கணினி கட்டாய ஒய்வு எடுத்துக் கொண்டது.
தோழி கீதாவின் உதவியால் ஒரு நல்ல கணினி நுட்பம் தெரிந்த ஒருவரின்
உதவி கிடைத்து இன்றுதான் நானும் கணினியும் சமநிலைக்கு வந்தோம்:)
நன்றி கீதா.
மறு பிறவி எடுத்த மகிழ்ச்சி நிலைக்க இறைவனை வேண்டுகிறேன்!
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
29 comments:
மகிழ்ச்சி நிலைக்கட்டும்:)!
மண் பாண்டங்கள் அழகு. அதிலும் குறிப்பா அருவாமனை, திருவை, ஆட்டுக்கல், உரல்,அம்மி(கல்லின் மேலே நல்லாக் குத்தியிருக்காங்க), குழவி, அட.., மண்வெட்டி கூட:)!
மீண்டு வந்ததுக்கு நல்வரவு.
அருவாமணை ஜோர்!!!!
சேம் ப்ளட் வல்லிம்மா.. இந்த கம்ப்யூட்டர் ரத்தம் பார்க்காம ஒரு நிலைக்கு வர மாட்டேங்குது :-))))
:)))))!! சொப்பு looks cute!
வல்லி,
ராமலக்ஷ்மி டிட்டோ!!
//மண் பாண்டங்கள் அழகு. அதிலும் குறிப்பா அருவாமனை, திருவை, ஆட்டுக்கல், உரல்,அம்மி(கல்லின் மேலே நல்லாக் குத்தியிருக்காங்க), குழவி, அட.., மண்வெட்டி கூட:)!
எங்கே வாங்கினீர்கள்? அழகாய் செல்லம் போல இருக்கு.
புரிகிறது!
வரணும் ராமலக்ஷ்மி.
மறக்காமலிருக்க வாங்கிக் கொண்டேன். உலக்கை தான் காணோம். :))எங்க வீட்ட்ல இருக்கிற உலக்கையைத் தூக்கிப் பிடிக்கத் தனி வைடமின் சாப்பிடணும்.!
வாங்கப்பா. எவ்வளவுபைத்தியம் பார்த்தீங்களா.
எங்கள் வீட்டு அருவாமணையும் பத்திரமா வச்சிருக்கேன். அதில் காய் நறுக்க என்னைத் தவிர யாரும் வரமாட்டாங்க.. எல்லார் ரத்த்தத்தையும் ருசி பார்த்திருக்கு அது:)
கேக்காதீங்கப்பா சாரல்.
மௌஸை'க் கை தேடுதேன்னு பாட்டே பாடிட்டார் எங்க சிங்கம்.:)
நன்றிப்பா ஜயஷ்ரீ. பழையபடி அந்தக் காலத்துக்குப் போயிடலமா:)
வாங்க நானானி.
நம்ம தக்ஷின் சித்ராவில தான்.!
ஒரு பதிவர் சந்திப்பை அங்க வச்சிக்கலாமா:0)
நன்றி துரை. வெப் காம், மாஜிக்ஜாக், ப்ளாக்,இல்லாம
ஒரு லோன்லி ஹார்ட்ஸ் க்ளப் ஆரம்பிக்கற அளவுக்குப் போய்ட்டேன்னா பார்த்துக்கோங்க:)
படம் செம, வல்லியம்மா! :-)
மீண்டு வந்தது மகிழ்ச்சி..தொடர்ந்து கலக்குங்க!!
வல்லி,
//ஒரு பதிவர் சந்திப்பை அங்க வச்சிக்கலாமா:0)//
நான் ரெடி. ரொம்ப நாளா அங்க விஜயம் செய்யணுமின்னு ஆசை.
நமக்கு ரெட் கார்பட் விரிப்பார்களா?
மகிழ்ச்சி நிலைக்க வாழ்த்துக்கள்!
மண்பாண்டங்கள் அழகு.
உரல்,அம்மி,திருவை,ஆட்டுக்கல் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு காட்சிக்கு மட்டுமே.இந்த தலைமுறைக்கு ஒரளவு தெரிகிறது.
மண்சொப்புப் பாத்திரங்கள் அழகு வல்லிம்மா.
இதெல்லாம் இப்பவே வாங்கிவச்சிக்கிட்டாதான் அடுத்த தலைமுறைக்குக் காட்டவாவதுமுடியும்.
வாங்கப்பா முல்லை.
எப்படியாகி விட்டது பாருங்க.
எதுக்கெல்லாம் சோகம்னு அளவில்லாமப் போச்சே:)
நானானி ஒரு நாள் போலாம்ப்பா. ரெட் கார்ப்பெட்டுக்கும் சொல்லலாம். அங்கயே பார்த்ததா நினைவு இருக்கு:)
வரணும் தங்கச்சி கோமதி. சொப்புகளே அழகு. அதுவும் இந்த மண்ணில் இத்தனை நுணுக்கமாச் செய்திருப்பது இன்னும் அழகுப்பா.
சொப்புசாமான்கள் பார்த்ததும் சிறுவயது நினைவு வல்லிம்மா மிகவும் அழகு:))))
தொடர்ந்து வலையுலகில் இருந்து விட்டு நடுவில் இது மாதிரி கடைய ஓய்வு கிடைத்தால் மனம் கஷ்டப் படுகிறதுதான். ஆனால் சில சமயம் Refresh செய்யவும் உதவுகிறது! இல்லை?
எத்தனை வயசானாலும் பாக்கறச்சே பழைய ஞ்யாபகம் வருமில்லையா? விளையாடவா....!! Ah!!! well! பொழுது கழிஞ்சு பொழுது போனா தினம் இதானே செஞ்சுண்டு இருக்கோம் பே ட் கி பூஜானு , well! in a different scale!!:)))
சொப்பு சேத்துண்டு பேத்திய பாக்கவா க்றிஸ்மஸுக்கு?? enjoy!
வாங்க சுந்தரா,
துபாயில் குளிர் காலம் வந்தாச்சா....
மண்பாண்டங்களும் வாங்கி வந்தேன். தயிர் நன்றாகத் தோய்கிறது.
இயற்கையின் எந்தப் பொருளுமே அழகே.
வரணும் சுமதி. நீங்களும் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுங்கோ.
வரணும்ஸ்ரீராம்.
நன்மைகள்,
1 பழையபடி வானொலி கேட்க ஆரம்பித்தேன்,
2, ஹிண்டு க்ராஸ்வேர்ட் போட முயற்சித்தேன். 25% பாஸ்:)
3, உறவினர்களிடம் நலம் விசாரித்தேன்.
உண்மை என்னவென்றால் இந்த வாரமும் நல்ல வாரமே.ரெஃப்ரெஷிங்
தான். நன்றி மா.
வாவ். படம் அருமை, அழகு, அபாரம். எங்கேர்ந்து பிடிச்சீங்க? செட் வாங்கிருக்கீங்களா இல்லை, கூகிள் தந்த படமா? என்கிட்ட சின்ன வயசுல சில்வர்/மர செட்தான் உண்டு. மண்ணில் முதல் முறை பார்க்கிறேன். அதுவும், அருவாமணை, உரல், அம்மி... சூப்பர். (ரொம்ப உணர்ச்சி வசப்படுறேனோ? ;-)))) )
என் வீட்டிலும் 4 வாரமா இணையம் இல்லை. அது இல்லாம கையொடிஞ்ச மாதிரி இருந்தாலும், சில பெண்டிங் வேலைகள் நல்லபடியா முடிக்க முடியுது.
வாங்கப்பா ஹுசைனம்மா.
என்னது உங்களுக்குமா? அடப் பாவமே. இனிதான் ஒவ்வொரு பதிவும் படிக்கணும்.
உண்மைதான் இணையமோ கணினியோ இல்லாமல் இருக்கும் நாட்கள் வேறு விதமாகச் சுவையாகத்தான் சென்றன.
நீங்கள் சென்னைக்கு வந்தால் ,தக்ஷின் சித்ரா என்ற இடத்துக்குப் போகலாம் . மஹாபலிபுரம் போகும்வழியில் இருக்கிறது இந்த இடம். கைவினைப் பொருகளும் மற்றும் பழங்கால வீடுகளும் என்று பாரம்பரியமான விஷயங்களைக் கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.
அங்கே ஒரு மண்பாண்டம் செய்பவரிடம் தான் வாங்கினோம் இந்தச் சொப்பு செட்'டை.
சொப்பு விஷ்யத்தில் பெண்கள் அனைவரும் ஒரே போலத்தான்:) நோ வொரிஸ்:0)
அய்...மட்பாண்டங்கள் வெகு அழகு.
மகளும் சிறுவயதில் விரும்பிவாங்கி வைத்திருந்தாள்.
ஒருநாள் சிறியசட்டியில் பப்படம் பொரித்தாள் கூடவே இருந்தேன்.:)
அந்த அழகை எத்தனை நேரமும் பார்க்கலாம். அலுக்காது மாதேவி.
''இது புளி,இது உப்பு,இது சாதம்....நீண்டுகொண்டே போகும்:0)
Post a Comment