Blog Archive

Friday, November 30, 2012

புதுமை நிலா கார்த்திகை மாதம்.

ஆஹா   வட்டநிலா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Add caption
Add caption
பாதிநிலா
நீதான் அந்த நிலவோ.நம்பமுடியவில்லையே
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

22 comments:

கார்த்திக் சரவணன் said...

நல்ல படங்கள்... நன்றி...

sury siva said...

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நிழலே.

அந்த நிழலில் அமர்ந்து
இந்த நிலவைப் பார்த்து
சொந்த பந்தமெல்லாம் மறந்து
எந்தன் மனம் நிறை பத்மாவதி தாயாரை
வந்தனை செய்வோம்.

இந்த கிழவி இன்னொரு ரூட்லே போவுது...


அமுதைப் பொழியும் நிலவே
அருகில் வராத தேனோ !!

ஒவ்வொத்தருக்கும்
ஒவ்வொன்றில் சுகம்.

சுப்பு தாத்தா.

Admin said...

வணக்கம்மா..எப்படியிருக்கீங்க?நிலவை புகைப்படம் சிறைப்பிடித்திருக்கிறது..

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்கூல்பையன்.
புகைப்படங்களுக்காக ஒரு தளம் வைத்திருக்கிறேன். அதில் படங்கள் இன்னும் சரியாக வந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

சுப்பு சார். பாட்டோடு சிவனையும் நிலவையும் அனுபவிக்கிறீர்கள். அம்மா தேனைக் கேட்கிறார். வராத தேனை வரவழைத்துக் கொடுங்கள் சார்.
பத்மாவதி வேங்கடவனோடு இணைந்திருப்பது போல அம்மாவும் மகிழ்வார்.
நன்றி சுப்பு சார்.அம்மாவுக்கு வணக்கம்.

வல்லிசிம்ஹன் said...

நல்லா இருக்கேன் மா மது மதி சார். நீங்களே நிறைமதியாக இருக்கிறீர்கள். நானோ குறைமதியைப் படம் எடுத்துவிட்டு என்னடான்னு யோசிக்கிறேன்:)
காமிரா கண்ணில் கோளாறு.
வருகைக்கும் என்னை நினைத்ததற்கும் மிக நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வட்ட நிலாவும் மஞ்சள் நிலாவும் அழகாருக்கு வல்லிம்மா.

ஸ்ரீராம். said...

பாதி நிலாவின் மீதி நிலா எங்கே என்று தேடுகிறேன்! நிலவு வந்து வானத்தை மட்டுமல்ல கண்களையும் கருத்தையும் கூடத் திருடிக் கொண்டது! உலாப் போன நிலா தூண்டிய கலாரசனை!

ராமலக்ஷ்மி said...

வட்ட நிலா பெர்ஃபெக்ட.

படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி சாரல். காலை நான்கு மணிக்கு எடுத்த நிலா.எத்தனை முயற்சி செய்தும் அரைக்கண்ணைத்தான் திறப்பேன் என்கிறது என் கண்ணுக் காமிரா:)

வல்லிசிம்ஹன் said...

பாதி நிலா உலா போய்விட்டது. ஸ்ரீராம் வந்து கவிதை எழுதணும்னே எடுத்தபடம்.:)நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி அது லக்கி ஷாட். வட்ட நிலா சிக்கியது. நன்றிமா.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு... அருமை...

நன்றி அம்மா...

மகேந்திரன் said...

மதியில் தெளிவும்
புத்தியில் தெளிவும்
சித்திரமாய் வரைந்து போகும்
தண்மதியின் நிழற்படங்கள்
மனதைக் கவர்ந்தது அம்மா..

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். இன்னும் அழகாக எடுத்திருக்கலாம். காமிராவைச் சரிசெய்த பிறகே இனி படம் எடுக்கவேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மகேந்திரன் அம்மா மதியில் தெளிவு அம்மாமதியிலும் தெளிவு புரை வந்த கண்ணாகப் புகைப்படக் கருவியின் கண் அமைந்ததுதான் தெளிவில்லை. இதையும் பாராட்டும் உங்கள் நல்மனதே ஒரு முழுநிலா.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் எல்லாமே நல்லா இருக்கும்மா.... வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

Ranjani Narayanan said...

பறக்கும் நிலா கூட அழகு தான் வல்லி!
கார்த்திகைத் திருநாள் நல்லபடியாக நிறைவேறியது தெரிந்து மிக்க மகிழ்ச்சி!

ADHI VENKAT said...

படங்கள் எல்லாமே அருமைம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரஞ்சனி,
சகோதரிகள் கூடப் பிறக்கவில்லை என்பதை,கவலைப் படாதேன்னு சொல்கீரா மாதிரி நீங்களும் கோமதியும் சொல்லும் வார்த்தைகள் மிக ஆறுதல். என் மனம் நிறைந்த நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, வருகைக்கும் பாராட்டுக்கும் மிக நன்றி.