Blog Archive

Tuesday, December 18, 2012

ஓங்கி உலகளந்த உத்தமன்

உலகளந்த  பெருமாள்
தேவியருடன்
ஓங்கி உலகளந்தவன்.



மூவுலகும் ஈரடியால் முறைதிரம்பா வகை முடியத் தாவிய சேவடி
போற்றி. அவன் உத்தமனானதும் மூவகையில்.

நெடுமால் உருவைச் சுருக்கியதனால்,
கிருஹஸ்தன்  தன் மனைவியோடு பிரம்மச்சாரி வேடம் பூண்டதால்
மஹாபலியிடம் கையேந்தியதால்  திரிவிக்ரமன்  ஆன உத்தமன்.

வாமனன் ஆக வந்த போதும்
மஹாலக்ஷ்மி பிரிய மறுத்தாளாம்.
நான் எல்லோரையும் கடாக்ஷிக்கிறேன் என்று வந்தாளாம்.
நீ கடாட்சித்தால் இந்திரனுக்கு உலகை மீட்டுக் கொடுப்பது எப்படி.
நீ உள்ளேயே இரு என்று மான்தோலினால் வாமன மால் தோள்களை மூடிக் கொண்டானாம்.

அந்த உத்தமன் பெயர் பாடும் நாள் மார்கழியின் மூன்றாம் நாள்.

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து....
மாதத்துக்கு மூன்று முறை மழை பெய்தால் வயல்களில் நீர் நிரம்பும்
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல்கள்
அவ்வளவு நீரிலும் மீன்கள் துள்ளிவிளையாடுமாம்.
சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்.

என்னவொரு அழகு காவியம். பெரிய பெரிய பசுமாடுகள் கன்றுகளுக்கு ஊட்டியதூ போக மிகுதியான பால் குடம் குடமாய் நிறையுமாம்
நீங்காத செல்வம் பெருகிவளம் பெற நாமும் இப்பாடலைப் பாடுவோம்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும்செந்நெல் ஊடுகயலுகள ப்
பூங்குவளப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும்  வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் ரெம்பாவாய்11

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

உரையில் பிழை இருக்க  வழியுண்டு.
இருந்தால் அனைவரும் மன்னிக்க வேண்டும்.







எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

37 comments:

Admin said...

வணக்கம் அம்மா.. எப்படியிருக்கிறீர்கள்.. நீங்கள் கலந்து கொண்ட பதிவர் சந்திப்பு காணொளி வெளியாகியிருக்கிறது.கீழ்க்கண்ட இணைப்பில் வந்து பாருங்கள்..
http://www.madhumathi.com/2012/12/chennai-blogger-meet-2012-video.html

சீனு said...

பிழை எதுவும் எனக்குக் கண்டுபிடிக்கத் தெரியவில்லை .. அருமை

சாந்தி மாரியப்பன் said...

அருமை வல்லிம்மா..

துளசி கோபால் said...

ஆஹா ஆஹா !!!!1

ஓங்கி உலகளந்த உத்தமன் bare bodyக்குள் மறைச்சு வச்சுட்டானா!!!!

பட்டில் பெருமாள் கொள்ளை அழகு;

நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி மது மதி.என்னையும் நினைவில் கொண்டு லின்க் அனுப்பியத்ற்கு மிகவும் நன்றி. பத்து வீடியோக்கள் பார்த்திருக்கிறேன். மற்றதை மதியம் பார்க்கிறேன்.மீண்டும் அந்த நாளைக்கே சென்றுவிட்ட சந்தோஷம்.

இராஜராஜேஸ்வரி said...

உத்தமன் பெயர் பாடும் நாள் மார்கழியின் மூன்றாம் நாள்.

உத்தமப் ப்கிர்வுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்..

http://jaghamani.blogspot.com/2012/12/blog-post_18.html
சூடித்தந்த சுடர்க்கொடியே !!

ஸ்ரீராம். said...

படப் பகிர்வு பிரமாதம். 'ஓங்கி உலகளந்த' படிக்கும்போதே காலையில் தொலைக்காட்சியில் கேட்ட பாடல் காதில் ஒலித்தது!

Unknown said...



ஓங்கி உலகளந்த' உத்தமன் புகழ் பாடியுள்ளீர் சகோதரி! அருமை!

vijayan said...

ஆசாரியன் சகல நலன்களும் தங்கைக்கு அருளட்டும்.

கோமதி அரசு said...

ஓங்கி உலகளந்த உத்தமன் பாடலை தினம் பாடினால் மழை வளம், வீட்டில் செல்வ வளம் எல்லாம் பெருகும் என்பார்கள்.
படங்கள் எல்லாம் அழகு.

Ravichandran M said...

வணக்கம்! அருமை! அருமை! வாழ்த்துக்கள்!
http://www.krishnaalaya.com/2012/12/blog-post_18.html#.UNBqXeSE1n4

அப்பாதுரை said...

நாலாயிரத்துல திருப்பாவை எனக்கு மிக நெருக்கம். தினம் கேட்டதனால மட்டுமில்லை, பின்னாளில் படித்தப்ப அதன் எளிமையும் ஆழமும் ஒன்றாகத் தாக்கியதால்.

எங்கம்மா பாடுவதைக் கேட்பதற்காகவே சீக்கிரம் எழுந்து கண் மூடிப் படுத்தபடியே எத்தனையோ மார்கழி மாதங்களைக் கழித்திருக்கிறேன் - கூடாரவல்லி தவிர. அன்னைக்கு சத்சங்கத்தில் பொங்கல் டிஸ்ட்ரிப்யூசன் எங்க வட்டம். ஒரு கை பாத்துருவோம் :-)

படங்கள் பிரமிக்க வைக்கின்றன. பிழை ஏதும் இருப்பதாகத் தெரியலியே? (என்னைக் கேட்டா?)

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமையான தரிசனம். பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

அப்பாதுரை said...

செல்வம் நிறைந்தாலே போதுமே - இதில் என்ன நீங்காத செல்வம்? சரி நீங்காத செல்வம்னு சொல்லியாச்சே? அப்புறம் நிறைந்த நீங்காத செல்வம்னு சொல்வானேன்? நீங்காத செல்வம் குறையவா போகுது? நீங்காத செல்வம் நிறைந்தேலோர் என்று ஏன் பாடினார் ஆண்டாள்?

(டிப்: ஆண்டாள் மகா புத்திசாலி).

வல்லிசிம்ஹன் said...

சொல் பிழை இல்லாவிட்டாலும் பொருள் பிழை இல்லாமல் இருக்க வேண்டுமே.அதற்குத்தான் எழுதினேன்.நன்றி சீனு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சாரல்.

வல்லிசிம்ஹன் said...

பெருமாளுக்கு எத்தனை செய்தாலும் போதாது.அந்தப் பீதாம்பரம் கொடுத்துவைத்திருக்கிறது துளசி. அப்படியே பெருமையில் பூரிப்பு காட்டுகிறது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி, நன்றி மா. உங்கள் பதிவுக்குச் சென்று பிரமித்துவிட்டேன். ஆன்மீக வழிகாட்டியாக இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

இந்த மூன்றாம் பாட்டுக்கு மகிமை ஜாஸ்தி ஸ்ரீராம். அவரைப் பூஜிக்கும் முறைகளை விளக்கமாகச் சொல்லுவர்கள் உபந்யாசங்களில் கேட்டிருக்கிறேன். எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு ஐயா.ஏதோகாதில் கேட்ட பாவை விளக்கங்களைக் கேட்டதைஇந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.நன்றி ஐயா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் உத்தமமான பகிர்வுக்கு பாராட்டுக்கள். நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

ஆசார்யன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கூடாரை வெல்லும் கோவிந்தனுக்கு நூறு தடா அக்கார அடிசலுக்குத் தயார் செய்ய வேண்டுமே:)
அன்புத்தங்கை அண்ணனை எதிர்பார்த்திருப்பாள். நன்றி விஜயன்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கோமதி. வளம்மிக்க சிந்தனைகள் வளத்தைப் பெருக்கும் அல்லவா.நாளைய பாடலும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.
முப்பதும் தப்பாமல் ஓத வேடியதுதான்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கிருஷ்ணா ரவி.
உங்கள் பதிவுக்கும் கண்டிப்பக வரணும்.

வல்லிசிம்ஹன் said...

எழுத்துப் பிழை இப்போது செய்கிறேன். கண்ணின் தொந்தரவு. எத்தனையோ தமிழ்ப் பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படிக்க நேர்ந்தால் தப்பு தெரிந்தாலும் தெரியலாம். அதான் முன்பாகவே மாப்புக் கேட்டுக் கொண்டேன் துரை. கூடாரைவல்லிக்கு அக்கார வடிசல் கிடைக்குமே. கொடுத்தார்களா.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மா ராமலக்ஷ்மி. உடல் ஒத்துழைத்தால் நிறைய எழுதலாம்:)

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அசத்தல் வல்லிம்மா.....

சிறப்பான பகிர்வு.... நன்றி.

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பாப் புத்திசாலிதான் துரை.செல்வம் ,செல்வோம் என்று சொன்னபடியே தானே வருகிறது. அதற்காகத்தான் நீங்காதே என்றாள்.
நீங்காமல் இருந்தால் போதுமா.நிறைவாகவும் இருக்கணுமே.நல்லவழியிலும் சேரணும். நல்லபடியாகச் செலவு ஆனாலும் நிறைந்திருக்கணும் ஆசி சொல்கிறாள்.
அதைச் சரியாகக் குறிப்பிட்டு விட்டீர்கள். துரை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் விஜிகே சார்.
உங்களூர் உத்தமனை வாமனன் ஆக்கித் திரிவிக்கிரமனாகப் பார்த்து உத்தமனாக வழிபடுகிறாள். அவள் தான் உத்தமி.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். உங்கள் ஊரையே நினைக்கிறேன். மாதவனோடு இணைந்த ஊர் இல்லையா. கோலஹலமாய் இருக்கும் .

Geetha Sambasivam said...

எல்லாரையும் வாழ்த்தக் கூட ஓங்கி உலகளந்த திருப்பாவை தான் பாடுவாங்க இல்லையா? பிழையா? என்ன பிழை? எதும் தெரியலை. :)

Sethu Subramanian said...

>>பூங்குவளப் போதில் பொறிவண்டு கண்பரப்ப<<

The version I have goes as:பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
Can you pl check? kuvaLai is the water hyacinth flower. "KaN paDuppa" implies the bess goes to sleep after consuming the nectar in the flower.
Pl correct me if I am wrong.

வல்லிசிம்ஹன் said...

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்பரப்ப''இந்த வரியை விட்டு விட்டேன்.நன்றி நாரதர்.குவளைப்பூவில் வண்டு கண்திறக்கிறதா
கண்மூடுகிறதா....குவளை மலர் இரவு மூடிக் காலை கண்விழிக்குமா இல்லை காலைவிழித்து இரவு உறங்குமா.
இது எனக்குத் தெரியவில்லை.பார்த்து சொல்கிறேன்.:)

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

பொறிவண்டு கண்படுப்ப *மாற்றிவிட்டேன். மிக நன்றி நாரதர் ஐயா.

Sethu Subramanian said...

kuvaLai is Blue water lily (which I got confused with water hyacinth in my comment on your post). Ambal is White water lily


Source: http://flowersinsangamtamil.wordpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-purple-water-lily/

In your original text it still shows as "பூங்குவள". Pl correct it as ":பூங்குவளை"


There are other references where kuvaLai is referred to as Ambal (white water lily). I am not sure which is right


It is my understanding that the lily is supposed to blossom in moonlight as opposed to lotus which opens up when the Sun comes up.

But it appears the bee will take a nap in the lily after consuming the nectar in the flower

Sethu Subramanian said...

To supplement my previous comment,
"அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும.......அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் ஆற்றில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்."
Source:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

How about that for a confusion?