோதை நாச்சியார் காட்டிய பாதையில் நாமும் நடப்போம்./

நன்றே செய்வோம்.

புத்தாண்டு வாழ்த்துகள் வல்லிம்மா.

Unknown said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

அழகிய படங்களைத் தேடித் தருகிறீர்கள்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Ravichandran M said...

இறைவழியில் மனித நேயம் தழைத்தோங்க ..அருமையானதொரு பகிர்வு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, நன்றி மா.
உங்களுக்கும் குடும்பத்துக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சொல்வதில் எனக்கும் மகிழ்ச்சி.நன்றி புலவர் ஐயா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கிருஷ்ணா ரவி .
மிக மிக நன்றி.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமெங்கள் வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

ஆண்டாள் வாழ அரங்க நகர் வாழ , அரவணைத்தணைபள்ளியான் வாழ
நாமும் வாழ்வோம். //
உண்மைதான் அக்கா ! ஆண்டாள் ,ரங்கர் அருளால் நாமும் நலமாய் வாழ்வோம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

இராஜராஜேஸ்வரி said...

அனைவரையும் இறைவன் தன் அன்புப்பிடியில் வைத்துஅருளவேண்டும்.கோதை நாச்சியார் காட்டிய பாதையில் நாமும் நடப்போம்..

இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் புத்தாண்டு நாள் விரைவாகப் பறந்துவிட்டது.
இனிப் பழையபடி சுறு சுறுப்பாக இயங்கவேண்டும்:)
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி மா. குழந்தைகளுக்கும் மனைவிக்கும் உங்களுக்கும் ஸ்பெஷல் புத்தாண்டு வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி உங்களுக்கும் உங்கள் புத்திர செல்வங்களுக்கும் அவர்களுடைய செல்வங்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த புத்தாண்டுவாழ்த்துகள்.
இறைவன் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறான் என்பதை உணருகிறேன். அவன் நம்மை எப்பொழுதும் காப்பான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மதுரைத் தமிழன், உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா. எங்கள் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு கவிஞர் பாரதிதாசனாருக்கு மிகவும் நன்றி,. உங்கள் வாழ்விலும் புத்தாண்டு நல்லனவைகளையே கொண்டுவரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி, வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிமா.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கிராமத்துக்கு சென்றதால் வாழ்த்து தெரிவிப்பதில் தாமதமாகிவிட்டது.

ஸ்ரீராம். said...

உங்களுக்கும், குடும்பத்தாருக்கும், சக வலையுலக நன்கர்களுக்கும் இனிய 2015 ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் அம்மா. இன்று இங்கே அகாரவடிசில்! :)))))