Blog Archive

Monday, December 24, 2012

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய...


 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
திருவரங்கன் திருவருள் நிலைக்கட்டும்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே
தொல் பா வைப் பாடி அருளவல்ல பைங்கிளியாய்
நாடி நீ வேங்கடவர்க்கு   எம்மை விதி
என்ற இந்நாமம்  நாம் கடவா வண்ணமே நல்கு.
இன்றைய ஒன்பதாவது பாசுரம் தூமணி என்று ஆரம்பிக்கிறது.

தூய மணிகளினால் ஆன மாடம்.
அதில் மெல்லிய பஞ்சு மெத்தென்ற  பஞ்சணை
சுற்றிலும் தூபம் கமழ்கிறது,.
தீபங்கள் ஒளிர்கின்றன.
கண்வளர்கிறாள் ஆண்டாள் விளிக்கும் மாமன் மகள்.
சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்கும் தோழிகள்
இந்தத் தூக்கத்தைக் கண்டு அதிசயிக்கின்றனர்.

ஏன் இவளுக்கு  மட்டும் பொழுது விடிய வில்லையா.
மந்திரப் பட்டு மயக்கத்தில் உறங்குகிறாளோ.

பெண்ணின் அன்னையே   மாமி அவளை எழுப்பீர்களோ.
நாங்கள் அழைத்தும் அவள் காதில் விழவில்லையே.
காரணம் என்ன ஊமையாகிவிட்டாளா. காதுதான் கேட்கவில்லையோ. இல்லை சோம்பல் வசப்பட்டாள்.
நேரமாகிறது அவளை எழுப்புங்கள்.
மாமாயங்கள் செய்யும் மாதவனை  வைகுந்தனைப்  பாட வேண்டாமா.

நாமங்கள் சொல்லி அவனை எழுப்ப வேண்டாமா எம்பாவாய் என்று இறைஞ்சுகிறார்கள்.
அவள் வந்தாளா என்று நாளை பார்க்கலாம்.









 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

15 comments:

Unknown said...

அருமை சகோதரி! ஆண்டாளை எழுப்பும் காட்சியும் பாடலும் கண் முன் நிற்கிறது!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஐயா.,தாங்கள் இங்கே பதிவைப் படிப்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது. கோவில்களுக்குப் போகும் வாய்ப்பு குறைவு. அதுதான் தெரிந்த எள் அலாVஊ செய்திகளைப் பகிர்கிறேன். நீங்கள் மிகப் பெரியவர். தவறேதும் இருப்பின் மன்னிக்கணும்.
நன்றி ஐயா.

கே. பி. ஜனா... said...

வரிகள் அழகுற அமைந்து பக்திவசப் படுத்துகின்றன...

ADHI VENKAT said...

ஹே! ரங்கப் பிரபு! என்ற கோஷங்களுக்கிடையில் இன்று ரத்னாங்கி சேவையை வரிசையில் நிற்காமல் சற்று தள்ளி நின்று ரங்கனின் அழகை கண்டு வந்தோம்.

சொர்க்கவாசல் படி மிதிப்பதற்கு நிற்கும் வரிசையை பார்த்தால் இன்று பார்க்க முடியாது போல் உள்ளது. அதனால் மாலையில் முயற்சிக்கலாம், அல்லது இரண்டு நாள் கழித்து பார்க்கலாம் என்று வந்து விட்டோம்.

பகல்பத்து உற்சவத்தில் இரண்டாம் நாள் சென்று கண்டு வந்தேன். அதன் பின்பு ரோஷ்ணிக்கு தொடர்ந்து பரீட்சை இருந்ததால் போக முடியவில்லை. நேற்று மோகினி அலங்காரம் பார்க்க இரண்டு மணிநேரம் நின்றோம். அரையர் சேவையும் கண்டு வந்தோம். ஆண்டாள் கண்ணாடி அறை சேவையில் நேற்று எட்டாம் பாசுரப்படி அழகாக அமைத்திருந்தார்கள்.

ஸ்ரீராம். said...

கனவில் விளையாடும் மாயன் தூக்கம் கலைந்து எழுந்தால் சென்று விடுவானே....! :))

வல்லிசிம்ஹன் said...

நன்றி கே.பி. ஜனா.
கோதையின் மனம் பூராவும் கண்ணன். கோவிலுக்குச் செல்லத் துடிக்கிறது.பொறுமையாகத் தோழிகளை எழுப்புகையில் பதமான வார்த்தைகளைப் பிரயோகம் செய்கிறாள்.அழகாக இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஆதி. எவ்வளவு கொடுத்துவைத்தவர் நீங்கள்.நீங்கள் இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் இன்னும் உன்னிப்பாகத் தொலைக்காட்சியைப் பார்த்திருப்பேன்:)
ரோஷ்னிக்கு லீவு வீட்டாச்சா.
கண்ணாடி சேவை வெகு அழகாக இருந்திருக்குமே.உயிரோவியமாகப் பொம்மைகளை நிறுத்திவைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ரீராம், அந்தப் பாட்டு இன்னும் இரண்டு நாட்கள் கழித்து வரத்தான் போகிறது. வரும் முன் சொன்னதால் உங்களுக்கு அடுத்த கொலுவுக்கு இரண்டுவகைச் சுண்டல்கள் கொடுக்கலாம்னு நினைக்கிறேன்:)

sury siva said...



இன்னிக்கு காலைலேந்தே ரங்கனின் திரு நாமம் தான்.
தூமணி மாடத்து பாடலுடன் துவங்கி அதை படித்த உடனேயே
புலவர் இராமானுசம் அவர்களின் பாசுரத்தில் மனம் மயங்கி
அங்கேயே பரம பதம் அடைந்த த்ருப்தியுடன் இருந்தேனா...

அப்படியே.... அங்கேயே இருக்கக்கூடாதா...
பெருமாள் சோதனை பண்றார் போல இருக்கே....

போதாத நேரம் என்னுடையதா தெரியவில்லை.
இந்த வெங்கட நாகராஜ் தில்லிக்காரார் அவர்கள் பதிவுக்கு போனேனா...
அங்க... அந்தக் காலத்து சாண்டில்யனோட வர்ணனையப் படிச்சேனா...
அந்த மாதவன் போட்ட படத்திலே மதி மயங்கிப்போய்

நேத்திக்கு ஜெயதேவர் அஷ்டபதி கேட்ட நினைவிலேயே இருந்ததினாலோ என்னவோ
சிருங்கார ரசத்திலெ ஒரு கவிதை எழுதப்போக ,

ஏன், இந்த வயசுலே இப்படி புத்தி போறது, என க்கிழவி நோகப்போய்,

மனசைத் தேத்திக்கொண்டு, பெருமாள் காப்பாத்துவார் என்று சொல்லிக்கொண்டு,

ஓம் நமோ நாராயணாய... ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ நாராயணாய... ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ நாராயணாய... ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ நாராயணாய... ஓம் நமோ நாராயணாய...

அப்படின்னே சொல்லிக்கொண்டு ராதா நகர் பெருமாள் கோவிலுக்கு போலாம்னு
கிளம்பினேனா...


நடுவிலே வழி தவறிப்போய் வேறு ஏதோ வீதிலே போய், திண்டாடி, நடுத்தெருவில்
வழி கேட்டு, தெரியாதே என பலர் உரைக்க, இங்க தான் இப்படிதான் என்று இன்னும் பத்து பேர்
தப்பு வழி காட்ட, நடந்து , .... நடந்து.....
இரண்டு கி.மி. நடந்து.....

கடைசியா பெருமாள் கோவில் வந்து சேர்ந்தேனா.....

மூணு மைலுக்கு க்யூ நிக்கறது...
பெருமாளே !!! என்ன சோதனை !!
மூட்டு வலி, முழங்கால் வலி, முன்னே இருக்கும் ஆடு சதை வலி,
ஆடாத சதையும் வலி, என்று ஏகத்தாறா வலி

அப்பா, தூரத்திலே நின்னாச்சும் பெருமாளை தரிசிட்டு,
பெருமாளே !! நாளைக்கு கண்டிப்பா நான் வந்து பக்கத்திலே சேவிக்கறேன் அப்படின்னு சொல்லிட்டு,

இந்த இஸ்கான் கொடுத்த இரு நூறு ரூபாய் பொஸ்தகத்தையும் வாங்கின்டு,

கால் வலிக்க .... கால் வலிக்க...
வலின்னா வலி சரியான வலி..

ஆத்துக்கு போய் இவட்ட சொல்லவும் பயம்.
ஆத்துலேந்து பெருமாளேன்னு சொன்னா பெருமாள் வரமாட்டாரா என்ன ?
உங்களுக்கு அவ்வளவு தான் நம்பிக்கை என்பாளே ?

மனசும் உடம்பும் சேர்ந்து வலிக்க....
அப்பதான் பாத்து ஒரு மோட்டார் பைக் காரன் பக்கத்துலே வந்து,

எங்க சார் போகணும், நான் கொண்டு போய் விடறேன் என்கிறான்.
பெருமாளே ப்ரத்யக்ஷமா வந்திருக்கிறாரோ என்று தோன்றியது.

அவன் பின்னாடி உட்கார்ந்து பாதி என்ன , முக்கா வாசி தூரம் வந்தேன்.

சார் ! நீங்க இப்படியே நேரா போங்க... நான் இப்படி போறேன் என்று போனான் அந்த மோட்டார்காரன்.

அம்பதே மீட்டர் தூரம் தான் பாக்கி.
அடுத்த ஐந்து நிமிஷத்தில் கிருஹம் வந்தடைந்தேன்.
பெருமாளே ! எப்ப நீ
முழு தூரம் கூட்டிண்டு போப்போறே !!

சுப்பு தாத்தா.

கோமதி அரசு said...

இன்று எங்கள் ஊரில் பரிமள ரங்கநாதரை, ஒருமணி நேரம் காத்து இருந்து ”முத்தங்கி சேவை” பார்த்து வந்தோம்.

உங்கள் பாடல் விளக்கம் அருமை அக்கா.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பாடல் விளக்கம் ..
ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ நாராயணாய...

வல்லிசிம்ஹன் said...

அன்பு சூரி சார். மிகவும் கஷ்டமா இருக்கு. வடபழனி எங்கே ராதாநகர் எங்கே.
இவ்வளவு வலியை வரவழைத்துக் கொள்வார்களா.நல்ல் ட்ராவல்ஸ் வண்டியெடுத்துக் கொண்டு அமைதியா இன்னிக்குக் கூட போலாமே.இது மாதிரி செய்ய வேண்டாம்னு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.:(

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,எனக்கு எங்கள் அநுமார் கோவிலே பரமபதம்.
நீங்கள் பரிமளரங்கநாதரைத் தரிசித்தது மிகவும் மகிழ்ச்சி.
எல்லோரையும் இறைவன் மகிழ்ச்சியாக வைக்க வேண்டுகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

துளசி கோபால் said...

ஆஹா.... நம்ம ஃபேவரிட் முத்து இது அந்த முப்பது சரத்தில்.

அருமை அருமை அருமை!

நான் இதுவரை தரிசித்த ஆண்டாள் சந்நிதிகளில் எல்லாம் அவள் முன்னால் அந்த தூமணி மாடம் பாடிட்டுத்தான் வந்துருக்கேன். வருவேன்

பாவம் ஆண்டாள். காது கூடப்புளிச்சுப்போயிருக்குமோ என்னவோ!!!!