சிங்கம் ஜியின் யானை ஃபௌண்டெயின் |
செட்டியாரும் வந்தார்.கய்கறிக்கடை வைக்க..புரட்டாசிப் பெருமாளும் வந்தார் தாயாருடன். |
குடும்பத்தைப் பிரிக்க வேண்டாம்னு சேர்த்துவைத்துவிட்டேன்.அம்பாள் அரளி மாலையில் |
மாலை மணந்த மங்கை மாலையில் மாலையும் சூட்டினாள் |
இன்றைய நைவேத்யம் மொச்சை சுண்டலும் கேசரியும் |
அனைவருக்கும் அன்னைகளின் அருள் பொங்க வேண்டும்.
நன்மைகள் பெருகவேண்டும்.
மகிழ்ச்சி தங்கவேண்டும்.
மனம் நிறைந்த நவநவ வாழ்த்துகள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
26 comments:
அன்பு அப்பாவி ,இந்தத் துளசிமாடம் காதியில் கிடைக்கிறது.இனிய வாழ்த்துகள்.
ஆஹா முதல் நாள் மொச்சை சுண்டலும் கேசரியும்! பேஷ் பேஷ்...
சுவையாக இருந்தது! மற்றவர்களும் எடுத்துக் கொள்ளவேண்டுமென கொஞ்சமா எடுத்துக்கொண்டேன்!
அருமை. நன்றி. தங்களுக்கும் வாழ்த்துகள்.
முதல் நாள் கொலுவுக்கு வந்தாச்சு. நைவேத்தியங்களும் எடுத்துக் கொண்டோம்.
ரோஷ்ணி கேசரியை பார்த்து விட்டு இப்பவே பண்ணிக் கொடு என்கிறாள்...:)
அருமை... நன்றி அம்மா...
கொலு விசேஷத்துல அடுத்த சுண்டலும் ச்சே, அடுத்த பதிவும் ரெடியா.... சூப்பர்! கேசரி கொஞ்சம் போதும். மொச்சை ஒரு பிடி எடுத்துக் கொண்டேன்!
ஹைய்யா ஜிங்கத்தின் பௌண்டெய்ன். நேரில் பாத்து மகிழ்ந்தோமே:)
துர்கைநாளில் பெருமாள் தாயார் அனைவரின் தரிசன்ம்...
ஆஹா..... மொச்சை சுண்டல்.....:)
கொலுவுக்கு நேரில் வரமுடியவில்லை வல்லிம்மா.....
இங்கிருந்தே பாடறேன் :)
துளசி டீச்சர் சொல்லிருந்த ‘அந்தரத்தில் பைப்’ - இதுதானா? தண்ணீர் விழுமா, இல்லை சும்மா ஷோவுக்கா? தண்ணீர் விழுதுன்னா, எப்படி வொர்க் ஆகுதுன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கே!!
வரணும் வெங்கட். டெல்லி நவராத்ரி கோவில்களில் பிரமாதமாக இருக்கும்னு மருமகள் சொல்லி இருக்கிறார். 200கிராம் மொச்சைதான். அதைச் சாப்பிடவே ஆள் இல்லை:)
கொலுவுக்கு வந்தததுக்கு மிக மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
ஓ!இணையத்தில கேசரி எல்லாம் கொடுக்கற மாதிரி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஸ்கைப் வழியாக் கேசரி கொடுத்துவிடலாம்.
ரோஷ்ணிக்குப் பால திருபுரசுந்தரி எல்லா அருளும் கொடுக்கட்டும்.நன்றி ஆதி.
நன்றி தனபாலன்.திண்டுக்கல்லிலும்நவராத்திரி அபிராமி கோவிலில் நன்றாக நடக்கும்.உங்களுக்கும் எங்கள் விழாநாள் வாழ்த்துகள்.
அதானே ஸ்ரீராம். கொலு முன்னால் வைத்துவிட்டுத் திரும்பி வந்தால் அளவு குறைந்திருந்தது!!இரண்டு பிடியா எடுத்துக் கொள்ளக் கூடாதோ.:)நன்றிமா.
அன்பு மது,நீங்களும் இருந்தால் நன்றாக இருக்கும்.
பாட்டுக் கேட்டது. நீதானா என்னை அழைத்தது''பாட்டு தானே
நவராத்திரி நன்னாள் வாழ்த்துகள்மா.
அன்பு ஹுசைனம்மா.
ரெகுலர் ஃபௌண்டைன் தான். அந்த யானை தொட்டியில் தண்ணீர் இருக்கும்.
மோட்டர் பொருத்தி மேலே இருக்கும் குழாய்க்கு ஒரு கண்ணுக்த் தெரியாத குழாய் வழியாக் கனெக்ஷன் பா. எல்லாம் ஒருதமாஷ்க்குதான்:)
துளசி அம்மா ஊட்டுலே கொலுவிலே
அவங்க எல்லா ஃப்ரன்ட்ஸும்
உங்களோட சேர்ந்து
பாடிய காட்சி
இங்கனே கீதே !!
நீங்க பாக்கலயா !!
https://www.youtube.com/watch?v=k53IF8ZKHTA
சைலஜா, மதுமிதா எல்லாருமே உங்களோட
பாடறாங்களே !!
யாரு குரலு அது !! கணீர்னு கேக்குது ?
மீனாட்சி பாட்டி.
www.arthamullavalaipathivugal.blogspot.com
ஐயா ,அது எங்க குரல் இல்லை. துளசி அழகாத் தேர்ந்தெடுத்துப் பாட்டுப் போட்டு இருக்காங்க:)
சுதா ரகுநாதன் குரலோன்னு தோணுது.
உங்களுக்குத்தான் இதெல்லாம் தெரியும்.:)
இந்தத் தேன் குரலுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.
தண்ணீர் குழாய் சைடு போஸ் படமா இருந்தா அந்தரத்தில் இருப்பது நல்லாத் தெரியும் வல்லி:-))))
இந்தமாதிரி ஒரு துளசிமாடம் மயிலை மாடவீதியில் பார்த்து நானும் ஒன்னு முந்தி வாங்கினேனேப்பா.
பிரசாதம் சூப்பர்! தேங்ஸ்ப்பா.
ஆமாம்.... நிஜக் காய்கறிகளா!!!!
முதல்நாள் கொலுவுக்கு துளசி வந்தாச்சு!
ஆமாம் நீங்கள் சொல்வது போல எடுத்திருக்க வேண்டும்.
துளசி இல்லாமல் ஆண்டாளா. அதனால் மாடத்தில் துளசியையும் ஏளப்பண்ணியாச்சு!!
காய்கறிகள் எல்லாம் காதி:)
படங்கள் அழகு. நவராத்திரி வாழ்த்துகள்.
அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கட்டும்.
அந்தரத்தில் தொங்கும் தண்ணீர்க்குழாய் இங்கே சில பொருட்காட்சிகளில் பார்த்திருக்கேன். உங்க சிங்கம் பெரீய எஞ்சினீய்ர்தான். அருமையாச் செஞ்சுருக்கார் :-)
கேசரியை காணலைன்னு தேடாதீங்க. மிச்சம் மீதி இருந்ததை மொத்தமா நானே எடுத்துக்கிட்டேன் :-))
நன்றி மாதேவி. தங்கள் இல்லத்திலும் தேவியின் அருள் நிறையட்டும்.
அன்பு சாரல் ,அடுத்த தடவை சென்னை வரும்போது கேசரி செய்து வைக்கிறேன்பா.;0)
கேசரி அழைக்குது.
கடைசிப் படம் என் பேவரிட். கரும்புக்கு வலது பக்கத்திலே சிவப்பு கலர்லே பலூனாட்டம் இருப்பது தக்காளியா?
ஆமாம்துரை. தக்காளியே தான் சிவப்பு எப்படி ரோஸ் கலராச்சுன்னு தெரிய வில்லை.;(
அது பக்கத்துல இருப்பது இலந்தம்பழமங்கள்.
Post a Comment