மீண்டும் அக்டோபர் மாசம். சிகாகோ திமிலோகப்படுகிறது.
பெண்வீட்டில் சின்னவன் பல பல காச்டியூம்களைப் பார்த்துவிட்டு. ஸ்பைடர் மேன்
வாங்கி வந்திருக்கிறான்.
அண்ணாவின் பழைய உடைகள் அவனுக்குப் பொருந்தவில்லை. உடலமைப்பில்
அண்ணா பெரிய அளவு. இவன் இன்னும் சதை போட்டால் நன்றாகப் பொருந்தும்.
எங்க !!சாப்பிடற சாப்பாடெல்லாம் ஓட்டம் விளையாட்டுல கரைந்துவிடுகிறது:)
கடைக்கு அழைத்து போய் ,அவனை தேர்ந்தெடுக்கச் சொன்னதும் ,பலவற்றையும் அணிந்து பார்த்து விட்டு,
ஒ ஐ கிவ் அப் மா. நத்திங் பிட்ஸ் மி'' ன்னு கண் கலங்கியிருக்கிறான்.(டிராமா பாதி)
கடைசியாக் ஸ்பைடர் மேன் கிடைத்திருக்கிறார்.
இப்ப எல்லாம் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யக் கூடாது. தானே எல்லாம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கை.
வாங்கின உடையை அதற்கான அறையில் உள்ளே போய்க் சார்த்திக் கொண்டுவிட்டானாம் . எப்படியோ வளைந்து நெளிந்து போட்டுக் கொண்டு விட்டான். ஜிப் மட்டும் எட்டவில்லை. அம்மாவை அழைத்து அதையும் சரி
செய்துகொண்டுவிட்டான். இப்போது ஸ்பைடர் மேன் மாஸ்க் போடணுமே.
அதைப் பிரித்தபோது தான் ஒரு பிரச்சினை .அதில் கண்களாக இரு நீளக் கோடுகளே இருந்தன.
சின்னவனுக்கு மூக்கை மூடினாலே பிடிக்காது. என்னதான் வலைமாதிரி போட்டு இருந்தாலும் ,இந்த உடுப்பையும் வேண்டாம் என்று சொல்லப் போகிறான் என்று பெண் நினைத்து வீட்டுக்கு வந்துவிட்டாள்.
''அண்ணா ஐ ஆம் கோயிங் டு பி ய ஹெட்லஸ் ஸ்பைடர்மேன் '' என்று வருத்தப் பட்டு இருக்க்கிறான்.:(
பெரியவன் அந்த மாச்கைப் பார்த்துவிட்டு, இவ்வளவு தானா.நான் சரிசெய்து விடுகிறேன் என்று அந்த முகமூடியின் முன் பாகத்தை வட்டமாகக் கிழித்து எடுத்துவிட்டான்.
ஒரு புது விதமான, ஸ்பைடர் மாஸ்க் போடாத ஸ்பைடர் குட்டியை சின்னவன் பள்ளியில் நாளைக்குப் பார்க்கப் போகிறார்கள்.:)
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்