இரண்டு வருடங்களுக்கு என்னைக் கௌரவித்த அன்னை. |
2002 கொலுவில் கொலுவிருந்த துர்காமா பட்டீஸ்வரம் துர்கா அன்னை ++++++++++++++++++++++++++++++++ |
காமதேனுவின் மகள் பட்டியால் பால் சொரிந்து வழிபடப்பட்டவர்.
இந்தப் பட்டீஸ்வரம் தான் பழையாறையாம்.
அர்ச்சகர் இந்தவரலாறுகளைச் சொன்னதும் பொன்னியின் செல்வன் பக்கங்களுக் குப் போன உணர்வு ஏற்பட்டது. சோழ மன்னர்கள் வழிபட்ட, தலைநகரமாக இருந்த இடம்.
திருஞானசம்பந்தர் வழிபட வருவதை அறிந்த இறைவனும் இறைவியும் வெய்யில் தெரியாமல் இருக்க அவருக்கு நிழலாக முத்துப் பந்தல் இட்ட இடம்.
சோழர்கள் போருக்குப் புறப்படுவதற்குன் வழிபட்ட ஸ்ரீதுர்காம்மா.
பட்டி விக்ரமாதித்யன் வந்து வழிபட்ட இடம்.
1600 வருடங்களுக்கு முற்பட்ட கோவில் என்று விளக்கினார் குருக்கள்.
எனக்கு இந்த உலகில் ,இப்போதைய நேரத்தில் இருக்கும் எண்ணமே இல்லை. காலத்தத் தாண்டி வேறு எங்கே யோ இருக்கும் உணர்வுதான் மிஞ்சியது.
. அற்புதமான சூழல்.
எத்தனை சித்திரங்கள். எத்தனை சிற்பங்கள். பார்க்கத்தான் நேரம் இல்லை. முடிந்தவரை நினைவுகளைத் தேக்கிக் கொண்டேன்.
அனைவரும் சென்று தரிசிக்க, உணர வேண்டிய தலம்.
இந்தப் புண்ணிய தரிசன த்துக்கு வழி வகுத்த இறைவனுக்கு நன்றி.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
12 comments:
இனிய பயண பகிர்வுக்கு நன்றி அம்மா !
பட்டீஸ்வரம் கோவில் அருகிலுள்ள திருசக்திமுற்றம் சென்றீர்களா அம்மா.நல்ல தெய்வீகநினைவுகளை நிரம்பச்செய்த பதிவு அம்மா
பட்டீஸ்வரம் கோவிலில் ஆனி முதல் தேதி திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்து பந்தல் கொடுத்த நிகழ்ச்சியை விழாவாக கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்திரா சொன்ன கோவில் பட்டீஸ்வரம் கோவில் எதிரில் உள்ளது. அம்மாள் இறைவனை தழுவி கொண்டு இருக்கும் காட்சி அழகாய் இருக்கும்.
அம்மன் பேர் தழுவக்குழைந்த நாயகி அம்மன் பேர். இந்தக் கோவிலும் பாடல் பெற்ற தலம்.
பதிவு அருமை.
அட!!! இதுதான் பழையாறையா!!!!!!
குந்தவி நாச்சியாரும் வானதியும் மனசில் வந்து உக்கார்ந்தாச்சு:-)
இனி ஒருக்கா பொன்னியின் செல்வன் வாசிக்க வச்சுட்டீங்களே:-)))
நன்றி தனபாலன்.தவறாமல் வருகை தருகிறீர்கள். என் இணையப் பதிவிலிருந்து மற்ற பதிவுகளுக்குப் போவது மிகவும் சிரமமாக இருக்கிறது. மன்னிக்கணும்.
அன்பு இந்திரா, பட்டீஸ்வரம் அம்மா தரிசனம் ஒரு தற்செயல் நிகழ்ச்சி.குட்டிக் குழந்தைகள் அவர்களுடைய தேவைகள் எல்லாம்வைத்துக் கொண்டு பிரயாணம் செய்தது மிகவும் சிரமம்.ஆசை இருக்குதான்.பார்க்கலாம்:)நன்றி அம்மா.
வரணும் கோமதி.எனக்கு குருக்கள் விளக்கிச் சொன்னதே அமிர்தமாக இருந்தது.
இந்திரா சொல்லும் கோவில் சிற்பமும் இந்தக் கோவிலில். பார்த்தேன்.
அதிகப்படி தகவலுக்கு ரொம்ப நன்றிப்பா.
என்ன அழகான பெயர்.
வாசிங்க வாசிங்க.நல்லதொரு நாட்களுக்குப் பயண்ம் செய்த பெருமை கிடைக்கும் துளசி.
இனிய கோவில் பற்றிய பகிர்வு. நெடுநாளாக போக எண்ணியிருக்கும் கோவில்.... போக வேண்டும் விரைவில்....
அடேங்கப்பா.... அவ்வளவு பழைய கோவிலா? படங்கள் ஏதும் எடுக்கவில்லையா? பழையாறை இதுதான், பட்டி விக்ரமாதித்தன் வழிபட்ட கோவில் என்ற தகவலெல்லாம் ஆச்சர்யம் அளிக்கிறது.
வணக்கம் அம்மா...
உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று திரு. சொக்கன் அவர்களால் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_2.html) சென்று பார்க்கவும். நன்றி !
பட்டீஸ்வரம் கோயிலைத் தர்சித்தோம்.
Post a Comment