Blog Archive

Wednesday, September 05, 2012

உடோபியா நாம் வேண்டும் காலம் கிடைக்கும்.

வெய்யில்க்கேற்ற நிழலுண்டு
Add caption
பன்னீர்புஷ்பங்கள்
சுவரில் விழுந்த சூரிய வெளிச்சம்

விரும்பும்போது வேண்டும் இடங்களுக்குச் செல்ல எப்போதும் ஆசை.
நான் நடக்காவிட்டாலும் பார்வை நடக்கிறது.

கையில் காமிரா இருந்தால் அழகைப் படம் பிடிக்கிறது.
சிலசமயம் பார்வையில் படும் அழகைக் காமிராவில்  அடைப்பதிலேயே ஆழ்ந்துவிட்டால் உண்மையான   இயற்கையை ரசிக்க விட்டுவிடுகிறேன்.
ஒரு  க்ளிக் பல்லாண்டுகள் கணினியிலும் பதிவுகளிலும் இருக்கலாம்.

அந்தக் காற்றையும் வெளிச்சத்தையும்  கடலோரம் நடந்த பெரியவரையும்
அவரைத் தொடர்ந்த நாய்க்குட்டியையும்  இன்னு ம் கொஞ்ச நேரம்   ரசித்திருக்கலாம்.
கடலில் எப்பவோ கரைத்த சாம்பல்களையும் நினைத்திருக்கலாம்.
காலை நனைத்த நுரை என்ன சொல்லவந்தது என்று யோசித்திருக்கலாம்.
''பாட்டி வா'' அங்கயே நிக்காதே  என்று கூப்பிட்ட 
பேத்தியின் குரல்
எதிர்காலமகிழ்ச்சிகளை
எனக்கு நினைவூட்டியது.
அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டேன்.


எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

23 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அருமை... இனிய நினைவுகளை இனிமையாக பதிவு செய்து விட்டீர்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

அழகான தெளிவான ரசனைக்குரிய படங்கள். அவற்றோடு நீங்கள் இயற்கையை வர்ணிக்கற விதமே தனிப் படமா மனசுக்குள்ள காட்சியா ஓடுது. அருமைம்மா.

ராமலக்ஷ்மி said...

GRT Temple Bay. அத்தனை படங்களும் அழகு. அருமையான இடம்.

எல் கே said...

படங்கள் அட்டகாசம்

ஸ்ரீராம். said...

பாதங்கள் போகாத இடங்களுக்கு [மனப்] பார்வை போகிறது. எண்ணங்களின் வண்ணங்கள் எப்போது மகிழ்ச்சி நிறத்தையே காட்டட்டும். அருமையான படங்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.

குறையொன்றுமில்லை. said...

நானும் ரொம்ப நாளா உங்க பக்கம் வரவே இல்லே. பதிவர் சந்திப்பில் உங்களை சந்த்தித்தது அவ்வளவு சந்தோஷமா இருந்தது. இந்தப்பதிவிலும் பகிர்வும் படங்களும் சூப்பரா இருக்கு

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன்.
நினைவுகளை இனிமையாக வைத்துக் கொள்ள தான் படங்களும் பதிவுகளும்பா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கணேஷ் ,ரசிப்பதற்கும் பெரிய மனம் வேண்டும்.இயற்கைக்கு உண்டான அழகைப் படம் எடுப்பது பெரிய விஷயம் இல்லம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி.
அதே இடம்தான். மனம் உற்சாகம் கிடைக்க கடல் ஒன்றே போதும். நல்ல விடுமுறையாகக் கழிந்தது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி கார்த்திக்.

ஒன்றை மறந்தீர்களே. இடம் அல்லவா முக்கியம்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம். படங்கள் மூலமாக சென்ற இடங்களை மனதில் நிறுத்தி ,பிகாசா மூலம் மீண்டும் அனுபவிக்கலாம். என் பெரிய சொத்து
இந்த அனுபவப் பாடங்கள் படங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு லக்ஷ்மி, வாழ்வே பெரிய அனுபவமாக உங்களுக்கு இருந்திருக்கிறது. உங்கள் முன்னால் நான் ஒன்றுமே இல்லை. நீங்கள் முடிந்த போது படியுங்கள்.

Unknown said...

சிந்தனைக்கு விருந்தாக இயற்கையை இரசிக்கும் உங்கள் மகிழ்வுக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் படங்கள் ஒவ்வொன்றும் அருமை சகோதரி! நன்று!

சாந்தி மாரியப்பன் said...

பகிர்வும் படங்களும் அருமை வல்லிம்மா..

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் அழகான படங்கள். ;)))))
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

ஐயாவுக்கு நல்வரவு.
இயற்கையை விட அற்புதமான படைப்பு ஏது.அதையே படங்களில் பதிந்து பின்னாட்களில் மகிழவே புகைப்படங்கள் எடுக்கும் வழக்கம் தொற்றிக் கொண்டது
நீங்கள் ரசிப்பதும் உற்சாகமே.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சாரல்.
படங்களுக்கு இன்னும் விளக்கம் கொடுத்திருக்கலாம்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோபாலகிருஷ்ணன் சார்.
எப்பொழுதாவது கிடைக்கும் விடுமுறையில் மனம் மகிழும் காட்சிகள் கிடைக்கும் போது,புகைப்படம் எடுக்காமல் இருக்க முடியவில்லை.
நன்றி மா.

ஸாதிகா said...

டெஸ்ட்

ஸாதிகா said...

அருமையாக படம் எடுத்து பகிர்ந்திருக்கீங்கம்மா.வாழ்த்துக்கள்.உங்கள் படைப்புகளை இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

Geetha Sambasivam said...

அருமையான படங்கள். நீங்க சொன்னாப்போல் விளக்கம் இன்னும் கொடுத்திருக்கலாம். என்றாலும் எளிமையும், இனிமையும் கலந்து சொல்லிப் புரிய வைத்திருக்கிறீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான படங்கள். சொன்னவையும் அருமை...

மாதேவி said...

அழகான படங்களுடன் அருமையான விளக்கம்.