Blog Archive

Wednesday, December 08, 2010

முதன் முதலாக....பள்ளிக்கூட அனுபவங்கள்


ஸ்விஸ் பேத்தி
மாண்டிசோரி போக ஆரம்பித்துக் கிட்டத்தட்ட  மாதங்கள் ஆகப் போகிறது.
தம்பி பிறந்ததும் , அம்மாவிடம் பெண்ணுக்குப் பாசம் அதிகரித்துவிட்டது.
நானும் உதவிக்கு இருக்கிறேனே  என்ற நல்ல எண்ணம்தான்.:)

அக்காவாகத் தன் கடமைகளைச் சரியாகச் செய்வதில் அவ்வளவு ஈடுபாடு.!!
அந்தக் குட்டிப் பாப்பாவையும் பார்க்கணுமே.அக்கா குரல் கேட்கிற பக்கமெல்லாம் தலையைத் திருப்புகிறான்.

ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை , அவளுக்குப் பள்ளி விடுமுறை. நான் மகனிடம்
என்பா  அது ஸ்கூல் போகலியேன்னு    கவலைப் படறதா என்றால் , அவன் பலமாகச் சிரிக்கிறான்.

அது  ,படுக்கையை விட்டே எழுந்திருக்கவில்லை ,
எங்கே எழுந்தால்   ஸ்கூலுக்குப் போகச் சொல்லிவிடுவார்களோ என்று அந்த டாபிக்கையே எடுக்க மாட்டாள்.
இத்தனைக்கும் பள்ளியில் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொள்வதில் அத்தனை மகிழ்ச்சி.  அவ்வப்போ ஜெர்மனில் வேறு பாடி அசத்துவாள்.

அங்கே  கதை அப்படியென்றால் அமெரிக்காவில், மூன்று நாட்கள் பள்ளி அழைத்துப் போவதற்கே,
ஜகஜ்ஜாலம் செய்ய வேண்டி இருக்கிறதாம்.
நாலு வயசும் பூர்த்தியாகிவிட்டது.

பள்ளிக்குப் போகவே பயமாக இருக்கிற்தாம் அந்தப் பேரனுக்கு. ஏகப்பட்ட வேலைகள்   தருகிறார்களாம். ஐய்யாவிற்கு   யாரும் சொல்லிச் செய்வது என்பது ஏற்புடையது கிடையாது. :)
ஏண்டா  இப்படிச் சொல்றே என்று கேட்டால் நீ தனியே  இருப்பியேம்மா'' என்று கண்ணைக் கசக்குகிறானாம்:)
இதே போல இரண்டு மாதங்கள் ஓடி விட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் பிறந்த நாளுக்கு டோநட்ஸ் எடுத்துக் கொண்டு போய்த் தன் கூடப் படிக்கும் குழந்தைகளுடன்
பகிர்ந்து கொண்டான்.
தன் பெற்றோரும் வந்தததால் அன்று பள்ளிக்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லையாம்.

அங்கெ  அவனது   மிஸ் சூசன்,எப்போதும்போல  அமெரிக்கன்  ப்ளேட்ஜ் ஏதோ ஒன்று இருக்காம். அதைச் சொல்லிவிட்டுப் பள்ளி துவங்குவார்களாம்.
அதற்கு எல்லோரும் தங்கள் தங்கள் இதயத்தில்  அதாவது சட்டைக்கு மேலே கையை வைத்துச்   சொல்லணுமாம்.
இவன் தன்னிடத்தில் நின்று கொண்டு முகத்தில்  சீரியஸாக வைத்துக் கொண்டு ,அப்பா அம்மாவைத் தேடினானாம்.
அப்பா கையில் வீடியொ வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தானாம்.
உடனே  அம்மா கண்களை நேராகப் பார்த்து,அப்பா பக்கம் கை காட்டி, அப்பா  தன் கையை நெஞ்சின் மேல் வைத்துக் கொள்ளச் சொல்லு என்று  சைகை
  செய்யறானாம்:)

பிழைச்சுப்பாங்கப் பா. கடவுள் எல்லோர் பக்கமும் இருந்து காக்கட்டும்.








எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

12 comments:

எல் கே said...

குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகு எல்லாமே..
பிழைச்சுப்பாங்க சரியாச்சொன்னீங்க :)

சந்தனமுல்லை said...

படமும் சொன்னவிதமும் கலக்கல்! :-)

துளசி கோபால் said...

இந்தத் தலைமுறை நம்மையெல்லாம் விட ஆயிரம் மடங்கு புத்திசாலிகள்.

நல்லாவே பிழைச்சுக்குவாங்க

நமக்குத்தான் எதுக்கெடுத்தாலும் ஒரு கவலை. கவலைப்பட ஒன்னும் கிடைக்கலைன்னா, அதுக்காகவே கவலைப்படுவோம்.:))))))))))

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கார்த்திக்.

சின்னதாக இருக்கும்போது குழந்தைகளை நாம் கொண்டாடிக் கொள்கிறோம். கொஞ்சமே வளர்ந்து விட்டால் நம் கோபம் தாபம்,சூழ்நிலை எல்லாம் மாறும்போது, இருவருக்குமிடையே வித்தியாசம் வந்து நிலை மாறுகிறது:(

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முத்து.
அண்ணாவுக்கு சாத்வீகம் ஜாஸ்தி. இதுக்கு சுட்டித்தனம்.
மூத்தது, இளையதுன்னு சொல்லுவாங்க இல்லையா:)

வல்லிசிம்ஹன் said...

வளரும் செடிகள்,குழந்தைகள் எல்லாமே அழகு முல்லை.
அந்த மூஞ்சைப் பாரு பாட்டு கேட்டேன்பா:)

வல்லிசிம்ஹன் said...

ஹா ஹா. கவலைப் பட எதுவும் கிடைக்காமலா போகுது:)
எனக்குத் தெரிஞ்சு ஒரு தோழிக்கு சந்தோஷமாக இருந்த நாட்களின் படம் ஒன்றை அனுப்பினேன். அதைப் பார்த்து அவள் மகிழ்ந்து போவாள்னு நினைச்சா, இப்ப நிலைமையே தலைகீழாப் போய்விட்டதே, த்சு த்சு'' ங்கறா துளசி:)))))

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.

மாதேவி said...

அதிபுத்திசாலிகள்.

இங்கும் அக்காவின் பேத்தி மண்டசூரி. காலையில் எழுந்துசெல்லபாடாய் படுத்தும்... என்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா மாதேவி.
ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதம். இந்த பேத்திஅம்மா தெரு முனை திரும்பி ட்ராம் ஸ்டேஷன் போவதற்குள் அம்மா அப்பா இருவருக்கும் திக் திக் தானாம்:)