Blog Archive

Tuesday, December 11, 2012

இன்று புதிதாய்ப் பிறந்த பாரதிப்பூ


 டிசம்பர் 11  ஆம்   தேதி

மீசை முறுக்கி
விழியை உருட்டி
காளியை பணிந்து
மாரியைப் போற்றிய
நம் பாரதி பிறந்த நாள்.

அவருக்கு,அவரைப் பணிந்து எங்கள் வீட்டில் புதிதாகப் பூத்த
பூக்களைச்  சமர்ப்பிக்கிறோம்.

எங்கள் பாரதி!
உன் துணிவு
உன் வீரம்
உன் நேர்மை
எல்லாம் எங்களுக்குள்ளும் புகவேண்டும்..
வாழிய செந்தமிழ்  வாழ்க நற்றமிழர்
வாழிய   பாரத மணித்திருநாடு
வந்தே மாதரம்.


 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

22 comments:

துளசி கோபால் said...

முண்டாசுக்கு எங்கள் வணக்கங்களும்.

என்னவோ தெரியலை ...உலகையே மறந்து நிக்கிறேன்:-)


Anonymous said...

வாவ்! தலைப்பே கலக்கிடீங்க. அருமையான வாழ்த்து. இந்த வாழ்த்துல உங்களோட நானும் சேந்துக்கறேன்.
பூக்களின் படம் மனதிற்கு இதம்.

ஸ்ரீராம். said...

உங்கள் வாழ்த்துகளிலும் நினைவுகளிலும் நாங்களும் கலந்து கொள்கிறோம். இன்று எம் எஸ் அம்மாவின் நினைவு நாளும் கூட.

வல்லிசிம்ஹன் said...

சிலநேரங்களில் இப்படி ஆகிவிடுகிறது துளசி. நீங்கள் எல்லோரும் நினைவில் வைத்திருப்பவர் தானே பாரதி. உங்கள் பழையபதிவுகளைப் பார்த்தால் தெரியும். ஒளி பிறக்கும் கோடை காலம் வந்ததும் மதி விழிக்கும்னு சொல்லலாமா:)

வல்லிசிம்ஹன் said...

போன வருடமும் இதே நேரம் இந்த ஆர்கிட் பூ பூத்தது மீனாக்ஷி. புதுமலர்கள் கண்களை மயக்கும் வண்ணத்தில் பூத்திருக்கின்றன,. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். எம் எஸ் அம்மாவைமறக்க முடியுமா. விஜய் டிவியில் பூரண்மாக அனுபவிக்கிறோமே.இரண்டையும் இணைத்து எழுத எனக்குத் தெரியவில்லை:(

ராமலக்ஷ்மி said...

உங்கள் தோட்டத்துப் புத்தம் புது மலர்களால் பாரதியாருக்கு எங்கள் வணக்கங்களும்.

ஸாதிகா said...

உங்கள் வீட்டு தோட்டத்தில் பூத்த பூக்களைப்போல் உங்களில் இருந்து வந்த கவிதையும் மணமணக்கின்றது வல்லிம்மா

அப்பாதுரை said...

பூப்படங்கள் நல்லாவே இருக்கு. பாரதிப்பூ.. nice.

sury siva said...

அனல் வீசும் வார்த்தைகளால்
அடிமை விலங்கை அகற்றிட
ஆவேசம் கொண்ட கவிஞனவன்

இப்படியும் ஒருவன்
ஈண்டு இருந்தானா ?

பாரதியே !
பார் உனை
பாதி புரிந்துகொள்ளுமுன்னே
புவியினைத் துறந்தாயே !!.

ஏன் ?

சுப்பு தாத்தா.
http://vazhvuneri.blogspot.com

கோமதி அரசு said...

தேசிய கவி பாரதிக்கு வணக்கங்கள்.
புத்தம் புது மலர்களால் அவரை வணங்கியது மகிழ்ச்சி. எம்.எஸ்அவர்களின் பாரதிபாடல்கள் நெஞ்சுக்கு நீதியை மறக்க முடியுமா!

நேற்றுத்தான் ஊரிலிருந்து வந்தேன்.
பதிவுகள் நிறைய படிக்க வேண்டி இருக்கிறது.

வெங்கட் நாகராஜ் said...

முண்டாசுக் கவிஞருக்கு உங்கள் வீட்டில் பூத்த மலர்கள்.....

சிறப்பு தான்...

வல்லிசிம்ஹன் said...

உலகம் உங்களை மறக்காது துளசி:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
வருகைக்கு மிகவும் நன்றி. பாரதியாரைச் சொல்லவும் தகுதி வேண்டும் இல்லையா. அதனால் வணன்க்கங்களைப் பதிந்துவிட்டேன்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸாதிகா,
அன்புடன் இங்க வந்ததற்கு மிகவும் நன்றி .

வல்லிசிம்ஹன் said...

நன்றி துரை.ஆர்க்கிட மாதக் கணக்கில் வாடாமல் இருக்கும். பாரதியின் புகழ் ஜன்மங்களுக்கும் அழியாது.

வல்லிசிம்ஹன் said...

உண்மை சுப்பு சார். நமக்குக் கொடுத்துவைக்கவில்லையே.

அவர் விட்டுச் சென்ற எண்ணங்கள்,தீப்பொறி பறக்கும் பாடல்கள்.
குழைய வைக்கும் குயில் பாட்டு,கண்ணம்மா,கண்ணன் பாட்டு இன்னும் எத்தனையோ சொத்து விட்டுச் சென்றிருக்கிறார்.
அவைதாம் நமக்கு ஆறுதல்.

வல்லிசிம்ஹன் said...

நல்வரவு கோமதி. எனக்கு மிகவும் பிடித்த பாடல் நெஞ்சுக்கு நீதி. அதுவும் எம் எஸ் அம்மா குரலில் என்ன கம்பீரத்தோடு அந்தப் பாட்டு ஒலிக்கும்.!!உங்களுக்கும் அது பிடிக்கும் என்பதே எனக்கு சந்தோஷம்.வாழ்க வளமுடன் நாம் அனைவரும்.

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு அவதாரம் பாரதி. எத்தனை ஆயிரம் லட்சம் மக்களைச் சக்தியூட்டி இருக்கிறார். நம்மால் முடிந்தது
வணக்கம் சொல்வதே.
வருகைக்கு நன்றி வெங்கட்.

கோமதி அரசு said...

எனக்காக திருமதி. எம்.எஸ். அம்மா அவர்களின் நெஞ்சுக்கு நீதி என்றபாடலை + லில் நீங்கள் பகிர்ந்து கொண்டதை கயல் சொன்னாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நானும் அந்த பாடலை கேட்டு விட்டேன். உங்களுக்கு மிகவும் நன்றி அக்கா.

ADHI VENKAT said...

உங்கள் தோட்டத்து மலர்களை கொண்டு சிறப்பித்த பாரதிக்கு எங்கள் வணக்கங்களும்.....

மாதேவி said...

பாட்டுக்கொரு புதல்வனை பூக்களுடன் அர்சிக்கும் உங்கள் பகிர்வுடன் நாமும் நினைவு கூர்ந்து நிற்கின்றோம்.