இன்று கிடைத்த தேவதை இதழில் நம் பதிவர்களின் கொலுக் கொண்டாட்டம் இடம் பெற்றிருக்கிறது.
அதுவும் அமேரிக்கா,நியுசிலாந்த் என்று தூள் பரத்தி இருக்கிறார்கள்.
படங்களை ஸ்கான் செய்து போட முடியவில்லையே என்று வருத்தமாக
இருக்கிறது.
பூர்ணா ராஜாராமின் கொலு முதலில்.கலிபோர்னியாவில் இருந்து எழுதி இருக்கிறார் . இந்த தடவை மூன்று நாள் கொண்டாட்டமாக
கொலு வைக்கப் போவதாக அவரது ப்ளான்.
அடுத்தது நம் துளசி. நியூசிலாந்த் நவராத்திரிக் கொண்டாட்டங்களை அழகாக வர்ணித்து எழுதி இருக்கிறார். இவர் வீட்டுப் பூஜையில் சுண்டல் மட்டும் என்றில்லாமல் ஒரு ஐம்பது நண்பர்கள் கலந்து கொள்ளும் விருந்து+ விழாவாக நடப்பதை அவர் பதிவில் நான் படித்திருக்கிறேன்.
அதையே சுருக்கி எளிமையாக கொலு நாளை விவரித்திருக்கிறார்.
வெள்ளைக்கார சினேகிதர் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டு அமைதியும் பரவசமும் அடைந்ததையும் சுவைபடச் சொல்லி இருக்கிறார்.
அடுத்தாற்போல் நம் சுவாதி . குழம தோழமைகளின் மூலம் தனக்குக் கிடைத்த கொலு அனுபவத்தை விஸ்தாரமாக எழுதி இருக்கிறார்.
அவருக்குப் பார்க்கக் கிடைத்தக் கொலுவில் 108 பிள்ளையார் அலங்கரிக்கும் படியையும், பல்லாங்குழி அருமையையும் விவரித்திருக்கிறார்.
முடிந்தால் அனைவரும் தேவதை இதழை வாங்கிப் படிக்கலாம்.அக்டோபர் முதல் தேதி இதழ்
அனைவருக்கும் வாழ்த்துகள், மா.
துளசி,சுவாதி ,பூர்ணா.
மிகப் பெருமையாக இருக்கிறது.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
6 comments:
அட!
வந்துருக்கா!!!!!1
நன்றிப்பா.
மூவருக்கும் வாழ்த்துக்கள்!
பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.
தேவதையில் வந்த நம் மூன்று தேவியருக்கும் வாழ்த்துக்கள்!
பகிர்ந்துக் கொண்ட உங்களுக்கு நன்றி.
மிக்க நன்றி வல்லிம்மா.. நீங்கள் சொல்லித் தான் தெரியும். இங்கு அந்ந்த சஞ்சிகை கிடைக்காது..:):) நவராத்திரி பற்றி எழுதிய மற்றைய இருவருக்கும் வாழ்த்துகள்!
மீண்டும் மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா!! :):)
மூவருக்கும் வாழ்த்துக்கள் வல்லிம்மா:))))
//மூன்று தேவியருக்கும் வாழ்த்துக்கள்!//
நவராத்திரி விழாவே முப்பெரும் தேவியருக்கான விழா.
தேவதையில் மூன்று தேவியர் பற்றி வந்திருப்பது மிகப் பொருத்தமே!
அம்மூவருக்கும் என் வாழ்த்துக்கள்!!
Post a Comment