Blog Archive

Saturday, April 21, 2012

தோழிக்கு மிஸ்ஸ்ட் கால் அதிகாலை 1.20க்கு

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆநந்ததிற்கு ஒரு மிஸ்ஸ்ட்  கால் கொடுத்த   அடுத்த பதிவு இந்தப் பதிவாக இருப்பது சந்தோஷமாக இல்லை.

என் அடுத்தவீட்டுத் தோழி  தனியாக வசிப்பவர். ஒரு பெண் அதுவும் மும்பையில்   வாசம்.
தோழி என்னைவிட 7 வயது மூத்தவர்.
ஆர்தரைடிஸ், ரத்த அழுத்தம் எல்லா விதமான   நோய்களால்
பாதிக்கப் பட்டாலும் மிகவும் உற்சாகமான    மனுஷி.
நிறைய நண்பர்கள். அக்கா தங்கைகள்.
அவர்களெ அரண்டு போகிறமாதிரி வந்தது இந்த மிட்நைட் ஃபோன் கால்.

தனியாக வாழ்ந்தாலும்  அயராமல் கச்சேரி,கல்யாணம் என்று வளைய வருபவர்,.

நேற்று  காலை  அவரிடமிருந்து ஒரு பதட்டமான அழைப்பு.
என்ன ஆச்சு   அம்மா என்று கேட்டால்.

நேற்று  ராத்திரி  நல்ல தூக்கத்திலிருந்து   ஃபோன் அடித்ததில் எழுந்துவிட்டேன்.
எடுத்துக் கேட்டால் பதிலே இல்லை. ரொம்ப பயமாக இருக்கிறது. எனக்கு அதற்கப்புறம் தூக்கமே இல்லை.
கொஞ்சம் வரமுடியுமா   என்றார்.

பதட்டத்துக்குக் காரணம் அவரது உறவினர் ஒருவர்    புற்றுநோயால்
அவதிப் பட்டுக் கொண்டிருப்பதுதான்.
அவருக்கு ஏதாவது  ஆகியிருக்குமோ என்ற கவலை.

நான் போன போது  விசாரிக்கையில்  ,மிஸ்ஸ்ட் கால்  தெரியும் இல்லையா என்று கேட்டேன்.
ஆமாம்,  காலர் ஐடி வைத்திருக்கிறேன்.

உடனே    எடுத்துப் பார்த்ததில் சரியாக இரவு   1.30க்கு
ஒரு   நம்பர் பதிவாகி  இருந்தது.
கொஞ்சம் யோசித்த பிறகு உங்களுக்கு இது யார்னு தெரியணுமா. இல்லை விட்டுவிடலாமா,  என்ற போது வந்ததே அவருக்குக் கோபம்.

அதெப்படி விடமுடியும். யார் அவனோ. திருப்பி இன்னிக்கு ராத்திரி அழைத்தால்   என்ன செய்வது.
ஏதாவது செய்யணும் என்றார்.
எப்படி யென்று கொஞ்சம்   யோசித்து சரி    பிஎஸென் எல்  இணையத்தளத்தில் தேடலாம்    என்று அவரது கணினியைத் திறந்தேன்.

இந்த நம்பருக்கான  பெயர் கிடைக்கவில்லை.
அடுத்த ஸ்டெப்  197.
அவர்களை அழைத்த போது   நிலைமையை விவரித்து  எங்களுக்கு அந்த நம்பரின் அடையாளம் வேண்டும் என்று கேட்டேன்.
என்  அழைப்பை அட்டெண்ட்  செய்த பெண் மிகப் பரிவாக
எல்லாவற்றையும்  கேட்டுக் கொண்டார்.
எண்ணையும் எடுத்து, மொத்தம்    20 செகண்டுகளில்
அந்த எண்ணுக்குறியவரின் பெயர், விலாசம் எல்லாம்  கொடுத்துவிட்டார்.

என் தோழிக்கு   யார் என்னவென்று கூடத் தெரியவில்லை. அந்த மாதிரி ஒரு
தெரு  பெயர் கூடக் கேள்விப்பட்டதில்லை.
என்ன செய்யலாம் என்று தொலைபேசி  உதவியாளரிடமே கேட்டேன்.
அவர்  இந்த   விஷயத்தையே   அப்படியே விட்டுவிடச்  சொன்னார்.

ஏன்பா  இந்தமாதிரி நடுராத்திரி கூட யாராவது  போன் செய்வாங்களா

அவர் முதலில் நிதானத்தில் இருந்திருக்க மாட்டார்.
தவறான நம்பரை  டயல் செய்திருக்கலாம்.

இல்லையே   அந்த நம்பரை நான் அழைத்தேனே 
அவன் எடுக்கவே இல்லயே...என்று சில நல்லவார்த்தைகளால்

என் தோழி திட்டினார்.
நாம் இதைக் கிளறுவதால்  நமக்குத்தான் நஷ்டம். இது போல்  இன்னோரு தடவை அழைப்பு வந்தால்
பிறகு ஆக்ஷன் எடுக்கலாம். பொறுமையாக இருங்கள்.

உங்கள் உறவினர்கள்   இடம் இரவு வேளையில் போன் செய்யவேண்டாம் என்றும்,  அப்படி ஏதாவது எமர்ஜென்சி   என்றால்  கைபேசியில்
அழைக்கவும் சொல்லச்  சொல்லிவிட    ஐடியா  கொடுத்தார்,.
ஆகக் கூடி என் தோழியின் தூக்கம் போயிற்று,.
நேற்று இரவு தங்கைவீட்டு க்குத் தூங்கப் போய்விட்டார்.

இந்தப் பதிவு எழுதிவைத்து இரண்டு நாட்கள் ஆச்சு. அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு பதிவிடுகிறேன்.

இந்தப் பதிவில் நான் நன்றி சொல்லவிரும்புவது     சென்னைத் தொலைபேசியின் உதவியைத்தான்.
அந்த பெண்மணி   மிக நிதானமாகப் பேசி  எங்களை  ஒரு நிதானத்துக்கு
கொண்டுவந்தார்.
தோழி  ஜப்பானில் இருந்துவிட்டு இப்போது பத்துவருடங்களாகத்தான்
சென்னையில் இருக்கிறார். கணவரும் இல்லை.
விட்டிருந்தால் இந்த விஷயத்தை  அடித்துத் துவைத்துப் போட்டிருப்பார்,.
பாவம்.
இதற்காகவாவது  கணினி யில் உலவும்போது
தொலைபேசி     எண்ணெல்லாம்   கொடுக்காமல்   இருக்கவும்,
முகநூல்    பக்கத்தில்   குறைந்த   விஷயங்களைக் கொடுக்கவும்
சொல்லி விட்டு வந்தேன்.
ஏனெனில்  அவரும்   கிட்டத்தட்ட      இருபது    வருடங்களாகக்
கணினித் தொடர்பில் இருப்பவர்தான்:)

14 comments:

அப்பாதுரை said...

most likely தெரியாமல் வந்த அழைப்பாக இருக்க வேண்டும்.
ஒரு முறை என் தங்கைக்கு போன் செய்வதாக நினைத்துக் கொண்டு தவறான நம்பரை டயல் செய்திருக்கிறேன் - சில நேரம் டயல் செய்த சரியான நம்பர் கூட தவறான இடத்தில் கனெக்ட் ஆகிறது ஏனென்று தெரியவில்லை. anyway.. போனை எடுத்தவரிடம் என் தங்கை என்று நினைத்துக் கொண்டு சரளமாக "என்னடி சௌக்கியமா?" என்று கேட்டேன். "போனை வைடா பர நாயே" என்று தொடங்கினார்.. அதற்கு மேல் எழுதக் கூட முடியாது, அப்படி ஒரு திட்டு நாலு செகண்டில்! அன்றிலிருந்து இந்தியாவுக்கு இரவு நேரத்தில் போன் செய்வதையே ஷ்டாப் பண்ணிவிட்டேன்.

ராமலக்ஷ்மி said...

அப்பாதுரை அவர்கள் சொல்லியிருப்பது போலதான் எனக்கும் தோன்றியது. ஒருமுறையே வந்த அழைப்பாகையால் தவறு நடந்திருக்கவே வாய்ப்பு அதிகம்.

தொலைபேசி இலாகாவில் பொறுமையாகத் தகவல் தேடித்தந்த பெண்மணி நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

இறுதியாக தாங்கள் பகிர்ந்த ஆலோசனையும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே.

ஸ்ரீராம். said...

அப்பாதுரை சொல்லியிருப்பது சரி.... நமக்கும் பல சமயங்களில் நடப்பதுதான். எனக்கு ஒரு கால் அடிக்கடி வருகிறது ....நான் அவரை அழைத்ததாகச் சொல்லுவார். என்ன விஷயம் என்று கேட்பார். நான் தவறிக் கூட அந்த நம்பருக்கு அழைத்ததில்லை. முதலில் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் கட் செய்து விடுகிறேன்!

வல்லிசிம்ஹன் said...

:)
அடப்பாவமே துரை.

இந்த மனுஷன் போன் செய்துவிட்டு ஹலோ ஹலோன்னு கத்தவைத்திருக்கிறார். பதில் சொல்லாமல் வைத்துவிட்டார்.
என் தோழித் தூக்கத்துக்காக மருந்து எடுப்பவர். அதனால் திடீர் என்று போன் வந்ததில் படபடப்பு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராமலக்ஷ்மி. அதுதான் இந்த எபிசோடில் அதுதான் ஹைலைட்.
இப்போது தொலைபேசி உதவிகள், சேவைகள்
நன்றாகவே இருக்கின்றன.
தோழிக்கு நண்பர்கள் உதவிகளும் உண்டு. இருந்தாலும் தனியாக இருப்பதால் கற்பனைப் பயங்களும் நிறைய. பாவம்.

கௌதமன் said...

இக்கட்டான நிலைமைதான். Chennai telephones website டில், Directory enquiry செய்து, எண்ணுக்குரிய பெயரும் விலாசமும் சுலபமாகத் தெரிந்துகொண்டிருக்கலாமே!

நிரஞ்சனா said...

ஒரு முறை என் Friendக்கு டயல் பண்ணப்ப அவசரத்துல கடைசி நம்பரை மாத்திப் போட்டுட்டேன். ரிங் போக ஆரம்பிச்ச உடனே கட் பண்ணிட்டேன். பட், அவருக்கு மிஸ்ட் கால் போயி, டயல் பண்ணி யாரு என்னன்னு கேட்டார். பொறுமையா விளக்கி பல தடைவை ஸாரி கேட்டேன்மா. அவரும் நல்ல மனுஷரா இருக்கணும் போலருக்கு. கோவிச்சுக்கவும் இல்ல, மறுபடி போன் செஞ்சு எனக்குத் தொந்தரவும் தரலை. இந்தக் கால் (என்னைப் போல) நல்லவங்க யாராவது தெரியாம பண்ணுனதாகூட் இருக்கலாம், பாஸிட்டிவாவே பாப்பமே... சரியா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம் எனக்கும் இந்த மூன்று மணி நாலு மணி அழைப்பெல்லாம் வரும். எடுத்தால் யாரும் பேச மாட்டார்கள். கொஞ்ச நாட்கள் ஃபோனை வெளியே வைத்துவிட்டுக் கூடத் தூங்கப் போயிருக்கிறேன்.
நல்ல வேலை செய்தீர்கள்.
இதுக்காக போன் நம்பரெல்லாம் மாற்றிக் கொண்டு இருக்க முடியுமா.

வல்லிசிம்ஹன் said...

செய்தேனே கௌதமன். நம்பரைக் கொடுத்துக் கேட்டால் நோ சச் நம்பர்னு சொல்லிப் பதில் வருகிறது. நான் என் பழைய தோழிகள் நம்பரெல்லாம் முன்பு இதே டைரக்டரி வழியாகக் கண்டுபிடித்திருக்கிறேன்.
நல்ல வேளையாக பி எஸ் என் எல் சேவைப் பதப் பட்டிருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

நிரஞ்சனா நிஜம்தான்:)
பாசிடிவாகப் பார்க்கலாம். இந்தப் பைத்தியம் இரண்டு மணி ராத்திரியில் கூப்பிட்டால் அசந்து போகிறது இல்லையா.எங்களுக்கெல்லாம்
வயசாயிடுத்தேமா.:(
நானும் தப்பா நம்பர் போட்டு இருக்கேன். மறுபடி பேசினவங்களே எனக்கும் ஃபோன் செய்திருக்கங்க. நானும் காலில் விழாத குறையா மன்னிப்புக் கேட்டிருக்கேன்.
இந்த ஆளு போனையே எடுக்காத்தால் தோழிக்கு சந்தேகம் ஜாச்தியாகிவிட்டது.:(
எல்லாத்திலயும் ஜோக் என்ன தெரியுமா. துபாய்லயே மகனுடைய செல் நம்பருக்குப் பதிலா யாரையோ கூப்பிட , அந்த ஆள் அரபியில் என்னை என்ன வென்று கேட்க மாப் கீஜியே சொல்லவே அரைமணி நெரம் ஆச்சு:))))

பால கணேஷ் said...

யாராவது தன்னைத் தொடர்பு கொள்ள நம்பரைக் குறிச்சுக் கொடுக்கும் போது ஒரு எண்ணை மாத்திக் கொடுத்துட்டாலும் இப்படி மிஸ்டு கால் வரும். எனக்கு மூணு நாள் விடாம யாரோ மிஸ்டு கால் தந்து நான் பேசறப்ப இந்தியில் பேசி என்னை ‘ஙே’ முழிக்கவும் வயித்தெரிச்சலோட திட்டவும் வெச்சாங்க. ஆனா நீஙக நிரூவுக்குச் சொன்ன மாதிரி தெளிவா ஆராயல்லாம் ராத்திரில முடியாம பயம் வந்துடறதுதான் வாஸ்தவம்.

ADHI VENKAT said...

அது தவறாக வந்த அழைப்பாக தான் இருக்கும். இருந்தாலும் வயதானவர்களுக்கு சட்டென்று படபடப்பு தான். தனியாக வேறு இருப்பதால்...

தொலைப்பேசித் துறையில் பதில் சொன்னவர் பாராட்டுக்குரியவர்.

எங்களுக்கும் இது போல் நிறைய அழைப்புகள் வரும். தவறாக அழைத்து விட்டு அவங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே இருப்பாங்க. நாம் தான் கொஞ்சம் நிறுத்தி இது ராங் நம்பர் என்று சொல்ல வேண்டும்.

நேற்று கூட ஒருவர் அழைத்து மளிகை கடை என்று நினைத்துக் கொண்டு வரிசையாக லிஸ்ட் கொடுக்கிறாங்க. நாம் சொன்னதுக்கு அப்புறம் வைக்கிறாங்க. என்ன சொல்வது. சாரி கூட கிடையாது.

வெங்கட் நாகராஜ் said...

சில சமயங்களில் இது போன்ற தொல்லைகள் இருக்கின்றன. நான் தில்லியில் தனியாக இருந்த சமயத்தில் தினம் தினம் இரவில் தொலைபேசி வரும். யாரும் பேச மாட்டார்கள் - எதாவது தமிழ் பாட்டு மட்டும் ஒலிக்கும். எத்தனை முறை முயன்றாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போது காலர் ஐடியும் கிடையாது. முதலில் எரிச்சல் ஆக இருந்தாலும், போகப் போக பாடல்களை பேசாது ரசிக்க ஆரம்பித்து விட்டேன்! சில மாதங்கள் தொடரவே, அந்த எண்ணையே மாற்ற வேண்டியதாய் போயிற்று!

கோமதி அரசு said...

தொலைபேசி இலாகாவில் தகவல் தேடித்தந்த பெண்மணி நிச்சயம் பாராட்டுக்குரியவர்.

தொலைபேசி இலாகா . சேவைகள், உதவிகள் நன்றாக இருப்பதற்கு நன்றி சொல்லவேண்டும்.

நிறைய இந்த மாதிரி தவறுதலாய் அழைக்கும் தொலைபேசி அழைப்புகள் வரும் எங்கள் வீட்டுக்கும்.

இரவு நேரம் அழைத்ததால் உங்கள் தோழி பயந்து விட்டார்கள் போலும்.