Blog Archive

Thursday, December 09, 2010

காலையில் தினமும்

காலையில் தினமும் கண்விழித்தால்
கண்ணில் படும் இறைவனிடம்
வேண்டுவது என்ன.
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி.
இன்றாவது ஒரு லீக், ஒரு ஸ்காம்,
இல்லாமல் பத்திரிகை படிக்கவிடு

ஆண்டவன் சொன்னான்
பத்திரிகை  வேண்டாம்
தொலைக்காட்சி வேண்டாம்
சும்மா இருத்தலே சுகம்.
காலங்கள் மாறினாலும்
 காட்சிகள் மாறாது.

ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒவ்வொரு அழுக்கு.
ஒவ்வொரு நாட்டுக்கும்
ஒவ்வொரு அழகு.

டிஸ்கி.
இது கவிதை இல்லை.
வெண்பா கண்டிப்பா இல்லை.
புதுக் கவிதை இல்லை.
மரபும் நமக்குப் பழக்கம் இல்லை.
இது வெறும் வயிற்றெரிச்சல்.
வெறும் கையாலாகாத்தனம்!
**********************************

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

20 comments:

எல் கே said...

ஒன்னும் பண்ணுவதற்கு இல்லை

ராமலக்ஷ்மி said...

என்ன செய்ய, காலையில் தினமும் அப்படித்தான் இருக்கு:(!

//இது கவிதை இல்லை.
வெண்பா கண்டிப்பா இல்லை.
புதுக் கவிதை இல்லை.
மரபும் நமக்குப் பழக்கம் இல்லை.//

நல்லதொரு கவிதையே:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டிஸ்கி :)))

வல்லிசிம்ஹன் said...

அதான் பாட்டு பாடிட்டேன்;)

வல்லிசிம்ஹன் said...

ஆ!ராமலக்ஷ்மி. நீங்களே இப்படிச் சொல்லலாமா............:)

வல்லிசிம்ஹன் said...

அதான் நமக்கு ஆவி வந்தது. அதாவது
என் டிஸ்கி எனக்கு ரொம்பப் பிடிக்கும். உண்மை சொல்றதுனால.:)

வல்லிசிம்ஹன் said...

முதல் பதில் கார்த்திக்குக்கு
மூன்றாவது முத்துவுக்கு:)

துளசி கோபால் said...

ஆஹா..... கவுஜ!!!!

நல்வரவு கவிதாயினி!

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
துளசி கோபால் said...

ஒரு கமா விட்டுப்போயிருக்கு உங்க பதிலில்:-))))))

மாதேவி said...

இது வெறும் வயிற்றெரிச்சல்.:))

வல்லிசிம்ஹன் said...

போட்டுட்டேன், கமா போட்டுட்டேன்.
துளசி,
கமா போட்டுட்டேன்:)
கவுஜ இல்லை நக்கீரரே அது கவுஜ இல்ல.:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி மாதேவி.

pudugaithendral said...

கவிதைன்னே சொல்லலாம் வல்லிம்மா.

நல்ல முயற்சி

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா தென்றல். சரி புது முயற்சி என்ற அளவில் நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன்.உங்கள் அன்புக்கு மிக மிக நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

கவுஜைன்னே வெச்சிக்கலாம் :-))))

வல்லிம்மா கலக்க ஆரம்பிச்சிட்டாங்க :-)))))

ஹுஸைனம்மா said...

காலையில பேப்பர் படிக்கவே பிடிக்கிறதில்லை இப்போ..

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா.
பத்திரிகைகள் சுடச் சுட செய்திகள் கொடுப்பதில் தவறில்லை.நமக்கும் நாட்டு நடப்புத்தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் உண்டு. இப்படி நடக்கிறதே ,எங்கே போகிறோம் என்றுதான் யோசனையாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல். சரிப்பா.
தூங்கிட்டிருக்கற சிங்கத்தை எழுப்பி விட்டீங்க.வருந்தாமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.:)

சுந்தரா said...

இன்னிக்கு, என்னவெல்லாம் வந்திருக்குதோன்னு ஒரு பதைப்போடதான் பேப்பரைத் திறக்கவேண்டியிருக்குது. என்ன பண்ண வல்லிம்மா...