சுந்தரத் தோளழகன் |
பக்தர் வெள்ளம் |
குதிரை அழகும் குடை அழகும்
வண்ணப் பட்டழகும்
சீறிப்பாயும் கண்ணழகும்
அத்தனை அழகும் சேர்ந்தும் ஆண்டாள் அவனிடம் வரம் தானே கேட்டாள்.
இணைத்துவை என்னை அரங்கனொடு என்று.
அரங்கனும் அழகர் வடிவில் வந்து அவளை ஆட்கொண்டதாகவும் செய்தி சொன்னார்,,.
ஆண்டாளின் திருத்தகப்பனார் பெரியாழ்வார், இறைவனை நினைத்து அரங்கனை நினைத்து ,மாலிருஞ்சோலைக்கு வந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்,'அவரது நினைவிடம்(திருவரசு) இங்குதான் இருக்கிறது,.
அதைத் தரிசிக்கத்தான் எங்களுக்கு முடியவில்லை.
சுந்தர பாஹு(அழகிய தோள்கள்) என்று அவனுக்குப் பெயர். ராமனுடைய வடிவத்தில்
அவன் இருந்தால் வில்லெடுத்து அம்பு விடும் தோள்கள் அழகில் சிறந்து
பருத்து நீண்டுதானெ இருக்கும்.
சுந்தரராஜன் என்றும் இன்னோரு பெயர்.
மூலஸ்தான பெருமாளுக்கு 'பரமஸ்வாமி' எனும் நாமம்.
நாங்கள் 2003இல் மதுரைப் பயணம் மேற்கொண்ட போது கேட்டுக் கொண்ட விவரங்கள் இவை.
கொஞ்சம் மலையில் ஏறி நூபுர கங்கையையும் தரிசித்தோம்.
கள்ளர்கள் கூட்டமாக வந்து வழிபட்ட இடம் அவனும்கள்ளழகனானான்..
அவனுக்கும் காவல் பதினெட்டாம்படிக் கருப்பண்ணன் சாமி.பெரிய பெரிய ஈட்டிகளும் அருவாள்களும் அந்தப் பெரிய கதவை ஒட்டி நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.
நீதி நியாயம் கேட்டு வருபவர்களுக்கு அங்கே கிடைக்கும் என்றும்
பொய் வழக்குப் போட்டவர்களுக்கு அதற்குத் தண்டனை கிடைக்கும் என்றும் சொன்னார்கள்.
நாளை எந்தத் தொலைக்காட்சியிலாவது ஒளிபரப்ப மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
17 comments:
வசந்த் தொலைக் காட்சியில் ஒளி பரப்புவார்கள் என்று நினைக்கிறேன். 2003 இல் சென்று வந்தீர்களா.... நான் அழகர் மலை ஏறி முப்பது வருடம் ஆகி விட்டது!!
சுவையான தகவல்கள் கொண்ட பதிவு. அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியை இன்று ஜெயா டி வி யிலும் ஒளிபரப்பினார்கள் என்று நினைக்கின்றேன்.
சித்ரா பவுர்ணமி வாழ்த்துகள். நிலாவைத்தான் காணோம். ஒரே மேகமூட்டமாக இருக்கிறது.
75ஆவது வருடம் மதுரையை விட்டோம். 93 இல் போனோம். அப்பொழுதே ஐய்யொ இது நம் மதுரையா என்றிருந்தது. 2003இல் மீனாட்சி அம்மாவைப் பார்க்கவே முடியவில்லை ஸ்ரீராம். ஒளிபரப்புக் குறிப்புக்கு ரொம்ப நன்றிமா. கட்டாயம் பார்க்கிறேன்.
ஒளி பரப்பியாச்சா. கௌதமன்.
ஆறாம் தேதி என்று காலண்டரில் போட்டு இருந்ததே.:(
காலையில் சமையல் வேலை அதிகம். இன்று எங்கள் நரசிம்மருக்கும் ஜயந்தியாயிற்றே.அதிலேயே நேரம் போய்விட்டது. தொலைக்காட்சிபக்கமே வரவில்லை.
தகவலுக்கு நன்றி மா.
நல்ல தகவல்கள் ! வாழ்த்துக்கள் !
/குதிரை அழகும் குடை அழகும்
வண்ணப் பட்டழகும்
சீறிப்பாயும் கண்ணழகும்
அத்தனை அழகும்/
ஆம் அத்தனை அழகு.
நேற்று இங்கும் ஒரே மேகமூட்டம்:(. முன் இரவில் பிடித்திருந்தால் அபூர்வ நிலாவைப் பெரிய அளவில் பிடித்திருந்திருக்கலாம். மூன்றாவது முயற்சியில் கிடைத்தது வெற்றி:)!
வாங்கப்பா ராமலக்ஷ்மி.
உங்கள் தளத்திலாவது நிலாவைப் பார்க்கிறேன். எங்கள் வீட்டு முன்னால் எட்டு மாடிக் கட்டிடம். அதன் பின் ஒளிந்து கொண்டது நிலா.
இன்று மீண்டும் முயற்சிக்கிறேன்.நன்றிமா.
நன்றி தனபாலன். நீங்கள் மதுரை போகவில்லையா.
மன்னிக்க வேண்டுகின்றேன்! நீங்கள் சொல்வது சரி. ஆறாம் தேதியாகிய இன்று காலைதான் ஜெயா டி வி நேரடி ஒளிபரப்பு. நான் அதற்கான விளம்பரத்தை நேற்று பார்த்துக் குழம்பிவிட்டேன்; குழப்பிவிட்டேன்.
பரவாயில்லை கௌதமன். நான் எப்பொழுதும் நான்கு மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில் சுப்ரபாதமும் கந்த சஷ்டி கவசமும் பார்த்துவிட்டு விஜய் டிவிக்குத் தாவுவேன்.
அதனால் ஒன்றையும் தவற விடவில்லை.ஸ்ரீராம் தான் சொல்லிவிட்டாரே:)
கொசுவர்த்தி சுற்றுவதே சுகம்..அதுவும் மதுரையைப் பற்றியதென்றால் தனிசுகம்தான்..பகிர்வுக்கு நன்றி வல்லிமா
அழகர் ஆற்றில் இறங்கிய காட்சி செய்தியில் பார்த்தேன்.
வரணும் மலர். மதுரைக்குத் தனி ஈர்ப்பு
எப்பொழுதும் உண்டு.அதுவும் சித்திரை,பங்குனி யில் பலவித உத்சவங்கள் கேட்கவா வேண்டும்;)
அன்பு மாதேவி,தவறாமல் வந்து பின்னூட்டம் இடுவது இனிமை. மதுரை பற்றி எழுதுவது இன்னும் இனிமை.
மிகவும் நன்றிமா.
அழகரைத் தொலைக்காட்சியில் பார்த்தோம். அதிகாலையிலேயே ஆற்றில் இறங்கிவிட்டதாய்ச் சொன்னாங்க. ஐந்தரை மணி அளவில். பச்சைப் பட்டு உடுத்திக் கொண்டு. அப்பாடானு இருந்தது. :))))
நானும் முதலில் பட்டைத்தான் பார்த்தேன்:)
பச்சையா சரி என்று நினைத்துக் கொண்டேன். நானும் இறங்குவதைப் பார்க்கவில்லைமா.
ஒரு நிமிஷம் வீரராகவப் பெருமாளும் இவரும் சுற்றி வந்தார்கள். அடுத்த நிமிஷம் காட்சி மாறிவிட்டது!!
Post a Comment