துரித கதியில் விரையும் அரங்கன் என்ன அழகு என்ன அழகுகிளிமாலை,வைரம் திகழும் மேனி முத்து மாலை பச்சைக் கல் பதித்த ஒட்டியாணம்,கஸ்தூரி திலகம்,வெள்ளிப்பூணூல் ஆட அவன் அவரும் அழகு காணக் கண் கோடி வேண்டும் |
ஆயிரங்கால் மண்டபம். |
நம்மைக்காணவிரும்பும் அரங்கநாதன் |
- ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.
- ஏகாதசி திதி முழுவதும் பட்டினி இருக்க வேண்டும்.ஆனால் உண்ணாமல் இருக்க முடியாதவர்கள் நெய், தேங்காய் எண்ணெய், நிலக்கடலை, காய்கனிகள்,பழங்கள்,பால், தயிர் போன்றவற்றை பகவானுக்கு படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
- இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.
- ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர்.
- துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் ""கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
- துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர்கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
- உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
- வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
முரன் எனும் அரக்கனை வெல்லவந்த திருமால் வதரிவனக் குகையில் ஓய்வெடுக்க அங்கேயும் துரத்தி வருகிறான் அரக்கன். உறங்கும் பெருமானின் உள்ளிருக்கும் சக்தி பெண்ணாக உருவெடுத்து அரக்கனை மாய்க்கிறாள். பெருமாள் அந்த சக்திப் பெண்ணை மனமார மெச்சி ஏகாதசி என்று பெயரிடுகிறார். உன்னை நினைத்து என்னையும் வணங்குபவர்கள்
நற்கதி அடைகிறார்கள். என்று உறுதி சொல்கிறார்.
இதுவும் இணையத்தில் நான் படித்ததுதான்.
இன்று ராஜ் தொலைக்காட்சியில் காலை மூன்று மணியிலிருந்து ஸ்ரீரங்கப் பெருமானை கண்டு களித்தாயிற்று.
அடியார் வாழ அரங்க மா நகர் வாழ.
பிரார்த்திக்கொண்டு பூர்த்திசெய்கிறேன்.
இன்று தூமணி மாடம் ஒன்பதாம் நாள் பாசுரம்.
*************************************************
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
5 comments:
ஏகாதசி விரதம் குறித்த விவரங்களை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
ஆயிரங்கால் மண்டபம் உள்ளே அழைத்துக் கொள்கிறது. அருமையான படம்.
அடியார் வாழ அரங்க மா நகர் வாழ.
"வைகுண்ட ஏகாதசியும் தூமணி மாடமும் பகிர்வுக்கு இனிய பாராட்டுக்கள்..
ஏகாதசி விரதம் பற்றிய பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.
அரங்கன் என்னமோ நம்மைக் காணத் தான் நினைக்கிறான். நடுவில் உள்ள மனிதர்கள் தான்...........:(
அன்பு ராமலக்ஷ்மி,
அன்பு இராஜராஜேஸ்வரி
அன்பின் சாரல்,
கீதாமா எல்லோருடைய வருகைக்கும் மிக நன்றி. இறைவன் இன்னும் நிறைந்த நன்மைகளை நமக்கு அளிக்க வேண்டுவோம்.
Post a Comment