நேற்றுப்
பூத்தது ஒன்று.
இன்று மலர்ந்தது ஒன்று.
கடந்த இரண்டு மாதங்களாகச் செடிகளை நிறையக் கவனிக்கச் செய்த சிட்டுகள் எங்கள் பேத்திகள்..
ஒரு ஒரு செடிகளாக ஆராய்ந்து மலர்களை செடிக்கு நோகாமல் பறித்து
இதை அப்படியே உம்மாச்சிக்க வைக்காமல் ஒரு கிண்ணத்தில்
வாட்டர் விட்டு வை பாட்டி.
அப்போ மூணு நாளுக்கு வாடாமல் இருக்கும்.
மஞ்சள் பூ,செம்பருத்தி,மாதத்துக்கு ஏழு பூக்கள் தவறாமல் கொடுக்கும் அடுக்கு மல்லி, ,டெம்பிள் ட்ரீ பூக்கள், மகிழம்பூக்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.
ஆனால் ஒன்று தலையில் வைத்துக் கொள்ள இருவருக்கும் அனுமதி இல்லை.
உம்மாச்சி பக்கத்திலியே இருக்கட்டும் பாட்டி. தே வில் பி மோர் ஹாப்பி:)
குழந்தைகளே இந்தத் தளிர் மென்மை எப்போதும் உங்களிடம் இருக்கட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
13 comments:
மலர்களும் மலர்களும் ரொம்ப இனிமை & அருமை!!!!
பூக்களும் அழகு. பூக்களின் கருத்துகளும் அழகு.
அழகாகவும், அருமையாகவும் உள்ளது... நன்றி அம்மா...
குழந்தைகளுக்கு கூடக்கொஞ்ச நாள் அந்த மலர்களை வாடாமல் வச்சிருக்கனும்ன்னு ஆசை..
அழகு..
பூக்களைப் பறிக்காது செடியிலேயே விட்டால் எவ்வளவு அழகு!
இரு மலர்களும் அருமை!
சிட்டுக்களின் கருத்து அருமை.
இருமலர்களும் அழகு.
குழந்தைங்க சொல்றதும் சரிதான். பறிச்சா உடனே வாடிரும், அதுவே தண்ணியில் போட்டு வெச்சா கூடுதலா ரெண்டு நாள் ஃப்ரெஷ்ஷா இருக்குமே.
அடுக்கு மல்லியா இது? பிங்க் கலர்லயும் வருமா? இப்பத்தான் பாக்கிறேன்.
பூவை சூடினாலும் பூ அழகு;
பூவைச் சூட்டினாலும் பூவைக்கு அழகு.
ஆனால் இப்போதெல்லாம் யாருமே பூ வைச்சுக்க விரும்புவதில்லை. :( செடியில் மலர்ந்து வாடிக் கீழே உதிர்வதை விடவும் பறித்துத் தொடுத்து உம்மாச்சிக்கும் வைச்சு நாமும் வைச்சுக்கறது தான் எனக்குப் பிடிச்சது.:)))))))
குழந்தைகளின் மென்மனம் மாறாமல் இருக்கணும்கற உங்களோட ஆசை எனக்குப் பிடிச்சிருக்கு. அது நிறைவேறட்டும். பூக்கள் பாக்க ரொம்ப அழகும்மா.
குழந்தைகளும் மலர்களைப்போல் மென்மையானவர்கள்தானே அந்த மென்மை தொடர வாழ்த்துகின்றோம்.
பூக்கள் அழகு எனக்கும் பிடிக்கும் இந்தப் பூ.
எல்லாருக்கும் நன்றி மா.மின்சாரத்தடை நீங்கி இப்பதான் ஒருவழியா சரியாகி வருகிறது வீடு. அது ஒரு தனிக்கதை:)
அதனால் உடனே பதில் இட முடியவில்லை.
/குழந்தைகளே இந்தத் தளிர் மென்மை/
பூப்போலவே அழகு.
Post a Comment