Blog Archive

Friday, June 20, 2014

டால்ஃபின்களின் செயல் திறன்..........மீள் பதிவு

சிரிக்கும் டால்ஃபின்(கூஃபி)



 சனிக்கிழமையன்று  பிபிசி  தொலைக்காட்சியில்  அகப்பட்ட  அருமையான  கதை. நிஜக்கதை.
நியூசிலண்ட் வட கடற்கரையில் டால்ஃபின்களின் நடமாட்டம் அதிகமாயிருக்குமாம். கிட்டத்தட்ட 500க்கு மேற்பட்ட  டால்ஃபின்கள் அங்கே   குடும்பமக வாழ்ந்து வருகின்றன.
எனக்கு யானை,கடல்,குழந்தை,பிள்ளையாருக்கு அடுத்தபடி டால்ஃபின்களை  ரொம்பவும் பிடிக்கும்.
அதனால் கையிலிருந்த காப்பியைக் கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்   அதில் பங்கு கொண்ட லைப்  கார்ட்.
ஒரு  குளிர்காலம்  முடிந்து  ஸ்ப்ரிங் சீசன் தொடங்கும் நேரம் தன் பெண்ணையும் அவளது தோழிகளையும் கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார். அதில் ஒரு பெண்ணுக்குக் கடலின் அலைகளிடம் பயம்.

ஏற்கனவே மூழ்க இருந்தவளைக் காப்பாற்றியதும் இந்தச் சம்பவத்தைச்  சொன்னவர்தான்.

எலோரும் உற்சாகமாகக் கடலை அணுகுகிறார்கள்.
கொஞ்ச நேரம் கழித்து  ஓரிரண்டு டால்ஃபின்கள் இவர்களை நோக்கி வருகின்றன.
கடலில் நீந்தும் உற்சாகத்தில் கரையைவிட்டு   கடலுக்குள் நீந்த ஆரம்பிக்கும் சமயம்,  அவரகளைச் சுற்றி  கிட்டத்தட்ட  20 டால்ஃபின்கள் சுற்ற ஆரம்பிக்கின்றன.
முதலில் விள்யாட்டாக எடுத்துக் கொண்ட இந்தக் குழு பிறகு அவைகளின் பதட்டத்தை உணறுகின்றனர்.

இவர்களை நகரவிடாமல் ஒரு இறுகிய வட்டத்துக்குள்ளயெ  இருக்க வைத்து அவை சுற்றிச் சுற்றி வருகின்றன.


இவர்களுக்குப் பயம் பிடித்துக் கொள்கிறது. ஏன் இந்த ஆவேசம்  இந்த டால்ஃபின்களுக்கு. என்ன விஷயத்துககத் தங்களை நகர விடமாட்டேன் என்று அடம் பிடிப்பதோசு அல்லாமல்  தங்கள் வாலைத் தடார் தடார் என்று தண்ணீரில் அடித்து  ஓசைப் படுத்துகின்றன.
?
அவைகள் அப்படிச் செய்வது பயத்தால் என்பது இவர்களுக்கும் புரிகிறது என்ன காரணம் என்று புரியாமல் பதட்டப் பட ஆரம்பிக்கின்றனர்.
தண்ணீரோ சில்லென்று இருக்கிறது.

அப்பொழுது குழுத்தலைவருக்கு ஏதோ பொறி தட்ட  தண்ணீருக்கடியில்  பார்வையைச் செலுத்துகிறார்.
அங்கெ அவர் காணும் காட்சி அவரை உறைய வைக்கிறது.
அவர்களுக்கு நேர்கீழெ  ஒரு வெள்ளை ஷார்க்  வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது!
நொடியில் நிலைமையை உணர்ந்த அவர்(ஜாக்)  பெண்களிடம் பயத்தை ஏற்படுத்தாமல் தான் மட்டும் விலகிக் கொஞ்ச தூரம் போகிறார். அவர் பெண் அப்பாவைத் தனியாக விடக் கூடாது என்று தானும் அந்தக் குழுவிகிருந்து வெளியேறுகிறாள்.
அவள் அடிபட்ட காலிலிருந்த ரத்தம் கசிகிறது
இதற்குள் கரையிலிருந்து   இவர்களைப் பார்ப்பவர்கள் இவர்கள் டால்ஃபின்களோடு விளையாடுவதாக நினைத்து ஆரவாரமிடுகிறார்கள்.

இவர்கள் தோழன் ஒருவன் மட்டும் லைப் போட்டை எடுத்து வருகிறான்.
அதே நேரம் 45 நிமிடங்களாக இவர்களைக் காபந்து செய்த  டால்ஃபின்கள் விலகுகின்றன.
ஜாக் அப்போதுதான் ,  அந்த  சுறா அங்கெயிருந்து போன விஷயத்தை உறுதி செய்து கொள்கிறார்.

இனம் தெரியாத நன்றி உணர்வு அவரை அழச் செய்கிறது.

பெண்களை படகில் ஏற்றிவிட்டுத் தான் மட்டும் நீந்திக் கரை சேர்கிறார்..


கரை சேர்ந்தபிறகு நடந்ததைச் சொல்லுகிறார்.
 பெண்களும் மற்றவர்களும்  அதிசயத்தும் நன்றி உணர்விலும் ஆழ்ந்து போகிறார்கள்.

மரீன் பயலஜிஸ்ட் கூடவே வந்து டால்ஃபின்களின் மூளை வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார்.
அவைகளுக்கான சங்கேத மொழியில் சுற்றுப் புறத்தில் இருந்த அத்தனை தோழர்களையும் வரவழைத்து இவர்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து அந்த ஷார்க்கை அண்டவிடாமல் இவர்களைக் காப்பாற்றி இருக்கின்றன.
என்று இன்னும் விவரமாக விளக்குகிறார்.

அந்தப் படத்தைப்  பார்த்த    அதிசயத்தில் வெகு நேரம் கடவுளின் அதிசயப் படைப்புகளை நினைத்து  ஆச்சரியத்தில் மூழ்கி இருந்தேன்.












எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

43 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பாக உள்ளது... படங்கள் அருமை...

நன்றி அம்மா...

ஹுஸைனம்மா said...

வாசிக்கும்போதே பகீர்னு இருக்கு. டால்ஃபின்களின் செயல்பாடு வியப்பு ஏற்படுத்துகிறது.

கோமதி அரசு said...

அவைகளுக்கான சங்கேத மொழியில் சுற்றுப் புறத்தில் இருந்த அத்தனை தோழர்களையும் வரவழைத்து இவர்களை ஒரே இடத்தில் நிறுத்தி வைத்து அந்த ஷார்க்கை அண்டவிடாமல் இவர்களைக் காப்பாற்றி இருக்கின்றன.//

அன்பான டால் ஃ பின்கள் உயிர்களின் மதிப்பு தெரிந்து காப்பாற்றி விட்டதே!

கடவுளின் அற்புத படைப்பு தான் சந்தேகம் இல்லை.
பகிர்வுக்கு நன்றி அக்கா.

Angel said...

like humans they tend to show cultural behavior ..ஆமா வல்லிம்மா கடவுளின் அதிசயப் படைப்பு.டால்பின்ஸ் மற்ற விலங்குகளில் இருந்து சற்றே வேறுபட்டவை ஐந்தரை அறிவு உள்ளவை எனலாம் .

ADHI VENKAT said...

வியப்பான செய்திம்மா. படங்கள் அருமை. அன்பு எல்லா இடத்திலும் இருக்கிறது....

ஸ்ரீராம். said...

டால்ஃபின்களை மனிதர்களின் தோழர்கள் என்பார்கள். நெகிழ வைக்கும் சம்பவங்களில் ஒன்று. மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளை டால்ஃபின்களுடன் விளையாட விட்டால் பயன் ஏற்படும் என்று படித்திருக்கிறேன்! படங்கள் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

புத்தி கூர்மையான விலங்கினங்கள்..

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். படங்கள் கூகிளார் உபயம் பா. நான் எடுத்த டால்ஃபின் படங்களைக் கண்டெடுக்க முடியவில்லை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஹுசைனம்மா.சிகாகோ ஷெட் அக்வாரியத்தில் டால்ஃபின் காட்சிக்குப் போயிருந்த போது காட்சி முடிந்த பிறகும் மனம் வராமல் கைச்சுவரைப் பிடித்தவண்ணம் நின்றேன். ஒரு ஹூப் அடித்தது பாருங்கள் . சிலிர்னு மனமெல்லாம் மகிழ்ச்சி.கையசித்தால் இன்னோரு ஹூப்!!!!அருமையான உயிரினம்.நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி நமக்குத்தான் உயிரினங்களின் மதிப்பை அளவிட முடிவதில்லை. ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சிகளைப் பார்க்கவாவது கொடுத்துவைத்திருக்கிறது.
வருகைக்கு மிகவும் நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஏஞ்சலின். ஐந்தரை அறிவா. !!!
நல்ல செய்தி. அலுக்காத முக பாவனைகள். பிறரை மகிவிக்கவே உயிரெடுத்த பிறவிகளோ என்று தோன்றும் உயிரினம் இந்த டால்ஃபின்கள். எல்லா டால்ஃபின்களுக்கும் பெயர் கூட உண்டாம் சங்கேத மொழியில் ஒன்றை ஒன்று அழைத்துக் கொள்ளுமாம்.!!!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் ஆதி. அன்பைத் தேடி அலையவே வேண்டாம். தானே நம்மைத் தேடி அது வரும் சமயம் புரிந்து கொண்டால் போதும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். படித்திருக்கிறேன்.
என்ன ஒரு ஜீவகாருண்யம் இந்த டால்ஃபின்களுக்கு.
பார்க்கப்பார்க்க அதிசயமாக இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் சாரல். கண்ணிலேயே தெரிகிறது. டால்ஃபின் இருக்குமிடமெல்லம் போக வேணும் என்கிற ஆசை வருகிறது.

பாச மலர் / Paasa Malar said...

அற்புதம்தான்...படங்கள் அழகு...

குறையொன்றுமில்லை. said...

ஆறரிவு உள்ள மனுஷ ஜன்மம்னாலும் சரி ஐந்தரிவுள்ள பிராணிஜன்மங்களானாலும் சரி கருணை உள்ளங்கள் நிறம்பிதான் இருக்கு

துளசி கோபால் said...

ஆஹா..... என்னதான் சொல்லுங்க நியூஸிக்காரர்களுக்கு கருணை கொஞ்சம் அதிகம்தான்னு டால்ஃபின்கள் கூட ச் சொல்லுதே!!!!!!

இல்லாத காலரைத் தூக்கி விட்டுக்கவா?

ஜோக் இருக்கட்டும்....

கருணை என்பது மனித இனத்துக்கு மட்டுமா? எல்லோருக்கும் பொது இல்லையோ? அந்தந்த உயிர் அவரவர் மொழியில் பேசிக் கூட்டம் சேர்க்குது இல்லையா:-)))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் மலர்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் லக்ஷ்மி.உலகத்தில் கருணை நிறைந்துதான் இருக்கிறது.
எல்லோருக்கும் சென்று அடைந்தால் நன்றாக இருக்கும்.

Jaleela Kamal said...

படிக்கும் போதே ரொம்ப பயமா போச்சு .
வல்லியக்கா

மாதேவி said...

அவற்றின் செயல்கள் ஆச்சரியப்படவைக்கின்றது.

டொல்பின்கள் மனிதருக்கு உதவும் குணமுள்ளவை. கடலில் தத்தளித்தவரை கரைக்கு வழிநடத்திசென்று காப்பாற்றியது என முன்பு படித்திருக்கிறேன்.

sury siva said...

When all the doors are closed, GOD opens HIS.

I RECOLLECT THIS ON READING THIS.

SUBBU RATHINAM

இராஜராஜேஸ்வரி said...

நெகிழ வைக்கும் சம்பவங்கன் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_7.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி .நம்ம துளசியின் ஊர்ல இருக்கிற டால்பின்கள்னு சொல்லி இருக்கணுமோ:)

ஜீவகாருண்யம்கறது நமக்கு மட்டும்னு சொல்ல வரலப்பா. இதுகளுக்குஎத்தனை புத்திசாலித்தனமும் சேர்ந்து இருக்கு பாருன்னு சொல்ல நினைத்தேன்:)

வல்லிசிம்ஹன் said...

எங்க பேத்திக்கு டால்ஃபின் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதற்காகவே டால்ஃபின்கள் இருக்கிற இடமாக மகன் கூட்டிச் செல்வார்.
ஆனால் ஷார்க் இல்லாத இடமா இருக்கணும் சாமி!!

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்.ஜலீலா பார்க்கும்போது அப்படித்தான் நானும் உணர்ந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் சுப்பு சார்.
அபாயத்தில் இருக்கும் போது கடவுள் கட்டாயாம் கை கொடுப்பார் என்பது உண்மைதான். நன்றி மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,நிறையப் படித்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் தொலைக்காட்சியில் பார்த்தேன். நன்றாக எடுத்திருந்தார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு இராஜராஜேஸ்வரி,
கடவுளின் கருணை எண்ணற்ற விதங்களில் செயல் படுகிறது மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தனபாலன்.எப்போதும் எனக்கு இந்த உதவியைச் செய்கிறீர்கள் மிக மிக நன்றி.

vimalanperali said...

பேரதிசயம் என்பது இதுதானோ?

Anonymous said...

மிக அருமையான பதிவு .. ஏனைய விலங்குகளை விட மனிதன் 7 மடங்கு மூளையை பயன்படுத்துகின்றான், டால்பின்கள் 5 மடங்கு பயன்படுத்துகின்றது .. அதனை விலங்கு என்பதையும் தாண்டி அவையை ஒரு மனிதனுக்கு இணையான ஆட்களாக பாவிக்கும் படி கோரிக்கைகள் எழுந்துள்ளன ..

அவற்றுக்கு சமூகக் கட்டமைப்பு, புத்திக் கூர்மை, மொழிக் கூறுகள், சிந்தனையாற்றல் போன்றவை உள்ளன என்பது விசேடங்கள் ..

அத்தோடு தமக்கு பெயரிட்டு அழைக்கும் குணமும் உண்டு ..

அவைக் குறித்து நான் எழுதிய பதிவு ஒன்று இதோ..

http://www.kodangi.com/2012/09/dolphins-deserve-rights-scientists-told.html

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

டொல்பின்கள் புத்திசாலித் தனமானவை மனிதனுக்கு உதவுபவை.
இவ்விணைப்பில் மீனவர்களுக்கு எப்படி உதவுகிறதெனப் பார்க்கவும்.
Dolphin Assisted Fishing
http://www.youtube.com/watch?v=42MpfPqWkhk

ஸ்ரீராம். said...

மீள் பதிவு என்றாலும் சுவாரஸ்யமான பதிவு. என் முந்தைய பின்னூட்டமும் படித்தேன்! :)))))))

Geetha Sambasivam said...

இந்தப் பதிவு முதலில் போட்டப்போ என் கண்ணிலேயே படவில்லையே? இப்போத் தான் பட்டது. பகிர்வுக்கு நன்றி. ஆச்சரியமான விஷயம் தான். சிலிர்க்க வைக்கும் செய்தி.

Geetha Sambasivam said...

தொடர

கரந்தை ஜெயக்குமார் said...

டால்பின்களின் செயல் வியக்க வைக்கின்றது சகோதரியாரே.
படங்கள் அருமை
நன்றி சகோதரியாரே

வல்லிசிம்ஹன் said...

ஓ.பார்க்கவில்லையா கீதா. நானே நிறைய பதிவுகளை தவற விடுகிறேன். இத்தனைக்கும் நான் படிப்பது கொஞ்சமே. 2012இல் எழுதினது.ஏதோ கனவு மாதிரி இருக்கிறது.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஜெயக்குமார். தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

கோமதி அரசு said...

மீள் பதிவு என்றாலும் அருமையான செய்தி.

Thenammai Lakshmanan said...

எனக்கும் டால்ஃபின்கள் பிடிக்கும்மா. சிங்கப்பூரிலும் துபாயிலும் டால்ஃபின் ஷோக்கள் பார்த்திருக்கிறேன்.

அருமையான பகிர்வு.

வல்லிசிம்ஹன் said...

தேனம்மைக்கு உயிரினங்கள் அத்தனையும் பிடிக்கும். பாசம் தானே. நன்றி மா.பதிவை வந்து படித்ததற்கு.