எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
நீ கடைப்பக்கம் போவியாம்மா.
உம்ம் போவேன் .
என்னவேணும்மா.
தயங்கியவாறு தனக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருளை அம்ம சொன்னார்.
நான் அதிர்ச்சியோடு பார்த்தேன்.
ஏன்மா உனக்கு அந்தப் பிரச்சினையெல்லாம் நின்று விட்டதே .
இது என்ன புதிதா.டாக்டரைப் பார்க்கணுமா.
இல்லைமா அப்பா அழைத்துக் கொண்டு போனார்.
எனக்கு அவரிடம் இதை வாங்கிக் கொண்டு வரச் சொல்ல கூச்சமாக இருக்கிறது.
நீ அடுத்த தடவை வரும்போது, இம்ப்காப்ஸிலிருந்து
ஸ்வாஸ் மாத்திரையும்,
இந்தப் பாக்கேட்டையும் வாங்கிண்டு வருகிறாயா என்றபடி ஒரு நூறு ரூபாயை என் கையில் வைத்தார்.
என்ன கஷ்டம் அம்மா உனக்கு?
அடிக்கடி நீர் கசிகிறது. வெளியே போகவே பயமா இருக்கு.
டாக்டர் ஆபரேஷன் செய்துக்கலாம்னு சொல்கிறார்.
நீ சரின்னு சொன்னால் கல்யாணி நர்சிங் ஹோமில் செய்து கொள்கிறேன்.
ஐய்யோ அம்மா, பெண்ணிடம் பேசவே உனக்கு இவ்வளவு பயமா.
என்னை ராட்சசி வம்சத்தில் சேர்த்து பயந்திருக்கிறாயா.
இது நடந்தது 23 வருடங்களுக்கு முன்.
அப்போது இந்த சங்கடத்துக்கு மருந்து மாயம் ஒன்றும் இல்லை. சிறுநீரக ப்ளாட்டர் அருகே ஒரு மைனர் அறுவை சிகித்சை.
ஆனால் அது செய்தும் பயன் படவில்லை. இந்தப் பிரச்சினையும் வாங்குவதும் தொடர்ந்தது.
சுத்தம் படு சுத்தம் என்றிருக்கும் அம்மாவுக்கு
இது பெரிய விஷயமாக மனதைப் பாதித்தது.
உடல் தளர்ந்ததால் வந்த சிரமம்.
பிறகு அதையும் தைரியமாக எதிர் கொண்டார்.
சிரித்த முகத்தை எந்தக் காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளவில்லை.
இப்போது எத்தனையோ மாற்று சிகித்சைகளும்
உதவிகளும் பலவடிவில் வந்துவிட்டன.
நாற்பது வயதிலேயே அவதிப் படுபவர்களும் இருக்கிறார்கள் என்பதைப் பத்திரிகை வாயிலாக அறிகிறேன்.
இதோ நானும் அந்த லிஸ்டில் தான்.
அம்மா உன்னளவிற்கு எனக்கும் பொறுமையும் தைரியமும் கொடு.
அத்தனை உயிரையும் நேசிக்கும் பண்பையும் கொடு.
.
உலகில் அன்னை பெண்வடிவத்தில் மட்டும் இல்லை. தந்தையரும் குழந்தைகளைப் பேணும் காலம் இது.
வாழ்த்துகள். உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுங்கள். குடும்பம் நன்றாக இருக்கும்.
21 comments:
இந்தப் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமில்லைப்பா ஆண்களுக்கும் இருக்கு!
வேகமான தும்மல், இருமலால் கூட இப்படி நீர்க்கசிவு ஏற்படுகிறது.
இதுக்காக விசேஷமான உள்ளாடைகளும் மற்றவைகளும் இப்போ கிடைப்பதால் வீட்டிலேயே அடைஞ்சுகிடக்காமல் வெளியே போய்வர முடிகிறது என்பது சீனியர் சிட்டிஸன்களுக்கான வரப்ரசாதம்தான்.
உங்களுக்கும் உங்கள் வாசகர்கர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்ப்பா.
அனைத்துத் தாயுள்ளங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்னு சொன்னீங்களே... அங்க நின்னுட்டீங்கம்மா! எக்ஸலண்ட். நானும் எல்லா தாயுள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்!
தாய்மையைப் போற்றி வணங்கி, உங்களுக்கும் எல்லோருக்கும் என்னோட அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கறேன்!
ஆமாம் கேள்விப்பட்டேன்.டயபெடிஸ் இருக்கிறவங்களுக்குக் கேட்கவே வேண்டாம்.
துளசி, அம்மா அந்தப் பிரச்சினை வந்த பிறகு வெகுநாட்கள் கோவில் கூடப் போகாமல் இருந்தார்.
ஆரோக்கியம் வேண்டும் என்கிறோம்.மன உளைச்சல் அதிகமானால் வியாதிகளும் கைகோர்த்துக் கொண்டு வருகின்றன.
உங்களுக்கும் கோபாலுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்.
வரணும் கணேஷ்.அன்பு இருக்கிற இடத்தில் அன்னையும் இருப்பாள் இல்லையா. அதனால்தான் எல்லோரையும் சேர்த்துவிட்டேன். உங்கள் குடும்பத்தவர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
வரணும் நிரூ. வருங்கால அம்மா ஆச்சே.
உனக்கும் அம்மா அப்பா அனைவருக்கும்
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் மா.
வெள்ளி நிலவில் அன்னையைப் பார்ப்பதில் ஆறுதல் தங்களுக்கு என்பதை அழகாய் சொன்னது தலைப்பு.
எங்கும் உள்ளது ஒரே நிலா. எல்லோரையும் இரட்சிக்கும் நிலா.
/அனைத்து தாயுள்ளங்களுங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்./
நானும் சொல்லிக் கொள்கிறேன். வாழ்த்துகள் அனைவருக்கும்!
ஆமாம் ராமலக்ஷ்மி.நிலவைப் பார்க்கும்போது அதன் குளிர்ச்சி அம்மாவின் அனபைப் போலவே தெரியும்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகள்.
அமெரிக்க நிலா அத்தனை சோபிக்கவில்லை. ‘இந்திய நிலா’தான் பெஸ்ட்!! :-))))
நீர்க்கசிவுப் பிரச்னை - பொதுவாகவே பெண்களுக்குள்ள, தும்மல் வந்தால், சிரித்தால், நீர்க்கசிவு என்று இருப்பதே தாங்கமுடியா துன்பம். இதில் தொடர் நீர்க்கசிவு என்றால், பெரும் வேதனைதான். டயாபர் போன்றவை பயன் தந்தாலும், ஓரளவுக்குத்தான். இறைவன்தான் காக்கவேண்டும்.
இன்று உலக செவிலியர் தினம் என்று பார்த்தேன். அன்னையர் தினமும் இன்றுதானா.... வேறொரு நாள் இல்லை? எந்த நாளாய் இருந்தால் என்ன? எல்லா நாளும் அன்னையர் தினமே. அன்னையர் தின வாழ்த்துகள்.
ஸ்ரீராம் நாளைக்குத் தான் அன்னையர்தினம். அம்மா நினைவு வந்ததால் அதையே அம்மா தினமாகப் பதிந்து விட்டேன். செவிலியர் தினமா இன்று. அவர்கள் இல்லாமல் நம் உடல் நலம் காப்பது யார்.
அன்னைக்கு அடுத்த ஸ்தானம் அவங்களுக்குத்தான்.
உங்களுக்கும் குடும்பத்திற்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்மா.
"அன்னையர் தின வாழ்த்துக்கள் !"
அன்னையர் தினத்தன்று நெகிழ வைக்கும் பகிர்வு.
வரணும் ஸாதிகா.அம்மா என்றால் நெகிழ்வுதான்.மிக மிக நன்றி அம்மா. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வரணும் தனபாலன்.
உங்கள் அன்னைக்கும் மற்றவர்களுக்கு அன்னையர்தின வாழ்த்துகள் மா.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
அம்மா பற்றி எத்தனை படித்தாலும் , அலுக்கவே இல்லை.
மறக்க மிடியாத பல சம்பவங்கள் மனதை பிசிகின்றன.
வாங்க ஹுசைனம்மா.
இந்தத் தொந்தரவுக்கு இரவு தூக்கம் கெடாமல் இருக்க அம்மாவுக்கு மருந்து கொடுத்தார்கள். அந்த மருந்தும் சிலநாட்களுக்குப் பிறகு கிடைக்கவில்லை
எத்தனை இரவுகள் விழித்திருந்தார்களோ தெரியாது.
அதையே வாழ்வு முறையாக ஏற்றுக் கொண்டார்கள்.பெண்களுக்கு இறைவன் ஒருவனே அம்மா அப்பா எல்லாம்.
வரணும் வெற்றிமகள். நல்லா இருக்கீங்களா.
ஆமாம் அம்மாவைப் பற்றி எத்தனை எழுதினாலும் போதாது.
எத்தனை வணங்கினாலும் போதாது.
அன்னையர்தின வாழ்த்துகளை அனுப்புகிறேன் மா.
அன்னையர் தின வாழ்த்துகள்.
உங்களுக்கும் என் அன்னையர்தின வாழ்த்துகள் மாதேவி.
உலகில் அன்னை பெண்வடிவத்தில் மட்டும் இல்லை. தந்தையரும் குழந்தைகளைப் பேணும் காலம் இது.
அனைத்து தாயுள்ளங்களுங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். உங்கள் ஆரோக்கியத்தைப் பேணுங்கள். குடும்பம் நன்றாக இருக்கும்.//
நிச்சியம் தாய் முதலில் தன்னப் பார்த்துக் கொள்ள வேண்டும், அப்போது தான் குடும்பத்தினரை பாதுகாக்க முடியும்
Post a Comment