Blog Archive

Sunday, November 07, 2010

பொசல் வருது:)




''பசங்களா பொசல் வருது யாரும் வெளில போக வேண்டாம்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்


ரேவதி நீ போய் கெரசின் இருக்கா பார்த்துக்கோ. ஹர்ரிக்கேன் லைட்

துடைச்சு வச்சுடுமா.

செட்டியார் கடைல மெழுகுவர்த்தி ஒரு டஜன்,கொத்துக்கடலை அரைக்கிலொ,

பொரி அரைக் கிலோ,வேர்க்கடலை எல்லாம் கொண்டுவரச் சொல்லு.

உருளைக் கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய்

எல்லாம் நிறைய

வாங்கி வச்சுடு.

எத்தனை நாள்மழைபெய்யுமோ!''இவ்வளவையும்

சொல்லிவிட்டு, சென்னை ஒன்றின் வானொலிப் ப்ரொக்ராம்களைக்கேட்க ஆரம்பித்துவிடுவார்.



அதிலதான் மணிக்கொருதடவை புயல் சின்னம் நகரும்

வழிகளையும் வேகத்தையும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்!!!



ஓ!பக்கத்தில வந்துடும் போலிருக்கே,

நெல்லூர் ,பிரகாசம்தானே போகும். சொல்லிக்கொனிருக்கும்போதே

மழை ,காற்று ஆரம்பித்துவிடும்.

வாயில் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு. வாயில் வழியெ

வரும் சாரலை அனுபவத்தபடி, தன் ஈசிச்சேரில் சாய்ந்தபடிக் கையில் இருக்கும்

கருங்குயில் குன்ற கொலையை நான்காவது தடவையாக ரசித்துப்

படித்துக் கொண்டிருப்பார்.

பக்கத்தில் ஒரு முக்காலியில் வேகவைத்த வேர்க்கடலை,நறுக்கி,

உப்பும் பச்சை மிளகாயும் அரைத்துப் பிரட்டித் தடவிய

பச்சை ஆப்பிள் துண்டுகளும் இருக்கும்.



பக்கத்திலியே எங்கள் பசங்களும்,அவர்கள் தோழிகள் தோழர்கள்செஸ்,காரம்போர்ட்

விளையாடிக் கொண்டும் மாடிக்கும் கீழுக்குமாக

ஓடி விளையாடிக் கொண்டும் இருப்பார்கள்.

இரண்டு நாட்கள் முழுவதும் ஒருதடவை மின்சாரம் இல்லை. 1977 என்று நினைக்கிறேன்.



மழையில் நனைந்து கொண்டே கிணற்றில் தண்ணீர்

இறைத்தது நினைவில் வருகிறது.!



இந்தத் தடவை ஜல்'' சூறாவளி ஏழைகளை வாட்டாமல், யாரையும் நோகடிக்காமல்

உலகம் நலம் பெறப் பெய்துவிட்டுப் போக வேண்டும்.
Posted by Picasa

14 comments:

எல் கே said...

சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது ஜல்

ராமலக்ஷ்மி said...

பொசல் நினைவுகள் தென்றலாய்:)!

முதல் படம் பொருத்தம்.

இரண்டும் மூன்றும் கடைசியில் வைத்த பிரார்த்தனைக்கு. நாங்களும் அதில் இணைகிறோம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் எல்.கே. இங்கயும் மழை விடாமல் பெய்கிறது. வெதர் சானல் செய்திப்படி புயல் சின்னம் பலவீனப்பட்டு இருப்பதாக இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ராமலக்ஷ்மி.
புயல் என்பது சென்னைக்குப் புதிதல்ல.
கஷ்டப்படுபவர்கள் கூவ நதிக்கரையோர மக்களும்,கடலருகில் வசிப்பவர்களும் தான்.ஏதோ கொஞ்சம் ஓய்ந்திருப்பது போலத் தெரிகிறது. புயல் தென்றல் ஆகாவிட்டாலும் கொஞ்சமாகக் காற்றடித்தால் தேவலை.

சாந்தி மாரியப்பன் said...

சென்னை பாவம்தான்.. உங்க பிரார்த்தனையில் நாங்களும் கலந்துக்கிட்டோம்..

சென்னைப்பக்கம் பொசல் வந்ததால, மும்பையில் வழக்கத்துக்கு மாறா தீபாவளி சமயம் மழை பெஞ்சது.

நானானி said...

பொசல்தானே..?நாகேஷ் ஒரு படத்தில் சொல்வது போல்,’அதுதான் வருஷா வருஷம் வருமே..கழுதே!’ என்பது போல் வருத்து..வருதுன்னு போக்குக்க்காட்டீட்டு, எங்கோ போயே..போச்சு!
காண்டில்கள் படம் அருமை.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி.
அந்தப் படம் பூவா தலையா:)
எங்க பார்க்கில வழக்கமா வாக்கிங் போறவர் கூடப் போய்ட்டார்பா. மனுஷனுக்க் இந்தக் காத்தில நடக்கணும்னு ஏந்தான் தோணித்தோ.
கூகிளாருக்கு காண்டில் நன்றி சொல்லிக்கறேன். பெசண்ட் நகர்ல கூட அலை உள்ள வந்ததா சொன்னாங்களே.அந்தப் பக்கம் வாக்கிங் போகாதீங்க.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல்,மும்பையில மழையா.அட ராமா. விளக்கெல்லாம் எப்படி ஏத்துவாங்க!!இப்ப நல்ல வெய்யில் வந்துவிட்டது. துணிகளைக் காயவைக்கலாம்:)

ஸ்ரீராம். said...

நான் லேட்....புயல் பெரிய பாதிப்பு கொடுக்காமல் சென்று விட்டது. உங்கள் பிரார்த்தனை பலித்தது.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.நல்ல வேளை வெதர் சானலை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன். பலவீனமடைந்தாலும் இங்கதான் கரையைக் கடக்கும்னு சொன்னதும் ராத்திரி பூராவும் விழித்திருக்கணுமோ என்றூ பார்த்தேன்.:0) நல்ல வேளை தப்பினோம்.!

திவாண்ணா said...

அக்கா ப்ரார்த்தனைப்படியே படுத்தாமல் போய் விட்டது. இங்கெ பகல் 11 முதல் 12 வரை நல்ல மழை கொட்டி தீர்த்தது. வேற ஒண்ணும் பாதிப்பில்லை.
//எங்க பார்க்கில வழக்கமா வாக்கிங் போறவர் கூடப் போய்ட்டார்பா.//
காலை செய்தி கேள்விப்பட்டதும் என் மனசிலும் அதான் தோன்றியது.காத்து மழையில் ஒரு நாள் வீட்டில் இருந்து இருக்கலாம். விதி யாரை விட்டது!

சாந்தி மாரியப்பன் said...

நரக சதுர்த்தசியன்னிக்கு விளக்கேத்தவே முடியலை, ஒரே காத்தும் மழையும். பால்கனி சுவர்களில் விளக்கை வைக்கமுடியாம, வீட்டுக்குள்ளாற பேருக்கு ரெண்டு வெளக்கை வெச்சு, வாசப்புறம் நிறைய வைச்சேன். மறுநாள் லஷ்மிபூஜன் சமயம் நல்லவேளை மழை இல்லை..

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன்.
இடி சத்தம் கூட நிறைய இல்லை. ஆனால் விடாமல் பெய்தது. இந்த வருஷம் பூராவும் உண்டாமே! காப்பாத்தற மழையாப் பெய்திருக்கலாம். பாவம் அந்த மனிதர் 57 வயசோ என்னவோ சொன்னார்கள்.
விதி யாரை விடுகிறது.:(

வல்லிசிம்ஹன் said...

நல்லவேளை சாரல். எந்த ஊராயிருந்தாலும், தீபத்துக்கும் காற்றுக்கும்,வருணனுக்கும் மோதல் வரும் போலிருக்கிறது.:)
வாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்க இந்த எளிய தீபங்களே வழிகாட்டும். நன்றிமா.