கூகிள் பஸ்ஸ்
பதிவர்களுக்கு இதமா
....
இல்லையா.
பின்னூட்டங்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டதா.
வீடு. |
நாம் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட்டால் மட்டுமே அவர்கள் நம் பதிவைப் படிப்பார்களா.
எழுத்தின் தரம் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது.
சென்சேஷன்?
சுவை?
இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நல்லவேளை பத்திரிகைக்களுக்கு எழுதி அனுப்பவில்லை.
அவர்கள்
மறுத்தால்
சுய மதிப்பு அதல சுதல பாதாலங்களுக்கே சென்றுவிடுமே!!
.சுய நிர்ணயம்
11 comments:
நல்லாத்தான் மாத்தி யோசிச்சீங்க.
பேரப்பிள்ளைகள் பத்திய நோட்டீஸ் சூப்பர்.
சுய நிர்ணயம்? நான் அது பத்தியெல்லாம் யோசிக்கிறதில்லை.
நினைச்சதை எழுதுறேன். படிக்கிறவங்க படிங்க...நல்லாருக்கா? கமெண்டிட்டுப் போங்க. அல்லாட்டி விட்டுடுங்க. சொன்னது சர்தானே?
வடை எனக்குத்தான்.
சர்த்தானா க யா சு
சர்த்தானா:))) நானானி சொன்னா சர்தான். வடையும் உங்களுக்குத்தான்.:)
அம்மா , இப்ப நெறையப் பேரு பஸ்சுக்கு வந்தாச்சு. அங்க உடனுக்குடன் பதில் கிடைக்குது. பதிவின் நீளம் பற்றி யோசிக்க வேண்டாம். அதுவுமில்லாமல், குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் தனியாவும் ப்ரைவேட் பஸ் விட்டுக்கலாம். :)
என்னவோ தெரியலை, பதிவுலகில் இப்ப கொஞ்சநாள் ஒரு மந்தநிலை நிலவுது. அந்த நிலை எனக்கும் தொற்றிவிட்டதாலோ என்னவோ, பதிவுகளைப் பெரும்பாலும் படித்துவிட்டு மட்டும் சென்றுவிடுகிறேன்.
ஆனா, கண்டிப்பா, இது (பின்னூட்டங்கள், ஹிட்ஸ்) சுய நிர்யணத்துக்கான வழி இல்லை.
வரணும் எல்.கே
பஸ்ஸினால் எனக்குக் கிடைக்கும் நட்பு வட்டம் அன்பு நிறைந்தது. adhuvum
எல்லோருடைய பேச்சையும் கவனிக்கும் போது பெரிய கூடத்தில் உட்கார்ந்து
குரல்களைக் கேட்கும் உணர்வு வருகிறது.
நானும் இந்த புதுவிதமான போக்கைப் பார்க்கிறேன்.
ஹுசைனம்மா.
அரசியல், கோடை விடுமுறை
வெய்யிலின் பாதிப்பு
எத்தனையோ காரணங்கள். உண்மையில் படிக்கவேண்டிய பதிவுகளே எக்கச்சக்கமாக இருக்கின்றன..
நேரம் கிடைப்பது இந்தக் காலைவேளையில் தான்.
என்னையே அலசிக் கொள்ள இந்தப் பதிவை எழுதிக்கொண்டேன்:)
நன்றி மா.
உங்க பதிவு ரொம்ப நல்லா இருக்கும்மா.
அன்பு லக்ஷ்மி,
மிகவும் நன்றி..
எல்லோரும் அவர்கள் தொடரும் பதிவரது பதிவுகளைப் படிப்பார்கள். ஆனால் எது அவர்களைத் தூண்டுகிறதோ அதற்கு மட்டும் கருத்திடுவார்கள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றிர்க்கும் பின்னூட்டமிடவேண்டுமென்றால், அது மெகானிகலாக "அருமை, நன்றாக இருந்தது" என்று டெம்ப்லெட் ஆகிவிடும்.
"Grand children cement older with the family for compensating the efforts put in for the family during younger days" என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள்தான் (அவர்கள் மட்டும்தான்) உண்மையான அன்பைப் புரிந்துகொள்ளும் பக்குவமும், தனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கிற பாட்டி/தாத்தாக்களின் அன்பையும் தெரிந்தவர்கள். அதிலும், தாத்தா கண்டிப்புடன் இருந்தால், அவர்கள் ஓட்டு பாட்டிக்குத்தான்.
ஆமாம் நெல்லைத்தமிழன். இந்தப் பதிவு 2011இல் எழுதியது. நான் இப்போது நிறைய மாறிவிட்டேன்.
எண்ணங்களை எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
அது எல்லோருக்கும் பிடித்திருக்க வேண்டும் என்கிற
அவசியம் அனாவசியமாகிப் போகிறது.
கருத்து சொல்லும்போதும் உணர்ந்து பின்னூட்டம் இடவேண்டும்.இல்லாவிடில் மெகானிகல் தான்.
பேரன் பேத்திகளால் தான் என் மனம் இன்னும் பதம் அடைகிறது. மிக நன்றி மா.
Post a Comment