Blog Archive

Tuesday, October 30, 2012

ஐப்பசி முழுநிலா

மேகங்களுக்குள்ளே மாட்டிக் கொண்டேனே
நேற்று இரவே சூழ ஆரம்பித்த மேகங்கள்
இதோ  வெளிவந்து விட்டேன்!!
தினசரி  மாலை மணி மூன்றுக்குவிஜயம் செய்யும் ஜோடி மைனாக்களில் ஒன்று.
பால் போலவே  ....வான் மீதிலே.
பவுர்ணமி நிலா   முதல்நாளே வந்து விட்டதாம். நான் ஏமாந்தேன். நாள்காட்டியில் இன்றுதான் பௌர்ணமி வட்டம் போட்டிருந்தது..

நாள் முழுவதும் புயல் பற்றிய எச்சரிக்கை. அங்கே இருக்கிறது. இங்க வந்துவிட்டது. வந்தாலும் வரலாம்..நெல்லூருக்குப் போகலாம்.!
கடலூரில் பாதிப்பு. எட்டடி உயர அலைகள்  மோதுகின்றன..

என்னப்பா இது:(

இது போதாது என்று     நண்பர்கள் வசிக்கும் அமெரிக்க நியுஜெர்சியில்  சாண்டி  புயல்.

சிங்கத்துக்குச் சிரிப்பு . கொஞ்சம் புதியதலைமுறையை(தொலைக்காட்சி) விட்டு வெளிய வா. புயல் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்றார்.:)))))

பிள்ளையாரப்பா எல்லோரையும் காப்பாற்று.

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.. மைனா அழகு...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/2.html) சென்று பார்க்கவும்...

நன்றி அம்மா...

ராமலக்ஷ்மி said...

சிலிர்க்க வைப்பது இயற்கையின் அழகு.

அதன் சீற்றமோ நடுங்க வைப்பது. எந்தப் பாதிப்பும் எவருக்கும் இல்லாதிருக்க வேண்டிக் கொள்வோம்.

வல்லிசிம்ஹன் said...

பார்த்தேன் தனபாலன். உடனுக்குடன் ஊர்க்காரருக்குச் செய்தி தரும் நல்ல குணத்துக்கும் நன்றி.
மைனா சாருக்கு மூன்று மணிக்குத்தான் நல்லபடி வரும் போல. புழுக்களைக் கொத்தும். சிலது தப்பிக்கும் பலது மாட்டிக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ராமலக்ஷ்மி. அழிவுகள் வேண்டாம் என்று பிரார்த்திக் கொண்டே இருப்போம்.

அப்பாதுரை said...

படம் பிரமாதம்.
அழிவும் ஒரு ஆக்கம் தான்.

சாந்தி மாரியப்பன் said...

பௌர்ணமி நிலா வானத்துல வர்றதுக்கு தவறினாலும் தவறும்,.. நம்ம வல்லிம்மாவின் பதிவில் வரத்தவறாது. உங்களின் விடாமுயற்சிக்கும் ரசனைக்கும் பாராட்டுகள் வல்லிம்மா :-)

புயல் பாதிக்காம இருக்க வேண்டுவோம்.

துளசி கோபால் said...

மைனா நல்லா வந்துருக்குப்பா!!!!

இனிய பாராட்டுகள்!

வல்லிசிம்ஹன் said...

உங்கள் வார்த்தை சரிதான் துரை .ஒன்று அழியும் போது புதிதாக ஒன்று உருவாகும்.
ஆனால் அழிவைச் சந்திப்பவர்கள் பாடு துயரம்தானே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் முழுநிலாவை மிஸ் செய்திட்டேன். இந்த நிலா ஒரு மாற்றுக் குறைவுதான்:)
நல்ல வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

இந்த மழைல கூட வந்ததுப்பா மைனா.

கூடவே குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது.ஜோடிக்கு என்று நினைக்கிறேன் துளசி.

ஸ்ரீராம். said...

"ஓ...மைனா...ஒ...மைனா... "

நிலாவுக்கு நீங்கள் பாடினால் மைனாவுக்கு நான்!

பௌர்ணமி நிலாவுக்கு இன்னொரு பாட்டு "பௌர்ணமி நிலவில் பனி விழும் இரவில்.." !

அமெரிக்கப் புயல் 'சாண்டி'யை சாந்தி என்று அழைப்போம்! சாந்தி அடையட்டும் இயற்கை! :)))

ADHI VENKAT said...

மைனாவும், நிலாவும் அழகு. புயல் யாரையும் தொந்தரவு செய்யாதிருக்கட்டும்.

Ranjani Narayanan said...

மேகங்களில் மறையும் நிலவு ரொம்ப அழகு!

இயற்கை நமக்குத் தோழனாகவே என்றும் இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அருமை.

சாண்டி... இன்று முழுவதும் இதைப் பற்றிய பேச்சு தான்....

RAMA RAVI (RAMVI) said...

அஹா.. மிக அழகு படங்கள்..

இயற்கை மிக அழகு..ஆனால் இந்த மாதிரி புயல் சீற்றத்தை பார்க்கும் போது சற்று பயமாகத்தான் இருக்கு.