மகனுடைய திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்து
எல்லா உறவுகளையும் மீண்டும் பார்த்த சந்தோஷத்தில் ஆல்பத்தை மூடி
வைத்து உறையில் போட்டேன்.
ஒரு அழகான ஆனந்தத்தை மட்டுமே பிரதிபலிக்கும் அந்த இரண்டு நாட்களை நிறைவாகப் பதிவு செய்த புகைப்படக் காரரை மனம் வாழ்த்தியது.
மணமக்களைச் சுற்றியே படங்களை எடுக்காமல் வந்தவர்களையும்
முக்கியப் பட்டவர்களை விட்டுவிடாமல்
எடுத்திருந்தார்.
முதன் முதல் வீட்டுக்கு வந்தபோது அவரிடம் விவரமாக உறவினர்கள் பற்றிச் சொல்லி இருந்தேன்.
திருமணங்கள் நிச்சயிக்கப் படும்போது,
கவனிக்க வேண்டிய பல விஷயங்களில் இந்த வீடியோவுக்கு மிகவும் பிரதான இடம் கொடுக்கப் படுவது நமக்குத் தெரியும்.
பல திருமணங்களில் தாலி முடியப்பட்ட அடுத்த நிமிடம் ஒரு படை திருமண மேடையை நோக்கி விரையும்.
அன்பு உறவினர்கள்தான்.
முன்பு இந்தக் கும்பலில் நானும் இருப்பேன்.:)
கால் தடுக்கி விழும் வாய்ப்புகள் அதிகரிக்கவே நான் கீழே நின்றே திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்வதை வழக்கப் படுத்திக் கொண்டேன்.
முக்கால்வாசி வீடியோக்காரர்கள் தலையில் விழும்:)
இதைத் தடுக்கவே எங்கள் முதல் மகன் திருமண வீடியோக்ராஃபரிடம் அவரையும் அவரது கொற்றக் குடை தூக்கி(அதான் விளக்குப் பிடிப்பவர்)யையும் கொஞ்சம் இடம் பார்த்து நின்றுகொண்டு வருபவர்களை மறைக்காமல் தம்பதிகளையும் தொந்தரவு செய்யாமல், என்ன செய்யலாம் என்று கலந்தாலோசித்தோம். நல்ல திர்மானங்களோடு அட்வான்ஸ் தொகையையும் வாங்கிச் சென்றார்.
அந்தப் பையன் மகா ஆர்வம் காட்டி படங்கள் எடுத்தார். என்னை அளவுக்கு அதிகமாகவே பலப்பல முகபாவங்களில் எடுத்திருப்பதைப் பிறகு தான் தெரிந்து கொண்டேன்.
இந்தத் திருமணம் அவரது இரண்டாவது ப்ராஜெக்ட். மிகக் கவனமாக வேலைகளைச் செய்தார்.
திருமணம் முடிந்து மகனும் மருமகளும் தேநிலவு போய் வந்த பிறகு
எல்லோரும் உட்கார்ந்து வீடியோக்களையும் பட ஆல்பங்களையும் பார்த்துக் களித்தோம்;)
அப்பதான் வந்தது சங்கடம்.:(
பெண் வீட்டுக்காரர்களின் படங்கள் குறைவாகவே இருந்தன. முக்கியமாக மாலை மாற்றும் ஒரே மாமாவே பல இடங்களில் இருந்தார். இன்னும் இரண்டு மாமாக்களைக் காணவில்லை. அதே போல மருமகளின் அப்பாவும் அம்மாவும்
திருமணக் களைப்பில் ஓய்வாக இருந்த போதும், பசி அளவு கடந்து போய்க் கடைசி பந்தியில் அவர்கள் உண்ணும் போதும் எடுத்திருந்தார்.
இப்பப் புரிந்திருக்குமே. நான்,என் கணவர் மற்ற மூன்று பிள்ளைகள் எல்லோரும் பளாபளா என்று நிறையப் படங்களில் சந்தோஷப் புன்னகையோடு போஸ் கொடுக்கச் சில படங்களில் மட்டுமே
மணமகளும் வீட்டவரும் காட்சி அளித்தார்கள். முகம் சோர்ந்து, ஒரு துளி சிரிப்பு கூட இல்லாமல்....
இதைப் பார்த்த புது மருமகள் முகத்தில் ஈயாடவில்லை.
ஏதோ திட்டமிட்டு இது நடந்த மாதிரி ஆகிவிட்டது.
உடனே வீடியோக்ராபரை அடுத்தக் கல்யாணத்துக் கிளம்பும் முன்னால்
பிடித்தோம்.
வந்தவரைப் பிடித்து உலுக்கிவிட்டான் புது மாப்பிள்ளை.
இது எப்படி ஆச்சு. அவங்க வீட்டுக்காரங்களை இப்படிக் கவனிக்காம விட்டீங்களே.திருமணம் இரண்டு வீட்டு பிணைப்பு இல்லையா. அதுக்கு அடையாளமாத் தானே ஆயிரக் கணக்கில் உங்களுக்குக் கொடுத்துப்
படங்கள் எடுக்க வைத்தது என்று அடுக்கவும்,
அந்த இளைஞன் நடுங்கிவிட்டார்.
பொதுவா பொண்ணு வீட்டுக்காரங்களோட வீடியோக்ராபர் அவங்களைக் கவனிப்பார். நான் உங்க வீட்டு பக்க ஆளுங்களையே எடுத்தேன் சார்.
அவங்க வீட்டிலயும் இப்படித்தான் அந்தப் போட்டோக்காரரும் செய்தார்''னு அவர் சொன்னதும்தான் ,
நாணயத்தின் அடுத்த பக்கம்(மணிரத்னம் கூட இந்த ஃப்ரேஸை உபயோகப் படுத்தினார்,ராவணன் முன்னோட்டத்தின் போது:) ) தெரிந்தவனாக,தெளிந்தவனாக
தன் புது மனைவியைச் சமாதானப் படுத்த உள்ளே விரைந்தான்.
மாமியாராக முதல் முதலாகச் சந்தித்தப் பிரச்சினையை எளிதில் ஊதித் தள்ளிய எங்க வீட்டுக்காரருக்கு நன்றிகள் சொல்லிவிட்டு, அவர்கள் வீட்டு வீடியோவைக் கொடுத்தனுப்பும்படி சம்பந்தியம்மாவுக்குப் போன் செய்தேன். அடையாரிலிருந்து ஒரு இரண்டு மணி நேரத்தில் அவங்களும் மத்த இரு பெண்களோடவும் , மனம்,முகம் கொள்ளாத சிரிப்போடு சம்பந்திகள் வந்தார்கள். வீடியோவோடுதான்.
ஒன்று இல்லை இரண்டு இல்லை நாலு சிடீக்கள்!!!
பார்க்கப் பார்க்க என்னுள் ஏதோ மிரள ஆரம்பித்தது.:)
நாங்கள் முதலில் பந்தலில் நுழையும் போது இருந்தோம்.
ஆரத்தி எடுத்து படிகளில் ஏறியதற்கப்புறம்,
ஊஞ்சல் காட்சிகளில் எங்கள் தலைகள் மட்டும் தெரிந்தது:)
தாலிகட்டும் நேரம் தவிர மற்ற நேரத்தில் எங்கள் யாரையுமே(மாப்பிள்ளை தவிர) பார்க்க முடியவில்லை.!!!!
அப்பாடா தானிக்கு தீனி என்று மனசு அமைதி அடைந்தது:))))))
இப்போது எல்லாம் உனக்கு நீ எனக்கு நான் என்ற சந்தோஷமான லைன் ஆஃப் கண்ட்ரோலில் சம்பந்திகள் இயங்குகிறோம்.:)
41 comments:
முதலில் நட்சத்திர வாழ்த்துகள்.
//அப்பாடா தானிக்கு தீனி என்று மனசு அமைதி அடைந்தது//
ஊஹூம், சான்ஸை விட்டுட்டீங்களே! மருமகளையும், அவங்க வீட்டுக்காரங்களையும் ஒரு பிடி பிடிச்சுருக்க வேண்டாமோ!! ஒரு பயம் இருந்திருக்கும்!! (ச்சும்மா..)
நிறைய இடங்கள்ல நடக்கிறதுதான் இது. உங்க கதை இல்லைங்கிற ‘ஒப்புதல் வாக்குமூலத்தையும்’ படிச்சுட்டேன்!! :-))))
நட்சத்திரப் பதிவரா? வாழ்த்துகள்.
மீள் பதிவா...இது ஏற்கெனவே படித்திருக்கிறேன்தான். ரெண்டு வீடியோவையும் எடிட் செய்து, இணைத்து கலந்து கட்டி போது வீடியோ ஒன்று உருவாக்கிடலாம்! (முன்னாலேயும் இதேதான் சொல்லியிருந்தேனோ...??!!)
சங்கடம் அல்ல சகஜம் அது என்பதைச் சொன்ன விதம் சுவாரஸ்யம்:))))!
மீள் பதிவா இருந்தாலும் படிக்கர்துக்கு நன்னா தான் இருக்கு!! மாமியார் பந்தா எல்லாம் வல்லிம்மா காமிக்கனும்னு பிரயத்தனம் பண்ணினாலும் வராது!! ஏன்னா எப்போதுமே நீங்க 'அம்மா!' தான் எல்லாருக்கும்! :)
வாங்க ஹுசைனம்மா,. வாழ்த்துகளுக்கு முதலில் நன்றியைப் பிடிங்க.
பிடிபடுகிற மாதிரி ஒண்ணுமே நடக்கறதில்லையே ஹுசைனம்மா:))
அய்ய! அது நிஜ வாக்கு மூலம்தான் பா.
நட்சத்திர வாழ்த்துகள்!
ரசிக்கும்படியானதையும், அவசியமானதையும் தான் மீள்பதிவா போட்டிருக்கீங்க வல்லிம்மா.
வரணும் ஸ்ரீராம். ஆமாம் நீங்கள் சொன்ன கமெண்ட் தான் இட்டிருந்தீர்கள்,.
சரியான பயங்கர நினைவுப்பா உங்களுக்கு.:)
அன்பு ராமலக்ஷ்மி, சங்கடத்திலிருந்து வெளில வந்தால் சகஜமாகி விடும்தானே:))
அன்பு தக்குடு ரொம்ப நன்றி .எப்பவுமே அம்மாவும் மாமியாரும் ஒண்ணாக முடியாதுனு நேத்திக்கு ;'நீயா நானா''ல கோபிநாத் சொன்னதைப்
பார்க்கலியா;)
வெளிப்படையான உங்கள் பேச்ச்சுக்குப் பாராட்டுகள்..
(தவறுதலாகப் போன பதிவுக்கு வந்து விட்டது இந்த மறுமொழி)
சுவாரஸ்யமாக இருந்தது.
கலாட்டா இல்லாமல் கல்யாணங்களா ? :))))
ஏற்கெனவே கலந்து கொண்ட கலாட்டா ஆனாலும் மீண்டும் கலந்துக்கறேன். எல்லார் வீட்டிலும் இதே கதைதான். ஶ்ரீராம் சொல்றாப்போல் இரண்டையும் எடிட் செய்து புதுசாக உருவாக்கலாம்.
நல்வரவு சென்னை பித்தன்.
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
பயந்து கொண்டேதான் பதிவிட்டேன். தென்றல். உங்களுக்கு ரசிக்கும் படியாக இருந்ததுதான் எனக்குத் திருப்தி.
நட்சத்திர வாழ்த்துகள் அம்மா!
பூக்களெல்லாம் ரொம்ப அழகு :)
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது சமயங்களில் மறந்து விடுவதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள் அம்மா :)
நன்றி பாசமலர். நமக்குள்ளே நேர்மைதானே எப்பொழுதும்
நட்பை வளர்க்கிறது.
என்னால் முடிந்த அளவே பதிவுகளாக வரப் போகிறது. என் வயது, என் குறைபாடுகளை வைத்துப் பின் வாங்க மனதில்லை.:)
அன்பு மாதேவி வாங்கப்பா.
கல்யாணங்களுக்கு வரும் விருந்தாளிகளுக்குச் சந்தோஷம். ஏற்பாடு செய்து நடத்தி முடிப்பவர்களுக்கு கலாட்டாதான்:)
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்!
அன்பு கீதா,கல்யாண கலாட்டா நல்லபடியா முடிந்தால் சரிதான்:)
நன்றிமா.
அன்பு கவிநயா, பூக்கள் அத்தனையும் நம் வீட்டுப் பூக்கள் தான். கல்யாணப் பதிவாச்சே அதனால் ப்ஊக்கள் படங்களைப் போட்டேன்.
நல்ல கருத்துக்கு மிகவும் நன்றிமா.
வாங்க மனக்குதிரை.
வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
நம்ம புதுகைத் தென்றல் சொல்லித்தான் தெரிஞ்சுக்கிட்டு வந்தேன்.தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
கடைசி பாராவின் லைன் ஆஃப் கன்ட்ரோல் நல்ல தீர்வுதான்
திருமண வீட்டில் இப்படித்தான் சில சங்கடங்கள் வரும்.
பெண்கள் தான் இந்த சங்கடங்களை சந்திக்க வேண்டி உள்ளது.
மாமியார் சந்திக்கும் சங்கடங்கள் தான் நீங்களும் எழுதி இருக்கிறீகள்.
சங்கடம் என்றால் சங்கடம், இப்படிதான் சகஜம் என்றால் சகஜம்.
மீள் பதிவு முன் என்ன எழுதினேன் என தெரியவில்லை.
நல்லா இருக்கிறது அக்கா.
:) Congrats..!
very nice post...
நான் பேசாம ரெண்டு வீடியோக்காரரை ஏற்பாடு செய்யப் போறேன். வம்பு வேணாம் பாருங்க:-)))))
அன்பு தங்கச்சி கோமதி, சங்கடங்களையெல்லாம் தாண்ட ஆடு மாடு மாதிரிப் பழகிக் கொள்ளவேண்டியதுதான்.
நீங்கள் முன்னால் என்ன பின்னூட்டன்ம் இட்டீர்கள் என்று போய்ப் பார்க்கிறேன். இப்பொழுது எழுதுவது நம் முதிர்ந்த மனதின் நிலையைக் காட்டுகிறதுமா.
நட்சத்திர வாழ்த்துகள்
இந்த வார நீயா நானா தலைப்பு கூட மாமியார் மருமகள் குறித்து தான் இருந்தது. பார்த்தீர்களா?
hereafter you can edit both the vidios and make it 'janaranjakam' suitable for A centre & B centre.
'Jolli mudinchuthu!!!'
how is it...?
சே நல்ல சம்பந்தி சண்டை இப்ப்டி புஸ்ஸுன்னு ஆச்சே, சிங்கம் சிங்கம்தான், அழகா சொல்லியிருக்கீங்க
awww... lovely valimma.. enaku azhugai varudhu nijama.. :-( i dont know why..
illa actually i know why nu.. freeya vituduvom! lovely post, you make a lovely maamiyar! :)
'கவனிப்பு' நிறைய கல்யாணங்கள்ல மனஸ்தாபம் வர்றதே இதாலதானே..
முன்னே படிச்சப்ப இருந்த மாதிரியே இப்பவும் சுவாரஸ்யமா படிச்சேன் :-)
அன்பு மாதங்கி, தான்க் யூ. ரொம்ப நாளாச்சு பார்த்து.:0)
வாங்கப்பா துளசி உடனே பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை சாரி.நீங்க சொல்கிற ஐடியா பெஸ்ட்.பொண்ணு கல்யானத்துக்கு அப்படியே செய்துடலாம்.
வாங்க ராஜி.
உங்க பதிவுகளையும் தென்றலோட பதிவு மூலமாத்தான் க்ளிக் செய்து படித்தேன்.அருமையான எழுத்து. மிகவும் நன்றிமா.
அன்பு பொற்கொடி, ஏன் பா வருத்தம். வேற நினைவு ஏதாவது வந்ததா.
சிலசமயம் நம் வருத்தங்களுக்குக் காரணமே வேண்டாம். இப்ப சரியாப் போயிருக்கும்னு நினைக்கிறேன். ஓகேயா.
ஸ்மைல் ப்ளீஸ்.:)
அன்பு மோஹன் குமார் வரணும். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி.
நீயா நானா பார்த்தேன். பரிசு வாங்கின மருமகளை ரொம்பப் பிடித்தது.
சிலவிஷயங்களை ஜீரணிக்க முடியவில்லை. இன்னும் ஊட்டிவிடுகிறார்களாமே:))
நானானி!!!!!
நல்ல யோசனை செய்திருகிறீர்களே. ஜோலி முடிஞ்சதா.!!! அப்பதான் ஜோலியே ஆரம்பிக்கும்:)
ஏ க்ளாஸுக்குப் பிடிச்சது பி க்ளாஸுக்குக் கசக்கும்!!
ஜனரஞ்சகமா எடுக்கணுமா. எத்தனை ஜனம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)
நீங்கவேற டி ஆர் சி.
அம்மாடி எல்லாம் ஸ்மூதாப் போச்சேனு அப்பாடானு முடிக்கவேண்டிய விஷயம். சிங்கத்துக்கு இந்த அலுப்பெல்லாம் கிடையாது அவர் எல்லோருக்கும் நல்லவர்:)மாமியார்களுக்குத்தான் எப்பவும் நல்ல பெயர் கிடைப்பதில்லை.
வரணும் சாரல். இன்று நேற்றுன்னு சொல்லமுடியாத காலத்திலிருந்து இந்த எண்ணம் மாறவில்லை. இரண்டு குடும்பங்கள் ஒன்று சேரும்போது, மகிழ்ச்சி பொங்குவதற்குப் பதில் இது போலச் சின்ன சலனங்கள் பெரிய விஷயங்களாக உருவெடுத்துகின்றன.
ரசித்ததற்கு மிகவும் நன்றிபா.
Post a Comment