Blog Archive

Wednesday, November 21, 2012

கோதா வரி

கோதாவரி  நதி
 






இதோ  கர்த்திகை மாதம் வந்துவிட்டது. வீடுகளில்
சாயந்திர தீபங்கள்   ஏற்றப்படுகின்றன.
இன்னும் இரண்டு நாட்களில்  கைசிகப் பண் பாடி  திருக்குறுங்குடி அழகிய நம்பியை வழிபட்டுக் கோவிலுக்கு வெளியே  நின்றபடி

சேவித்தநாட்கள்.
தன்னைப் பிடித்து உண்ணும் நோக்கோடு வந்த   பிரம்மராக்ஷசினிடம் மனமுவந்து தன்னை ஒப்புவித்த  ஒரு உயர்ந்த மனிதரின் கதை நடந்த கார்த்திகை துவாதசி.கைசிக துவாதசி.

சந்தர்ப்ப வசத்தால் பாவம் செய்த அந்த உயிருக்கும் விஷ்ணுபாதத்தைக் காண்பித்துக் கொடுத்த நாள்.

அடுத்த கொஞ்சநாட்களில்  மார்கழி வந்துவிடும். மாதம் முழுவதும் கண்ணன் புகழ்மணம் காற்றில் கலந்துவரும். காலையில் பொங்கலாய்,பாவை இசையாய்,மாலையில்   காதை நிறைக்கும்   சபைகள் நிறைக்கும் பல்வேறு கலைஞர்களின்    இசைவிழா.


இந்த வேளையில் தான் மின்சாரம் இல்லாத நேரத்தில்
ஒரு   இசைத்தட்டு  கதை கேட்க  முடிந்தது.
அதில்  வந்த வாக்கியங்கள்  தான் கோதா தேவியின்  துதிப் பாடல்கள்.

இது எங்களுக்குப் பக்திப் பாடல்களைக் கற்றுக் கொடுத்த  மாஸ்டர் குரு தாத்தாச்சாரியரின் விளக்கம். கோதையையும் கோதாவரியையும் இணைத்து வரும் கதை.

பூமியில்  வில்லிபுத்தூரில்  பெரியாழ்வாரின் கண்டெடுத்தமகளாக வந்தவள் கோதை என்று பெயர் சூட்டப்பட்டாள்.

அந்தக் குழந்தை ஸ்ரீரங்கனை மணாளனாக  வரித்துக் கொண்டே பிறந்தது.
அதன் இருதயம் முழுவதும் உலகம் உய்யவேண்டும் என்ற ஒரே எண்ணம்.


அவளைப் பாடவந்த   ஸ்ரீவேதாந்த தேசிகரின்  கோதா  ஸ்துதியில் வந்த
வரிகளை எங்கள் குரு விளக்கியபோது அதிசயமாக இருந்தது.

இவளுக்குக் கோதை கோதா என்று பெயர் வைத்ததால் கோதாவர் நதி புண்ணியம் பெற்றதாம்.
ஏன் மாஸ்டர்  என்று கேட்டோம்.

அப்போது அவர் சொன்னதுதான் இந்தக் கதை. ராமாயணத்தில்  ராவணன்
சீதையை அபஹரித்துச் செல்கிறான். அவளோ மரங்கள் செடிகள் கொடிகள் நைகள் எல்லாவற்றிடமும் முறையிடுகிறாள்.
ராமன் என்னைத் தேடி வரும்போது ஏ கோதாவரி மாதா, நீ சொல். இந்தக் கபட சந்யாசி என்னைத் தூக்கிச் செல்கிறான் என்று    கதறுகிறாள்.

அதே போல ஸ்ரீராமர் வந்து,வழி நெடுகப் புலம்பிக் கொண்டே வருகிறார்.மரமே கண்டாயா,மலையே கண்டாயா,இலையே கண்டாயா,செடியே கண்டாயா என் சீதையை என்று அரற்றுகிறான்.

கோதாவரி க்  கரையை அடைந்த போது,அந்த நதியையும்   ராமன் வினவ ,அது இராவணனின் கொடூரத்திற்குப் பயந்து மௌனம் சாதித்ததாம்.

இது பாவம் இல்லையா.
இந்தப் பாவம்    கோதை,பூமாதேவியின் அவதாரம்,சீதையின்  துயரம் அறிந்தவள் பிறந்து  போதே  கோதா என்று பெயர் சூட்டப் பட்டதுமே
கோதவரியின் பாபம்   தீர்ந்ததாம்.


இன்று அத்தனை கோவில்களின் கடவுள்களின்  பாதங்களையும் 
வருடிச் செல்லும் மகிமை  அவளுக்குக் கிடைத்துவிட்டது.


இதோ அதே  ராமன்,சீதை,லக்குவன்  அவள் கரையில்கோவில் கொண்டுள்ளார்கள்.
கோதையும்,கோதாவரியும் நம்மைக் காக்கட்டும்.









எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

22 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும் பதிவும் அருமை... நன்றி அம்மா...

சாந்தி மாரியப்பன் said...

நல்லதோர் பகிர்வு வல்லிம்மா..

கதம்ப உணர்வுகள் said...

குளிரும் கார்த்திகை மாதத்தில் மிக அற்புதமான ஒரு பதிவு.. பகிர்வு வல்லிம்மா....

கண்ணனின் புகழ் பாடச்சொல்லி கேட்பது இன்பம்...

மார்கழி மாததில் திருப்பாவையும் கேட்பதும் கன்னிப்பெண்களின் மனதுக்கு பிடித்த மணாளன் அமைவதும்....

கோதைப்பெயர் ஏற்பட்ட காரணமும்....

கோதைக்கும் கோதாவரிக்கும் இருக்கும் பெயர் ஒற்றுமைக்காரணம்....

சீதாதேவியை கபட சந்நியாசி வேடத்தில் வந்து அபகரித்துச்சென்ற இராவணனைப்பற்றி இராமனிடம் முறையிடச்சொல்லி சீதை வழி எல்லாம் செடி கொடி மரத்திடம் கதறிக்கொண்டேச்செல்ல... கோதாவரி நதியிடமும் முறையிட... இராமன் வந்து கேட்கும்போதோ கோதாவரி மௌனம் காக்க... பயத்தினால்....

இதோ இன்று பாவங்களை எல்லாம் கழுவிடும் புண்ணிய நதி தீர்த்தமாக கோதாவரி பெருக்கெடுத்து ஓடும் அழகைச்சொல்லி சென்ற விதம் மிக மிக அற்புதம் வல்லிம்மா...

அருமையான பகிர்வுக்கு அன்புநன்றிகள் வல்லிம்மா...

ADHI VENKAT said...

கோதாவரியின் கதையை தெரிந்து கொள்ள முடிந்தது.....

பகிர்வுக்கு நன்றிம்மா.

pudugaithendral said...

பத்ராதி வாசன் சீதையை மடியில் வைத்து அமர்ந்திருக்கும் காட்சையை காணக்கண்கோடி வேண்டும். :)

பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா

மெளலி (மதுரையம்பதி) said...

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மார்கழிச் சிறப்புப் பதிவுகளாக தேசிகர் அருளிய கோதா ஸ்துதியை பொருளுடன் பதிவிட்டேன்....இந்த இடுகையைப் படித்தவுடன் அது நினைவுக்கு வந்தது.

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் பகிர்வு அருமை வல்லிம்மா.

ஸ்ரீராம். said...

கோதாவரியின் சுழித்தோடும் நீருடன் கோதாவரியின் படம் அழகு. ஆறுகளில் இவ்வளவு நீரைப் பார்த்து நீண்ட நாட்களாகின்றன. சீதை சோகமும், ராமனின் அரற்றலும் மனதைத் தொட்டது.

மாதேவி said...

கோதையும் கோதாவரியும் மார்கழி திருப்பாவை என சிறப்புறுகின்றது பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன். அலுப்பில்லாமல் நீங்கள் பின்னூட்டமிடுவது
மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக நன்றி சாரல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மஞ்சு, நீங்கள் அனுபவித்துப் பின்னூட்டம் இடுவதற்காகவே
நல்ல பதிவு எழுத ஆசையாக இருக்கிறது.GODHAAஎன்னும் சப்தத்துக்குப் பல அர்த்தங்கள் சொல்லி இருக்கிறார்கள்.சீதையும் பூமியை அகழ்வு செய்யும்போது கலப்பை நுனியில் கண்டெடுக்கப் படுகிறாள்.
கோதையும் துளசிச் செடியின் கீழிருந்து பெரியாழ்வாரால் மண்ணை(பூமி) விலக்கி எடுக்கப் படுகிறாள். இருவருக்கும் பொறுமை. இருவருக்கும் திருமாலின் மீது தீராக் காதல். தயா என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல வந்தவர்கள். கோதாவரியும் பூமியை வளம் செய்ய வந்தவள் தான்.ஆண்டாளுக்குக் கோதா என்று பெயர் வைத்ததும் இவள் புனிதமாகிவிடுகிறாள்.இது கோதாஸ்துதி என்னும் வேதாந்த தேசிகரின் ஸ்லோகத்துக்கு எங்கள் குரு சொன்ன விளக்கத்தைதான் நானும் எழுதினேன் பா.மிக மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஆதி, கோதவரி மஹா புனித நதி. மேற்கே தொடங்கி கிழக்கில் சமுத்திரத்தில் கலக்கும் வரை எத்தனை உள்ளங்களையும்,நிலங்களையும் நனைக்கிறது. எத்தனை மனிதர்களின் வாழ்வுக்குப் போகுவரத்தாக அமைகிறது. எத்தனை புண்ணியத் தலங்கள் அதன் கரையில்!ராவணனின் அதிகார வீச்சில் அத்தனை கிரகங்களும்,தேவர்களும் ,திசைகளும், ஐம்பூதங்களுமடங்கிப் போகையில் நதியும் அஞ்சுவது இயற்கைதானே.கவியின் பெயர் உவமானம் கோதாவரிக்கு உயர்வைக்கொடுத்துவிடுகிறது. அதனால்தானே குழந்தைகளுக்கு பகவான்,தாயார் பெயர்களை நாம் வைக்கிறோம்.அடடா, பதிவைவிடப் பின்னூட்டம் நீண்டுவிட்டதுப்பா.:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்.அப்பா ஸ்ரீராமதாசரின் கதையைச் சொன்ன நாளிலிருந்து அங்கே வந்து சீதாராமனைக் காண ஆசை.பத்ராதி வாசனா!! என்ன அழகான பெயர்ம்மா.தெலுங்கு தேசமே பக்தி தேசம். நன்றி ராஜா. உங்கள் பதிவைப் படிக்க முடியவில்லையே.(சீயாம் தாத்தா)

வல்லிசிம்ஹன் said...

அன்பு மௌலி, உங்கள் பதிவுகளுடன் என் எழுத்தையும் சேர்த்தது உங்கள் பெருந்தன்மையைக் காண்பிக்கிறது.
கேட்டதையும் பார்த்ததையும் சொல்லும் ஜீவன் நான்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
ரசிப்புக்கு ஒரு நன்றியும்.நட்பு வாழ்த்துகளும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அம்மா டெல்லிக்குப் போகும்போது இந்தக் கோதாவரிப் பாலத்தில் ரயில் செல்லும் நேரம்,
காசுகள் போடும் வழக்கம் இருந்ததாம்.மாமா அப்போது தில்லியில் இருந்ததால் பாட்டி அடிக்கடி அங்கே செல்வார். பாட்டியும் இதையே சொல்வார்.அழகான பெரிய நதி.புராணம்தான் என்று தெரிந்தும் சீதையையும் ராமரையும் நினைத்தால் கலங்கத்தான் தோன்றும். நடந்த காவியம் இல்லையா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் அன்பு மாதேவி.
நம் வாழ்வின் பல கலகலப்புகளுக்குக் கடவுளே காரணமாகிறார்.

கதம்ப உணர்வுகள் said...

//அன்பு மஞ்சு, நீங்கள் அனுபவித்துப் பின்னூட்டம் இடுவதற்காகவே
நல்ல பதிவு எழுத ஆசையாக இருக்கிறது.GODHAAஎன்னும் சப்தத்துக்குப் பல அர்த்தங்கள் சொல்லி இருக்கிறார்கள்.சீதையும் பூமியை அகழ்வு செய்யும்போது கலப்பை நுனியில் கண்டெடுக்கப் படுகிறாள்.
கோதையும் துளசிச் செடியின் கீழிருந்து பெரியாழ்வாரால் மண்ணை(பூமி) விலக்கி எடுக்கப் படுகிறாள். இருவருக்கும் பொறுமை. இருவருக்கும் திருமாலின் மீது தீராக் காதல். தயா என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொல்ல வந்தவர்கள். கோதாவரியும் பூமியை வளம் செய்ய வந்தவள் தான்.ஆண்டாளுக்குக் கோதா என்று பெயர் வைத்ததும் இவள் புனிதமாகிவிடுகிறாள்.இது கோதாஸ்துதி என்னும் வேதாந்த தேசிகரின் ஸ்லோகத்துக்கு எங்கள் குரு சொன்ன விளக்கத்தைதான் நானும் எழுதினேன் பா.மிக மிக நன்றி.//

இன்னும் இன்னும் இன்னும் நிறைய விஷயங்கள் அறியமுடிகிறது வல்லிம்மா... தயா = கருணை, பொறுமை.... பொறுமைக்கு இலக்கணமான சீதை... சீதையை கண்டெடுக்கப்பட்ட இடமும் பூமி... கோதா... கோதை.... பெயர் பொருத்தம்.... ரசிக்கவும் சிந்திக்கவும் வியக்கவும் வைக்கிறது வல்லிம்மா தங்களின் பகிர்வு...

மனம் நிறைந்த குளிர்ந்த (இங்க ஒரே குளிர்ப்பா) அன்புநன்றிகள் வல்லிம்மா பகிர்வுக்கு...

sury siva said...



இதே கோதாவரி நதி தீரத்திலே ஒரு அமாவாசை காலை அன்று வெள்ளப்பெருக்கிலே திக்கு முக்காடி குளித்த‌
நினைவுகள் எல்லாமே நினைவுக்கு வந்துவிட்டது.
1985 ம் வருடம் என நினைக்கிறேன். எங்கள் ஆடிட் டீமின் தலைவர் என்ற பொறுப்பில் ஒரு மூன்று பேருடன் பக்கத்து ராஜமுந்திரி,
தாடேபள்ளிகூடம், எலூரு ஆகிய கிளை அலுவலகங்களுக்குச் சென்றிருந்த சமயம்.
நடுவில் ஒரு அமாவாசை தினம்.
அன்று அந்த நதிக்கரையில் அமாவாசை திதிக்காக, எனது டீமில் ஒரு ஸம்பிரதாய வைணவருக்காக நான் புரோகிதராக இருக்கவேண்டிய‌
நிர்ப்பந்தமும் ஏற்பட்டது ஒரு சுவையான சம்பவம்.
நான் ஏதோ தானோ என்று தர்ப்பணம் செய்து முடித்தேன். ஆனால், என் நண்பர் வைணவர் ஆர்தொடாக்ஸ் டு த கோர் . ஒரு சாஸ்திரிகள்
வந்து நான் தர்ப்பணம் செய்யவேண்டும், செஞ்ச்ப்பறம் தான் நான் அலுவலகம் வருவேன்.
என்று பிடிவாதம் பிடிக்கிறார். பித்ரு தர்ப்பணம் ஃபர்ஸ்ட். ஆபீஸ் வேலை எல்லாம் நெக்ஸ்ட் என்று சொல்லிவிட்டார்.
அப்ப எல்லாம் ஆஃபீசர் எல்லாமே தன்னோடு இருக்கும் ஊழியர்களையும் அணைத்துக்கொன்டு தான் போகவேண்டும். காரியம்
ஆகவேண்டுமே !!
சிரமப்பட்டு, அந்தக்கிளையில் இருந்த ஒரு அதிகாரியின் உதவியுடன் ஒரு புரொகிதரைக் கண்டுபிடித்து வரவழைத்தேன்.
அன்று அஸாத்ய மழை வேறு. குளிர் நடுக்குகிறது. நதிக்கரையில் உட்கார்ந்து தான் மந்திரம் செய்வேன். இந்த மாதிரி நதி தீரம்
அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் ஜன்மாவிலே கிடைக்காது என்று வேற என் நண்பர் சொல்றார். வேற வழியில்லை.
சாஸ்திரிகள் கிட்டே கன்வின்ஸ் பண்ணி, அவரும் சரின்னு சொல்லி,
அவரும் தர்ப்பண மந்திரங்களைத் துவங்கினார்.

அவர் ஒரு குடையின் கீழே. உட்கார்ந்து இருந்தார். என் நண்பர் மழையைப் பொருட்படுத்தாது ஒரு வாழை இலையிலே தர்ப்பங்களைப்
போட்டு ஆரம்பித்தார்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும்....என்று ஆச்மனம் துவங்கினார். தர்ப்பண் மந்திர ஆரம்பம். நடுவிலேயே கொஞ்சம் சத்தம். வாக்குவாதம்.

இவரோ இன்னமும் முடிக்கவில்லை. நடுவில் வேற என்ன சாஸ்திரிகளே ! கோவிந்த கோவிந்த கோவிந்த அப்படின்னு மூன்று தரம்
சொல்றேள் அப்படின்னு வாக்குவாதம் வேற....

மழை திடீரென வலுத்தது. சாஸ்திரிகள் குடை பறந்து போயிற்று.
ஸாரே ! உங்க ஃப்ரண்டுக்கு என்னாலே மந்த்ரம் சொல்ல முடியாது. அவரோட வித்வத் வேற என்று நக்கலாக ( ! ) சொல்லிவிட்டு
ஓடிப்போய் விட்டார்.

எனக்கு என்ன அடுத்தது செய்வது என்று ஒரு கணம் திகைத்தேன்.

ரங்கசாமி !! கொஞ்சம் இன்னிக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ... நான் உனக்கு தர்ப்பணம் பண்ணி வைக்கிறேன். என்று நான்
அந்த கொட்ற மழைலே மந்திரம் சொல்லச் சொல்ல அவரும் தர்ப்பணம் முடித்தார்.

நடந்து ஒரு 27 வருசம் ஆயிடுத்து. உங்கள் கோதாவரி பதிவு அந்தை நினைவுக்கு கொண்டு வந்தது.

கார்த்திகை தீபங்கள் தினமும் அமக்களமா ஏத்திண்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

சுப்பு தாத்தா.




வல்லிசிம்ஹன் said...

அன்பு மஞ்சு,உங்க ஊரில் ரொம்பவே குளிரும்.டிசம்பர்ல கேக்கவே வேண்டாம் எனது கணவரின் தமக்கையார் அங்கே கிட்டத்தட்ட20 வருடங்கள் இருந்திருக்கிறார்.
கோதையே குளிந்தேலோ ரெம்பாவாய்,கூடியிருந்து என்றுதானே பாடி இருக்கிறாள்.நாம் பதிவில் கூடுகிறோம்.அன்பு வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.

Menaga Sathia said...

படங்களும்,பதிவும் அருமை அம்மா...கோதாவரியின் சிறப்பை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...